வெள்ளி, 15 நவம்பர், 2013

ஜமாலியும் இஸ்மாயில் சலஃபியும்scene 1 :
தகடு, தாயத்து கூடாரம்

ஜமாலி ஹசரத் : மக்களே.. நூறு ரூபா காணிக்கை, அப்புறம் கொப்பற தேங்கா, பீடி கட்டு எல்லாம் கொண்டுகிட்டு, எனது வயிற்று வலியை போக்குங்க அவ்லியானு அதோ அந்த தர்கால அடங்கியிருப்பவரு கிட்ட நாம கேட்டா நம்ம வயிற்று வலியை அவர் போக்குவார்.

கப்ர் பக்தன் : ஹசரத், ஹசரத்,அது எப்படி ஹசரத்? நேரடியா மருந்து மாத்திரை மூலம் போக்குவார் அப்படின்னு சொன்னா நம்ப முடியுது.., எந்த புற சாதனமும் இல்லாம எப்படி ஹசரத் அவர் குணமாக்குவார்? இது அல்லாஹ்வின் ஆற்றலல்லவா ஹசரத்? இப்படி நம்புவது ஷிர்க் இல்லையா ஹசரத்?

ஜமாலி ஹசரத் : தப்பு தப்பு.. அப்படியெல்லாம் பேசக்கூடாது தம்பி.. நாம என்ன அவருக்கே இந்த சக்தி இருக்குது அப்படினா சொல்றோம்?? அல்லாஹ் அந்த சக்தியை அவருக்கு வழங்கியிருக்கிறான். அல்லாஹ்வின் ஆற்றலால் அதை அவர் செய்கிறார். அப்படிதான் சொல்றோம்.
எத சொல்றதா இருந்தாலும், "அல்லாஹ் இந்த சக்திய அவருக்கு குடுத்திருக்கான்" அப்படிங்கற இந்த பிட்ட சேர்த்து விடு, எதுவுமே தப்பாகாது.. சரியா !

கப்ர் பக்தன் : சரிங்க ஹசரத்.. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். உங்க அறிவே அறிவு !

பில்லி, சூனியக்கூடாரம் :

இஸ்மாயில் ஹசரத் : பக்தர்களா, இங்கிருந்துகிட்டே யார் வேணாலும் எங்கேயிக்கிருக்ககூடிய ஒருவனையும் என்ன வேணா செய்யலாம். கை காலை முடக்கலாம், பைத்தியமாக்கிடலாம்.. நமக்கு தேவை, அந்த ஆளோட முடி அல்லது நகம் மட்டும் தான் சரியா.. ?

சூனிய பக்தன் : ஹசரத் ஹசரத், அதெப்படி முடியும் ஹசரத் ? இருந்த எடத்துலே இருந்துகிட்டே இன்னொருத்தனோட கையை முடக்குறது அல்லாஹ்வோட சக்தி இல்லையா ஹசரத் ?

இஸ்மாயில் ஹசரத் : பக்தா, அப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாதுப்பா.. நாம என்ன அவருக்கே இந்த சக்தி இருக்குதுன்னா சொல்றோம்? அல்லாஹ் அந்த சக்திய கொடுப்பான் பக்தா..
அல்லாஹ் கொடுக்கும் போது அதை அவர் செய்வார்.
இப்படி போய் சொல்லு சரியா..
எப்பவுமே, இத அவருக்கு செய்ய முடியும் னு மொட்டையா சொல்லாத, அல்லாஹ் அந்த சக்திய அவருக்கு கொடுப்பான்னு ஒரு பிட்ட எப்போதும் சேர்த்துக்கோ சரியா??

சூனிய பக்தன் : அட சூப்பர் ஹசரத்.. பிரமாதம் ! உங்கள் அறிவோ அறிவு.. இந்த ஒரு பாயிண்ட் போதும், ஒரு கை பாத்துடறோம் ..

Scene 2 : தகடு, தாயத்து கூடாரம்

கப்ர் பக்தன் : ஹஸ்ரத், செத்து போனவங்க எல்லாம் நாம் பேசுறத கேட்டு நமக்கு உதவி செய்வாங்க அப்படிங்கிறதுக்கு என்ன ஆதாரம் ஹஸ்ரத் ?

ஜமாலி ஹஸ்ரத் : உயிரில்லாத கூகிள் இணையதளம் நாம கேட்கிறதுக்கு பதில் சொல்லுதா இல்லையா? அது மாதிரி தான்..

கப்ர் பக்தன் : ஆஹா.. அருமை ஹஸ்ரத், அருமை.. !

பில்லி, சூனியக்கூடாரம் :

சூனிய பக்தன் : ஹஸ்ரத், சூனியத்தால கை காலெல்லாம் ஒடைக்கலாம் என்பதுக்கு என்ன ஹஸ்ரத் ஆதாரம்?

இஸ்மாயில் ஹசரத் : பக்தா, அல்லாஹ் என்ன சொல்றான் குர் ஆனுலே? சூனியத்தை வெச்சு கணவன் மனைவிய பிரிக்கலாம்னு சொல்றானா இல்லையா ? ஆகவே கை கால முடமாக்குறதுக்கும் இது தான் ஆதாரம்.. ! புரிஞ்சுதா??

சூனிய பக்தன் : எப்படி ஹஸ்ரத் உங்களால் மட்டும் இப்படி முடியுது? சூப்பர் ஹஸ்ரத் !!

Scene 3 : தகடு, தாயத்து கூடாரம்

கப்ர் பக்தன் : நம்ம வாதம் எதுவும் எடுபடாது மாட்டேங்குதே ஹஸ்ரத், வஹாபி கூட்டம் ரொம்ப வளர்ந்துட்டானுங்களே, என்ன பண்ரது ஹஸ்ரத் ?

ஜமாலி ஹஸ்ரத் : என்ன ஆனாலும் சரி, பிஜே ஒரு முட்டாள் , பிஜே ஒரு வழிகேடன் அப்படின்னு மட்டும் சொல்றத நிறுத்தாதீங்க, ஒரு பயலாவது இத கேட்டு நம்ம பக்கம் வர்ரானா பாப்போம்..

கப்ர் பக்தன் : சரிங்க ஹஸ்ரத் ..
பிஜே ஒரு முட்டாள் , பிஜே ஒரு வழிகேடன்.. பிஜே ஒரு முட்டாள் , பிஜே ஒரு வழிகேடன்
பிஜே ஒரு முட்டாள் , பிஜே ஒரு வழிகேடன்

பில்லி, சூனியக்கூடாரம் :

சூனிய பக்தன் : ஹஸ்ரத், நம்மள எல்லாரும் காமடி பீசாவே பாக்குறாங்க ஹஸ்ரத், அவனுங்க கூட்டம் தான் பெருகிகிட்டே போகுது.. என்ன செய்ய ஹஸ்ரத்..?

இஸ்மாயில் ஹஸ்ரத் : என்ன ஆனாலும் சரி, பிஜே ஒரு முனாஃபிக், பிஜே ஒரு காஃபிர்.. இத மட்டும் நிறுத்தாம சொல்லிட்டிருங்க..

சூனிய பக்தன் : சரிங்க ஹஸ்ரத் .. பிஜே ஒரு முனாஃபிக், பிஜே ஒரு காஃபிர்.. பிஜே ஒரு முனாஃபிக், பிஜே ஒரு காஃபிர்.. பிஜே ஒரு முனாஃபிக், பிஜே ஒரு காஃபிர்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக