வெள்ளி, 15 நவம்பர், 2013

எது ஆபாசம்?மத்ஹபிலுள்ள ஆபாச சட்டங்களை , சாலிம் பால்குடி சட்டத்தை உங்களது மனைவிமார்கள் விஷயத்தில் செயல்படுத்த அனுமதிப்பீர்களா? என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் அறைகூவல் விடும் போது 
அதற்கு பதில் சொல்ல இயலாத நிலையை அடையும் கூட்டத்தினர், 
"தவ்ஹீத் ஜமாஅத்தினர் எவ்வளவு ஆபாசமாக பேசுகின்றனர், இவர்களுக்கு இப்படி ஆபாசமாகவும் அசிங்கமாகவும் தான் பேச தெரியும், இவர்கள் வக்கிர புத்தி கொண்டவர்கள்" , என்று விமர்சனம் செய்வர். பல இடங்களில் இவ்வாறு விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத் எதை செய்தாலும், அது வக்கிரமாக பிறருக்கு தெரிந்தாலும் கூட, அதில் நபியிடம் முன்மாதிரி இருக்குமேயானால் அவ்வாறு செய்யவோ, பேசவோ என்றைக்கும் தயங்காது.

உலகமே ஒன்று திரண்டு நம்மை வக்கிரப் புத்தி கொண்டவர்கள் என்று வர்ணனை செய்தாலும், நபியிடம் முன்மாதிரி இருக்கும் வரை, அது போன்ற விமர்சனங்கள் நம் தலை மயிருக்கு சமம் !

இதோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வார்த்தை முறை..

ஒரு இளைஞன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே எனக்கு விபச்சாரம் செய்வதற்கு அனுமதி தாருங்கள் என்று கூறினார். அப்போது (அங்கிருந்த) கூட்டத்தினர் அவரை எச்சரித்து நிறுத்து நிறுத்து என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரைத் தன் பக்கத்தில் வரச் சொன்னார்கள். அவரும் அருகில் வந்து அமர்ந்தார்.

(அவரிடத்தில்) நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய தாயிடத்தில் விபச்சாரம் புரிவதை நீ விரும்புவாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் மீதாணையாக தங்கள் தாயிடத்தில் விபச்சாரம் புரிவதை நானும் மக்களில் எவரும் விரும்ப மாட்டோம் என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய மகளிடத்தில் இவ்வாறு செய்வதை விரும்புவாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே நானும் மக்களில் எவரும் தன் மகளிடத்தில் இச்செயலை செய்வதை விரும்ப மாட்டார்கள் என்று கூறினார்.

இது போன்றே நபி (ஸல்) அவர்கள் அந்த வாலிபரின் சகோதரி மாமி சின்னம்மா ஆகியோரைக் கூறி இவ்வாறு கேட்டார்கள். அந்நபர் நான் உட்பட யாரும் விரும்ப மாட்டார்கள் என்று பதில் கூறினார்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அஹ்மத் (21185)

எதை சொன்னால் கேட்பவர் சிந்தனையை தட்டுமோ அதை சொல்ல வேண்டும்.
எப்படி சொன்னால் அதை நம்புகிறவர் அதை விட்டும் விலகுவாரோ அப்படி சொல்ல வேண்டும்,
அது எவ்வளவு ஆபாசமாக பிறருக்கு தோன்றினாலும், அது ஆபாசமில்லை, அதுவும் தாவாவின் ஒரு வழிமுறை தான் என்பதே நபியிடமிருந்து நாம் பெறும் பாடம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக