சனி, 17 செப்டம்பர், 2011

மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் அடையனிய ஃபத்வா??

அஸ்ஸலாமு அலைக்கும்..

பிஜேயின் ஆய்வின் தவறு இருப்பதாக தெரியவில்லை, அதை மறுக்ககூடிய உங்களது ஆய்வில் தான் தவறுள்ளதாக தெரிகிறது.
உங்கள் மறுப்பிலேயே உங்களுக்கு மறுப்பிருக்கிறது என்பது, பிஜே சுட்டிக்காட்டிய ஹதீஸில் பிஜேவிற்கு மறுப்பு உள்ளது என்பதாக நீங்கள் கூறியிருப்பதை விடவும் வேடிக்கையானது!


ஒரு தடையை வெறுமனே சொல்லி நிறுத்திக்கொண்டால், பொதுவாக அது தடை என்பது பொருள்.

ஒன்றை தடையென கூறி விட்டு, அதோடு சேர்த்து இன்ன காரணம் இருக்கும் வரை அல்லது இன்ன காரணத்திற்க்காக தடை என்று சொல்லப்பட்டால் அந்த காரணம் நிகழாதவரை அது தடையில்லை என்பது தான் மொழியறிவு உள்ள எந்த மனிதனும் புரியக்கூடிய ஒன்று!

தொண்டி தான் உனது எல்லை என்று பொதுவான ஒரு சட்டம் இருந்தால் அதன் பொருள், தொண்டி என்கிற ஊரின் எல்லையை விட்டு ஒரு அடி கூட தாண்டக்கூடாது என்பதாகும்.

ஆனால், தொண்டியை தாண்டக்கூடாது என்பதோடு சேர்த்து தொண்டிக்கு 50 km தூரத்தில் இருக்கிற ராமேஸ்வரத்தில் நுழையக்கூடாது என்று சேர்த்து கூறினால், அதனுடைய பொருள், ராமேஸ்வரத்தில் ஒரு அடி கூட எடுத்து வைக்கூடாது, அது அல்லாமல் தொண்டியின் எல்லையை தாண்டினாலும் தவறில்லை என்பது தான்.

இது சாதாரண மொழியறிவு.


கரண்டை காலுக்கு கீழே ஆடையை அணியாதே என்று ஒரு ஹதீஸில் சொல்லி விட்டு, தரையில் தொடும் அளவிற்கு ஆடை அணியாதே என்று இன்னொரு ஹதீஸில் சொல்லப்பட்டால் அதனுடைய பொருள், தரையில் படாதவாறு ஆடையை எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்பது தான்.
கணுக்காலுக்கு கீழும் அணிந்து கொள்ளலாம், தரையில் தொடுவது தான் தவறு!

இருப்பினும், பேணுதல் அடிப்படையில் கேண்டைகாலுக்கு பகுதி வரை அணியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் முதலில் சொல்லியிருப்பதால் அதுவே சிறந்த நிலை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
(அதையும் சேர்த்து தான் தமது ஆய்வில் பிஜே சொல்லியுள்ளார்)

கரண்டைக்கு கீழ் ஆடையை விட்டு, அது தரையில் இழுப்படுகிறதா இல்லையா என்பதை ஒவ்வொரு நேரமும் கவனமாக பார்த்துக்கொண்டு இருப்பதை விட கேண்டைக்காலுக்கு மேலே அணிந்து கொண்டால் நல்லது என்று தான் முடிவுக்கு வர முடியுமே தவிர, kendaikkaalukku கீழ் ஆடை செல்லவே கூடாது என்று முடிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை,

சாதாரண மொழியறிவை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதால் தான் இது போன்ற மறுப்பை எழுதியுள்ளீர்கள்.

உங்கள் கருத்தில் நீங்கள் உறுதியாக இருந்தால் மீண்டும் எழுதவும்.

வஸ்ஸலாம்.
2011/8/19 mugavai abbas <mugavaiabbas@gmail.com>

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ய்வு என்ற பெயரில் அவ்வப்போது மார்க்கத்தை மாற்றும் பீஜேயும் அவரது அபிமானிகளும் சமீபத்தில் கரண்டைக்கு கீழ் ஆடையணியலாம் என்ற ஃபத்வாவை வழங்கியிருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்பதற்கு அடுக்கடுக்கான ஹதீஸ் ஆதாரங்களை அவர்களே அந்த ஆய்வில் வைத்துள்ளார்கள். அவைகளில் சில;
  1. ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :

    நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள்.இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.நூல் : அஹ்மது(15389)

  2. கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மது (22121)

  3. உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால்கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அபூதாவுத் (3562)

  4. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.நூல் : திர்மிதி (1705)
  5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

    இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : அஹ்மது (7519)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)நூல் : அபூதாவுத் (3562)

மேற்கண்ட ஹதீஸ்கள் மட்டுமன்றி இன்னும் இதுபோன்ற சில ஹதீஸ்களையும்

வைத்து விட்டு, கடைசியில் தங்களது வழக்கமான பாணியான வார்த்தை விளையாட்டை நடத்தியுள்ளார்கள். கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்று வரும் ஹதீஸ்களில் 'இஸ்பால்' செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர் என்று கூறிவிட்டு,

கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.

கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.என்று தீர்ப்பளித்துள்ளனர்.
கவனமாக கவனிக்கக் வேண்டும். கணுக்கால் வரை ஆடையணிய அனுமதித்த நபி[ஸல்] அவர்கள், 'இஸ்பால்' செய்வதை விட்டும் அதாவது கணுக்காலுக்கு கீழே தரையை தொடும் அளவுக்கு ஆடையனிவதை எச்சரிக்கிறேன் என்று சொல்கிறார்கள். கணுக்கால் வரை என்று சட்டம் சொன்ன நபியவர்களுக்கு தரையை தொடாமல் ஆடையணிந்து கொள் என்று சொல்லத் தெரியாதா? இதிலிருந்து தெரிவது என்ன? கீழாடையின் அதிக பட்ச எல்லை என்பது கணுக்கால் வரை தானே?
ஒருவர் சொல்கிறார் தொண்டி எல்லையோடு நின்று கொள்; இதைவிட்டும் தாண்டுவதை நான் எச்சரிக்கிறேன் என்கிறார். இதிலிருந்து என்ன சட்டம் எடுக்க முடியும்? தொண்டி தான் இறுதி எல்லை அதை விட்டும் தாண்டக் கூடாது என்பதுதானே!ஆனால் ஆய்வாளர்
பீஜேயின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உடனே ஒருவரிடம், ''தொண்டி எல்லையை தாண்டக்கூடாது என்பதின் அர்த்தம் என்ன? என்று கேட்கிறார். அவரோ தொண்டி எல்லையை தாண்டுதல் என்றால் தொண்டிக்கு அடுத்த ஊரை நெருங்குவதாகும் என்கிறார். அப்படியானால் அந்த ஊரைத் தொடாமல் ஒரு அடி முன்னால் நின்று கொள்வது தவறில்லை என்று பீஜே சட்டம் சொல்லி விட்டார் என்றால் 'தொண்டியை தாண்டாதே என்று கட்டளையிட்டதற்கு மதிப்புண்டா?
மேலும், இவர்கள் அடிக்கடி மேடையில் மத்ஹபை குறித்து ஒன்று சொல்வார்கள். அதிகமாக சாப்பிட்டால் போதை தருவதை குறைவாக சாப்பிட்டால் ஹராம் இல்லை. அதாவது பத்துக் கிளாஸ் அடித்தால் தான் போதை ஏறும் என்றால், ஒன்பது கிளாஸ் அடிப்பது தவறில்லை என்று மத்ஹபு சட்டம் சொல்கிறது என்று கிண்டலடிப்பார்கள். அதே பாணியில் இவர்களின் இந்த தீர்ப்பு குறித்து சொல்வதாக இருந்தால், 'கரண்டைக்கு கீழ் ஆடையணிதல் என்பது தரையில் இழுபட்டால் ஹராம். தரையை தொட்டால் ஹராமில்லை' என்பதுதான்.
மேலும், இவர்கள் வைத்துள்ள அகராதிப் படி பார்த்தால் கூட 'இஸ்பால்' என்பது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்பதுதானே! ஆனால் இவர்களோ அதையும் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை என்று தீர்ப்பளிப்பது மனோ இச்சையின் வெளிப்பாடுதானே? தரையை தொடுவதற்கும், தரையில் இழுபடுவதற்கும் வேறுபாடு கூட விளங்க வில்லையா?
கரண்டைக்கு கீழே ஆடையணிதல் நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல், பெருமைக்குரிய செயல், அல்லாஹ் விரும்பாத செயல் என்றெல்லாம் தெளிவாக இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக தரையில் இழுபடாமல் ஆடை அணிந்தால் தவறில்லை என்று ஃ பத்வா வழங்கும் இவர்களை சமுதாயம் என்று அடையாளம் காணப் போகிறது?
அதெல்லாம் சரி! தொழுகைக்கு 'டவுசர்' போதும்; மற்ற நேரங்களில் தரையை தொடும் அளவுக்கு ஆடையணியனுமா?
-எண்ணம்; சகோதரர் பக்ருதீன்.
எழுத்து; முகவைஅப்பாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக