சனி, 30 நவம்பர், 2013

சலாம் சொல்லுதல் ‍- விவாதம் (Part 1)


கஃபிர்களுக்கு நாமாக முந்திக் கொண்டு சலாம் சொல்லலாமா? என்கிற தலைப்பில் இலங்கையை சேர்ந்த சுன்னத் (?) ஜமாஅத் கொள்கையுடைய சகோ. இஃஃப்ஹாம் முஹமது அவர்களுடன் நடந்த விவாதம். 


இருவருக்கும் தலா ஐந்து வாய்ப்பு என்று ஒப்பந்தமிடப்பட்டது.


 Ifham Mohamed (Srilanka)  

1.ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-யூத கிறிஸ்தவர்களைப்பாதையில் சந்தித்தால் அவர்களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்காதீர்கள். அதிலே அவர்கள் ஒதுங்கிச் செல்லும்படி அழுத்தம் கொடுங்கள்.( ஸஹீஹ் முஸ்லிம் கி. ஸலாம் 04 ) 

2.ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-இணைவைப்போரைப் பாதையில்சந்தித்தால் அவர் களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்காதீர்கள். அதிலே அவர்கள்ஒதுங்கிச் செல்லும்படி அழுத்தம் கொடுங்கள்.( முஸ்னத் அஹ்மத் - 10797)
மேற்கூறப்பட்ட இரண்டு ஆதாரங்களும் முஸ்லிமல்லாதவர்களுடன் ஸலாத்தை கொண்டு ஆரம்பிக்க வேண்டாம் என்பதை தெள்ளத் தெளிவாக கூறுகிறது. ஆனால் முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாத்தை கொண்டு ஆரம்பிக்கலாம் என்பவர்கள் பின்வரும் குர்ஆனிய வசனத்தை தங்களது வாதத்திற்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத்தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்' என்று (இப்றாஹீம்)கூறினார். திருக்குர்ஆன் 19:47
ஆனால் மேற்கண்ட வசனத்தில் முஷ்ரிக்கான தனது தந்தைக்கு பாவமன்னிப்பு தேடுவதை குர்ஆன் நேரடியாக தடைசெய்யும் அதே வேலை முஷ்ரிக்குகளுக்கு ஸலாத்தை கொண்டு ஆரம்பிப்பதை நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்திற்கு தடை செய்கின்றார்கள் என்பதை மேலேயுள்ள இரண்டு ஆதாரங்களினுாடாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் அல்குர்ஆன்,
ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடையஇறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும்அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர்அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்" (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). 20:47
மேற்கண்ட வசனம் நேரடியாகநேர்வழியை பின்பற்றுபவர்களுக்கு ஸலாம்என்று கூறுகிறது. இதோ குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களும் நடந்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது,
..................புஸ்ராவில் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யாவசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர்ஆணையிட்டார். ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப்பார்த்தார். அந்தக் கடிதத்தில்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... 
அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் என்பார், ரோமாபுரிச்சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது:
நேர் வழியைப் பின்பற்றுவோரின் மீதுசாந்தி நிலவட்டுமாக!(புஹாரி -07)
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்றால் அதனை முதலில் செயற்படுத்துபவர் நபி(ஸல்) அவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் ஹிர்கல் மன்னனுக்கு நபி(ஸல்) அவர்கள் குர்ஆன் கூறுவதன் பிரகாரம்நேர்வழியை பின்பற்றுபவர்கள் மீது ஸலாம் உண்டாவதாகஎன்று கூறுவதாவது முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாத்தை கொண்டு ஆரம்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக கூறுகிறது.
இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போது அல்-குர்ஆனின் சில வசனங்களை கொண்டுவந்து இன்னும் உள்ள குர்ஆன் ஹதீஸ்களுடன் மோதவிட்டு அதிலிருந்து முடிவெடுப்பது பிழையான ஒரு அணுகுமுறையாகும்.
நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் யாருக்கு ஸலாம் என்பதை கீழ்வரும் குர்ஆன் வசனத்தினுாடாக கூறுகிறான்.,
(நபியே!) நீர் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம்உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?” 27:59. 
இவ்வளவு ஆதாரங்களும் இருக்கும் போது குர்ஆனின் ஏனைய சில வசனங்ளை அறிவீனர்களைக் கண்டால் ஸலாம் என்று கூறுங்கள் என்பதை முன்வைத்து,
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்று நபி(ஸல்) அவர்களின் தடையையும் அல்லாஹ் குர்ஆனிலே நேர்வழியில் இருப்பவர்களுக்கு ஸலாம் எனக் கூறியதையும் தாண்டி கூறுகின்றனர்.
ஏற்கனவே கூறியதன் பிரகாரம் அல்லாஹ்வின் வஹியை ஒன்றை இன்னுமொன்றுடன் மோதவிடுவது பிழையான செயலாகும். அறிவீனர்களுக்கு கூறுமாறு அல்குர்ஆன் கூறும் ஸலாம் என்பதற்கு நாம் கூறும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்என்று அர்த்தம் கொள்ளாமல்நாங்கள் பிரச்சினையை நாடவில்லை சமாதானத்தையே நாடுகிறோம், எம்முடன் தர்க்கிக்க வேண்டாம் சமாதானமாக இருங்கள்என்று மொழிரீதியான அர்த்தம் எடுப்பதே சிறந்ததாகும்
அதனையும் தாண்டி இல்லை இது ஸலாம் தான் என்று அடம்பிடிப்பீர்களானால், அறிவீனர்கள் தர்க்கிக்க வந்தால்ஸலாம்கூறுமாறு பொதுவான தடையிலிருந்து விதிவிலக்காக எடுக்க வேண்டுமே ஒளிய
தடையை உடைத்துக்கொண்டு பொதுவான சட்டமாக கூறுவது தவறாகும். இதற்கு Nashid Ahmed எழுதிய விதியையே ஆதாரமாக முன்வைக்கின்றேன்.
//நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.//
மேற்கண்ட விதியின் பிரகாரம், தடை பொதுவாக வருகின்றது ஸலாம் கூறுமாறு வரும் குர்ஆன் வசனம் காரணத்தோடு வருகிறது அதனை பொதுவான அனுமதியாக கருதாது விதிவிலக்காக எடுப்பதுவே சரியானது என்பதற்கு நீங்கள் முன்வைத்த விதியே உங்களுக்கு ஆதாரமாகும்.
மேலும்ஸலாத்தைகொண்டு ஆரம்பிப்பதை தடை செய்த ஹதீஸ் காரணத்துடன் கூறப்பட்டுள்ளதாக கூறி யூத நஸாராக்களின் ஸலாத்திற்கு பதில் அளிக்கும் ஹதீஸ்களை கொண்டுவந்து தப்பர்த்தம் செய்யப்படுகிறது.
எமது சர்ச்சைஸலாத்தை கொண்டு ஆரம்பிப்பதேயன்றி” “ஸலாத்திற்கு பதில் அளிப்பது அல்லநபி(ஸல்) அவர்கள் வேதங்கொடுக்கப்பட்டவர்களுக்கு மறுமொழி கூறச்சொன்ன காரணத்தை கொண்டு வந்து ஸலாத்தை ஆரம்பிக்க கூடாது என்பதற்கான காரணமாக தெரிந்து கொண்டே முன்வைக்கப்பட்டிருந்தால் அது மிகப்பெரும் மோசடியாகும்
ஆகவே அல்லாஹ்வின் வஹியின் அடிப்படையில் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாத்தை கொண்டு ஆரம்பிப்பதை இஸ்லாம் தடைசெய்கின்றதுஸலாம்நேர்வழியில் இருப்பவர்களுக்கு தான் என்பதை அல்குர்ஆனும் ஹதீஸூம் நமக்கு போதிக்கும் மறுக்க முடியாத உண்மையாகும்
எனது வாதத்தில் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டி உங்கள் வாதங்களை முன்வைக்குமாறு Nashid Ahmed அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
விவாதம் என்பதற்காக முன்வைக்கப்படும் உண்மைகளை மறுத்து, தான் கொண்ட நிலையை சரி காண்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என்பதையும் அல்லாஹ்வுக்காக கேட்டுக் கொள்கிறேன்.   


Nashid Ahmed


காஃபிர்களுக்கு சலாம் சொல்லலாம், சலாத்தை கொண்டு முந்தவும் செய்யலாம் என்பதே குர் ஆன் ஹதீஸ் இரண்டையும் பொருத்திப்பார்த்தால் கிடைக்கின்ற முடிவாகும்.
காஃபிர்களிடம் சலாத்தை கொண்டு துவங்கலாம் என்பதற்குரிய ஆதாரங்கள் குர் ஆன், ஹதீஸ்களில் ஏராளம் உள்ளன.
காஃபிர்களிடம் முந்தி சொல்லாதீர்கள் என்கிற கருத்திலும் ஒரு சில ஹதீஸ்கள் உள்ளன.
 இரண்டுமே அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்றால் நிச்சயமாக அவற்றில் முரண்பாடுகள் வராது.
 இவ்வாறு முரண்படுவது போன்ற கருத்துக்கள் வருமேயானால், குர் ஆன் என்ன கூறுகிறது என்பதற்கு முன்னுரிமை வழங்கி பின் அந்த கருத்தை சம்மந்தப்பட்ட ஹதீஸும் தருமா? என்று சிந்திக்க வேண்டும். குர் ஆனின் கருத்துக்கு நெருக்கமாய் சம்மந்தப்பட்ட ஹதீசின் கருத்தும் அமையும் வகையில் விளக்கம் கொடுக்க முடியுமென்றால் அதை கொடுத்து அந்த ஹதீஸை ஏற்க வேண்டும், எந்த நிலையிலும் குர் ஆனுக்கு நெருக்கமாய் இருக்கவே இருக்காது என்றால் அத்தகைய ஹதீஸ்களை நிறுத்தி வைக்க வேண்டும்.
இது தான் குர் ஆன் ஹதீஸை அணுக்க வேண்டிய முறை.
 சலாத்தை கொண்டு முந்தக்கூடாது என்பதற்கு சான்றாக நீங்கள் வைத்திருக்கும் இரண்டு ஹதீஸ்களையும் நாம் இந்த கோணத்தில் தான் அணுக வேண்டும். காரணம், காஃபிர்களுக்கு சலாம் சொல்லலாம் என்பதும் நாமாக சலாத்தை கொண்டு துவங்கலாம் என்பதும் தான் குர்ஆனின் நேரடி அனுமதி.
 அவ்வாறு அணுகுகிற போது, சம்மந்தப்பட்ட ஹதீஸ்களுக்கு மாற்று விளக்கம் கொடுத்து, குர்ஆனுக்கு முரணில்லாத வகையில் ஏற்க முடியும் என்கிற முடிவை நோக்கி நாம் செல்வதால் அந்த ஹதீஸ்களையும் புறந்தள்ள தேவையில்லை, மாறாக, சலாத்தை கொண்டு துவங்கலாம் என்கிற பொதுவான விதியிலிருந்து இந்த ஹதீஸ்கள் விதிவிலக்கு பெற்றவை என்று புரிய இடமுள்ளது.
 இவற்றை விளக்கமாக அறியும் முன், உங்கள் வாதத்திலுள்ள முக்கியமான முரண்பாடொன்றை சுட்டிக்காட்டுவது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.
 காஃபிர்களுக்கு சலாத்தைக் கொண்டு முந்த தான் கூடாது, அவர்கள் சலாம் சொன்னால் பதில் சொல்லலாம் என்று ஒரு பக்கம் கூறுகிறீர்கள்.
 மற்றொரு புறம், காஃபிர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தக்கூடாது என்கிற உங்கள் தரப்புக்கு ஆதாரமாக நேர்வழி பெற்றவர்களுக்கு தான் சலாம் என்கிற 20:47 வசனத்தையும், ஹெர்குலஸ் மன்னருக்கு நபி எழுதிய கடிதத்தில் நேர்வழி பெற்ற்வருக்கு சலாம் என்று எழுதியதையும் காட்டியிருந்தீர்கள்.
ஏன் இந்த முரண்பாடு?
 சலாம் என்பதே நேர்வழி பெற்றவர்களுக்கு தான் என்பதை விளக்கத்தானே 20:47 வசனத்தையும் புஹாரி ஹதீஸயும் காட்டினீர்கள்? நேர்வழி பெற்றவர்களுக்கு தான் சலாம் என்றால் சலாத்தை முதலில் சொல்வதாக இருந்தாலும் நேர்வழி பெற்றவர்களுக்கு தான், சொல்லப்படும் சலாத்திற்கு பதில் சொல்வதும் நேர்வழி பெற்ற்வர்களுக்கு தானே?
 உங்கள் கருத்துப்படி, இந்த இறை செய்திகள் இந்த முடிவை தானே தர வேண்டும்? ஆனால் நீங்களோ, காஃபிர் ஒருவர் சலாம் சொன்னால் அவருக்கு பதில் சலாம் சொல்லலாம் என்று சொல்கிறீர்கள்.
இப்போது இந்த நிலைபாட்டிற்கு மறுப்பாகவும் இதே 20:47 வசனம் மற்றும் புஹாரி 7 ஹதீஸை நான் ஆதாரமாக காட்டுவேனே?
 ஆக, எனது நிலைபாட்டுக்கு எதிராய் இந்த ஆதாரங்களை காட்டுவது என்பது அர்த்த‌மில்லாதது. உங்கள் வாதப்படியே இந்த ஆதாரங்கள் உங்கள் நிலைபாட்டிற்கும் எதிராய் தான் நிற்கிறது.
 அப்படியானால் இந்த ஆதாரங்கள் குறித்து என்ன புரிதலை கொள்ள வேண்டும்?
என்பதை அறிவதற்கு, காஃபிர்களிடம் சலாத்தை கொண்டு முந்துவது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை முதலில் தெரிய வேண்டும்.
 19:47 வசனத்தில் இணை வைக்கும் தமது தந்தையை நோக்கி நபி இப்ராஹிம் அவர்கள் சலாம் சொல்வதாக அல்லாஹ் சொல்கிறான்.
 இது என் தரப்பில் நான் வைக்கும் முதல் ஆதாரம்.
 இந்த வசனத்தின் படி, கீழ்காணும் முடிவுகளை எட்டலாம்.
 காஃபிர்களுக்கு சலாம் சொல்லலாம்.
காஃபிர்கள் நமக்கு சலாம் சொல்லாத போதும் அவர்களுக்கு நாம் சலாம் சொல்லலாம்.
 ஏனெனில், இப்ராஹிம் நபியின் தந்தை, தமது மகனை நோக்கி, இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு! என்று கூறியதற்கு பதிலாக தான் "உங்கள் மீது சலாம் உண்டாகட்டும்" என்று இப்ராஹிம் நபி சொல்கிறார்களே தவிர, இப்ராஹிம் நபி மகனை நோக்கி சலாம் எதுவும் சொல்லவில்லை.
 இந்த ஒரு வசனமே, இணை வைப்பவர்களிடம் நாம் சலாத்தை கொண்டே முந்தலாம் என்பதற்கு போதுமான சான்றாகும்.
 இப்போது, 20:47 வசனத்தில் நேர்வழி பெற்றவர்களுக்கு சலாம் என்று அல்லாஹ் சொல்வதாக வருகிறது. அப்படியானால் இது, மேற்கண்ட 19:47 வசனத்திற்கு முரண் போல தோற்றமளிக்கும். இப்ராஹிம் நபியின் தந்தை நேர்வழி பெற்றவர் என்கிற கருத்து வரும்.
 ஆழமாக சிந்தித்தால், முரண்பாடில்லாமல் இரண்டையும் புரியலாம். இடத்தை பொறுத்து சலாம் என்பதற்கான பொருள் வேறுபடும். இப்ராஹிம் நபியின் தந்தை விஷயத்தில் பயன்படுத்தப்பட்டது, இம்மையில் அல்லாஹ்வின் அமைதிக்காக அவர்கள் வேண்டியது.
20:47 வசனத்தில் அல்லாஹ் சொன்னது, மறுமை வெற்றியை குறிப்பது. இதை நான் சுயமாக சொல்லவில்லை, அந்த வசனங்களை வாசித்தாலே புரியும்.
20:47 வசனத்தில், நேர் வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது என்று மூசா நபி சொல்வதாக வருகிறது.
 சலாத்தை பற்றி சொல்லி விட்டு, அல்லாஹ்வை புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள் என்கிற வகையில் இது மறுமை தொடர்பான அவர்கள‌து கூற்று என்று விளங்குகிறது.
மறுமையில், முஃமின்களுக்கு அல்லாஹ்வின் சாந்தி இருக்கும், காஃபிர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை இருக்கும். மறுமையோடு தொடர்புபடுத்தி சொல்லப்படுவதிலிருந்தே, நேர்வழியை உடையவர்களுக்கு அவர்கள் சலாம் சொல்வதும் கூட மறுமையில் சலாம் உண்டாகும் என்கிற பொருளில் தான் என்பது விளங்குகிறது.
 இதே அளவுகோல் தான் 27:59 வசனத்திலும் பொருந்தும். அவன் தேர்வு செய்த அடியார்களுக்கு சலாம் என்பதும் இம்மைக்கான சலாம் அல்ல. அதற்கு முந்தைய வசனங்களில் ஓரின சேர்க்கையாளர்களான அந்த சமூகத்தை அல்லாஹ் அழிக்கிறான், ஒரு சில நேர்வழி பெற்ற கூட்டத்தாரை தவிர.
அவ்வாறு யாரையெல்லாம் அழிக்காமல் அல்லாஹ் தேர்வு செய்து கொண்டானோ அவர்களுக்கு அல்லாஹ்வின் சாந்தி இருக்கும் என்று விளக்குகிறது அந்த வசனம்.
 இவையாவும், குறிப்பிட்ட சம்பவங்களை மைய்யப்படுத்தி சொல்லப்படுபவை. இம்மையில் காஃபிர்கள் எவருக்கும் சலாம் சொல்லக்கூடாது என்றோ, சலாத்தை கொண்டு முந்தக்கூடாது என்றோ இந்த வசனங்கள் சொல்லவில்லை, மாறாக, நேர்வழி அடைந்தவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் வெற்றியையும் காஃபிர்களுக்கு மறுமையில் கிடைக்க இருக்கும் வேதனையையும் ஒப்பீடு செய்து சொல்லபடும் வசனங்கள் இவை.
 இந்த வசனங்களை கொண்டு காஃபிர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தக்கூடாது என்று சொல்ல முடியாது, காரணம், நபி இப்ராஹிம் காஃபிரான தமது தந்தைக்கு சலாம் சொல்லியுள்ளார்கள் என்கிற சான்றை காட்டியிருந்தேன்.
 அத்துடன், ஒரு வாதத்திற்கு நேர்வழி பெற்றவர்களுக்கு தான் சலாம் சொல்ல வேண்டும் என்று புரிய வேண்டும் என்றால் சலாத்தை கொண்டு முந்தவும் கூடாது, சொல்லப்பட்ட சலாத்திற்கும் பதில் சொல்லக்கூடாது என்கிற நிலைபாட்டை தான் நீங்கள் எடுத்திருக்க வேண்டும்.
 நீங்களோ, சொல்லப்பட்ட சலாத்திற்கு பதில் சொல்லலாம், அவர்கள் காஃபிராக இருந்தாலும் சலாம் சொல்லலாம் என்று கூறி,
நேர்வழி பெற்றவர்களுக்கு சலாம் என்று கூறும் 20:47 இறை வசனத்தை மறுக்கிறீர்கள்,
அல்லாஹ் தேர்வு செய்த அடியார்களுக்கு சலாம் என்று கூறும் 27:59 வசனத்தையும் மறுக்கிறீர்கள்.
 நீங்கள் வைத்த ஆதாரங்கள் உங்கள் கொள்கைக்கு முரணாய் நிற்கின்றன !
 
என் தரப்பு மற்ற ஆதாரங்களை அடுத்தடுத்த வாய்ப்புகளில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
 


Ifham Mohamed

முதலாவதாக எனது வாதங்கள் யாவற்றிற்கும் பதில் வரவில்லை என்பதை அறியத் தருகிறேன்.


குர்ஆனில் நேரடி அனுமதி வந்துள்ளது ஆனால் ஹதீஸில் தடை வந்துள்ளது என்று குர்ஆனின் அணுகவேண்டிய முறை என்று உங்கள் சுயவிளக்கத்தையும் கூறியுள்ளீர்கள். எனினும் தடை பற்றி வந்துள்ள ஹதீஸிற்குரிய உங்கள் பதில் எதனையும் காண முடியவில்லை
. 


அதனை விளக்கும் போது 12:100 வசனம் தெளிவாக மனிதன் மனிதனுக்கு சுஜூது செய்யலாம் என்று கூறும் போது ஹதீஸில் தடை வந்துள்ளது என்று கூறி அதில் எவ்வாறு ஹதீஸை ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்பதையும் முன்வைக்க வேண்டும்.


மனிதனுக்கு சுஜூது செய்யக் கூடாது என்று கொள்கையை உருவாக்கிவிட்டு அதற்கு ஏற்றாற் போல் குர்ஆனின் அர்த்தங்களை மாற்றுவதும் பிழையான அணுகுமுறையாகும். குர்ஆனிலே ஒரு வாசகம் கூறப்படும் போது அவ்வாசகத்திற்கு மொழிரீதியான ஒரு கருத்து இருப்பினும் முதலாவது அதற்கு இஸ்லாமிய பரிபாஷையில் எந்த ரீதியில் பயன்படுத்தப்படுகிறேதோ அதே ரீதியில் பயன்படுத்தப்படும். அந்த அர்த்தம் கொடுக்க முடியாத விடுத்து தான் மொழிரீதியான கருத்துற்கு செல்ல வேண்டும் என்பது ஒரு அடிப்படையான விதியாகும். 12:100 இஸ்லாமிய பரிபாஷையில் உள்ள அர்தத்திற்கு சாலப் பொருந்தக் கூடியதாகும்.


மேலும்,


முரண்பாடு என்று ஒன்றைக் கொண்டுவந்துள்ளீர்கள்.


ஸலாத்திற்கு பதில் செல்வதற்கு 4:86 நேரடியாக அனுமதியளிக்கின்றது. மேலும் வேதங்கொடுக்கப்பட்டவர்கள் ஸலாம் கூறினால்வஅலைக்கும் என்று கூறுங்கள் என்று அதில் விதிவிலக்காக நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். பதில் அளிப்பதை அல்லாஹ்வே அவனது துாதரே தடைசெய்யவில்லை. ஆகவே,


மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். 
33:36. 

33:36. 
உள்ளதை உள்ள பிரகாரம் ஏற்றுக்கொள்பவனே முஃமினாவன். ஸலாத்தை கொண்டு ஆரம்பிப்பதையே நபி(ஸல்) அவர்கள் தடை செய்கின்றார்கள்.


முஸ்லிமல்லாவதவர்களுக்கும் ஸலாத்தை கொண்டு ஆரம்பிக்கலாம் என்றால் நபி(ஸல்) அவர்கள் ஏன் குர்ஆனில் கூறப்பட்டதன் பிரகாரம் ஹிர்கல் மன்னனுக்கு ஸலாத்தை ஆரம்பிக்காது நேர்வழியில் இருப்பவர்களுக்கு ஸலாம் என்று கூறினார்கள். 
இதன் மூலம் குர்ஆன் வசனம் மறுமையை பற்றித் தான் பேசுகிறது என்ற உங்கள் வாதமும் தகர்ந்து விடுகிறது.
ஆகவே நேர்வழியில் இருப்பவர்களுக்குத் தான் ஸலாம் அதே வேலை ஒருவர் ஸலாம் கூறினால் அவருக்கு பதில் அளிப்பதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கின்றது. வந்ததை வந்த பிறகாரம் ஏற்றுக்கொள்ளாது தங்களது வாதத்தை நிரூபுவதற்கு வஹிக்கு சொந்த விளக்கங்கள் கொடுத்து மறுப்பதை விட்டும் அல்லாஹ் எம்மை பாதுகாக்க வேண்டும்.


இப்ராஹீம் (அலை) அவர்களின் சம்பவத்திற்கு எனது ஆரம்ப பதிவிலே கூறியதற்கு பதில் அளிக்கப்பட வில்லை. இப்ராஹீம்(அலை) அவர்கள் கூறிய ஸலாத்தை நபி(ஸல்) அவர்கள் தங்களது உம்மத்திற்கு தடை செய்துவிட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறிய ஸலாம் அவர்களது உம்மத்திற்குரியது.


அதே போன்று தான் யூசுப்(அலை) அவர்கள் தங்களது தாய் தந்தையருக்கு சுஜூது செய்ததும் அவர்களது உம்மத்திற்குரியது நபி(ஸல்) அவர்கள் அதனை ஹதீஸ் மூலம் தனது உம்மத்திற்கு தடைசெய்துவிட்டார்கள்.


ஆனால் இரண்டிலும் நீங்கள் வெவ்வேறு விதமான அணுமுறை வைத்திருப்பது தங்களுக்கு தேவையான மாதிரி குர்ஆன் ஹதீஸை வளைப்பதும் தாங்கள் கொண்ட கொள்கைக்கு இணக்கமாக எடுக்க முடியாத பட்சத்தில் ஹதீஸ்களை நிராகரிக்கும் தவறான போக்குமாகும்.


மேலும் 12:100 வது வசனத்திற்கு இஸ்லாமிய பரிபாஷையில் சுஜூது என்பதை ஆணித்தராமக குர்ஆன் கூற அதற்கு எந்த அடிப்படையில் எவ்வாறுபணிந்தார்கள்என்று மொழிரீதியாக விளக்கம் கொடுப்பீர்கள். உங்கள் கொள்கைக்கு முரண் என்ற காரணத்திற்காகவா?


அப்படியானால்அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சுஜுது செய்து: 7-120 வது வசனத்தில் கூறப்பட்டுள்ள சுஜூதுக்கு என்ன அர்த்தம் கொடுக்கின்றீர்கள். இரண்டும் வித்தியாசப்பட்டால் அதற்குரிய காரணத்தையும் ஆதாரத்துடன் கூறவும். மேலும் விடுபட்ட எனது வாதங்களுக்கும் சேர்த்து பதில் அளிக்கவும்.Nashid Ahmed  


இந்த தலைப்புக்கே ஐந்து வாய்ப்பு போதவில்லை என்று நான் கவலை கொள்ளும்போது, நீங்களோ சம்மந்தமில்லாமல் அடுத்த தலைப்பான சஜதாவை இத்துடன் இணைக்கிறீர்கள்.அதற்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. இப்ராஹிம் நபி தமது தந்தைக்கு சலாம் சொன்ன சான்றை எடுத்துக் காட்டிய போது அதற்கு, மிகவும் ஆச்சர்யம் கொள்ளத்தக்க, அதிர்ச்சிகரமான பதிலை சொல்கிறீர்கள். அதாவது அது இப்ராஹிம் நபியின் உம்மத்துக்குரியதாம், நமக்கில்லையாம்.
நபி இப்ராஹிம் தந்தைக்கு பாவ மன்னிப்பு தேடிய விஷயத்தில் தவிர மற்றவைகளில் அவரிடம் இந்த உம்மத்துக்கு முன் மாதிரி உள்ளதாக 60:4 வசனம் சொல்கிறது.
 அத்தோடு, 6:83‍=90 வசனங்களை எடுத்துக் கொண்டால், நபிமார்களின் வரலாறுகளை பாராட்டி பேசும் இறைவன், அவற்றில் நமக்கு முன் மாதிரி இருப்பதாகவும் அது தான் நேரான வழி என்பதாகவும் சொல்லி விட்டு, முஹம்மது நபியை நோக்கி, அந்த வழியை பின்பற்றுமாறும் சொல்கிறான். ஆக, மற்ற நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ் தடுத்தது தவிர மற்றவை இந்த உம்மத்தும் பின்பற்றத் தக்கவையாகும்.
 காஃபிர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தலாம் என்கிற எனது கொள்கையை மறுக்கத்தான் நேர்வழியை உடையவர்களுக்கு சலாம் என்பதாக வரும் 20:47, 27:59 வசனங்களை காட்டினீர்கள்.
அவை மறுமையோடு தொடர்புடைய சலாம் என்பதை காரண காரியங்களுடன் விளக்கினேன், அதற்கு உங்களிடம் பதில் இல்லை.
சரி, நேர்வழியில் இருப்பவர்களுக்கு தான் சலாம் என்றால் கஃபிர்களுக்கு எந்த நிலையிலும் சலாம் சொல்லவே கூடாது என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும், ஏன் முரண்படுகிறீர்கள்? என்று கேட்டதற்கும் விடை இல்லை.
அப்படியானால் ஹெர்குலஸ் மன்னருக்கு நபி எழுதிய கடிதத்திற்கு என்ன பதில் என்று கேட்கிறீர்கள்.
அதற்கும் அதே பதில் தான். அதுவும் மறுமைக்கான அழைப்பு.மன்னரின் மறுமை வெற்றிக்காக நபியவர்கள் அக்கடிதத்தின் மூலம் அழைப்பு விடுக்கிறார்கள். ஆகவே நேர்வழியில் இருப்பவர்களுக்கு தான் மறுமையில் வெற்றி, சாந்தி என்கிற பொருள் பட சொல்கிறார்கள். இந்த சலாமும் இம்மைக்கான சலாம் அல்ல !
 பொதுவாக ஒரு காஃபிருக்கு சலாம் சொல்வதற்கும், சொர்க்கம், நரகத்தை மையப்படுத்தியோ, மறுமை வெற்றியை மையப்படுத்தியோ சொல்லப்படும் சலாத்திற்கும் உண்டான வேறுபாட்டை விளங்காமல் கேள்வி கேட்கிறீர்கள்.
 காஃபிர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தவும் செய்யலாம் என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன.
 முஸ்லிம்களும் காஃபிர்களும் கலந்திருந்த சபையில் நபியவர்கள் முதலில் சலாம் சொல்கிறார்கள் (புஹாரி 5663). இந்த சலாம் முஸ்லிம்களை நோக்கித் தான் என்று சொல்ல முடியாது. காரணம், புஹாரி 6254 இல், சலாம் சொல்லி விட்டு இஸ்லாத்தை நோக்கி அழைப்பு விடுத்தார்கள் என்று வந்துள்ளது. ஆகவே இது காஃபிர்களை நோக்கி சொல்லப்பட்ட சலாம் தான்.
 தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் சலாம் சொல்லுங்கள் என்று புஹாரி 12 இல் உள்ள செய்தியும் காஃபிர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தலாம் என்பதையே காட்டுகிறது. தெரியாதவர்கள் என்பதில் காஃபிர்கள் அடங்க மாட்டார்கள் என்ற் வாதம் வைக்க முடியாது. காரணம், நல்ல முஸ்லிமுக்குரிய அடையாளம் ஏழைக்கு உணவளிப்பதும் தெரியாதவர்களுக்கு சலாம் சொல்வதும் என்று இணைந்து தான் சொல்லப்பட்டுள்ளது. ஏழை என்பது எப்படி காஃபிரையும் அடக்குமோ அது போல தெரியாதவர் என்பதும் காஃபிரையும் அடக்கும்.
 சலாத்தை பரப்புங்கள், ஏழைக்கு உணவளியுங்கள், சொந்த பந்தங்களை பேணுங்கள் என்பதாக அஹமத் 23835 இல் இருக்கும் ஹதீசும் காஃபிர்களுக்கும் கூட சலாத்தை கொண்டே முந்தலாம் என்பதற்கு ஆதாரமாய் நிற்கிறது.
இங்கு சொல்லப்படும் ஏழை எப்படி காஃபிர்களில் உள்ள ஏழைகளையும் குறிக்குமோ, உறவினர்கள் என்பது எப்படி காஃபிர்களில் உள்ள உறவினர்களையும் குறிக்குமோ, அது போல் சலாத்தை பரப்புவது என்பதும் காஃபிர்களுக்கும் பொருந்தும்.
சலாத்தை நாம் பரப்ப வேண்டும் என்பதிலேயே சலாத்தை கொண்டு நாம் தான் முந்த வேண்டும் என்கிற அர்த்தம் அடங்கியுள்ளது.
 காஃபிர்களை கண்டால், எங்கள் செயல் எங்களுக்கு, உங்கள் செயல் உங்களுக்கு என்று கூறி பிறகு உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று 28:55 வசனத்தில் அல்லாஹ் சொல்ல சொல்கிறான். வீணர்களை அலட்சியம் செய்வதற்கு சொல்லப்படும் சலாம் இது, சாந்தி உண்டாகட்டும் என்ற அர்தத்திலல்ல, என்று ஒரு வாதத்தை இதற்கு சொல்லியிருந்தீர்கள். ஆனால் அது ஏற்புடைய விளக்கமல்ல. அலட்சியம் செய்வது நோக்கம் என்றால் அதற்கு எவ்வளவோ வார்த்தை இருக்கிறது, அதை சொல்லாமல் உங்கல் மீது சாந்தி உண்டாகட்டும் என்கிற குறிப்பிட்ட வாசகத்தை சொல்ல சொல்வது அவசியமில்லாமலா? வீணர்கள் என்றாலும் அவர்களுக்கு இம்மையில் சாந்தி கிடைக்கட்டும் என்று நாம் கூறுகையில் அந்த முகமன் கூட அவர்களை ஈர்க்கலாம். அது தான் காரணம்.
 இதை இன்னொரு வசனத்தில் கூட அல்லாஹ் மறைமுகமாக சொல்கிறான்.
 என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்'' என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.)அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள் (43:88,89)
அவர்களை அலட்சியம் செய்யுங்கள், பின்னர் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை, அலட்சியம் செய்து சலாமும் சொல்லுங்கள், புரிந்து கொள்வார்கள் என்கிறான். சலாத்திற்கு அதன் நேரடி அர்த்தம் தான்.
 இதுவரை என் தரப்பில் ஆறு ஆதாரங்களை தந்திருக்கிறேன்.
இன்னும் பல சான்றுகள் உள்ளன அவற்றையும், காஃபிர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தக்கூடாது என்பதாக நீங்கள் காட்டிய இரு ஹதீஸ்களின் விளக்கத்தையும் அடுத்த வாய்ப்பில் காணலாம் இன்ஷா அல்லாஹ். Ifham Mohamed 


 விரிவாக பதில் அளிக்க முடியாமையினால் சுருக்கமான பதில்களை அளிக்கிறேன்.


ஏலவே சலாம் சஜ்தா இரண்டும் ஒரு சேர விவாதிக்கப்படும் என்று ஒத்துக் கொள்ளப்பட்டது. தற்போது வேறு காரணம் கூறப்படுகிறது.


முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்வதற்கு நபி(ஸல்) அவர்கள் விதித்த தடையே பிரதானமாக பேசப்பட வேண்டியது கட்டாயம் பதில் அளிக்க வேண்டிய இவ்விரு ஹதீஸிற்கும் பதில் அளிக்காமை வியப்பாக இருக்கின்றது.


மேலும் இப்ராஹீம்(அலை) அவர்களின் சம்பவம் பற்றி ஏற்கனவே எனது முதல் பதிவில் தெளிவுபடுத்தியிருந்தேன். ஆனால் தற்போது ஆச்சரியம் என்று கூறுகின்றார். ஒரு விடயம் முன்னர் உள்ள நபிக்கு ஆகுமாக்கப்பட்டு முஹம்மத்(ஸல்) அவர்களின் ஷரிஅத்தில் தடைசெய்ப்பட்டால் முன்னால் உள்ள ஷரிஅத்தை கொண்டு வந்து இவ்வாறு தான் செய்வேன் என்று கூறும் உங்கள் கருத்தே ஆச்சரியமாக உள்ளது. 


அல்லாஹ் பாவமன்னிப்பு தேடுவதை தடை செய்கிறேன். அதே வேலை நபி(ஸல்) அவர்கள் ஸலாத்தை ஆரம்பிப்பதை தடைசெய்கின்றார்கள். இதனை தவிர்ந்த உள்ளவைகளை நமக்கு முன்மாதிரியாகும்.


யூசுப்(அலை) அவர்களின் ஷரிஅத்தில் மனிதனுக்கு சுஜூது செய்வது ஆகுமாக்கப்பட்டிருந்தது (12:100) ஆனால் நபி(ஸல்) அவர்களின் ஷரிஅத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அதே போன்று தான் இப்ராஹீம்(அலை) அவர்களின் ஸலாம் விடயமுமாகும். 


ஸலாத்திற்கு பதில் அளிப்பது பற்றி பதில் இல்லை என்று கூறுகின்றீர்கள். பதில் அளிப்பதற்கு அனுமதியளித்த அல்லாஹ்வும் அவனது துாதரும் ஆரம்பிப்பதற்கு தடை செய்துள்ளனர் இதில் கருத்து பேதம் கொள்வதற்கு எமக்கு உரிமை கிடையாது. ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

20:47, 27:59

20:47, 27:59 வது வசனங்கள் இம்மைக்கானது அல்ல என்பதற்கு வினோதமாக இப்ராஹீம் (அலை) அவர்களின் ஸலாத்துடன் இணைத்துள்ளீர்கள். நான் ஏற்கனவே கூறியது பிரகாரம் எவ்வாறு யூசுப் (அலை) அவர்களின் ஷிஅத்தில் மனிதனுக்கு சுஜூது செய்வதற்கு ஆகுமாக்கப்பட்டிருந்ததோ,


அதே போன்று இப்ராஹீம்(அலை) அவர்களின் ஷிரிஅத்தில் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்வது ஆகுமாக்கப்பட்டிருந்தது. ஆனால்,


மூஸா(அலை) அவர்களின் ஷரிஅத்தில் ஸலாம் சொல்வதற்கு தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே தான் மூஸா(அலை) , ஹாரூன்(அலை) ஆகிய இருவரும்நேர்வழியில் உள்ளவர்களுக்கு ஸலாம் உண்டாவதாகஎன்று கூறுகிறார்கள். நேர்வழியற்றவர்களுக்குஸலாம் சொல்ல முடியாது


நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனது அடியார்களுக்கு ஸலாம் கூறுமாறு கூறுகிறான். ஏனெனில் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாத்தை ஆரம்பிக்க முடியாது நேரடியாக தடை வந்துள்ளது. இங்கே அல்லாஹ் ஸலாத்திற்கு பதில் அளிப்பது தொடர்பாக பேசவில்லை. முஸ்லிமல்லாதவர்களின் ஸலாத்திற்கு பதில் சொல்ல எங்கும் தடைவிதிக்கப்படவில்லை மாறாக அதற்கு அல்லாஹ் 4-86 இல் அனுமதியளித்துவிட்டான். 


ஹர்கல் மன்னன் முஸ்லிமல்ல ஆகவே அவருக்கு ஸலாத்தை ஆரம்பிக்க முடியாது ஆகவே நபி(ஸல்) அவர்கள் ஸலாம் யாருக்கு என்பதை அக்கடிதத்திலே சுட்டிக்காட்டுகிறார்கள்.

//

// நேர்வழியில் இருப்பவர்களுக்கு தான் மறுமையில் வெற்றி, சாந்தி என்கிற பொருள் பட சொல்கிறார்கள்// என்ற உங்கள் வாதம் மிகவும் பிழையானதாகும். ஹதீஸை பொருட்படுத்தாமையினால் ஏற்பட்ட விளைவாவே என்பதில் சந்தேகமில்லை. 


மேலும் அல்லாஹ் இன்னுமொரு இடத்தில் - நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும்என்று (நபியே!) நீர் கூறும்,.. 6:54.
 நேர்வழியல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுங்கள் என்று எங்குமே நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடவும், இல்லை நபி(ஸல்) அவர்கள் எமக்கு கட்டளையிடவும் இல்லை. 


மேலும் முஸ்லிம்களுக்குத்தான் என்பதற்கான ஆதாரங்கள்..,


அபூ ஹுரைரா (ரலி)கூறுகின்றார்கள்:-“ஒரு முஸ்லிம் (மற்றொரு) முஸ்லிமுக்கு செலுத்த வேண்டிய கடமை ஆறுஎன்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரவர்களே! அவை என்ன?” எனக் கேட்கப்பட்டது. “அவரை சந்தித்தால் அவர்மீது ஸலாம் சொல் வீராக!.....(ஸஹீஹ் முஸ்லிம் கி. ஸலாம் 03)


எவன் கைவசம் எனது உயிருள்ளதோ அவன்மீது சத்தியமாக! (நீங்கள்) விசுவாசம்கொள்ளாத வரையில் சுவனம் செல்ல மாட்டீர்கள். பரஸ்பரம் அன்பு செலுத்தாத வரையில் விசுவாசம் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு விடயத்தை அறிவிக்கட்டுமா? அதனைச் செய்தால் (நீங்கள்) பரஸ்பரம் அன்பு பாராட்டுவீர்கள்.(அதுதான்) உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பிக் கொள்ளுங்கள்!(அபூதாவூத் கி.அதப் 143 - ஸஹீஹ்)


மேலும் - (புஹாரி - 1202)


ஸலாம் சொல்வது ஒரு முஸ்லிம் முஸ்லிக்கு செய்ய வேண்டிய கடமை என்பது உட்பட முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்ல வேண்டாம் என்றும் நபி(ஸல்) அவர்கள் தடைவிதிக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தடை செய்த பின்பு அதனை பொருட்படுத்தாமல் துாக்கி எறிவது பிழையானதாகும்.


மேலும், புஹாரி 5663,6254 ஆகியவை ஸலாம் கூறுவது பற்றி இன்னுமொரு ஒழுங்கு முறையை கூறுகிறது. அதாவது ஒரு அவையில் முஸ்லிம்களுடன் ஏனைய மதத்தவர்களும் இருந்தால் அவர்களுக்கு ஸலாம் சொல்வது தடை என்று சிந்திக்க வேண்டியதில்லை அவ்விடத்தில் வழமையாக கூறுவது போல் ஸலாம் கூறலாம் என்பதுவே அவ்வொழுங்குமுறையாகும்.


நபி(ஸல்) அவர்கள் தடை செய்த பின்பு அண்ணார் காபிர்களுக்கு ஸலாம் சொன்னார்கள் என்று இதனை கொண்டுவருவது நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்களை மோதவிட்டு தனது கருத்தை நிலைநாட்டும் ஒரு மோசமான செயலாகும்.


அறிந்வர்களுக்கும் அறியாதவர்களுக்கும் என்று பொதுவாக வந்துள்ள எனக் காட்டி முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் சொல்லலாம் என்று கூறுவது அறிவீனமாகும். முஸ்லிம்களுக்குத்தான் ஸலாம் சொல்ல வேண்டும் அது கடமை என்றும் முஸ்லிமல்லாவதர்களுக்கு தடை வந்த பிறகு பொதுவாக வரக் கூடிய எல்லா ஹதீஸ்களுக்கும் முஸ்லிம்களுக்குரியதாகும். 


ஆதமின் சந்ததிகளில் நேர்வழியில் இருப்பவர்களுக்கும் நேர்வழியில் இருப்பவர்களில் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்குமாகும். ஹதீஸ்கலை சட்டக்கலை விதிகளை பேணாமல் ஒரு கொள்கையை வகுத்துவிட்டு அதற்கு அல்லாஹ்வின் வஹியில் ஆதாரம் தேடினால் இத்தகைய முரண்பாடுகள் மாற்றுவிளக்கங்கள் தவிர்க்க முடியாததாகும்.


உங்கள் முழுவாதங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது அதிகமான வாதங்களுக்கு பதில் வரவில்லை அடுத்த சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்கின்றேன். Nashid Ahmed

 


பாவ மன்னிப்பு கேட்டதை தவிர மற்றவைகளில் முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் சொல்கிறான்,இதற்கு பதில் சொல்லும் நீங்கள்பாவமன்னிப்பு மற்றும் சலாம் சொல்லுதல் என்று அல்லாஹ் சொல்லாத ஒரு நிபந்தனையை சேர்க்கிறீர்கள்

வாசிப்பவர்கள் புரியட்டும்.

பல சான்றுகளை தந்த பிறகும்நேர்வழியற்றவர்களுக்கு சலாம் சொல்ல அல்லாஹ் சொல்லவேயில்லை என்று மீண்டும் சொல்கிறீர்கள். 28:55, 25:63, 43:89 ஆகிய இறை வசனங்களை ஏற்கனவே காட்டினேன்.

முஸ்லிம்காஃபிர் இணைந்திருந்த சபை ஒன்றில் சலாம் சொன்னதை காட்டியதற்கு இது விதிவிலக்கு என்கிறீர்கள்ஏன் விதிவிலக்குநீங்கள் சொன்னால் விதிவிலக்கு ஆகி விடுமா

அந்த சபையில் முஸ்லிம்களும் இருந்தார்கள் என்றாலும் நபி சொன்ன சலாம் காஃபிர்களுக்கும் சேர்த்து தான்

ஆகவே தான் சலாம் சொல்லி விட்டு இஸ்லாத்தை நோக்கி அழைப்பு விடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

அறியாதவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள் என்றால் அறியாத முஸ்லிம்களுக்குஎன்று புரிய வேண்டும் என்கிறீர்கள்.இதுவும் நீங்கள் சொல்லி விட்டதால் அப்படி புரிய முடியாதுகாரணம்அதே செய்தியில் ஏழைக்கு உணவளியுங்கள் என்பதும் சேர்ந்தே வருகிறதுமுஸ்லிம்களில் உள்ள ஏழை என்று புரிவீர்களா அல்லது காஃபிர்களும் இதில் சேருமா?


ஏழைக்கு உணவளியுங்கள்,உறவுகளை பேணுங்கள்சலாத்தை பரப்புங்கள் எனறு சொல்லப்பட்ட மற்றொரு ஹதீஸில்முஸ்லிமான ஏழைமுஸ்லிமான உறவினர் என்று தான் புரிவீர்களாஎன்று கேட்டதற்கெல்லாம் விடை வரவில்லை.


நேர்வழியிலுள்ளவர்களுக்கு தான் சலாம் என்பதாக ஒரு வாதம் வைத்தீர்கள்அதற்கான தக்க பதில் முன்னரே சொல்லப்பட்டு விட்டதுஇப்போதுமேலும் ஒரு ஆதாரம் தருகிறீர்கள்வேடிக்கைஅது எனது கருத்தை தான் வலுப்படுத்துகிறது ! 


புஹாரி 1202 என்ன சொல்கிறதுநம்பிக்கை கொள்கிற வரை சுவனம் செல்ல முடியாதுஎப்போது நம்பிக்கை ஏற்படும்பரஸ்பரம் அன்பு செலுத்தும் போது ! 

சரிபரஸ்பரம் அன்பு பாராட்ட என்ன செய்ய வேண்டும்சலாத்தை பரப்ப வேண்டும்

இந்த சலாம் முஸ்லிம்களுக்கிடையிலாநிச்சயமாக இல்லை என்று அந்த ஹதீஸை வாசித்தாலே புரியும்காரணம்சலாத்தை பரப்ப சொல்வதே அன்பு பெருகுவதற்குஅன்பு பெருகுவதன் நோக்கமே நம்பிக்கை ஏற்பட.. நம்பிக்கை ஏற்படுவதன் நோக்கமே சொர்க்கம் செல்ல.. 

சலாத்தை பரப்பினால் தான் நம்பிக்கை ஏற்ப்டும் என்றால் நம்பிக்கை ஏற்படாதவனிடம் தான் இந்த சலாத்தை பரப்ப சொல்கிறார்கள் நபி அவர்கள் ! 

ஆக,உங்கள் ஆதாரம் எனது கருத்தை தான் வலுப்படுத்துகிறது ! 

சலாத்தை கொண்டு முந்தக்கூடாது என்பதற்கு இரண்டு ஹதீஸ்களை தந்திருந்தீர்கள்
குர்ஆனிலும் ஏனைய பல‌ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் வாயிலாகவும் சலாத்தை கொண்டு முந்தலாம் என்று தெளிவாக்கப்பட்டு விட்ட பிறகுஇரண்டு ஹதீஸ்களில் மட்டும் சலாம் சொல்லாதீர்கள் என்று வருமேயானால்மாற்று விளக்கங்கள் ஏதும் கொடுக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும்
இந்த இரு ஹதீஸ்களுக்கு மாற்று விளக்கங்களை குர் ஆனின் மூலமாகவே நம்மால் பெற முடியும்.

 58:8 வசனத்தில்சில காஃபிர்களை பற்றி அல்லாஹ் சொல்லும் போதுதவறான வாழ்த்து சொற்களை நபியை நோக்கி அவர்கள் சொல்வதாகவும்இதன் மூலம் நபிக்கு அவர்கள் மாறு செய்வதாகவும்அவர்கள் நரகத்திற்குரியவர்கள் எனவும் சொல்கிறான்.

என்ன தவறான வார்த்தைஎன்பதற்கு புஹாரி 6257 விடையளிக்கிறது


யஹூதிகள் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்கு பதில் அஸ்ஸாமு என்று சொல்வதால் " அலைக்கும்என்று மட்டும் விடை சொல்ல சொல்கிறார்கள்
இதில் சலாத்தை கொண்டு முந்தாதீர்கள் என்று சொல்லபடவில்லையேஎன்று நீங்கள் கேட்கலாம்.

நபியை சபிக்கும் நோக்கில் பேசும் அவர்களுக்கு  அலைக்குமுஸ்ஸலாம் என்று பதில் சொல்லாமல் உங்களுக்கும்என்று மட்டும் சொல்ல சொல்வதிலேயேசலாத்தை முதலில் சொல்லாதீர்கள் என்கிற கருத்து அழுத்தமாய் பதிந்து தான் உள்ளது

காரணம்இந்த இடத்தில் நபி அவர்கள் பதில் சலாம் சொல்வதற்கே விரும்பவில்லை.பதில் சலாம் சொலவதற்கே விரும்பாதவர்கள் சலாத்தை கொண்டு முந்த சொல்லவே மாட்டார்கள் ! 

ஆககாஃபிர்களில் சிலர்தவறான முகமன் கூறுவதாக அல்லாஹ் சொல்கிறான்அது என்ன முகமன்அதை அவர்கள் சொன்னால் நாம் என்ன பதில் சொல்ல வேண்டும்என்று நபி அவர்கள் விளக்கி விட்டார்கள்இப்போது சலாத்தை கொண்டு முந்தாதீர்கள்அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுங்கள் என்கிற ஹதீசை சிந்தித்து பாருஙகள்அழகாய் பொருந்துகிறதுகாரணமும் விளங்குகிறது !


இன்னும் சொல்லப்பொனால்யூதர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தாதீர்கள் என்று இன்னொரு சந்தர்ப்பத்திலும் நபி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்அஹமத் 27280 ஹதீஸில்நாளை யூதர்களுடன் போர் செய்ய போகிறோம்எனவே சலாத்தை கொண்டு முந்தாதீர்கள்அவர்கள் சலாம் சொன்னால்  அலைக்கும் என்று மட்டும் சொல்லுங்கள் என்று நபி கட்டளையிட்டுள்ளார்கள்.

ஆகவே விஷயம் தெளிவாகவேயுள்ளது.

நாளை போருக்கு செல்கிறோம் எனவே சலாத்தை கொண்டு முந்தாதீர்கள் என்று நபி சொல்வதிலிருந்தேமற்ற மற்ற சந்தர்ப்பங்களில் சலாத்தை கொண்டு முந்தலாம் என்கிற சட்டத்தை புரியலாம். 

யூதர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தலாம் என்பதற்குபோரின் போது சலாத்தை கொண்டு முந்தாதீர்கள் என்கிற ஹதீஸே தெளிவான சான்றாக நிற்கிறது !
மேலும் சில சான்றுகளுடன் வேறு கோணங்களில் இந்த விஷயத்தை நான்காம் வாய்ப்பில் விளக்குகிறேன் இன்ஷா அல்லாஹ். 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக