செவ்வாய், 26 நவம்பர், 2013

இஃப்ஹாமுடன் விவாத ஒப்பந்தம்



ஐந்து தலைப்புகளில் விவாதம் செய்ய இலங்கையை சேர்ந்த‌ இஃப்ஹாம் முஹம்மது என்பவர் அணுகியதைய‌டுத்து, அவருடன் ஒப்பந்தமிட்டு விவாதம் செய்ய முடிவெடுக்கப்பட்டதன் பேரில் கீழ்காணும் ஒப்பந்தம் இடப்பட்டது.

இரு தரப்பிலும் பொதுவாக உறுதி செய்யப்பட்ட நிபந்தனைகள் :

1. ஐந்து தலைப்புகளில் சஜதா செய்தல் மற்றும் காஃபிர்களுக்கு சலாம் சொல்லுதல் ஆகிய இரு தலைப்புகள் முகனூலிலும், சூனியம், தவ்ஹீத்வாதி என்று பெயர் சூட்டுதல், பைஅத் ஆகிய மூன்று தலைப்புகள் மின்னஞ்சலிலும் நடத்தப்பட வேண்டும்.

2. ஐந்து தலைப்புகளுக்கும் இரு தரப்பினரும் கொண்டுள்ள நிலைபாடுகளை இருவரும் தெளிவாக அறிவிக்க வேண்டும்.

(இது இங்கே பேசப்பட வேண்டும். மற்ற நிபந்தனைகள் முடிவாகி விட்ட பிறகு இந்த 2 ஆம் நிபந்தனை பேசப்பட வேண்டும்.)

3. முகனூல் விவாதத்தில் ஒரு தரப்பு ஒரு வாய்ப்பின் போது அதிக பட்சம் இரண்டு கமன்ட்கள் இடலாம். அதன் பிறகு எதிர் தரப்பின் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.
ஒரு தரப்பு இடக்கூடிய இரண்டு கமன்டுகளும் சேர்த்து ஒரு வாய்ப்பு என்று கருதப்படும். அந்த வகையில் ஒரு தலைப்புக்கு ஒரு தரப்புக்கு மொத்தம் 5 வாய்ப்பு.
இரு தரப்பும் சேர்த்து ஒரு தலைப்புக்கு மொத்தம் 10 வாய்ப்புகள். அதாவது மொத்தமாக 20 கமன்டுகள் ஒரு தலைப்புக்கு.

4. மின்னஞ்சல் விவாதத்தில் ஒரு தலைப்பிற்கு ஒரு தரப்புக்கு 10 வாய்ப்புகள்.

ஒரு மெயில் என்பது ஒரு வாய்ப்பு. ஒரு மெயிலின் நீளம் 100 வரிகளுக்கு (தோராயமாக) மிகாமல் இருக்க வேண்டும்.

ஆக இரு தரப்பையும் சேர்த்து ஒரு தலைப்புக்கு மொத்தம் 20 மெயில்கள்.

5. வெளி லின்குகள், ஆடியோ, வீடியொக்கள் பகிரக்கூடாது

6. ஒரு விவாதத்தின் போது ஒரு தரப்பு தமது வாய்ப்பை பயன்படுத்திய பிறகு 3 நாட்களுக்குள் அடுத்த தரப்பு பதிலிட வேண்டும்.

7. ஒரு தலைப்பு முடிந்ததும் அடுத்த தலைப்பை எப்போது துவங்குவது என்பதை அந்த நேரத்தில் இரு தரப்பும் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும்.

8. மின்னஞ்சல் விவாதத்தின் போது விவாதிப்பது நாம் இருவர் என்றாலும் அதை பார்க்கக்கூடியவர்கள் என இரு தரப்புக்கும் எத்தனை நபர்களை வேண்டுமானாலும் cc யில் இணைத்துக் கொள்ளலாம்.

9. ஒவ்வொரு விவாதத்தின் தலைப்புக்கள் முடிந்த பிறகும் அதனை எடுத்து ஸ்கைப்பில் பேச வேண்டும். எதற்கு பதில் வந்தது மழுப்பியது போன்றவற்றை பேசி பதிவு செய்து வெளியிடவும் வேண்டும். சுமார் 1 மணி நேரம் இந்த உரையாடல் நடைபெற வேண்டும்.

10. தனிநபர் விமர்சனங்கள். அநாகரீகமான வார்த்தை பிரயோகங்கள் அறவே இருக்கக் கூடாது.

11. ஒரு தரப்பு முன்வைக்கும் ஆதாரத்திற்கு முழுப்பொறுப்பு அந்த ஆதாரத்தை முன்வைப்பவரையே சாரும். ஆகவே அவ்வாதரங்களை ஒட்டி ஏதாவது கேட்கப்படுமானால் அவற்றை வழங்குவது ஆதாரத்தை முன்வைப்பவரின் பொறுப்பாகும்.

12. முகனூல் விவாதத்தின் போது கமன்டுகளை ஒன்றுக்கு இருமுறை சரி பார்த்து அஹன் பிறகு பதிவிட வேண்டும். பதிவிட்ட பிறகு எக்காரணம் கொண்டும் அதை எடிட் செய்வதற்கோ நீக்குவதற்கோ இரு தரப்புக்கும் அனுமதியில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக