சனி, 24 மே, 2014

கப்ரு வணங்கிகளில் உள்ள‌ வகையினர்


கப்ரு வணங்கிகளில் மூன்று வகையினர் உள்ளனர்.

முதலாவது வகையினர் : 

அவ்­லியாவே என்னுடைய நோயைப் போக்குங்கள், எனக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தாருங்கள். என்று நேரடியாக கப்ரில் அடங்கியிருப்பவர்களிடமே கோரிக்கை வைப்பர்.

இரண்டாவது வகையினர்;

அவ்லி­யாவே அல்லாஹ்விடம் வாங்கித்தாருங்கள் என்று கேட்பார்கள். இவர்கள் நாம் நேரடியாகக் கேட்டால் அல்லாஹ் தரமாட்டான். இந்தச் சமாதியில் இருப்பால் கேட்டால் அல்லாஹ் உடனடியாகத் தருவான் என நம்பிக்கை வைத்துள்ளனர்.

மூன்றாவது வகையினர் :

அல்லாஹ்வே இந்த அவ்­லியாவின் பொருட்டால் என்னுடைய நோயைப் போக்குவாயாக. என்னுடைய நாட்டத்தை நிறைவேற்றுவாயாக என்று கேட்கின்றனர். அதாவது அவ்­லியா இவர் பேசுவதை கேட்கவும் மாட்டார். பார்க்கவும் மாட்டார். மாறாக இறந்து போனவரின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் கட்டாயம் தருவான் என நம்புகின்றனர்.

முதல் இரண்டு வகையினர் தவறிழைப்பவர்கள் என்று எண்ணுகிற சுன்னத் (?) ஜமாஅத்தினரில் சிலர் கூட மூன்றாவது வகையான இன்னாரின் பொருட்டால் துஆ கேட்பது கூடும் என்கின்றனர்.

இதுவும் பச்சை ஷிர்க் என்பதற்கு ஏராளமான குர் ஆன் ஹதீஸ் சான்றுகள் உள்ளன என்பது ஒரு பக்கமிருக்க, மத்ஹப் நூல்கள் சொன்னால் தான் கேட்போம் என்று கூறுபவர்களுக்காக கீழ்காணும் சான்றுகள்..

அல்லாஹ்வின் பொருட்டால் தவிர பிரார்த்தனை செய்வது வெறுப்பிற்குரியதாகும். இறைவா உன்னிடம் இன்னாரின் பொருட்டால் கேட்கிறேன். அல்லது உன்னுடைய மலக்குமார்களின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்களின் பொருட்டால் கேட்கிறேன் என்று கூறுவது கூடாது. ஏனெனில் படைப்பினங்களுக்காக அல்லாஹ்வின் மீது எந்தக் கடமையும் இல்லை.
நூல் : ஹனஃபி மத்ஹபின் இஹ்தியார் என்ற நூல் பாகம் : 4 பக்கம் : 175)

இறைவா இன்னாரின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறுவது கூடாது. அவ்வாறே உன்னுடைய நபிமார்களின் பொருட்டால், உன்னுடைய அவ்­யாக்களின் பொருட்டால் உன்னுடைய தூதர்களின் பொருட்டால் கஅபாவின் பொருட்டால் மஷ்அருல் ஹராமின் பொருட்டால் என்று கேட்பது கூடாது. ஏனெனில் படைப்பினங்களுக்காக அல்லாஹ்வின் மீது எந்தக் கடமையும் இல்லை. மேலும் அல்லாஹ் அவன் மீது எத்தகைய நிர்பந்தமும் இல்லாமல் தன்னுடைய அருளை தான் நாடியோருக்கு வழங்குகிறான்
றீல் : ஹனஃபி மத்ஹபின் அல்பஹ்ருர் ராயிக் பாகம் : 8 பக்கம் : 235)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக