அல்லாஹ் தனது திருமறையில் பிர்அவ்னின் மனைவி ஆஸியா அவர்கள் மூஸா அலை அவர்கள் கடல் மிதந்து வந்து அதை கண்டு எடுத்த போது கூறினார்கள்.
இக்குழந்தை எனக்கும் உமக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கும் என்று ஆஸியா அம்மையார் அவர்கள் சொன்னதாக இறைவன் குறிப்பிடுகிறான்.
இதை விளக்க வந்த மூடர்களின் தலைவன் ஷைகுல் ஆரிபீன் என்று போற்றப்படும் இப்லீஸ் இப்னு அரபி சொல்கிறான்.
பிர்அவ்ன் கடல் மூழ்கிய நேரத்தில் அல்லாஹ் வழங்கிய ஈமானுக்கு காரணமாக இருந்ததின் முலம் மூஸா அலை அவர்கள் கண் குளிர்ச்சியாக இருந்தார்.
அவனிடத்தில் எந்த அசுத்தமும் (குப்ரு) இல்லாத வகையில் இறைவன் இறைவன் அவனை சுத்தப்படுத்தினான். காரணம் பிர்அவ்ன் பாவம் செய்வதற்கு முன்பாக ஈமானோடு கைப்பற்றிவிட்டான். அல்லாஹ்வின் அருளில் யாரும் நம்பிக்கை இழநஙதிளராத வகையில் அவனை கைப்பற்றிதை அத்தாட்சியாக ஆக்கிவிட்டான். அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான். அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்” என்றார்.
பிர்அவ்ன் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்திருந்தால் ஈமானை ஏற்றுக் கொள்வதற்கு விரைந்திருக்கமாட்டான்.
இதை எழுதியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்தான் நான் நான்தான் அல்லாஹ் யார் யாருக்குத்தான் கட்டளையிட முடியம் என்று எழுதிய இப்னு அரபிதான். இவன் தன்னுடைய புத்தகமான புஸீலுல் ஹிகம் 200 ல் குறிப்பிடுகிறான்,
இந்த வழிகெட்ட கருத்து திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு முரண்படுகிறது.
(இவர்களின் நடவடிக்கை) ஃபிர்அவ்ன் மற்றும் அவனுக்கு முன் சென்றோரின் நடவடிக்கை போலவே உள்ளது. அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதினர். அவர்களது பாவங்களின் காரண மாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். 3 : 11
103. அவர்களுக்குப் பின் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிட மும் தெளிவான சான்றுகளுடன் அனுப்பி னோம். அவற்றை அவர்கள் ஏற்க மறுத்தனர். ‘குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?’ என்பதைக் கவனிப்பீராக! 7 : 103
எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.
46. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம்1 வரும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) 40 : 45 46
ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். எனவே அவனைக் கடுமையாகத் தண்டித்தோம். 73 : ௧௬
இது போன்ற வழிகேடர்களிடமிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்ற வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக