வெள்ளி, 15 நவம்பர், 2013

ஆசிடை இலவசமாக்குங்கள் !!


பொள்ளாச்சியில் திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீச்சு ‍ 3 இளைஞர்கள் கைது

ஆசிட் விற்பனையை அரசாங்கம் தடை செய்தாலும் ஆசிட் வீச வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதை எப்படியும் பெறத்தான் செய்வான்.

திருட்டு ஒரு குற்ற செயல் என்று அறிவித்து விட்டதால் திருட்டு குறைந்து விடுவதில்லை என்பது போல..

தடை செய்யப்பட்ட எந்த பொருளும், எளிதிலோ அல்லது (பண பலம் கொண்டு) சற்றே சிரமமப்பட்டோ பெறப்படும் வகையில் தான் நமது நாட்டு சட்டங்களின் ஓட்டைகள் அமைந்துள்ளன.

ஒரு பெண்ணை சீரழிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்ட ஒருவனுக்கு ஒரு வேளை ஆசிட் கிடைக்கவில்லை என்றால் துப்பாக்கி கிடைக்கும், அதுவும் கிடைக்கவில்லை என்றால் கத்தி, அரிவாள் கிடைக்கும்.

அதே சமயம், இவ்வாறு ஒரு பெண்ணின் உயிரை பறித்தால் உன் தலை இருக்காது என்று சட்டம் இயற்றினால், அவனது கையில் ஆசிடை இலவசமாக திணித்தால் கூட அதை பயன்படுத்த மாட்டான்.

இது தான் வேறுபாடு ! இது தான் மனித இயல்பு !!

தண்டனை சட்டங்களை கடுமையாக்குங்கள், ஆசிடை இலவசமாக்குங்கள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக