புதன், 7 மே, 2014

சமுதாய சீர்கேட்டிற்கு அரசே காரணம்


வாக்குப்பதிவு நாட்களின் போது மதுக்கடைகளை அடைக்கும் அரசாங்கம், இந்த சமூகத்திற்கு பல உண்மைகளை சொல்கிறது!

மது அருந்தினால் போதை தலைக்கேறி மூளை மழுங்கும், மூளை மழுங்கினால் சிந்தனை தடுமாற்றம் ஏற்படும்.
சிந்தனையில் தடுமாற்றம் உள்ளவனால் நாட்டின் தலைவர் யார் என்பதை சரியாக தேர்வு செய்ய இயலாது !
நல்ல சட்டம் தான்.
ஆனால் நாம் கேட்பதெல்லாம் இந்த சட்டத்தை ஏன் எல்லா காலத்திற்கும் நீங்கள் அமல்படுத்தவில்லை?

இந்த சிந்தனை தெளிவும் போதையற்ற நிலையும் நாட்டு மக்களுக்கு ஆட்சித் தலைவரை தீர்மானிப்பதற்கு மட்டும் தான் தேவையா? அவனது அன்றாட வாழ்வில் அது தேவையில்லையா?
குடும்பத்தை வழி நடத்தி செல்ல சிந்தனை தெளிவு அவசியமில்லையா?
பணியிடங்களில் அது அவசியமில்லையா?
சமூகத்தில் வெற்றி பெறுவதற்கு அது இன்றியமையான ஒன்றில்லையா?

ஒரு தனி மனிதன் அவனது தனிப்பட்ட வாழ்வில் கெட்டு சீரழிந்தாலும் பரவாயில்லை, ஆளப்போகும் என்னை மட்டும் அவன் தெளிவாக தேர்வு செய்ய வேண்டும் என்று எண்ணுகிற போங்கு எத்தனை கேவலமானது !
இந்த சமூகத்திற்கு அது எவ்வளவு ஆபத்தான முன்னுதாரணத்தை விட்டு செல்கிறது !!

இலவச அரிசி கொடுப்பது சமூகத்திற்கு செய்யும் தொண்டு என்றால் அந்த தொண்டு, ஒருவனை சிந்தனை தெளிவுள்ளவனாக ஆக்குவதில் இல்லையா?
மக்கள் நலனுக்கு தான் அரசாங்கமேயொழிய அரசாங்கத்தின் நலனுக்காக மக்கள் இல்லை என்பதை ஆள்வோர் புரிந்து கொள்ள வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக