"இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;" (யோவான் 11:25) என்று கூறுகிறாரே. இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொல்ல முடியுமா? | |||
PJ அவர்களின் பதில்
முதலில் நீங்கள் ஒரு வசனத்தை எடுத்துக்காட்டினால் அதை சரியான பொருளில் புரிந்து கொண்டு கேட்க வேண்டும். நீங்கள்சுட்டிக்காட்டும் வசனங்களுக்க்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்களை சேர்த்துபார்த்தால் இதன் பொருள் உங்களுக்கே விளங்கி விடும்.
யோவான் 11 அதிகாரத்தில் 21 முதல் 26 வரை உள்ளவசனங்களை பாருங்கள்
21.மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன்மரிக்கமாட்டான்.
22. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத்தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
23. இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்என்றார்
24. அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலேஅவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும்ஜீவனுமாயிருக்
26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும்மரியாமலும் இருப்பான்;இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
உயிர்த்தெழுதல் என்பதன் பொருள் உலகம்அழிக்கப்பட்ட பின் அனைவரும் மீண்டும் உயிர்க்கப்படுவதைத் தான் குறிக்கிறது.
24வசனத்தில் மார்த்தாள் கூறுவதில் இருந்து இதை விளங்கிக் கொள்ளலாம்.
மேலும் இதில் கூறப்படும் அனைத்துமே நேரடிப்பொருளில் அர்த்தம் செய்ய முடியாதவையாக உள்ளன. என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று இயேசு கூறுகிறார். மரித்துப் போன கிறித்தவர்கள் அனைவரும் உடனே பிழைத்துக் கொண்டும் இருக்கிறார்களா நிச்சயமாக இல்லை. அப்படியானால் மரித்தாலும் பரலோக ராஜ்ஜியத்தில் பிழைப்பதை தான் இயேசு கூறுகிறார் என்று விளங்கிக் கொள்ளலாம். உயிர்த்தெழுதல் என்பது அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு விஷ்யம் தான் என்று இயேசுவே விளக்கம் தந்துவிட்டார்.
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் மரிக்கமாட்டான் என்று இயேசு கூறுகிறாரே? கிறித்தவர்கள் யாரும் மரிப்பதில்லையா? அப்படித்தான் அர்த்தமா? நிச்சயமாக இல்லை. அப்படி அர்த்தம் கொடுத்தால் இயேசுவை நீங்கள்பொய்யராக்கி விடுகிறீர்கள். பரலோக ராஜ்ஜியத்தில் உயிர்த்தெழுவதால் அவர் மரிப்பதில்லை என்ற கருத்தில் தான் இதை இயேசு கூறுகிறார். அது போல் இயேசு தன்னைப்பற்றியும் அப்படி கூறுகிறார், நான் மரணித்த பிறகும் மற்றவர்களைப் போல் உயித்தெழுப்பப்படுவேன் என்கிறார். இது கடவுள் தனமையைக் கூறவில்லை, கடவுளின் குமாரன் என்பதையும் கூறவில்லை.
இதை நீங்கள் மறுத்தால் மேற்கண்ட அனைத்து வசனங்களுக்கும் நேரடி அர்த்தம் செய்து காட்டி கிறித்தவர்கள் சாக மாட்டார்கள் என்பதையும் செத்தாலும் உடனே பிழைப்பார்கள் என்பதையும் நீங்கள் நிரூபித்துக்காட்டுங்கள்.
அத்துடன் இயேசு தன்னை கடவுள் அல்ல என்று கூறிய வசனங்களையும் சேர்த்து சிந்தியுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக