சனி, 24 மே, 2014

எந்த முகத்தை வைத்துக்கொண்டு ராஜபக்சவை எதிர்க்கிறீர்கள்?


மோடிக்கு வாக்களித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்போம், ஆனால் ராஜபக்ச எங்கள் நாட்டில் காலடி வைத்தால் போர்க்கொடி தூக்குவோம்.

அட சிந்தனை சிற்பிகளே !

நீங்கள் என்ன காரணத்திற்காக ராஜபக்சவை எதிர்க்கிறீர்களோ, அதே போன்ற காரணங்கள் மோடியிடம் இல்லையா? 
அதை விட ஒரு படி மேலான காரணங்கள் மோடியிடம் இல்லையா?

அவர் உங்கள் பார்வையில் தமிழ் இன அழிப்பை நடத்தியவர் என்றால் இவர் குஜராத்தில் நடத்திய இன அழிப்பை என்னவென்று சொல்வது?

காரணங்கள் சமமாக இருக்கையில் ஒருவரை நாட்டின் பிரதமராக ஆக்குவோமாம், இன்னொருவரை நம் நாட்டில் காலடியெடுத்து வைக்கக்கூட அனுமதிக்க மாட்டோமாம்..

என்னாங்கடா உங்க லாஜிக்..?

மோடியை பிரதமராக்கிய நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ராஜபக்சவை எதிர்க்கிறீர்கள்?

ராஜபக்சவை எதிர்க்கும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடியை பிரதமராக்கி அழகு பார்க்கிறீர்கள் ?

மோடி பிரதமராகலாம் என்றால் ராஜபக்ச இந்தியாவின் ஜனாதிபதியாக கூட ஆகலாம் ! அது தான் நியாயமானவனின் கூற்று !!

தமிழன் மானமிழந்தவன் மட்டுமல்ல, அறிவையும் இழந்தவன் தான் என்கிற கூற்றில் உண்மையில்லை என்றால் நியாயப்படி அவன் ராஜபக்சவுக்கு சிகப்பு கம்பள வரவேற்பை தான் அளிப்பான் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக