புதன், 7 மே, 2014

குமரி மாவட்ட வேட்பாளர்களே..
தமிழகத்தில் மூன்று தொகுதிகளை தவிர மீதமுள்ள எல்லா தொகுதிகளிலும் திமுகவை ஆதரிக்கும் முடிவை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்திருக்கிறது என்பதை நாம் அனைவ‌ரும் அறிவோம்.
அந்த மூன்று தொகுதிகள் மயிலாடுதுறை, தேனி மற்றும் குமரி.

இந்த மூன்று தொகுதிகளில் திமுகவை விட்டு காங்கிரஸை ஆதரிக்க காரணம், இந்த மூன்றிலும் திமுகவை விடவும் காங்கிரஸின் செல்வாக்கு அதிகமாய் இருக்கிறது என்பது தான்.

இறுதி இலக்கு பாஜகவை வீழ்த்துவது தான் என்பதால், அதற்கான காய் நகர்த்தல்களை மிகவும் கவனத்துடனும் சுதாரிப்புடனும் தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது என்கிற வகையில் இயக்க விருப்பு வெறுப்புகளையும், கொள்கை வேற்றுமைகளையும் அப்புறப்படுத்தி, தவ்ஹீத் ஜமாஅத் கைகாட்டும் கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை, பல்முனை போட்டி நிலவுவதை நாம் அனைவரும் அறிவோம்.

பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிஷ்ணனை தோற்கடிக்க வேண்டுமானால் போட்டியில் சற்றே முன்னணியில் நிற்கும் காங்கிர‌ஸ் வேட்பாளர் வசந்த குமாரை குமரி மாவட்டத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஆதரிக்கும் பச்சத்தில் அவர் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு என்பதை நாம் உணர்ந்த காரணத்தால் அவரை ஆதரிக்கும் முடிவை நாம் எடுத்திருக்கிறோம்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நாம் புறந்தள்ளி, பாஜகவை வீழ்த்துவது என்கிற ஒற்றை இலக்கை அடிப்படையாக கொண்டு குமரி மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாய் காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.

ஓட்டுக்கள் சிதறக் கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் நாம் ஓட்டு போடுவதோடு மட்டுமல்லாமல், நமது உற்றார், உறவினர்களிடமும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்து சொல்ல வேண்டும்.

இதன் மூலம் பாஜகவை மண்ணை கவ்வ செய்யலாம், இன்ஷா அல்லாஹ் !

எண்ணத்தை தூய்மையாக்கிக் கொண்டு நாம் ஒரு செயலில் இறங்கினால் அல்லாஹ் அதில் வெற்றியை அளிப்பான் !

குமரி மக்களின் ஆதரவு பெற்ற கட்சி காங்கிரஸ் !
குமரி மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் வசந்த் குமார் !!
குமரி மக்களின் ஆதரவு பெற்ற சின்னம் கை !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக