சனி, 24 மே, 2014

நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட வேண்டாம்


பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்த மறு கணமே,சொல்லி வைத்தாற்போல் இதை செய்தது (இல்லாத) இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு என்று ஊடகத்தில் பரப்பி விட்டால் இஸ்லாமியர்களை களங்கப்படுத்தியதாக ஆகி விடும்.

தாடியும் தொப்பியும் வைத்துக்கொண்டு நடமாடும் இளைஞர்களை பிடித்து வந்து பொய் வழக்குகள் இட்டு உள்ளே தள்ளி விட்டால் ஃபைலை மூடி விடலாம்.
ஆனால் இவையெல்லாம் குற்றங்கள் குறைவதை ஒரு காலத்திலும் தடுத்து நிறுத்தாது.

முஸ்லிம்களின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற இவர்களது ஆர்வத்தில் சிறு பகுதியையாவது உண்மை குற்றவாளிகளை துப்பறிவதற்கு காட்ட வேண்டும்.
அப்போது தான் நிஜத்தில் தவறு செய்பவன் அஞ்சுவான்.
நாம் என்ன செய்தாலும் அரசின் பார்வை முழுக்க இன்னொரு மதத்தின் மீது தான் விழும் என்கிற நிலை உருவானால் தவறிழைப்பவன் பாதுகாப்பு பெறுகிறான். மென்மேலும் தவறுகள் செய்வதற்கு தயங்க மாட்டான்.

வெறுமனே டிசம்பர் ஆறின் போது ரயில் நிலையங்களில் பாதுகாப்பு, சுதந்திர தினத்தன்று மூன்றடுக்கு பாதுகாப்பு, குடியரசு தினத்தின் போது விமான நிலையங்களில் இரண்டடுக்கு பாதுகாப்பு என்றெல்லாம் இடுவதால் எந்த பயனுமில்லை.

ஒரு மதத்தை களங்கப்படுத்துகிறோம் என்கிற பெயரில் நாட்டின் அமைதிக்கும் ஒருமைபாட்டிற்கும் அச்சுறுத்தலாய் விளைவது நாட்டின் காவல்துறை தான் என்கிற அவப்பெயர் அரசுக்கு வந்து விடக்கூடாது !

நீதிமன்றங்களில் இருக்கும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது வரை தான் நாடு அமைதியாய் இருக்கும் !
அது அவிழாமல் காக்க வேண்டிய கடமை ஆள்வோருக்கு உள்ளது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக