இன்று சிலர், இன்னின்ன மனிதர்கள் அறிவித்து விட்டார்களா? அப்படியானால் இந்த செய்தி சரியாக தான் இருக்கும், அவர்களெல்லாம் நம்பகமானவர்கள், ஆகவே அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை குறித்து நம் சிந்தனையை செலுத்த தேவையில்லை என்ற வாதத்தை வைக்கிறார்கள்.
மத்ஹபை நம்புபவர்கள் துவங்கி, சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் துவங்கி, குர்ஆனுக்கு முரணான செய்திகளை அறிவிக்கும் அறிவிப்பாளர்களை நம்புபவர்கள் வரை, அனைவருமே தனி நபர் ஒன்றை கூறி விட்டால் அதன் பிறகு சிந்திக்க கூடாது, அப்படியே நம்பி விட வேண்டும் என்கிற கொள்கையில் இருக்கிறார்கள்.
ஆனால், நம்பகமானவர்களுக்கெல்லாம் நம்பகமானவன் அல்லாஹ் ! மனிதர்களில் நம்பகமானவர்கள் கூட தவறிழைத்து விடுவார்கள், ஆனால் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவன் அல்லாஹ் !!
அப்படிப்பட்ட அந்த ஏக இறைவன், ஒரு செய்தியை சொன்னால், அதை கூட கண்ணை மூடி நம்ப கூடாதாம், அதில் கூட நம் சிந்தனையை செலுத்தி அதன் பிறகு தான் நம்ப வேண்டுமாம் !
இதை யார் சொல்கிறார்?? அந்த ஏக இறைவனே சொல்கிறான் !
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். 25:73
அல்லாஹ்வின் வஹீ என்று ஒரு செய்தி கூறப்படுமேயானால் கூட, அதை சிந்தித்து பார்த்து அதன் பிறகு தான் நம்ப வேண்டும் என்பது எத்தனை அழகிய, ஆழமான வார்த்தை !!!
மனிதர்களின் பேச்சை சிந்திக்காமல் நம்ப வேண்டும் என்று கூறுவோர் இறை வசனத்தை மறுக்கும் பொய்யர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வசனம் இது.
அனைவர்க்கும் இதை எடுத்து செல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக