சனி, 24 மே, 2014

இப்படியும் ஒரு அற்பத்தனம்


பணிகள் பலவற்றை செய்ய இயக்கம் இல்லை என்கிற காலமிருந்தது. 
பணிகள் செய்வதற்காகவே இயக்கங்களும் பின் துவக்கப்பட்டன.

ஆனால் இன்றைக்கு சில் புகழ் விரும்பிகள் இருப்பதை பார்க்கிறோம்.

இயக்கம் ஆரம்பிப்பதையே பணியாக கொள்கின்றனர் !!?!!

நீ என்ன செய்றே? நான் இந்த கேகூகா கூட்டமைப்பில் செயலாளர்.
நீ??
நான் அந்த‌ மாகாக கூட்டமைப்புக்கு துணைத் தலைவர்..

என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில் தான் எத்தனை அற்ப சுகம் !

எல்லாம் சரிப்பா, உன் கூட்டமைப்பின் நோக்கம் தான் என்ன? என்று கேட்டால்..

...அதுவா.. .அது வந்து... அது தான் பேசிகிட்டிருக்கோம் ..
என்கின்றனர்.

என்ன நோக்கம், அதன் திட்டங்களும் செயல்பாடுகளும் தான் என்ன? என்பதை கூட வரையறுக்காத நிலையில் கூட்டமைப்பென்றும் தலைவர் என்றும் செயலாளர் என்றும் உருவாவது இந்த சமுதாயத்தின் மிகவும் அருவருப்பான முன்னுதாரணம் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ரஜினிக்கு ரசிகர் மன்றம் வைத்து அதில் தலைவர், துணைத் தலைவர் என்றெல்லாம் இருக்கைகள் இட்டால், அதன் பிறகு தான் இந்த ரசிகர் மன்றத்தை வைத்து என்ன செய்யலாம் என்று சிந்திப்பர்.
அவர்களது இலக்கு தங்களுக்கென பெயரும் அடையாளமும் வேண்டும் என்பது தானே தவிர, நோக்கமோ இலக்கோ ஏதும் கிடையாது !!

தற்பெருமையும் ஆணவமும் இருக்கும் எவனுமே சொர்க்கம் செல்ல முடியாது என்கிற நபிமொழியை தான் நாம் நினைவுப்படுத்த வேண்டியுள்ளது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக