சனி, 24 மே, 2014

தாடியின் அளவு குறித்த ஒரு கேள்வி




நீளமாக வைக்க வேண்டும் என்று கூறுவோர் ஒரு சாரார்.
நீளம் முக்கியமில்லை, பரப்பளவு தான் முக்கியம், மீசையை கத்தரித்து, அதை விடவும் பெரியதாக தாடியை வைத்துக் கொண்டால் போதுமானது என கூறுவோர் மற்றொரு சாரார்.

இரண்டில், நீளமாக வைப்பது அவசியம் இல்லை என்கிற கருத்து தான் சரியானது. காரணம், நீளம் பற்றி நபி (சல்) அவர்கள் எந்த வரையறையையும் இடவில்லை. நபிகள் நாயகம் (சல்) அவர்கள் எதை சொன்னார்களோ அது தான் மார்க்கம். நபியின் தாடி நீளமாக தான் இருந்தது என்று வைத்துக் கொண்டால் கூட, அவர்கள் அவ்வாறு நீளத்தை வலியுறுத்தாத காரணத்தால் அவர்களது செயல் மார்க்கமாகாது !

இது ஒரு பக்கம் இருக்க,
நபி (சல்) அவர்கள் ஒரு கைப்பிடி அளவிற்கு நீளமாக வைத்திருந்தார்கள் என்கிற சஹாபியின் கூற்றினை (அல்லது செயலினை) ஆதாரமாக கொண்டு ஒரு கையளவு நீள்மாக தாடி வைப்பது தான் சுன்னத் என்று சொல்வோரிடம் இப்போது ஒரு கேள்வி..

ஒரு கையளவு நீளம் தான் சஹாபி சொன்னது, அப்படி தான் நபி அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதால் அதை விடவும் சிறிதாக தாடி வைப்பது சுன்னத் இல்லை என்கிறீர்கள். சரி.
அப்படியானால், ஒரு கையளவு நீளத்தை விடவும் பெரியதாக தாடி வைப்பதும் சுன்னத் இல்லை என்று தானே நீங்கள் சொல்ல வேண்டும்?

சொல்வீர்களா?
அப்படி இதுவரை சொல்லியிருக்கிறீர்களா?

நபி (சல்) அவர்கள் எப்படி வைத்தார்களோ அப்படி வைப்பது தான் சுன்னத் என்று கூறி தவ்ஹீத்வாதிகள் வைக்கும் தாடிகளை விமர்சனம் செய்பவர்கள், நெஞ்சு பகுதி வரையிலும் தொப்புள் அளவு வரையிலும் தாடியை வளர்த்து வைத்திருப்பவர்களையும் விமர்சனம் செய்யட்டும் பார்க்கலாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக