சனி, 17 செப்டம்பர், 2011

மவ்லித் 1

அஸ்ஸலாமு அலைக்கும்..

இங்கு கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன .

முதலாவது, ஆதாரம் என்பது குர் ஆனும், முஹம்மது நபியும் சம்மந்தப்பட்ட வஹீ தானே தவிர, வஹீக்கு சம்மந்தமில்லாத நபர்கள் அறிவிப்பவை ஆதாரமாகாது.
ஹசான் (ரலி) அவர்கள் ஒன்றை அறிவிக்கிறார்கள் என்றால் அவருக்கு வஹீ கிடைக்காது. வஹீ என்கிற ஆதாரத்தை தாருங்கள், சஹாபிகள் சொல்லும் கருத்துக்களை அல்ல!

இரண்டாவது, நான் எதற்கு ஆதாரத்தை கேட்டேனோ, அதற்கு ஆதாரத்தை தர வேண்டும்.
நபியை புகழுவதற்கு என்ன ஆதாரம் என்று நான் கேட்கவேயில்லை. நபியை புகழ்வது நன்மையான விஷயம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
நான் ஆதாரம் என்று கேட்டது அதை அல்ல.
சுபுஹான மவ்லூதை ஓதுவதற்கு என்ன ஆதாரம்?

சினிமா பார்ப்பது தவறு என்பது எல்லாரும் ஒப்புகொள்வது.
அதே சமயம், சினிமா பார்ப்பது தவறில்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று ஒருவன் கேட்கும் போது, பாருங்கள், சினிமாவில் அம்மாவை புகழ்வது போல பாடல் இருக்கிறது, அம்மாவை புகழ்வது நல்லது தானே, ஆகவே சினிமா பார்க்கலாம், என்று ஒருவன் சொன்னால் அவனை என்னவென்று சொல்வீர்கள்?

அம்மாவை புகழ்வது நல்லது தான், அதற்காக வேறு வேறு அனாச்சாரங்களையும் தவறுகளையும் சேர்த்தே பெற்றுள்ள ஒரு வழி மூலம் தான் அம்மாவை புகழ வேண்டுமா? அம்மாவை புகழ வேறு வழியே இல்லையா? என்று கேட்ப்போம்.

நபியை புகழுவது நீங்கள் தனிப்பட்ட முறையில், உங்களுக்கு தோன்றுகிற முறையில் செய்கிற ஒன்று.
அதை தவிர்த்து , இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒருவனது நூலை வாசிப்பது தான் நபியை புகழ்வது என்று கருதுவது எந்த வகையில் இறைவனது பார்வையில் நியாயமாகும்?
அதிலும், பொருள் தெரியாமல் வாசிக்கும் பொழுது அதில் எத்தனை எத்தனை குபுறும் இறை மறுப்பும், நிறைந்துள்ளது என்பதை கூட அறியாமல் அதை படிப்பது எந்த வகையில் நியாயம்?

نْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ
என்று ஒரு வரி உள்ளது , எல்லா படைப்புகளுக்கும் முஹம்மது நபி தான் காவல் என்று அழைக்கும் வரி இது.

இதுவும் இந்த நூலில் தான் இருக்கிறது.

நபியை புகழ்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கும் போது, இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட நபரால் எழுதப்பட்ட ஒரு நூலை அனைவரும் கூடி இருந்து வாசித்தால் அது தான் நன்மை என்று சொல்லும் போது, மேற்கூறிய இந்த வரியையும் சேர்த்தே படித்தால் தான் நன்மை என்பது தான் அதன் பொருளாகிறது.

ஒரு வாதத்திற்கு, அந்த நூலில் எந்த தவறான கருத்துக்களும் இல்லை என்று கூட வைப்போமே, அப்போதும், ஒரு குறிப்பிட்ட நூலின் வரீகளை அனைவரும் குழுமி இருந்து வாசித்தால் நன்மை கிடைக்கும் என்று கூறுவது பித் அதா இல்லையா?
நபிகளாரை உங்கள் மனத்தால், உங்களுக்கு தோன்றுகிற முறையில் புகழ்வதும் அவர்களுக்காக துஆ செய்வதும் தான் மார்க்கத்தின் அனுமதியே தவிர, ஒரு குறிப்பிட்ட நபர் எழுதியதை அனைவரும் குறிப்பிட்ட நாட்களில் வாசித்தால் நன்மை என்பது அதன் பொருளல்ல..

அப்படியானால், குர் ஆனுக்கு இருக்கும் மதிப்பை நீங்கள் அந்த நபரின் நூலுக்கு கொடுக்கிறீர்கள் என்பது பொருள்!

இன்னும் சொல்வதானால், ஒரு நபரை புகழ்வது என்றால் என்ன? என்கிற அடிப்படையை புரியாததால் தான் இந்த குழப்பம்.

நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில், அவர்களை புகழ்ந்து சில சஹாபிகள் கவிதை படிதுள்ல்லார்கள்.
அது அவர்களுக்கு தோன்றிய சில வரிகள். ஒரு சஹாபிக்கு மனதினுள் ஒரு வரி தோன்றியது என்பதனால், அதே வரியை மனப்பாடம் செய்து வைத்து எல்லா சஹாபாக்களும் ஓதிக்கொண்டிருக்கவில்லை.
தவிர, நபியின் மரணத்திற்கு பிறகு, அவரை புகழ்வது என்பது, அவரது கட்டளையின் படி நமது வாழ்க்கையை அமைதுக்கொள்வதில் அடங்குமே தவிர, ஒரு புத்தகத்தை எழுதி வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட நாட்களில் கும்பலாக கூடி இருந்து அதை படிப்பதில் இல்லை.
அவ்வாறு இல்லை என்பதால் தான், கவிதைகளையும் அதை பாடுபவர்களையும் அல்லாஹ் வெறுக்கிறான்.

26 : 224 வசனத்தில் , கவிஞர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால் அதனுடைய பொருள், இவ்வாறு ஒரு கவிதை புத்தகத்தை வீடு வீடாக எடுத்து சென்று,அதை விடிய விடிய ஓதி, வயிற்ருப்பிழப்ப்பு நடத்துகிறார்களே அவர்கள் வழிகேடர்கள் என்பது தான்.
நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு நேராக, அவர்களை சிறப்பித்து பாடும் போது, அது ஒரு மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அவர்களின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு!! அதை கூட, ஒவ்வொரு நபரும் தங்கள் தங்களுக்கு தோன்றிய வகையில் அவர்களாக தான் படுவார்கள். ஒருவர் பாடியதை குறித்து வைத்துக்கொண்டு, அதை ஒவ்வவொரு மாதமும் எல்லா சஹாபாக்களும் கூடி இருந்து படிக்கொண்டிருக்கவில்லை, மட்டுமல்லாமல், அவர்கள் பாடுவதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை நேரடியாக நபி(ஸல்) அவர்களே கண்டித்தும் விடுவார்கள்.
நாளை நடப்பதை அறிகிறவரே! என்று ஒரு சிறுமிக்கூட்டம் பாடிய போது, அதை கண்டித்துள்ளார்கள்.
இது போன்ற கண்டனகள் நமக்கு கிடைக்காது என்று தெரிந்தும், மார்க்கத்திற்கு விரோதமான கருத்துக்களை கொண்டுள்ள ஒரு புத்தகத்தை தூக்கி செல்வது என்பது மார்க்கம் காட்டி தராத பித் அத்தாகும்!!
எல்லா பித் அத்களும் வழிகேடு!!
வஸ்ஸலாம்.
















2011/9/9 FAIZAL.A <fasilmak@gmail.com>
- Hide quoted text -


அன்பானவரே
இன்ஷா அல்லாஹ் யார் எக்குதப்பாக பேசுகிறர்கள் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் விஷயதிற்கு வருவோம்

இதோ உங்கள் கேள்விக்கு பதில்

மவ்லித் ஓதுவது நன்மை தரும் நற்செயல்

தொழுகை நோன்பு ,தர்மம்,குர்ஹன் ஓதுதல் மற்றும் பிறர்க்கு உதவுதல் போன்ற நற்செயல்கள் புரிந்தால் எவ்வாறு இறைவனிடமிருந்து நன்மை கிடைகும்மோ அது போன்று மவ்லித் உதுகின்ற பொது நன்மைகளை இறைவன் நமக்கு அள்ளி தருகின்றான்

ஆதாரம்
ஹஸ்ஸான் (ரலி)அவர்கள் கூறினார்கள்
இறைமருப்பளர்களே ! முஹம்மது (ஸல்)அவர்களை குறைவு படுத்தி கவிபடுகிரிர்கள் அதற்கு பதில் அளிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்களை நான் புகழ்ந்து படிப்பேன் அல்லாஹுவிடம் அதற்குரிய நற்குளியுண்டு
அறிவிப்பாளர் ; ஆயிஷா(ரலி)
நூல் :முஸ்லிம் 4545
அகவே நாம் சுபஹன மவ்லிதில் நபிகளாரை புகழ்ந்து படிபதால் நமக்கு அல்லாஹுவிடத்தில் அதற்குரிய நற்குளியுண்டு சஹோதர

என்னோடைய கேள்வி

நடைமுறையில் இன்று உள்ள சுபுஹான மவ்லூத், ஒரு முஸ்லிமை காபிராக்கும் கருத்துக்களை கொண்டுள்ளது, ஆகவே இதை ஓதுவது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்பது எனது கருத்து.

என்று கூரிய நீங்கள் அதற்குரிய குர்ஹன் ஹதீஸ் அதரத்தை தர வேண்டும்

கோவை பைசல்
09382222202

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக