வெள்ளி, 24 ஜூன், 2011

ஜாக்கின் இரட்டை நிலைஅரசியலே எங்களுக்கு ஆகாது, அது ஷிர்க் என்று சொல்லிக்கொள்ளும் ஜாக் இயக்கத்தினர், மேலப்பாளையத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா? 2006 ஆம் மேலப்பாளையத்தில் திமுக சார்பில் வேட்பாளராக மைதீன்கான் நிறுத்தப்படுகிறார். ஆனால் அரசியலே இணைவைப்பு என்று சொன்ன ஜாக் கூட்டத்தினர், அவரை எதிர்த்து, அவர்களின் பிரதான அபிமானியான பசுலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என, நடுரோட்டில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது இவர்களின் அரசியல் நிலைப்பாட்டு பித்தலாட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.


அதற்கான ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது

2006 ஆம் ஆண்டு, தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைத்த நேரத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அதிமுகவை ஆதரித்தது. இந்த நிலையில் கோட்டாறு அஷ்ரப் பள்ளியில் ஜூமுஆ உரை நிகழ்த்திய ஜாக்ஸ்சின் துணை தலைவர் செய்யது அலி பைஜி,டிஎன்டிஜேவை மிக மோசமாக விமர்சனம் செய்தார். தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலர், கொடி பிடிக்கிறார்கள், அரசியல்வாதிகளின் பின்னால் செல்கிறார்கள், தவ்ஹீதை விட்டு விட்டு ஷிர்க்வாதிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள். நம் ஜாக் அமைப்பினர் இது போன்ற எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது, பிரச்சாரம் செய்யக்கூடாது, அரசியல் என்ற நவீன இணைவைப்பிலிருந்தும், இதுபோன்ற வழிகேட்டிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் என உரை நிகழ்த்தினார்.


அந்த ஜூமுஆவில் கலந்து கொண்ட டிஎன்டிஜே சகோதரர் ஒருவர், ஜூமுஆ முடிந்த பின் அவரிடம், மேலப்பாளையத்தில் திமுக வேட்டபாளராக பஸ்லுல் இலாஹியை நிறுத்தக் கோரி ஜாக்ஸ் நடத்திய போராட்டத்தின் பத்திரிகை செய்தியை அவரிடம் காண்பித்து, அரசியலே ஷிர்க் என்று சொல்கிறீர்களே! அப்படியானால் இது என்ன? என்று கேட்க, அதற்கு எவ்விதமான பதிலும் சொல்லாமல் வெளியேறிவிட்டார் செய்யது அலி.


டிஎன்டிஜே, ஆதரவு பிரச்சாரம் மட்டும் தான் செய்யும், ஆனால் ஜாக் அரசியலில் போட்டியிட தங்கள் அபிமானியையே வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று போராட்டமே நடத்துகின்றர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக