சனி, 17 செப்டம்பர், 2011

மிஹ்ராஜ் எந்த தினம்?


அஸ்ஸலாமு அலைக்கும்..

மிஹ்ராஜ் எனும் சம்பவம் முமினை காபிர்களை விட்டும் பிரித்துக்காட்டக்கூடிய, அதன் மூலம் மனிதர்களுக்கு அல்லாஹ் தரக்கூடிய சோதனையாக கருதப்பட வேண்டும். இதை அல்லாஹ் தன் திருமறையில் (17 :60 ) கூறுகிறான்.
அதனடிப்படையில், மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப்பயணம் நடைபெற்றது என்பதை முழுமையாக நம்வுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்
அதே சமயம், ரஜப் 27 அன்று தான் மிஹ்ராஜ் பயணம் நிகழ்ந்தது என்று கூறுவதற்கு மார்க்க ஆதாரம் எதுவும் கிடையாது.
இந்த தினத்தில் தான் மிஹ்ராஜ் சம்பவம் நிகழ்ந்தது என்று அல்லாஹ்வே நமக்கு சொல்லி தரவில்லை எனும் போது, நாமாக ஒரு தினத்தை முடிவு செய்து கொண்டு, அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதும், தொழுவதும் இன்ன பிற காரியங்களை செய்வது எல்லாம் மிகப்பெரிய வழிகேடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட தினம் தான் என்று தெளிவாக அறியக்கூடிய ஒன்றுக்கு கூட , மார்க்கம் சொல்லாத நோன்பையும் தொழுகையையும் செய்வது பித்அத் என்று சொல்கிற ஒரு மார்க்கத்தில், எந்த நாள் என்கிற ஆதாரமே இல்லாத ஒரு நாளை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு அதில் இபாதத்துகள் செய்வது நம்மை நரகிற்கு இழுத்து செல்லும்!

1 கருத்து:

  1. எந்த நாளிலும் இறைவனை வணங்கலாம், இறைவனை வணங்குவது குற்றமில்லை, அனைத்தையும் இறைவன் ஒருவனே அறிவான் என்பதை மறந்து ஆளாளுக்கு பெரிய மனுஷன் ஆவது மட்டும் தான் வழிகேட்டிற்கு கொண்டு செல்லும்

    பதிலளிநீக்கு