சனி, 16 மார்ச், 2013

சலபுகளின் விவாத பல்டி




விவாதத்திற்கு ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு, விவாதம் ஹராம் என்று சொல்லி பார்த்தார்கள்.

இது தான் உங்கள் கொள்கை என்றால் முகநூலில் நீங்கள் எதையுமே பேச கூடாதே, அதுவும் விவாதம் தானே? என்று கேட்டதற்கு பதில் சொல்ல இயலாமல் தடுமாறியவர்கள், வீடியோ இல்லை என்றால் விவாதிக்க வருகிறோம் என்றார்கள்.

ஏன் வீடியோ இருந்தால் என்ன? நீங்கள் சொல்லும் உண்மை உலகிற்கு தெரிய வீடியோ இருந்தால் தானே முடியும்? என்று கேட்டதற்கு, விவாதத்தை வீடியோ எடுத்து எங்களை கேவலப்படுத்தவா?? என்று வெட்கமேயில்லாமல் கேட்டனர்.

அட வீடியோ எடுப்பது நீங்கள் பேசியதை நீங்கள் நாளை மறுக்க கூடாது, நாங்கள் பேசியதை நாளை நாங்கள் மறுக்க கூடாது, தவிர வீடியோ செய்யப்படுவதன் மூலம் நாம் பேசுவது மக்களுக்கு சென்றடையும், மக்கள் தெளிவடைவார்கள் இது தான் நோக்கம் என்று கூறிய பிறகு, அப்படியானால் நாங்கள் கேட்டு விட்டு சொல்கிறோம் என்று சொல்லி காணாமல் போனார்கள்.

பிறகு மீண்டும் வந்து, வீடியோ எடுப்பது மார்க்கத்தை துல்லியமாக கடைப்பிடிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளாத விஷயமாகும் என்றனர்.
மார்க்கத்தை துல்லியமாக கடைப்பிடிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் உங்கள் நிலையை இங்கே சொல்லுங்கள். வீடியோ எடுக்க கூடாது என்கிற நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்களா?? என்று திருப்பி கேட்டதற்கு பல நேர சமாளிப்புக்கு பிறகு இல்லை வீடியோ எடுக்கலாம் தான்.... என்று இழுத்தனர்.

பிறகு என்ன? விவாதிக்க வாருங்களேன் என்று கேட்டதற்கு, ஏன் வீடியோ வீடியோ என்று எங்களை பயமுறுத்துகிறீர்கள்??? என்று வெளிப்படையாகவே கேட்டனர்.

உங்களிடம் உண்மை இருக்கும் போது உங்களை யாரால் பயமுறுத்த முடியும்? உண்மை இல்லாதவர்கள் தானே பயப்பட வேண்டும்?? என்று எதிர் கேள்வி கேட்ட போது , சிறிது நேரம் பல்டிகள் அடித்து விட்டு, நீங்கள் ஏன் எப்போதும் வீடியோ வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? சினிமாவில் நடிக்க வேண்டுமா? என்று மிகவும் அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டனர்.

இவர்களது இத்தகைய அறிவை தான் சலபு ஆய்விலும் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க, வீடியோவில் முகம் காட்டுவது சினிமாவில் நடிப்பதற்கு தான் என்றால், இவர்களது தலைவர் இஸ்மாயில் சலபியும் முற்றிப்போன உமர் ஷெரிபும் வீடியோ எடுத்துக்கொண்டு உரை நிகழ்த்துவதெல்லாம் எந்த சினிமா இயக்குனரிடம் வாய்ப்பு பெறுவதற்காக? என்று நாம் கேட்ட போது வழக்கம் போல் பல்டி அடிக்க துவங்கினர்.

கடைசியில் எந்த பல்டியும் உதவாக்கரையாகி போன பிறகு, பிஜே ஏன் சவூதி விவாதிக்க அழைத்தும் போகாமல் இருந்தார்? என்று திசை திருப்பினர்.

பிஜே எந்த அழைப்பிற்கும் போகாமல் இருக்கவில்லை, சவூதி அழைத்ததற்கு பதில் தந்த அவர், இரண்டு மாதங்கள் பணிகள் முடித்து விட்டு அழையுங்கள் வருகிறேன் என்று பதில் கடிதம் இட்டுள்ளார் எனவும், அதற்கு சவுதியில் இருந்து தான் பதில் இன்னும் வரவில்லை என்றும் விளக்கப்பட்டது.

எனினும், பிஜே விவாதத்திற்கு போகாததற்கும் நீங்கள் இப்போது தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்ய வராமல் இருப்பதற்கும் என்ன சம்மந்தம்?? என்று கேட்டதற்கு வழக்கம் போல் பதில் இல்லை.

அடுத்து, பிஜே பதில்  கடிதம் எழுதினர் என்றால் அதை பிஜெவா எழுதினர்? பிஜேவுக்கு அரபி தெரியாது ஆகவே அவர் எழுதவில்லை என்று பதில் சொன்னார்கள்.

பிஜேவிற்கு அரபி தெரியாது என்று சொல்பவர் சாதாரண மூளையுள்ளவனாக இருக்க மாட்டான், அவரை எதிர்க்கும் எதிரிகள் கூட அவரது அரபு புலமையை அறிந்தே உள்ளனர் என்பது ஒரு பக்கம் இருக்க, இதை ஒரு வாதமாக இவர்கள் இங்கே வைப்பது மூளை உள்ள எவருக்காவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளதா??

சரி, அப்படியானால் இது உங்களுக்கு இன்னும் எளிமையாகி போய் விடுமே?? பிஜேவுடனேயே விவாதிக்கலாமே, அவருக்கு தான் அரபி ஞானமில்லையே, நீங்கள் அவரை எதிர்கொண்டு உங்களது அரபு புலமையை ஒரு காட்டு காட்டி பிஜேவை திக்கு முக்காட செய்ய வேண்டியது தானே?? என்று கேட்டதற்கு வாய் மூடி மௌனி ஆனார்கள்.

அட அதுவும் வேண்டாம், பிஜேவுக்கு அரபி தெரியாது என்பது தானே உங்கள் வாதம்? அதை விவாதிக்கலாம் வருகிறீர்களா?? பிஜேவை ஒரு பக்கம் வைப்போம், நீங்கள் அவரது அரபி புலமையை சோதனை செய்து அவருக்கு தெரியாது என்று நிரூபியுங்களேன், அதையாவது செய்கிறீர்களா?? என்று கேட்டதற்கு அதற்கும் மௌனம் !

பிஜே விவாதிக்க போகவில்லை என்று முதலில் சொன்னார்கள். விவாதிக்க தயார் என்று அவர் பதில் எழுதியுள்ளாரே? என்று கேட்டதற்கு அதை அவர் எழுதவில்லை என்று சிறு பிள்ளைத்தனம் காட்டுகின்றனர். 

ஒரு வாதத்திற்கு, அவர் அதை எழுதவில்லை என்றால் என்ன?? தெருவில் செல்லக்கூடிய ஒரு பாமரன் தான் அவருக்காக அரபியில் எழுதி கொடுத்தார் என்றே வைப்போம், அதனால் என்ன??? அதை பிஜே , தமது சார்பாக தானே அங்கே அனுப்புகிறார்?? அவர் தானே கையொப்பம் இட்டு அனுப்புகிறார்? தனது சார்பாக ஒரு கடித்தை கொடுப்பது, தான் கொடுத்ததற்கு சமம் என்று புரிவது அறிவா அல்லது, இதை அவர் கைப்பட எழுதவில்லை, ஆகவே அவர் அனுப்பவில்லை என்று சொல்வது அறிவா??

அதாவது, அறிவுக்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதை அவ்வப்போது நிரூபிக்கிறார்கள் இந்த மெத்தம் படித்தவர்கள். 

சரி, அப்படியே ஒரு வாதத்திற்கு பிஜே சவூதி அழைத்ததற்கு போகவில்லை, சரி அதனால் என்ன? இப்போ உங்களை அழைக்கிறோமே, சவுதியில் உள்ள அறிஞர்களை கூட அழைத்து வாருங்கள் என்று கேட்கிறோமே, இப்போது இதற்கு பதில் சொல்வது தானே நியாயமாகும்??

இப்போது விவாதிக்க தயார் என்று கூறும் போது நீ ஏன் அன்றைக்கு வரவில்லை என்று கேட்பதும் அறிவை அடகு வைப்பவர்களின் வாதமா அல்லது அறிவார்ந்த கேள்வியா???

.சலபுகள் போல ஒரு கூமுட்டை இயக்கம் வேறு இல்லை என்பதை நாம் நிரூபிக்க தேவையில்லை, இவர்களே நிரூபித்து விடுவார்கள்.

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    இப்படி சுட சுட சுடுதண்ணியை அவர்கள் காலில் ஊத்திட்டீங்களே

    பதிலளிநீக்கு