சனி, 24 மே, 2014

துஆ செய்வோம்


நாளைய தினம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வேண்டி அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மறவாதீர் !

நமது ஈமானுக்கு தான் என்றைக்கும் இறுதி வெற்றி என்பதை நாம் எந்த நேரத்திலும் மறந்து விடக்கூடாது.

நமது பலகீனங்களை அறிந்தவன் அல்லாஹ் !

மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்தால் அதனால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் கேடுகள் ஏராளம் என்பதை புரிந்து பாஜகவுக்கு எதிரான பலகட்ட பிரச்சாரங்களை, அரசியல் காய் நகர்த்தல்களையெல்லாம் இத்தனை நாட்களாய் செய்தோம்.

இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை, கடமையை செய்து விட்டு அதற்கான பிரதிபலனை உள்ளச்சத்தோடு அல்லாஹ்விடம் முறையிட்டால் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை வழங்குவான்.

அல்லாஹ் என்கிற மகத்தான சக்தியிடம் நாம் சரணடைந்து விட்டால் ஈருலகிலும் பாதுகாப்பு பெற்றோர் நாம் தான் என்பதை என்றைக்கும் நினைவில் கொள்வோம் !

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?
(2:107)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக