வெள்ளி, 15 மார்ச், 2013

பேச்சிலும் சூனியம் - முரண்பாடா??




கேள்வி: ஹாரூத் மாரூத் கொண்டு வந்த சூனியம் என்பது பாவமானது, அதை நம்புவதும் பாவமானது. அதே சமயம் பேச்சிலும் சூனியம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள். இங்கு வரக்கூடிய சூனியம் என்பதும் பாவமானது என்று சொல்வீர்களா??
 தில் :

சூனியம் என்றால் என்ன என்பதை விளங்க இந்த அளவிற்கு குழம்ப வேண்டிய அவசியமே இல்லை.

சூனியம் என்பதன் பொருள் இடத்திற்கு தகுந்தார் போல் வேறுபடுவதாக நாம் சொல்வதாக சொல்கிறீர்கள். அதற்கு சான்றாக 2:102 வசனத்தில் வரக்கூடிய சூனியம் என்பது மிகப்பெரிய பாவம் என்றும் பேச்சிலும் கவர்ச்சி உள்ளது என்று வரக்கூடிய ஹதீஸில் கவர்ச்சி என்பதற்கு பயன்படுத்தப்பட்ட சூனியம் என்கிற வார்த்தைக்கு அது பாமானதில்லை, அது வெறும் சொற்பொழிவு தான் எனவும் சொல்வதை எடுத்து காட்டுகிறீர்கள்.

புரியாமல் பேசுகிறீர்களா அல்லது புரிந்தும் மறைக்கிறீர்களா என்பது அல்லாஹ் அறிவான்.

சூனியம் என்று இந்த இரு இடங்களில் வரும் வார்த்தைக்கு இப்போதும் அர்த்தம் மாறவில்லை. இதை தான் நீங்கள் புரியவில்லை. புஹாரி ஹதீஸில் பேச்சு என்பது சூனியம் என்றால் இங்கு என்ன அர்த்தமோ அதே அர்த்தம் தான் ஹாரூத் மாரூத் கற்று தந்ததாக கூறப்படும் சூனியத்திற்கும் வைக்க வேண்டும்.
இரண்டு இடங்களிலுமே சூனியம் என்பது ஒரு வித்தை அல்லது trick .

ஹாரூத் மாரூத் ஆகிய ஷைத்தான்கள் கணவன் மனைவியை பிரிப்பதற்கு trick தான் பயன்படுத்தினார்கள். பேச்சிலும் trick தான் பயன்படுத்தப்படுகிறது. இரு இடங்களிலும் அர்த்தம் ஓன்று தான்.

அப்படியானால் சொற்பொழிவு கேட்பது பாவமான காரியமா என்கிற கேள்வியை அடுத்து கேட்பீர்கள் என்றால், அது பாவமான காரியமல்ல. சூனியம் வைத்து பேசுவதும் அதுவும் பாவமான காரியமல்ல.

அதே சமயம் ஹாரூத் மாரூத் கற்று தந்த சூனியம் பாவமானது தான்.

ஏன் இந்த வேறுபாடு?? என்றால், அங்கே இந்த trick ஐ கற்று தந்தது மனித ஷைத்தான். !! இது போன்ற வித்தைகள் காட்டி அதை உண்மை போல நம்ப வைக்க கூடிய சூனியக்காரர்கள் எல்லா நபி மார்களின் சமூகத்திலும் இருந்தார்கள். அவர்கள் தன்கள் செய்வது trick என்று சொல்லாமல் இது ஒரு மாய மந்திரம் என்றே கூறினார்கள் இதற்கு குர் ஆனிலேயே பல ஆதாரங்கள் உள்ளன.

அப்படி ஏமாற்றி வந்த போதிலும் கூட, சுலைமான் அதை நம்பவில்லை. அதை அற்புதம் என்று நம்பி அல்லாஹ்வை மறுக்கவில்லை. ஜிப்ரீல் மீகாயிலும் நம்பவில்லை.
ஆக ஒரு நபியையும் அந்த சமூகத்தையும் ஏமாற்றுவதற்காக சிலர் கொண்டு வந்த செயல் தான் இந்த சூனியம் என்பது. அது வெறும் trick என்று நம்பாமல் உண்மை என்று நம்பி விட்டால் அவர் இறை மறுப்பாளர் என்று அந்த இறை வசனம் சொல்கிறது கணவன் மனைவியை பிரிப்பதற்கு மூலம் அவர்கள் சூனியம் செய்தாலும் அதை செய்தது சுலைமான் நபிக்கு எதிரான ஷைத்தான்கள் என்பதால் அதை நம்புவது அல்லாஹ்வை மறுக்கும் காரியமாகி விடுகிறது. ஆகவே இங்கே அது பெரும் பாவம்.

அதே சமயம், பேச்சிலும் சூனியம் உள்ளது என்று நபி (ஸல் அவர்கள் சொன்னது மேற்கண்ட context இல் அல்ல. பேசக்கூடியவர் தான் மனித சக்திக்கு அப்பாற்பட்ட்ட ஒரு சக்தியை பெற்றுக்கொண்டு அதன் மூலம் உங்களை வசூகரிக்கிறேன் என்று கூற மாட்டான்.

மனிதனுக்கு இருக்கும் திறமையின் மூலம் பேசி கவர்கிறான் அவ்வளவு தான், இதை நம்புவது, ஹரூத் மாரூத் கொண்டு வந்த சூனியத்தை நம்புவது போன்றதல்ல.

அதே சமயம், சொற்பொழிவு ஆற்றக்கூடியவர் தான் மனித சக்திக்கு அப்பாற்பட்ட திறமையின் மூலம் பேச்சில் கவர்கிறேன் என்று கூறி பேசினால், அத்தகைய சூனியமும் பெரும் பாவம் ஆகி விடும் !!

இது தான் வேறுபாடு. சூனியம் என்கிற வார்த்தைக்கு பொருள் ஓன்று தான். அதை புரிந்து கொள்ளும் இடங்களை பொறுத்து அது பாவமா இல்லையா என்பது வேறுபடும் !
அது பாவமான காரியமா இல்லையா என்பது தான் வேறுபடுமே தவிர சூனியம் என்கிற வார்த்தையின் அர்த்தம் வேறுபடாது !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக