சனி, 24 மே, 2014

ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !மதக்கலவரங்களின் தூண்டுதலால் மனித உயிர் கருவறுக்கப்பட்டால் கூட பழி போட ஆளும் காங்கிரஸ் அரசுகள் இருந்தன..

மாங்காய் பறிப்பது போல் மரத்திலிருந்து குண்டுகளை பறித்து, ஆளும் அரசின் கையாலாகாத்தனத்தால் இது விளைந்தது என்று பத்திரிக்கைகளைக் கொண்டு எழுத வைக்க முடிந்தன.

போலியாக என்கவுன்டர் நடத்தி அந்தப் பழியையும் செத்தவன் தலையிலேயே இட முடிந்தது.

பழிகளை சுமந்து கொள்ள இந்தியன் முஜாஹிதீன் என்கிற இல்லாத அமைப்பு இருந்தது.

ஆனால் அப்போதெல்லாம் ஆட்சி அவர்களிடம் இல்லை.

குண்டுவெடிப்புகளின் சத்தத்தினூடே இன்று ஆட்சி பிடித்தாயிற்று.

இனி நாட்டில் இது போன்ற மதக்கலவரங்களோ குண்டுவெடிப்புகளோ முன்பு நடந்தது போன்று அத்தனை பட்டவர்த்தனமாய் நடந்து விடாது.
ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !

மோடி செல்லும் இடங்களில் மரத்தில் குண்டுகளை கட்டி விட வேண்டிய அவசியம் இனி இல்லை, ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !

குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி அதை இந்தியன் முஜாஹிதின் தலையில் இனி இட முடியாது.. ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !

அந்த இந்தியன் முஜாஹிதீன் தலைவரை கைது செய்து அந்த இயக்கத்தையே கலைத்து விட முடியாத கையாலாகா அரசா உன் பாஜக அரசு? என்று பத்திரிக்கைகள் கேட்டு விடும் என்கிற அச்சம் காரணமாக அந்த போலி இயக்கத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் விடுமுறை வழங்கப்படும்.

ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !

ராமர் கோவிலை கட்டுவோம் என்றும் பொது சிவில் சட்டங்களை கொண்டு வருவோம் எனவும் சாத்தியமே இல்லாத முழக்கங்களை முழங்கினால் பாமர ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறலாம் என்கிற வகையில், ஆட்சியில் இல்லாத போது அவற்றை முழங்க முடியும்.

இவை எதுவுமே இனிமேல் அவசியமில்லை.. ஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது !

இந்தியா என்றைக்கும் அமைதியான நாடு. அமைதியை சீர்குலைக்க இடையில் சில வருடங்கள் சில எதிர்கட்சிகள் இருந்தன.
இனிமேல் அந்த எதிர் கட்சி இல்லை !
நாடு வழக்கம் போல் அமைதியாகவே இருக்கும் !!

அதையும் மீறி சிறுபான்மையினரின் உயிருக்கோ உடமைக்கோ உரிமைக்கோ சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும், ஆளும் மத்திய அரசின் சட்டையை அவர்களுக்கு வாக்களித்த பாமர ஹிந்து சமூகமே பிடித்து உலுக்கி விடும் !

சிறுபான்மையினரின் வேதனையில் பெரும்பான்மையினரும் பங்கு கொண்டு விட்டால் நாடு தாங்காது என்பதை முன்னாள் எதிர் கட்சியினர் உணர்ந்து தான் இருப்பார்கள் ..

ஏன்னா ஆட்சியை பிடித்தாகி விட்டது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக