செவ்வாய், 5 நவம்பர், 2013

முகனூல் பதிவுகள் : எங்கே செல்கிறோம் நாம்?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பெருநாட்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று நோன்புப் பெருநாள், மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள் !

இவ்விரண்டை தவிர வேறு கொண்டாட்டங்கள் ஒரு முஸ்லிமுக்கு இல்லை !!

ஆகையால் தான் நபி காட்டித் தராத, ஆனால் முஸ்லிம்கள் அறியாமையால் கொண்டாடி வருகிற மீலாது, மிஹ்ராஜ்,ஹிஜ்ரி போன்ற தினங்களை கொண்டாடுவது கூட‌ பித்அத் என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

ஆனால், நபியின் பெயரால், முஸ்லிம்கள் கொண்டாடும் மேல்கூறப்பட்டவை வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்கள் தான். அவை கற்பனையல்ல !!

நடந்த உண்மை சம்பவங்களாக இருந்தாலும், நபி கொண்டாடுமாறு கட்டளையிடவில்லை என்றால் நாம் அதை கொண்டாடக்கூடாது என்று உறுதி காட்டுவது தான் ஒரு உண்மை முஸ்லிமின் பண்பாக இருக்க வேண்டும் எனும் போது..

நம்மில் சிலரோ இன்று வரலாறே இல்லாத, வெறும் கதைகளையும் கற்பனைகளையும் மட்டுமே அடிப்படையாக கொண்ட, மாற்று மத பண்டிகையான‌ தீபாவளிக்கு பட்டாசு விடுகிறோம் என்றால், எங்கே செல்கிறோம் நாம்?

சிந்திப்போம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக