அஸ்ஸலாமு அலைக்கும்..
இறுதி நபித்துவத்தை மறுக்கின்ற கூட்டம் பரப்பி வந்த நோட்டீசுக்கு மறுப்பாக நாம் குர் ஆனிலிருந்தும் ஹதீசிலிருந்தும் எண்ணற்ற ஆதாரங்களை தந்திருந்தோம்.
பார்க்க : http://nashidahmed.blogspot.com/2012/02/blog-post.html
ஒரு சிலவற்றுக்கு மட்டும் பதில் என்கிற பெயரில் சில சப்பை கட்டுகள் வந்தனவே ஒழிய, அனைத்திற்கும் இந்த கூட்டத்தால் மறுப்பு சொல்ல இயலவில்லை.
ஒரு சிலவற்றுக்கு மட்டும் பதில் என்கிற பெயரில் சில சப்பை கட்டுகள் வந்தனவே ஒழிய, அனைத்திற்கும் இந்த கூட்டத்தால் மறுப்பு சொல்ல இயலவில்லை.
இந்நிலையில், மிர்சா குலாம் தான் இறுதி நபி என்று வாதிடக்கூடியவர்களிடம் பல வருடங்களாக நாம் எழுப்பி வரும் கேள்விகளை இங்கு மீண்டும் பட்டியலிடுகிறோம்.
பல வருடங்களாக பதில் கிடைக்காமல் திண்டாடுபவர்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு.. !
முதல் கேள்வி
ஹகீகத்துல் வஹீ என்கிற நூல், பக்கம் 317 இல், தனக்கு ஆங்கிலத்தில் வஹீ வந்ததாக சொல்கிறான் இந்த மிர்சா குலாம் என்பவன். அதில் பல எழுத்துப்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் இருக்கின்றதே என்று கேட்ட பொது "வஹீ என்பது வேகமாக வருகிறது என்பதால் இலக்கண பிழை வருகிறது என்று சொன்னான்". அல்லாஹ், பிழையாக ஒரு மொழியை சொல்லுவான் என்று அல்லாஹ் மீது இட்டுக்கட்டிய ஒருவன் நபியா?
இரண்டாம் கேள்வி
நூருல் ஹக் இத்மாமுல் ஹுஜ்ஜா என்கிற நூல், பக்கம் 296 இல், ஈசா நபியின் கபுர் பாலஸ்தீனில் உள்ளது என்று சொன்ன இந்த மிர்சா குலாம், கிஸ்தி நூஹ், பக்கம் 25 இல், ஈசா நபியின் கபுர் காஷ்மீரில் உள்ளது என்று சொல்லியுள்ளான் .
இப்படி முரண்பட்டு பேசியவன் நபியா?
ஈசா நபி இன்னும் இறக்கவில்லை என்று குர் ஆனும் ஹதீசும் சொல்லும் போது, அதற்கு மாற்றமாக பேசியவன் நபியா?
மூன்றாம் கேள்வி
சரி, அது தான் இவனது கொள்கை என்றால், அதிலாவது உண்மையாளனாக இருக்க வேண்டுமல்லவா? ஆயினே கமாலாத் என்கிற நூல் பக்கம் 409 இல் , ஈசா நபி வானில் இருந்து இறங்கி வருவார்கள் என்று மக்கள் நம்பியாக வேண்டும், ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளான்.
இப்படி முரண்படக்கூடியவன், சிந்தனை தெளிவில்லாதவன் நபியா?
சரி இது ஒரு பக்கம் என்றால், அதே நூலில் பக்கம் 44 இல், ஈசா நபி வருவார் என்று சொல்வது ஷிர்க் ஆகும் என்று தமக்கு தாமே இரண்டு முறை முரண்பட்டு பேசியுள்ளான்.
பைத்தியக்காரனை விடவும் அதிகமாக குழப்பிக்கொண்டிருக்கும் ஒருவன் நபியா?
நான்காம் கேள்வி
சுல்தான் முஹம்மது என்பவர் முகமதி பேகம் என்கிற பெண்ணை திருமணம் செய்தால், சுல்தான் முஹம்மது முப்பதே மாதங்களில் இறந்து போவார். அதன் பிறகு நான் அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று ஆயினே கமாலதே இஸ்லாம் என்கிற நூல் பக்கம் 325 இல் எழுதியுள்ளான்.
வேடிக்கையான விஷயம் - அந்த சுல்தான் முஹம்மத் இறப்பதற்கு முன் இந்த மிர்சா குலாமே இறந்து போனான்!! தான் கூறிய ஒன்று பொய்த்து போனால் அவன் நபியாக இருப்பானா?
இதில் உச்சகட்ட வேடிக்கை, இவ்வாறு நடக்காமல் போனால், நான் நபி இல்லை என்பதற்கு அதுவே ஆதாரம், என்று வேறு வாய் கொடுத்து மாட்டியுள்ளான் இந்த மிர்சா குலாம் (அதே நூல், அதே பக்கம்)
ஐந்தாம் கேள்வி
ஆயினே கமாலாதே இஸ்லாம் என்கிற நூல், பக்கம் 565 இல், எனக்குள் அல்லாஹ் நுழைந்து விட்டான், இப்போது நான் தான் அல்லாஹ், நான் தான் இந்த உலகை படைத்தேன், நான் தான் இந்த மனித குலத்தை படைத்தேன், என்று கூறி, தன்னையே கடவுள் என்று சொன்னவன் நபியா அல்லது ஷைத்தானா?
ஆறாம் கேள்வி
திர்யாகுல் குலூப் என்கிற நூல் பக்கம் 432 இல் , தன்னை யாராவது நபி என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவர் முஸ்லிம் தான் என்று சொல்லியுள்ளான்.
இவன் உண்மையில் அல்லாஹ் அனுப்பிய தூதர் தான் என்றால், அல்லாஹ்வின் தூதரை ஏற்றுக்கொள்ளாதவன் எப்படி முஸ்லிமாக முடியும்? நபியை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் கூட அவன் முஸ்லிம் தான் என்கிற குர் ஆணுக்கே முரணான கருத்தை சொன்னவன் நபியா?
சரி இது தான் அவனது கொள்கை என்றால், ஹகீகத்துல் வஹீ, பக்கம் 167 இல், என்னை நபியாக ஏற்றுக்கொள்ளாதவன் காபிர் என்று சொல்லி, தனக்கு தானே முரண்பட்டு கொண்டுள்ளான இவன். இவன் எப்படி நபி ஆவான் ?
ஏழாம் கேள்வி
மூஸா நபி மரணிக்கவில்லை என்று அல்லாஹ்வே சொல்லியுள்ளான் என்று நூருல் ஹக், பக்கம் 68இல்சொல்லியுள்ளான் இந்த மிர்சா குலாம். அல்லாஹ் எந்த வசனத்தில் இவ்வாறு சொல்லியுள்ளான் என்பதை இன்றைய தேதி வரை எவராலும் எடுத்துக்காட்ட முடியவில்லை.
அல்லாஹ் மீதே இட்டுக்கட்டுபவன் நபியா காபிரா?
எட்டாம் கேள்வி
மஸீஹ் வரக்கூடிய காலத்தில், "இவர் தான் அல்லாஹ்வின் கலீபா" என்று வானத்தில் இருந்து ஒரு சப்தம் வரும் என புஹாரியில் ஹதீஸ் இருப்பதாக ஷஹாததுல் குர் ஆன், பக்கம் 41 இல் சொல்லியுள்ளான் இந்த மிர்சா குலாம்.
புஹாரியில் இன்று வரை அத்தகைய ஹதீசை எவராலும் காண முடியவில்லை. இவ்வாறு புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுபவன் நபியா?
ஒன்பதாம் கேள்வி
மஸீஹ் வரக்கூடிய காலத்தில் ப்ளேக் நோய் ஏற்ப்படும் என்று குரானிலே சொல்லப்பட்டிருப்பதாக கிஸ்தி நூஹ் என்கிற நூல், பக்கம் 9 இல் எழுதியுள்ளான் இவன். அவ்வாறு குர் ஆனில் எந்த வசனமும் இல்லாத நிலையில், இவன் ஒரு மோசடிப்பேர்வழியா நபியா?
பத்தாம் கேள்வி
நீ என்னுடைய மகனின் அந்தஸ்தில் இருக்கிறாய் என்று அல்லாஹ்வே தம்மிடம் சொன்னதாக மிர்சா குலாம்,ஹகீகதுல் வஹீ பக்கம் 8 இல் சொல்லியுள்ளான்.
அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவும் இல்லை என்று, தான் இறைவன் என்பதற்குரிய தகுதிகளில் ஒன்றாக அல்லாஹ் தன்னை குறித்து பெருமையாக சொல்லும் போது, நான் அல்லாஹ்வின் மகன் என்று ஒருவன் சொல்வது அல்லாஹ்வை இழிவுப்படுத்துகிறதா பெருமைப்படுத்துகிறதா?
பதினொன்றாம் கேள்வி
கமர் என்கிற சொல், மூன்று நாட்களுக்கு பிறகுள்ள பிறையை தான் குறிக்கும், இதற்கு மாற்றமாக சொல்லக்கூடியவன் மடையன் என்று மிர்சா குலாம், நூருல் ஹக் பக்கம் 10 இல் சொல்லியுள்ளான்.
முதல் பிறைக்கு கூட கமர் என்கிற வார்த்தையை அல்லாஹ்வே சொல்லியுள்ளானே, அல்லாஹ் மடையனா? என்று கேட்டதற்கு இன்று வரை எவராலும் பதில் சொல்ல இயலவில்லை. அல்லாஹ்வையே மடையன் என்று சொல்பவன் அல்லாஹ்வின் தூதரா அல்லது அல்லாஹ்வின் எதிரியா?
பனிரெண்டாம் கேள்வி
கிஷ்தீ நூஹ் பக்கம் 68 இல், மரியமும் நானே, ஈசாவும் நானே என்று, உளறியிருக்கிறான் இவன். இத்தகைய உளறல் பேர்வழி எப்படி நபியாக இருக்க முடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக