வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மரண தண்டனை சரியா? விவாதம் - இம்ரான் 1


அஸ்ஸலாமு அலைக்கும் 


முகநூல் வழியாக இஸ்லாத்தை பல்வேறு வழிகளில் விமர்சித்து வரும் டாக்டர். ஜெயப்ரகாஷ் என்பவரை நாம் இது தொடர்பாக முழுமையான முறையில் விவாதம் செய்ய அழைப்பு விடுத்தோம். அவரோடு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை இந்த இணைப்பில் காணலாம். 


ஒரு சில தலைப்புகளில் பேச முடியாது என்று அவர் மறுத்து விட்ட நிலையில், அவர் முதலில் பேசுவதற்கு ஒப்புக்கொண்ட தலைப்பான மரண தண்டனை சரியா? என்கிற விவாதம் துவக்கப்பட்டுள்ளது.

நம் தரப்பில் சகோ இம்ரான் ஷெரிப் அவர்கள் வாதங்கள் வைக்கிறார். எதிர் தரப்பில் டாக்டர். ஜெயப்ரகாஷ் எழுதுகிறார்.

சகோ. இம்ரான் ஷெரிபின் முதல் பதிவை கீழே பார்க்கலாம்.


----------------------------------------------------------------------------------------------------



 Imran Sheriff  15 February 2013 16:23




 ஐந்து வாய்ப்புகள் கொண்ட இந்த விவாதத்தில் இது எனது முதல் வாய்ப்பு.  

அன்பு சகோதரர் ஜெயப்ரகாஷ் அவர்களுக்குஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும். 
மரண தண்டனை சரியா தவறா என்பதை பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு அடிப்படையை நாம் மனதில் கொள்ள வேண்டும். எந்த நாட்டினுடைய சட்டமானாலும் அதன் முதல் நோக்கம் மக்களை நல்வழிப்படுதுவதல்ல !!! எந்த காலகட்டத்திலும் எந்த நாட்டிலும் இது இரண்டாம் பட்சம் தான். நல்வழிபடுதுவதற்கு அது ஒரு சித்தாந்தத்தையோ மத போதனைகளையோ செய்யும் கேந்திரமல்லமாறாக மக்களை ஆட்சி செய்யும் நாடு. மக்களை ஆட்சி செய்யும் நாட்டில் சட்டம் இயற்றும் போது மக்களிடையே குற்றங்கள் குறைவதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்கொடுக்கிறார்கள்.. 
குற்றங்களை குறைப்பதற்கு அவர்கள் இடும் சட்டமானதுமக்களை நல்வழிப்படுத்தத்தான் செய்யும். இது தான் அடிப்படை. 
 இஸ்லாம் சொல்லும் சட்டமானதுகுற்றங்களை  குறைக்க உதவுகிறது. இஸ்லாமிய சட்டங்களை எதிர்க்கும் இன்னபிற சட்டங்களானது குற்றங்களை குறைக்க உதவவில்லை என்கிற சாதாரண உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தும் இது போன்ற விவாதத்திற்கு நீங்கள் வந்திருப்பதே ஆச்சர்யமான ஓன்று. 
 அடுத்துமரண தண்டனை அல்லது தூக்கு தண்டனை என்பது காட்டுமிராண்டிதனமானது என்பது உங்கள் கருத்து என்றால்அது போல ஒரு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கொடுப்பதும் காட்டுமிராண்டி தனமானது என்று இன்னொருவர் வாதம் வைக்கலாம். 
 என்னப்பா !!! ஒரு கொலையை செய்தான் என்பதற்காக அவனை அவனது வாழ்நாள் முழுவதும் தனி சிறையில் அடைப்பது என்பது மனித உரிமை மீறல் இல்லையா?? என்று ஒருவர் கேட்கலாம். 
 ஒரு குற்றத்தை ஒருவன் செய்தான் என்பதற்காக ஆறு மாதம் சிறையில் அடைப்பதை கூட ஒருவர் விமர்சனம் செய்வார். அதுவும் மனித உரிமைக்கு அப்பாற்பட்டது என்று வாதம் வைப்பார். ஒரு பிக்பாகட் அடித்தான் என்பதற்காக அவனுக்கு 15 நாள் காவலா?? இது மனித உரிமைக்கு விடப்பட்ட சவால் இல்லையா?? என்று வேறொருவர் கேட்பார்.
 அதாவதுமரண தண்டனை விதிப்பது தான் காட்டுமிராண்டித்தனமானதுஅதை விடுத்த வேறெந்த தண்டனையும் காட்டு மிராண்டிதனமானது இல்லை என்று வாதம் வைப்பவர்கள் அதை தர்கா ரீதியாக நிரூபிப்பதாக இருந்தால் மேற்கண்ட கேள்விகள் எழத்தான் செய்யும்.

மேலும்கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களால் பாதிப்பிற்கு  உள்ளானவர்  ஒரு புறம் இருக்க ,இது போன்ற குற்றச்செயல்கள் நிகழ்வது ஒரு சமுதாயத்தில் வாழும் அனைத்து மனிதர்களையும் எப்போதும் நிம்மதியற்றபாதுகாப்பற்ற அச்ச நிலைக்கு வழி வகுக்கும் 

உதாரனத்திற்க்கு டெல்லியில் நடந்த அந்த கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தை எடுத்து கொள்ளுங்கள்,அந்த பெண் இரவில் தன் ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதும் அப்பெண் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம்
 இந்த சம்பவத்தில் நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை சித்ரவதை செய்து கற்பழித்துள்ளனர்அந்த பெண் துடித்து கொண்டு இருந்த வேலையில் நீங்களோ நானோ இல்லைஅந்த பெண் மாத்திரம் தான் இருந்துள்ளார்அந்த பெண்ணை கற்பழிக்கும் பொழுது அவள் எத்துனை முறை கதறி இருப்பால்எதிர்த்து போரிட்டிருப்பால் ஆனால் அந்த மனித மிருகங்கள் ஒன்று அல்ல பேரும் சேர்ந்து கற்பழித்துக் குடலை உருவிக் கொன்றுள்ளனர். இப்படிப்பட்ட மனித மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று கூறுவது எந்த விதத்திலும் நீங்கள் கூறியது போல அடிபடைவாதமோகாட்டுமிராண்டித்தனமோ கிடையாது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவேளை உயிர் பிழைத்திருந்து கயவர்களை தூக்கிலிடுங்கள் என்று அந்த பெண்ணே உரிமை கூறினாலும் தாங்கள் அவளை நோக்கி, "என்னம்மா காடுமிராண்டிதனமா சட்டம் சொல்றன்னு" நீங்கள் அந்த பெண்ணை நோக்கி கூறுவது எந்த அளவிற்கு பகுத்தறிவு (?) வாய்ந்தது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பாதிப்பிற்கு உள்ளான பெண்ணிற்கும் அவள் தாய் தந்தை மற்றும் குடும்பதினர்க்கே அந்த வலி தெரியும் ,கருத்து சொல்லும் நீங்களோ ஏன் என்னாலோ கூட முழுமையாக அனுபவிக்க முடியாது .
ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல,குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?)உரிமைப் போராளியாகஇஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று கூறும் உங்கள் கருத்து அதிர்ச்சியை தான் தருகிறது .. 
சரி இவ்வளவு வேண்டாம்தாங்கள் பெரும் அளவிற்கு வன்மையாக கண்டித்த இலங்கையில் நடந்த அந்த கொடூர கொலைகள் மனிதநேயமற்ற அந்த காட்டுமிராண்டிதனத்தை செய்த இராஜபக்க்ஷேவை தூக்கிலிட்டால் அது மனித உரிமை மீறல்அப்படி தானே?அதாவது பாதிக்கபட்டவன்பாதிப்பு அரங்கேறி விட்டது இப்போ என்ன செய்ய? , பாதிப்புக்கு உள்ளாகியவன் உயிருடன் உள்ளான்இவனை எப்படி தூக்கு தண்டனையில் இருந்து காப்பற்றலாம் என கூறுவது எந்த பகுத்தறிவோ?
திரு .ஜெயபிரகாஷ் அவர்களே : பாதிப்புக்கு உள்ளானால் தான் அந்த வலி தெரியும் ..
இங்கு மற்று ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்இவை போன்ற கொடூர செயல்கள் செய்திருப்பவரை கொன்றே ஆக வேண்டும் என்று இஸ்லாமிய சட்டம் கூரவி ல்லைஅந்த பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னித்தால் அந்த குற்றம் புரிந்தவரை மன்னித்து விட முடியும் .
இங்கு பாதிபிர்க்கு உள்ளானவர்களிடம் தண்டிபதர்க்கான உரிமை வழங்க பட்டுள்ளதுஇவர் தான் முடிவெடுக்க வேண்டியவர்கள் நீகளோ நானோ அல்லது நாட்டின் ஜனாதிபதியோ அல்ல .
சட்டங்கள் கடுமையாக ஒரு சமுகத்தை பாதுகாப்பான நிம்மதியான வாழ்விற்கே வழிவகுக்குமே தவிர அது" சட்டங்கள் கடுமையாக இருந்தால் அந்த சமுதாயம் நாகரீகமடையவில்லை என்றுதான் அர்த்தம்" என்ற தங்கள் கருத்து எப்படி விளங்கி கொள்வது என்றே புரியவில்லை .
கொலை கற்பழிப்பு போன்ற குற்றம் செய்த மனித மிருகங்களை தண்டிக்க மரண தண்டனை விதிப்பது எந்த விதத்திலும் தவறு கிடையாது .
குற்றவாளியை மென்மையாக பாவிக்கும் பார்வை இது அறிவு முதிர்ச்சியில்ல .
ஒரு கோடி மனிதர்கள் நிம்மதியாக வாழ, 10 மனித மிருகங்களை தூக்கிலிடுவது எந்த வகையிலும் காட்டுமிராண்டி தனம் கிடையவே கிடையாது .
இவ்வாறு சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் தனி மனிதன் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் .
தாங்கள் கூறிய "சட்டங்கள் பயப்பட அல்ல. மனிதன் பண்பட." என்பது கவிதை நடைக்கு அழகாக உள்ளதே தவிர நிஜ வாழ்விற்கு பொருந்தாத வரிகள் அவை .
மனிதம் பாதுகாப்பாக இருக்கவும்பயன்பெறவும்மனித தோல் போர்த்தி உலா வரும் மிருகங்களின் உள்ளத்தில் பயம் இருக்க வேண்டியது என்பது ஒரு தேவை என்று நான் கூறவில்லைஅது கட்டாயம் என்று கூறுகிறேன்.
தூக்கு தண்டனை என்பது மனிததை மிருக இனத்திடமிருந்து காபற்றுமே தவிர அழிக்காது.

உங்களது முதல் வாய்ப்பின் போது மேலே நான் எழுப்பியுள்ள எல்லா கேள்விகளுக்கும் பதில்களை தந்து உங்கள் கருத்தை நிலைநாட்டவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக