சனி, 17 செப்டம்பர், 2011

பராஅத் கட்டுரைக்கு மறுப்பு


பாவங்களை போக்கும் பராஅத் இரவு என்கிற கட்டுரைக்கு மறுப்புஅஸ்ஸலாமு அலைக்கும்..


மார்க்கம் என்ற பெயரில், ஒரு கருத்தை சொல்லும் போது, அதற்குரிய ஆதாரத்தை சொல்லி நிரூபிக்க வேண்டும் என்பது மிகவும் அடிப்படையான ஒரு விதி.
ஆதாரமில்லாமல் பேசுபவர்கள் சுயநிலையில் இல்லாமல் உளறுபவர்கள் என்று பொருள்.
ஏற்கனவே, this is truth என்கிற உங்கள் சாக்கடை தளத்தில் , தர்காஹ் குறித்த சில பொய்களையும் புரட்டுகளையும் சில மாதங்களுக்கு முன்னர் அவிழ்த்து விட்டமைக்கு நாம் ஆதாரம் கேட்ட போது, தலை தெறிக்க ஓடியவர்கள் இன்று மீண்டும் தலை காட்டுவது வெட்கமற்ற செயலாகும்.

பராத் இரவு என்பது மார்க்கத்திற்கு உட்பட்டது என்று நீங்கள் சொல்ல நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
இதற்கு இன்ன ஆதாரம், இதன் மூலம் இதை செய்யலாம் என்று கூற வேண்டும்.
இங்கு நீங்கள் சொல்லியிருப்பதை படிக்கும் போது, ஒரு பாமரர முஸ்லிம் கூட காறி துப்புவான். அப்படி உள்ளது உங்கள் வாதம்.


இவர்கள் தடுப்பதற்காக, இது பலவீனம், அது பலவீனம் என்று சொல்வார்களே தவிர, இந்த வசனம் இருப்பதால் இது செய்யக்கூடாது இந்த ஹதீஸ் இப்படிஇருப்பதால் செய்யக்கூடாது என்று சொல்வதே இல்லை.


ஒரு ஹதீஸை பலகீனம் என்று சொன்னால், அது பலகீனம் இல்லை, பலமானது தான் என்று நிரூபிப்பது உங்கள் கடமையா அல்லது, பலகீனம் என்றால் மறுத்து விடுவீர்களோ ? என்று கேள்வி கேட்பது அறிவா?
திருடுவது தவறா என்று கேட்டால் ஆமாம் தவறு என்று சொல்லி விடுவீர்களே, என்று கேட்பது போல இருக்கிறது.
திருடுவது தவறா/ என்று கேட்டால் தவறு என்று தான் சொல்ல முடியும். அது தவறில்லை என்று நிரூபிப்பது தான் அதை மறுப்பவர்களது கடமையாக இருக்க வேண்டும்.
ஒரு ஹதீஸ் பலகீனமானது என்று நாம் கூறினால், அதை மறுத்து, அதை பலமானதாக நிரூபித்து விட்டு அந்த காரியத்தை செய்ய வேண்டுமே தவிர, இப்படி உளறக்கூடாது.
அப்படியானால், பலகீனமான ஹதீஸை கூட ஏற்ப்போம் என்கிறீர்களா?


அடுத்து, இங்கு தான் அதை நிரூபிக்கவில்லை, தொடர்ந்து பராத் இரவுக்கு அடுக்கடுக்காக சான்றுகளை வைப்ப்பீர்கள் என்று பார்த்தால், வேடிக்கை தான் மிஞ்சியுள்ளது.


நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறுகின்றார்கள். ஹதீஸ் குத்சியில் ஒரு அடியான் நபீலான (உபரியான) வணக்கங்களின் மூலம் நான் நேசிக்கின்ற வரை என்னை நெருங்கி கொண்டே வருகின்றான்

என்கிறீர்கள்.

இதற்கும் பராத் இரவுக்கும் என்ன சம்மந்தம் ?

எந்த கருத்தை சொல்கிறீர்களோ, அதற்கு நேர் எதிரான, முரணான ஒரு ஆதாரத்தை தந்து, இதன் மூலம் பராத் கொண்டாடலாம் என்று ஆதாரம் வைத்தால் இதை விடவும் கேவலம் வேறில்லை.
நபிலான வணக்கங்களை எப்போதும் செய்யலாம் என்பதிலிருந்தே ஒரு குறிப்பிட்ட நாளுக்கென்று வணக்கங்களை தரம் பிரிக்காதீர்கள் என்கிற கருத்தை தான் அது தருகிறது.

எல்லா நாளும் வணக்கம் செய்யலாம் ஆகவே ஷாபான் 15 இல் செய்கிறோம் என்று கூறுவது உளறலா அறிவார்ந்த வாதமா?

இஷா தொழுகையை முடித்தவுடன் பேச கூட அனுமதி இல்லாமல், தூங்கி விட வேண்டும் என்று வழியுறுத்தும் ஹதீஸ்கள் இருக்கும் நிலையில், பத்து மணியளவில் ஆரம்பித்து பனிரெண்டு மணி வரை டி வீ ப்ரோக்ராம் நடத்த என்ன ஆதாரம்.

முரண்பாடு, பொய்யனுக்கு சிறந்த உதாரணம் என்பதை மெய்யாக்கும் விதமாக மேலே அதிமேதாவிதனமான கருத்தை சொல்லியுள்ளீர்கள்.
இஷாவுக்கு மேல் பேசக்கூடாது என்றால், இஷாவுக்கு மேல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பேசிய ஹதீஸ்களை அடுக்கடுக்காக நாம் தரட்டுமா?
ஹதீஸ்கள், ஹதீஸ்களை புரிந்து கொள்ளும் முறை தெரியாது என்றால் வாய் மூடி மௌனியாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி புளுகுகளை அவிழ்த்து விடக்கூடாது.
இது தான் வாதம் என்றால், உங்கள் தானை தலைவர் சமாளியார் இரவு பத்து மணிக்கு தொலைக்காட்சியில் தரிசனம் தருகிறாரே, அவர் உண்மையில் மேற்ப்படியார் தானா அல்லது, அது அவரில்லை, அவரது டூப் என்று அவரை போல சமாளிக்க போகிறீரா?

மேலும் பராஅத் இரவில் மூன்று யாசின் ஓத வேண்டும். அதை கிண்டல் செய்கின்றார்கள்.

யாசீன் ஓத வேண்டும் என்று குர் ஆணிலிருந்து, ஹதீசிலிருந்து எடுத்து காட்டி விட்டு சொல்வது தான் மனித செயல்.
மார்க்கத்தில், ஆதாரமற்ற அறிவிப்புகளை செய்வதற்கு நீர் நபியல்ல!

எதை சொல்லியுள்ளீர்களோ, அதற்கு ஆதாரம் தர வக்கில்லை எனில், உங்கள் தகுதியை நீங்களே எடை போட்டுக்கொள்ளுங்கள்.

கத்ரை பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,லைலதுல் கத்ரு என்று குறிப்பிட்டிருக்கின்றானே. பிறகு ஏன் இங்கு வார்த்தையை மாற்ற வேண்டும். அதனால் இங்கு சுய இச்சையை வைத்து குர்'ஆனின் வசனத்தின்பொருளை மாற்றுகின்றார்களே தவிர வேறு இல்லை.

அந்த வசனம் கதிரின் இரவை பற்றி சொல்கிறது என்று சொல்வது குர் ஆனின் பொருளை மாற்றுவது என்றால், அந்த வசனம் பராத் இரவு என்று கூறுவது என்ன வகை?
ஒரு வசனத்தை சொன்னால், அந்த வசனம் இதை தான் சொல்கிறது, ஆகவே இதற்கு அந்த வசனம் தான் ஆதாரம் என்று சொல்ல வேண்டும்.
அந்த வசனத்தில் பராத் இரவு என்று எங்கே இருக்கிறது? பராதை தான் சொல்கிறது என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்?
இதற்கு உங்களால் விடை சொல்ல இயலாது எனில், குர் ஆன் வசனத்திற்கு சுய விளக்கம் கொடுப்பது யார்?


அடுத்து, பராத் இரவுக்கு ஆதாரம் என்ற பெயரில், நீங்கள் கூறியுள்ள ஹதீஸ் வேடிக்கையிலும் வேடிக்கை!

இதை இட்டுக்கட்ட பட்ட ஹதீஸ் என்று கூறுகின்றார்கள். ஆனால் இமாம் இப்னு மாஜா இட்டுக்கட்ட பட்ட ஹதீஸ் என்று கூறவில்லை. இது இட்டுக்கட்டக்கூடிய ஹதீஸ்என்று கூறினால், இதை மறுக்கும் ஹதீஸ் இருக்கின்றதா?முரண் பட்டால் தான் பிரச்சனையை. இதற்க்கு முரணான ஹதீஸை காட்ட முடியுமா என்றால் முடியவே முடியாது.ஆன்

ஒரு ஹதீஸ் பலகீனமானது என்று சொல்லப்பட்டால், அவ்வாறு யார் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பது அறிவா அல்லது, பலகீனம் என்று இன்னார் சொல்லவில்லை என்று கூறுவது அறிவா?

சமாளியாரை மனநல மருத்துவமனையில் நான் பார்த்தேன் என்று நான் கூறினால், அதை நம்ப வேண்டுமா அல்லது, மூன்றாம் தெருவில் வசிக்கக்கூடிய இப்ராஹீம் அவ்வாறு பார்த்ததாக சொல்லவில்லையே என்று கூறுவது அறிவாளிதனமா?
அவர் அவ்வாறு கூறவில்லை என்றால், சமாளியாரை அவர் அங்கு காணவில்லை. நான் கண்டேன். கண்டேன் என்று நான் சொல்வதை ஏற்ப்பது தான் நியாயம் என்று அறிவுள்ள எவருக்கும் புரிவர்.
சமாளியாரின் கூட்டத்தினருக்கு புரியாதது ஒன்றும் ஆச்சர்யமில்லை.

இது இட்டுக்கட்டும் ஹதீஸ் என்றால் இதை மறுக்கும் ஹதீஸ் இருக்கிறதா என்று கேட்கிறீர்.

இதுவும் உங்களது அறிவின் ஆழத்தை(?) வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

ஒரு ஹதீஸை இட்டுக்கட்டு என்று கூறினால், அது இட்டுக்கட்டில்லை என்று நிரூபியுங்கள்.
வாதம் செய்பவர்கள் செய்ய வேண்டியது இது தான்.
ஒரு கருத்துக்கு முரணாக எந்த ஒன்றும் சொல்லபபடவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற விதி, மனித மூளைக்கு எட்டுகிறதா?
ஒரு கருத்து, உண்மையா பொய்யா என்பதை அந்த கருத்தை வைத்து தீர்மானிக்க வேண்டுமே தவிர, இதற்கு முரணாக வேறெதுவும் சொல்லப்படவில்லை ஆகவே இதை ஏற்கலாம் என்று கூறுவது மூலை உள்ளவன் பேசும் பேச்சல்ல..அல்லாஹ்விற்கு அந்த ஆற்றல் இருக்கின்றதா இல்லையா, என்பதை முதலில் விளக்க வேண்டும். ஆற்றல் இருக்கின்றது என்று ஒப்புக்கொண்டுவிட்டால், இதை வைத்து து'ஆ கேட்பதில் தவறு இல்லை, ஆற்றல் இல்லை என்று வாதிட்டால் அவனின் ஈமான் கோளாறு.


ஒரு ஹதீஸை எர்ப்பதற்கு இவர் கூறும் அடுத்த இலக்கணம்..

உங்களுக்கெல்லாம் மூளை எங்குள்ளது என்று நமக்கு புரியவில்லை. அல்லாஹ்வை பற்றி ஒன்று சொல்லப்பட்டால், சொல்லப்பட்ட செய்தி உண்மையா பொய்யா என்று தான் ஆராய வேண்டுமே தவிர, அது அல்லாஹ்வுக்கு இயலுமா இயலாதா? என்று ஆராயக்கூடாது என்பது ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ள வேண்டிய அடிப்படை.
அல்லாஹ் மனிதனாக மாறி உலகில் பத்து வருடம் தங்கியிருந்தான், என்று நான் சொல்கிறேன் என்று வைப்போம், சரி தானே, அல்லாஹ்வுக்கு இது முடியாதா என்ன? அல்லாஹ் நினைத்தால் தன்னை மனிதனாக மாற்றிக்கொள்ள முடியும் தானே , என்று கூறி இதையும் நம்புவீர்களா?
உங்கள் அறிவின் ஆழத்தை கண்டால் நமக்கு புல்லரிக்கிறது .
அல்லாஹ் மனிதனாக வந்தான் என்று சொல்லப்பட்டால் எங்கே அவ்வாறு சொல்லப்பட்டது ? சொன்னது யார்? அவர் உண்மையாளரா/ என்று அலசுவது தான் அறிவே தவிர, அல்லாஹ்வால் அது முடியாதா? என்று வாதம் புரிவது அடிமுட்டாள்தனம்!

ஆக, பலகீனமான ஹதீஸ்கள் என்று வஹாபிகள் (?) சிலவற்றை மறுக்கிறார்கள் என்றால் , உண்மை முஸ்லிம்களான (???) நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
அது இன்னின்ன காரனத்தால் பலகீனம் இல்லை, அவை பலமானது தான் என்பதற்கு இதோ ஆதாரம், என்று அவற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டுமே தவிர இப்படி மூளை குழம்பி உளறக்கூடாது.

இந்த பலகீனமான செய்திக்கு முரணாக எந்த செய்தியும் இல்லை, ஆகவே இதை ஏற்கலாம் என்கிற வாதம் உளறலே தவிர வேறில்லை.
அல்லாஹ் குறித்து சொல்லப்பட்ட செய்தி பலகீனம் என்றால் என்ன? அதில் சொல்லப்பட்டிருப்பது போல் அல்லாஹ்வால் செய்ய முடியாதா என்ன? என்று வாதம் வைப்பது வடிகட்டிய கிறுக்குத்தனம் என்று சிறு குழந்தை கூட சொல்லும்.

ஆக, வஹாபிகளை எதிர்க்க வேண்டும் என்று மல்லு கட்டுபவர்கள் வஹாபிகள் அளவுக்கில்லை என்றாலும், சராசரி மனிதனுக்கென்று இருக்கும் சராசரி சிந்தனை திறனையாவது கொண்டிருக்க வேண்டும்.
சமாளியின் கும்பலுக்கு அது கிடையாது என்பதில் வஹாபிகளுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.
அந்த கும்பல் சிந்தித்தால் தான் ஆச்சர்யம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக