வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 2


காந்தி மறைவுக்கு முன்னர் சுதந்திரம் கிடைத்து விட்டது என்று சொல்லும் போது, "என்னது காந்தி செத்துட்டாரா?" என்று ஒருவன் கேட்டால் அது எப்படி அப்பாவித்தனமாய் காட்சி தருமோ அதே போன்று இருக்கிறது, அஹமதியா கொள்கையை நிலை நாட்ட போகிறோம் என்று புறப்பட்ட சிலர், பிஜே எப்படியெல்லாம் இந்த சமூகத்தை வழிகெடுத்தார் என்று பேசலாமா என்று கேட்பதும் இருக்கிறது.

பிஜேவை கழுவிக் குடிக்கும் பேச்சுக்களை கேட்டு கேட்டு இந்த தலைமுறை தமிழ் மக்களுக்கு சலித்தே விட்டது என்பதும், அதற்கு பதில் சொல்லி, அவ்வாறு கழுவியவர்களை ஓட ஓட விரட்டி கூட அவர்களுக்கே போர் அடித்து விட்டது என்பதும்,
25
வருட வன வாசத்திற்கு பிறகு தமிழக தவ்ஹீத் எழுச்சியை காணும் Nizar Mohamed அவர்களைப் போன்றோருக்கு தெரியாததில் வியப்பில்லை தான்.

பிஜே பற்றி என்னவெல்லாம் இப்போது பேசுகிறீர்களோ அவை அனைத்திற்கும், தவ்ஹீதை ஏற்றிருக்கக்கூடிய ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பதில் சொல்வான். அவ்வளவு தெளிவாக இந்த சமூகம் உள்ளது என்பதையும் உங்கள் மேலான கவனத்திற்கு தருகிறேன்.

அஹமதியா கொள்கையை நிலைனாட்டுவது உங்கள் நோக்கம் என்றால் அதை பேசுங்கள். முதல் கட்டமாக நான் வைத்த பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள்.

மிர்சா சாஹிப் பற்றி பேசுங்கள். 
அவர் எப்படி நபியானார் என்பதை பேசுங்கள். 
நபியும் மஹதியும் எப்படி ஒரே நபராக இருக்கிறார் என்பதை விளக்குங்கள். 
முஹம்மது நபி தான் இறுதி நபி என்பதாக வரக்கூடிய ஹதீஸ்கள் குறித்த எனது கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
ஈஸா நபி இறந்து விட்டார் என்றால், அவர் மீண்டும் வருவார் என்பதாக வரக்கூடிய ஹதீஸ்கள் பற்றிய உங்கள் நிலையை விளக்குங்கள்.
மிர்ஸா குலாம் சாஹிப் பொய் சொன்னதாக நான் காட்டிய இரு ஆதாரங்கள் பற்றி விளக்குங்கள்.

இதையெல்லாம் விட்டு விட்டு, பிஜே, பிஜே என்று பிஜே பற்றி தான் பேச வேண்டும் என்றால்,

நான் வேண்டுமானால் பிஜேவிடம் நேரம் வாங்கித் தருகிறேன்.

குர் ஆன் தஃப்சீரில் அவர் தவறிழைத்தாரா? அவர் இந்த சமுதாயத்தை வழிகெடுத்தாரா? அவர் மார்க்கத்தை வளைத்தாரா?

போன்றவைகளையெல்லாம் Nizar Mohamed ஆகிய நீங்கள் அவரோடு நேரடியாக பொது மேடையில் விளக்கி முடிந்தால் அவர் முகத்தில் கரியை பூசுங்கள்.
அதை நாங்கள் நேரடியாக கண்டு தெரிந்து கொள்கிறோம். 

அதை செய்யாமல், ஒரு தனி நபரைப் பற்றி, அவரே உயிருடன் இருக்கும் போது, பிறரிடம் பேசி நேரத்தை களைய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அஹமதிய்யா கொள்கை பற்றிய எனது கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கின்றன என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக