வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஒற்றுமைக்கு என்ன வழி?

ஒற்றுமை கோ(வே)ஷம் போடுபவர்கள், உண்மையில் ஒற்றுமையை விரும்புவார்களேயானால், ஒற்றுமை ஏன் குலைந்தது என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.

அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

இதை செய்யாமல், ஒற்றுமை, ஒற்றுமை என்று சொல்லி விட்டால் ஒற்றுமை ஏற்பட்டு விடாது.

ஒரே மேடையில் தோன்றுவதோ, ஒரே குடையில் கீழ் அணிவகுப்பதோ, ஒற்றுமைக்கு சான்று என்று நீங்கள் கருதினால் அது தவறு.

ஒற்றுமை என்பது கொள்கையில் இருக்க வேண்டும்.. அல்லாஹ் சொன்ன ஒற்றுமையாக இருக்க வேண்டும்..
மார்க்கத்தில் ஒன்றுபடுவது தான் உண்மையான ஒற்றுமையே தவிர, நீங்கள் சொல்வது போல், தேவையென்றால் சேர்ந்து கொள்ளலாம், அனைத்தையும் மன்னிக்கலாம், என்ற வாதங்கள் எல்லாம் வெறும் வாதங்களாகவே நிற்கும் .

அல்லாஹ் சொன்ன கொள்கையில் ஒன்றுபடுமாறு அனைத்து இயக்கங்களையும் அழையுங்கள்..

அதுவே உண்மையான அழைப்பு.. அதுவே உண்மையான ஒற்றுமை.. அந்த நாள் வரும் போது, ஒரே ஒரு இயக்கம் மட்டும் தான் மிஞ்சி நிற்கும்..நபிகளார் காட்டி தந்த அந்த ஒரு இயக்கம்!!

ஆக, கொள்கையை ஒன்றுபடுத்துங்கள், மக்கள் ஒன்றுபடுவார்கள். !!


-----------------------------------------------------------------------------------------------


நீங்கள் மீண்டும் மீண்டும், இயக்கத்தை ஒன்றினைப்பதையே குறிக்கோளாக கொள்கிறீர்கள்.
கொள்கையை ஒன்றிணையுங்கள் என்று நாம் சொல்கிறோம்.. கொள்கை ஒன்றாகாமல், இயக்கங்கள் ஒன்றாகாது!!

  • மார்க்க விஷயத்தில் எது சரியான கொள்கையோ, அதை அனைவரும் கடைபிடிக்கும் வகையில் ஒன்றிணைய அழையுங்கள்..

  • அரசியல், சமூக , பொருளாதார சித்தாந்தங்களில் ஒரு முஸ்லிம் கொள்ள வேண்டிய பார்வை என்ன? என்பதை குறித்த கருதொற்றுமைக்கு முதலில் அனைவரையும் அழையுங்கள்..

  • ஜனநாயக நாட்டில், இஸ்லாமிய ஆட்சி இல்லாத ஒரு நாட்டில், நம் உரிமைகளை பெறுவதற்கான வழி என்ன? என்பது குறித்த பார்வையில் அனைவரையும் முதலில் ஒன்றிணைய அழையுங்கள்..


இது போன்ற கருத்தொற்றுமை முதலில் ஏற்ப்பட வேண்டும். அதன் பிறகே, அதை அடைவதில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒற்றுமையை பார்க்க முடியும்..
இதில் எந்த ஒன்றில் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும், மீண்டும் ஒற்றுமை ஏற்படாது என்பதையும் கவனத்தில் கொள்க..


ஒரு வேளை, ஜெர்மன் முறையான வாக்கெடுப்பு முறை இந்தியாவில் கொண்டுவரப்ப்படுமானால், அப்போது, தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் போட்டியிடலாம்!
இன்றைய சூழலில் பிரிட்டின் முறையான அடிப்படையில் செயல்படும் தேர்தல் முறை, ஆட்சி முறை என்பது, பிற்ப்படுதப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகிய வர்கத்தினருக்கு போதுமான பிரதிநித்துவம் கிடைக்க வழி இல்லாத ஒரு முறை!

ஆனால், இந்த வழிமுறையை ஆதரித்து, தேர்தலில் போட்டியிடக்கூடிய முஸ்லிம் அமைப்புகள் உள்ளன..
இந்த கருத்து வேற்றுமையை மாற்றாத வரை ஒற்றுமையை பேசி என்ன பயன்?

ஆக, வெறுமனே இயக்கங்களை ஒன்றிணைப்பதோ, ஒரு தேர்தலில் ஒற்றுமையாக பேசி, ஒரே மேடையில் காட்சி தருவதோ ஒற்றுமைக்கான உண்மையான நிறம் அல்ல!!!
அடிப்படைகள் மாற வேண்டும்.. !!!!!!
அதை ஒரு புரட்சியாக செய்ய வேண்டும்.. !!!!

வெறுமனே கோஷங்கள் பயன் தராது என்பது எனது மிக ஆழமான கருத்து!!..



-----------------------------------------------------------------------------------------------



அஸ்ஸலாமு அலைக்கும்..

நடைமுறை சிந்தனையோடு நீங்கள் கருத்து சொல்வதாக இருந்தால் ஒத்த கருத்துடைய அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைத்து விட்டு, அதன் பிறகு மாற்று கருத்துடைய இயக்கங்களை குறித்து பேச வேண்டும்.

உங்களது / அனைவரது கருத்துக்களும், இரு வேறு கருத்துடையவர்களை ஒன்றிணைப்பதிலும், அது ஒன்றிணைய சிரமம் என்று விளக்கமளித்தால், அதை விமர்சிப்பதிலும் தான் இருக்கிறதே தவிர, "practical " கருத்துக்களாகவும் விருப்பமாகவும் இவை இல்லை!

நாம் சொல்வது மிக எளிய வழி!

தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று நாம் சொல்கிறோம்.. தேர்தலில் போட்டியிடலாம் , தேர்தலில் போட்டியட வேண்டும் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.

எங்கள் இருவரையும் இணைப்பதற்கு முயற்சி செய்வதற்கு முன்னால், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்பவர்களை முதலில் ஒன்றிணைக்க முடிகிறதா என்று பாருங்கள், என்கிறேன்.

அதை உங்களால் செய்ய முடியும் என்றால் பாதி வேலையோ, முக்கால் வாசி வேலையோ முடிந்து விடுமே!
ஆகவே அதை செய்யுங்கள்.

அதை செய்ய இயலவில்லை என்றால், இப்போது பிரச்சனை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்பவர்களாலா?, அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்பவர்களிடையே உள்ள "ஈகோ"வினாலா? என்பது வெட்ட வெளிச்சமாகி விடும்.

இவ்வாறு ஒத்தக்கருத்துடைய இயக்கங்களிடையே ஈகோ இருந்தால் ஒற்றுமை குலைவிற்கு யார் காரணம்? நாமா? அவர்களா?

இதை அலசிப்பார்ப்போமா? முயற்சி செய்வோமா? நாம் ஒத்துழைக்கிறோம், என்ன வகையிலான ஒத்துழைப்பிற்கும் நாம் தயார் இன்ஷா அல்லாஹ்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


அடுத்து, தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்பவர்கள் கூட்டம் சேர்ப்பதற்கு மட்டும் மற்ற கொள்கைவாதிகளை அழைக்கிறார்களே என்று கேட்க்கிறீர்கள்.
அதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் என்ன சம்மந்தம்???
தேர்தலில் போட்டியடலாமா கூடாதா என்ற பிரச்சனையில் இந்த வாதம் தேவையில்லை.
மற்ற இயக்கங்களின் மேடையில் இவர்கள் வரலாமா? அல்லது இவர்கள் மற்ற இயக்க மேடைக்கு போகலாமா? என்பது குறித்து பேசலாம் என்றால் தனி தலைப்பாக பேசலாம்.. அதற்குரிய நியாயமான பல பல காரணங்கள் உள்ளன..
ஆனால், இந்த தலைப்பில் இந்த கருத்து தேவையில்லை!

இன்னும் சொல்லப்போனால், இயக்கத்தின் போராட்டங்களுக்கு வருவது பிற இயக்க தலைவர்களல்ல! பொது மக்கள்!
ஹரூன் வந்தார் என்றால், அவரை இன்னொரு இயக்க தலைவர் என்ற முறையில் அழைக்கவில்லை.. அவர் "மேலிடத்தில்" நம் கோரிக்கையை எடுத்து சொல்லும் இடத்தில் உள்ளார் என்பதனால் அழைக்கப்பட்டார்.

மட்டுமல்ல, பிற இயக்க மேடையில் ஏறுவது என்பது ஒற்றுமை கோஷத்தில் இரண்டாம் படி!! நாம் முதல் படியான கொள்கையை ஒன்றிணைப்பதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.. கொள்கையை ஒன்றிணைக்காமல் ஒரே மேடையில் காட்சி தர முடியாது!! இதை தான் எனது முந்தைய மெயிலில் கூறினேன்.


சரி, ஒற்றுமைக்கு இது தான் அளவுகோல் என்றால், நீங்கள் கேட்கும் கேள்வியை நாமும் திருப்பி கேட்கலாம்.. தமுமுக தலைவர் ஏன் தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஏறுவதில்லை?
சமுதாய ஒற்றுமை குறித்து மிகவும் ஆர்வப்படக்கூடியவர் தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஏற வேண்டியது தானே? அவ்வாறு அழைப்பு விடுத்தால் அவர் என்ன பதில் சொல்வார்?
அவர் என்ன பதில் சொல்வாரோ, அந்த பதில் சரியான பதில்!! அந்த பதில் தான் ஒற்றுமை இன்னும் ஏற்படவில்லை என்பதற்கான அடையாளம்!!

ஆக, தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற சொல்லக்கூடிய இயக்கங்களை ஒற்றுமைக்கு அழைப்பதை விட்டு, தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்பவர்களை முதலில் ஒன்றிணைந்து செயல்பட அழையுங்கள்..
எண்ணிக்கையில் அத்தகைய கொள்கை கொண்ட இயக்கங்களே அதிகம் உள்ளன.. ஆகவே நீங்கள் விரும்பும் ஒற்றுமை எளிதில் பெற அதுவே சுலப வழி!!
முயற்சி செய்யுங்கள்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக