அன்புள்ள nashid, உனது 11.5.14 தொடர் 1 பாகம் 4 க்கு பதில்.
1) நீ எழுதி உள்ளாய் : “ஈஸா மரணித்து விட்டார்..ஈஸா நபி மரணித்து விட்டார் என்று கூறி கூறியே நாட்கள் கடத்திய நீங்கள் அதற்கு சான்றாக காட்டிய ஐந்து ஆதாரங்கள் எவ்வாறு உங்கள் கருத்தை நிலைபெற செய்யவில்லை என்பதை முந்தைய பதிவில் விளக்கமாக பார்த்தோம்.”
என் பதில் : முந்திய உன் பதிலில், நீ உருப்படியாக பதில் தர முடியாததால் வேண்டுமென்றே குழப்பி உள்ளாய். மேலும் சரியான பதிலை தந்தது போன்று திரும்ப திரும்ப எழுதுகிறாய்.
இதுவரையிலும், குதர்க்கமாக மறுத்தும், உலக வாதிகளை உதாரணம் காட்டியும் எழுதி உள்ளாய், மாறாக ஒரு வசனம் கூட ஆதாரமாக உன்னால் காட்டமுடியவில்லை.
2) நீ எழுதி உள்ளாய், நீங்கள் கியாமத் நாள் வரை முயன்றாலும் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு எந்த சான்றையும் உங்களால் தர முடியாது.
என் பதில் : 2000 ஆண்டுகளாக ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்குத்தான் சான்று காட்ட வேண்டும். மரணித்தவருக்கு நான் சான்று காட்டவேண்டும் என்று நீ கேட்டிருப்பது விந்தையிலும் விந்தை.
ஆனாலும், பல கிஸ்ஸாக்களை நெஞ்சிலே சுமந்து கொண்டு, கிறிஸ்தவர்களை போன்று கற்பனையை, மாயையை நம்பி,
குரானை முதுகுக்கு பின்னால் எறிந்துவிட்ட ஆலிம்களை நீங்கள் பின்பற்றிக் கொண்டு இருப்பதால் தான், நேரமில்லாத நிலையிலும், நான் இந்த முயற்சியை மேற்கொண்டு, அதன் அடிப்படையில், 5 வசனங்களை வைத்து ஈஸா நபி மரணித்து விட்டார் என்று நிரூபித்துள்ளேன்.
3) விவாதம் ஆரம்பித்த பிறகு, இப்போது தான், முதல் தடவையாக ஈசாவை உயர்த்தி உள்ளதாக தவறான ஒரு கருத்தை வைத்துள்ளாய்.
நீ எழுதிஉள்ளது :
“அவரை சிலுவையில் அறைவதற்காக கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தை அல்லாஹ் 4 ஆம் அத்தியாயத்தில் விளக்குகிறான். அதில், அவரை கொன்று விட்டதாக யூதர்கள் எண்ணுகிறார்கள். அதைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, அவர்கள் அவரை கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. அவர்கள் தவறான நம்பிக்கையிலேயே இருக்கிறார்கள் நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவில்லை என்று அல்லாஹ் சொல்லி விட்டு, அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டதாகவும் சொல்கிறான்.
இவை 4:157,158 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள சம்பவம்.
இது உடலுடனான உயர்த்துதல் இல்லை, அந்தஸ்து உயர்வு, என்றெல்லாம் உங்கள் தரப்பில் வைக்கப்படும் எந்த வாதமும் அர்த்தமில்லாதது, அவற்றை நீங்கள் சொல்கிற போது, அவை எந்த அளவிற்கு பொருத்தமற்றது என்பது விளக்கப்படும்.
உடலோடு உயர்த்தப்பட்டார் என்கிற பொருளாக்கம் தான் சரியானது, இவ்விடம் பொருத்தமானது.கொல்லப்பட இருந்த ஈஸாவை தன்னளவில் உயர்த்திக் கொண்டதாய் அல்லாஹ் சொல்கிறான் என்றால், இங்கேயும் சிந்தனையை செலுத்த வேண்டும்.
அப்படியானால் அவர் அல்லாஹ்வால் உடலோடு உயர்த்தப்பட்டு விட்டார்.”என்று நீ எழுதி உள்ளாய்.
என் பதில் :
A) குரான் 4:157, 158 வசங்களை முழுமையாக வைக்காதது ஏன்?
B) நீ எழுதி உள்ள “உடலோடு உயர்த்தப்பட்டார் என்கிற பொருளாக்கம் தான் சரியானது, இவ்விடம் பொருத்தமானது”---- இதற்கு என்ன ஆதாரம்?
C) ரஃபஅ என்பதற்கு உடலோடு உயர்த்தபட்டார் என்று எழுதி உள்ளதற்கு, ஆதாரம் வைக்காமல், தான் தோன்றித்தனமாக பொருள் கொடுத்ததற்கு என்ன காரணம்?
D) ஈஸா நபி மனிதர் என்ற முறையிலும், தூதர் என்ற முறையிலும், பொய் கடவுள் என்ற முறையிலும், இயற்க்கை விதிக்கு எதிராக, உண்ணாமல்,குடிக்காமல் வழமுடியாது என்பதன் அடிப்படையிலும், நபியே நீர் மரணித்து அவர்கள் உயிரோடு இருப்பதா என்ற அல்லாகுவின் கேள்வியின் அடிப்படையிலும், ஈஸா இறந்துவிட்டார் என்று தெளிவான ஆதாரங்கள் இருந்தும்,
அந்த ஆதாரங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, கிறிஸ்தவ கொள்கையை நிலை நாட்டும் வகையில், அல்லாஹூ சொல்லாத ஒன்றை, அதாவது ஈஸா உடலோடு உயர்த்தபட்டதாக நீங்கள் சொந்தமாக எழுதி உள்ளது எதை காட்டுகிறதென்றால், 3456 ஹதீஸின் படி நீங்கள் கிறிஸ்தவர்களை போன்று ஆகிவிட்டீர்கள் என்பதைதான்.
E) எனவே எனது கேள்வி என்னவென்றால், எதன் அடிப்படையில், ரஃபஅ என்பதற்கு உடலோடு உயர்த்தபட்டார் என்று பொருள் கொடுத்துள்ளாய்?
F) 100 வருடங்களுக்கு முன்னர், கிறித்தவ பாதிரிமார்கள் போலியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, அவர்களின் நம்பிக்கையை குரான் தர்ஜுமா, மற்றும் தப்சீர்களில் நுழைத்துள்ளார்கள். அதே போல 1000- க்கணக்கான தீய முஸ்லிம் ஆலிம்கள், கிறிஸ்தவர்களாக மாறி, குரானின் வசனங்களுக்கு, அவர்களுக்கு சாதகமான அர்த்தங்களை புகுத்தி உள்ளார்கள் .
மேற்சொன்ன கருத்துக்களை PJ போன்ற ஆலிம்கள் பல வருடங்களுக்கு முன்னர் எடுத்து வைத்து பிரச்சாரம் செய்துள்ளார்கள்.
அதாவது , இன்றய முஸ்லிம்களின் மத்தியில் கபரு வணக்கம் ஏற்பட்டதற்கு காரணமே, அதாவது இறந்துபோன நல்லடியார்கள், நாம் வேண்டுவதை கேட்கிறார்கள் என்ற நம்பிக்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டதற்கு காரணமே, யூத கிறிஸ்தவர்களின் சூழ்ச்சி என்றெல்லாம் PJ போன்ற ஆலிம்கள் மார்க்க பிரச்சாரம் செய்தார்கள்.
ஆனால் அந்த backward ஆலிம்களுக்கு பதில் கொடுத்து தட்டிக்கேட்ட, இந்த forward ஆலிம்கள், ஈஸா நபி விஷயத்தில், கிறிஸ்தவர்களின் கடவுள் கொள்கைக்கு, தன்னை, தெரிந்தோ தெரியாமலோ இரையாக்கிக் கொண்டார்கள்.
G) அது மட்டுமல்ல எல்லா நபிமார்களும், எதிரிகளால் மறுக்கபட்டது போலவே, இக்காலத்தில் தோன்றிய ஹஸ்ரத் ahmed அலை அவர்களை மறுக்கவேண்டும் என்ற ஒரே கரணத்திற்காக, எந்த ஆதாரமும் இல்லாமலே ஈஸா நபியை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
.h) எனவே உடலோடு உயர்த்தபட்டார் என்று தவறாக பொருள் கொடுத்துள்ளதற்கு ஆதாரம் காட்டு .
I) அல்லாஹு அனுப்பிய பல நபிமார்களை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல், தூற்றி, பொய்ப் படுத்தி, கொடுமைப் படுத்தி, கொலை செய்வதற்கும் முயற்சி செய்துள்ளதாக மார்க்க வரலாற்றில் காணமுடிகிறது.
அதே போன்றே ஈஸா நபியும் அந்த தீய யூத ஆலிம்களால் பொய் படுத்தபட்டு, தூற்றப்பட்டு, பல கொடுமைகள் இழைக்கப்பட்டு, கொல்ல முயற்சி நடைபெற்றது.
ஆனால் அல்லாஹு ஈசாவை காப்பாற்றி, ஈசாவுக்கு மிகவும் உயர்வை, கண்ணியத்தை கொடுத்தான்.
J) ஹஸ்ரத் முஹம்மத் ஸல் அவர்களையும், பின்பற்றிய முஸ்லிம்களையும் மக்கத்து எதிரிகள் பொய்ப் படுத்தி, தூற்றி, கொடுமைப் படுத்தி, கடைசியில் முகம்மதை கொல்வதற்கு 100 ஒட்டகங்கள் பரிசும் அறிவிக்கிறார்கள். எதிரிகள் ஏராளமானோர் நபியின் வீட்டை முற்றுகையிட்டு விட்டார்கள்.
அடுத்த நொடியில், நபி அவர்களை, எதிரிகள் கொல்வதற்கான எல்லா சாத்யமும் இருந்தது.
இந்த இக்கட்டான சந்தர்பத்திலும் கூட, நபி ஸல் அவர்களை அல்லாஹு அப்படியே உடலோடு தூக்கவில்லையே! ஏன்?
ஆனால் அல்லாஹு மிகவும் எளிய முறையில் நபி ஸல் அவர்களை காப்பாற்றினான்.
அதாவது நபி அவர்கள், மிகவும் தைரியமாக வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள், மிகவும் தைரியமாக எதிரிகளின் முன்னிலையிலேயே நடந்து, வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
ஒரு நபி அல்லாஹு மீது கொண்ட நம்பிக்கை, அல்லாஹு மீது வைத்துள்ள தவக்கல், இதன் காரணமாக நபிக்கு அல்லாஹு தைரியத்தை கொடுக்கிறான்.
அதே போன்று தன் மீது தவக்கல் வைத்துள்ள நபியை, மிகவும் எளிய முறையில் அல்லாஹு காப்பாத்துகிறான்.
இயற்கை சட்டத்துக்கு எதிராக நபியை உடலோடு உயர்த்தவேண்டிய கட்டாயமே அல்லாகுக்கு தேவை இல்லை.
அதன் பிறகு தவ்ரு குகையில் மறைந்து தங்கிய, நபி ஸல் அவர்களை ஒரு சிலந்தி வலையின் மூலம் அல்லாஹு காப்பாற்றினானே ஒழிய, தனது ரசூலை உடலோடு உயர்த்தவில்லையே?
பின்னர் மக்காவிலிருந்து, மதீனா சென்று, கடைசியில் மக்கா வெற்றியை கொடுத்து நபி ஸல் அவர்களுக்கு மிக பெரிய உயர்வை கொடுத்தான்.
K) இதே போன்ற ஒரு நிலை தான் அல்லாகுவின் அடியாரான ஈசாவுக்கும் ஏற்பட்டது. ஆனால் அல்லாஹுவோ எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கின்றான். ‘
அவர்களும் திட்டம் தீட்டுகிறார்கள், அல்லாஹுவும் திட்டம் தீட்டுகிறான், அல்லாஹுவின் திட்டம் வெற்றிபெறும்’ என்ற குரான் வசனத்திற்கு ஏற்ப ஈஸா நபியை காப்பாற்றி அவர்களுக்கு மேலான உயர்வை அளிக்கின்றான்.
எப்படி நபி ஸல் அவர்களை எதிரிகளின் பிடியிலிருந்து காப்பாற்றி, தவ்ர் குகையில் தங்க செய்து, பின்னர் மதீனாவில் புகலிடம் அளித்து, கடைசியில் மக்கத்தை வெற்றி கொள்ள செய்து, மேலான உயர்வையும், கண்ணியத்தையும், அந்தஸ்தையும் அல்லாஹூ வழங்கினானோ,
அதே போன்று ஈஸா நபியை எதிரிகளின் பிடியிலிருந்து காப்பாற்றினான்; மேலான உயர்வை வழங்கினான்.
L) குரானில் நீ காட்டிய ஆயத்தில் ரஃபஅ என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்துதல் என்று பொருள் உள்ளதாக ஒரு ஆதாரமும் காட்ட முடியாது.
இப்போதுள்ள forward ஆலிம்கள், ஈஸா நபியை பற்றி மட்டும் கிஸ்ஸாவை அளந்துள்ளார்கள் என்று நினைக்க வேண்டாம். எல்லா நபிமார்களை பற்றியும், தப்ஸீர் என்ற பெயரால் கிஸ்ஸாக்களை புனைந்துள்ளார்கள், என்பதை இன்ஷா அல்லாஹ் எடுத்துரைப்பேன்.
M) நான் ஏற்கனவே ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு குரானிலிருந்து 5, 6 வசனங்களை காட்டி உள்ளேன். அதற்கு மாறாக நீ ரஃபஅ என்பதற்கு தவறான பொருள் கொடுத்து ஈசாவை அல்லாஹு உடலோடு உயர்த்தி உள்ளதாக கூறி உள்ளாய்.
எனவே ரஃபஅ என்பதற்கு உடலோடு உயர்த்துதல் என்று பொருள் உண்டு என்பதை நீ நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், ஈஸா நபி விஷயத்தில் நீங்கள் ஷிர்க் செய்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
இதிலிருந்து புகாரி 3456 இன் படி முஸ்லீம்கள் ,யூத கிறிஸ்தவர்களை சாணுக்கு சாண் பின்பற்றுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.
4) நீ எழுதி உள்ளது: “43:61 வசனத்தில் கியாமத் நாளுக்கு
அடையாளமாக ஈஸாநபி இருப்பார் என்றும் அல்லாஹ் சொல்கிறான் !”
என் பதில் :
ஈஸா நபி என்று அந்த மூல வசனத்தில் இல்லை.
மேலும் நீ எழுதி உள்ளது: அவர் தான் தஜ்ஜாலை கொல்வார், ...... டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். ........ அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார்........
என் பதில்:
இவைகளை எல்லாம் நீ இப்போது எழுதுவதற்கு என்ன தேவை? அதற்கு பதில் சொல்ல தேவையும் இல்லை. ஒவ்வொரு தொடரிலும் நாம் பேசும் கருத்தை குழப்பிவிட்டு, மேலே உள்ள ஹதீசுகளை கூறி TRACK மாறுகிறாய். இதிலிருந்தே உன்னிடம் எந்த உண்மையும் இல்லை என்று புலனாகிறது.
ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதற்கு தெளிவான,உறுதியான 5 வசனங்களை வைத்துள்ளேன்.
அதற்கு ஒழுங்காக பதில் சொல்லாமல், கருத்துக்களை அங்கும் இங்கும் எழுதி சாமிரி வேலை பார்க்கிறாய்.
எனவே முதலில் ஈஸா நபி உயிரோடு இருக்கிறார் என்பதற்கு சொந்த விளக்கத்தை விட்டு விட்டு, ஒரு ஆதரத்தையாவது காட்டு.
இந்த subject ஐ பேசி முடித்த பிறகு,கியமத்தில் வந்து, எப்படி தஜ்ஜாலை கொல்வார், பன்றியை கொல்வார்.....என்பதையெல்லாம் பார்ப்போம்.
எனவே TRACK மாறுவதை விட்டு விட்டு, ஈஸா நபி இறந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொண்டு, ஷிர்க்கிலிருந்து வெளியே வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் மேலும் தொடரும்.