சனி, 17 செப்டம்பர், 2011

மவ்லித்2



((நீண்ட ஆக்கமாக இருப்பதால் பொறுமையாக படிக்கவும்.. நேரம் பிரச்சனையில்லை..!))

வ அலைக்குமுஸ்ஸலாம்

வரிக்கு வரி பதில் சொல்ல வேண்டும் என்கிற ஆசை இருந்தால் போதாது, அதை சரியான முறையில் சொல்ல தெரிய வேண்டும்.
எனது வாதங்களையும் கேள்விகளையும் கவனமாக படிப்பதை விட, வஹாபி (?) எதிர்ப்பு சிந்தனையே தங்களிடம் மேலோங்கி இருப்பதால் பதிலில் இத்தனை குழப்பம் , இத்தனை காட்டம் !

உங்களையும் , நீங்கள் கொண்டுள்ள கொள்கையையும் நினைத்து நாம் வருந்துகிறோம். நம்மை எதிர்க்கிற நோக்கில் நீங்கள் வாதம் செய்தாலும், நீங்களும் உண்மையை புரிய வேண்டும் என்கிற நோக்கில் மட்டுமே நான் வாதம் செய்வேன், இன்ஷா அல்லாஹ் !!

ஒப்பந்தமீறல் குறித்த உங்கள் விமர்சனத்திலிருந்து துவங்குகிறேன். ..

இஸ்லாத்திற்கு விரோதமான சினிமா எனும் ஊடகத்தில் அம்மாவை புகழ்ந்து பாடினால் அது நல்லது தானே என்று கூறி சினிமா பார்ப்பது கூடும் என்று ஒருவன் பத்வா கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? மாட்டீர்கள் என்றால் மார்க்கத்திற்கு விரோதமான மவ்லூதில் சில வரிகள் நல்லவைகளாக இருந்தால் அதன் மூலம் முழு மவ்லூதையும் ஓதுவது கூடும் என்று கூறுவதும் எர்ப்புடையது கிடையாது. என்று நான் வாதம் வைத்திருந்தேன்.

இந்த வாதத்திற்கு பதில் சொல்லாமல், உலக நடப்புகளை உதாரணமாக வைக்ககூடாது என்கிற விதியை காட்டுகிறீர்கள்.
விதி அவ்வாறில்லை. ஒரு காரணத்தை கொண்டும் நாட்டு நடப்பை காரணம் கட்டி ஒரு செயலை விமர்சிக்ககூடாது
என்பது தான் நீங்கள் சொல்லியுள்ள, நானும் ஒப்புக்கொண்டுள்ள விதி!

இதன் பொருளுக்கும் மேலே நான் சினிமாவை பற்றி சொன்னதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சினிமா குறித்து நான் சொன்னது ஒரு உவமை, ஒரு உதாரணம். இதை தவறு என்று சொன்னால், அதையும் தவறு என்று தான் சொல்ல வேண்டும் என்கிற ஒப்பீடு.

உங்கள் ஒப்பந்த விதி சொல்வது, உலக நடப்புகளில் ஒரு விஷயத்தை ஒருவர் செய்கிறார் என்றால், அதை காரணமாக சுட்டிக்காட்டி, இதோ இவர் இப்படி செய்கிறார் பார்த்தீர்களா, ஆகவே நீங்கள் வாதிக்கும் விஷயம் தவறு! என்று கூறக்கூடாது என்பது.
இரண்டுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.

ஒப்பந்த மீறலை குறித்து இத்தனை சிரத்தை எடுக்கிற நீங்கள், ஒப்பந்தத்தில் நீங்களே கூறியுள்ள இன்னொரு விஷயத்தை மீறுவதற்கு மட்டும் எந்த சிரமத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.
ஒருபோதும் தர குறைவான வார்த்தைகளை டைப் செய்ய கூடாது
என்பது, நீங்கள் சொன்ன விதி!!

உங்கள் ஆக்கத்தின் முதல் வரியிலேயே இதை மீறி விட்டு என்னை நோக்கி ஒப்பந்த மீறல் என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்..

அல்லது, தரக்குறைவான வார்த்தை என்கிற பட்டியலில் நீங்கள் உபயோகித்த வார்த்தைகள் அடங்காது என்று சொல்வீர்கள் என்றால் , அதை இங்கு கூறி விடுங்கள்.

தலைப்புக்கு வருவோம்..

நபியின் வஹி மட்டும் தான் ஆதாரம் என்று நீங்கள் முடிவு எடுப்பதற்கு முதலில் குர்ஹன் ஹதீஸ் ஆதாரம் தர வேண்டும் ?


வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்கள்.

ஒரு முஸ்லிம் என்பவன் மனதினில் புரிந்து வைத்துக்கொண்டு செயல்படுத்த வேண்டிய மிக அடிப்படையான ஒரு விஷயத்தை கேள்வியாக கேட்டு, மார்க்கத்தில் உங்களுக்கு இருக்கும் அபார சிந்தனையை மெய்யாக்கியுள்ளீர்கள்.

அல்லாஹ் அருளியதை பின்பற்றுங்கள் என்று 2 :170 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

முஹம்மதே, உமது இறைவனிடமிருந்து அறிவிக்கப்படுவதை மட்டும் நீர் பின்பற்றுவீராக என்று 6 :106 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

மேலும், 7 :3 , 33:2 இன்னும் பல வசனங்கள், இஸ்லாம் என்றால் என்ன என்கிற fundamental சட்டத்தை சொல்கிறது.

இஸ்லாத்தின் அடிப்படையே உங்களுக்கு ஆட்டம் என்பதால் இதில் கேள்வி கேட்கிறீர்கள்.
உங்கள் கேள்விக்குரிய பதில் ஆதாரத்துடன் தரப்பட்டுள்ளது.
பதிலுக்கு மறுப்பு சொல்கிற போது, நான் என்னன்ன வசனங்களைஎல்லாம் ஆதாரமாக சொன்னேனோ, இனியும் எதையெல்லாம் ஆதாரமாக தர இருக்கிறேனோ, அனைத்திற்கும் வரிசையாக மறுப்பு சொல்ல வேண்டும்.

அடுத்து,

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சஹாபாகளை பின்பற்ற மாட்டார்கள்அனால் அவர்களுக்கு பின்னல் வந்த இமாம் புஹாரி,முஸ்லிம் ,
இப்னு மாஜா,பைஹகி,போன்றவர்கள் எழுதிய கிதாபுகளை பின்பற்றுவர்கள்.


என்று கேட்டு, உங்களது அறிவு ஞானத்தை மீண்டும் ஒரு முறை மெய்யாக்கியிருக்கிறீர்கள்.

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.
உங்கள் கேள்வியில் எந்த அறிவும் இல்லை என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரம்!

சஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்று சொல்கிற நாங்கள் தான் அவர்களுக்கு பின்னால் வந்த இமாம்கள் எழுதிய நூலை பின்பற்றுகிறோம்! ஆம் !!

சஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்று சொல்கிற நாங்கள் அடுத்து வந்த இமாம்களை பின்பற்றுவோம் என்று சொன்னால் தான் தவறு. அவ்வாறு நாங்கள் சொல்லியிருந்தால் , அப்போது தான் உங்களது இந்த கேள்வியில் சிறிதாவது அறிவுக்கு பொருந்துகிற வாதம் இருக்கும்.

எங்கள் நிலையை நீங்களே விளக்கி விட்டீர்கள்.
நாங்கள் சஹாபாக்களையும் பின்பற்றவில்லை, அடுத்து வந்த இமாம்களையும் பின்பற்றவில்லை!!
இமாம்கள் எழுதிய நூலை தான் ஹதீஸ்களின் தொகுப்பாக ஏற்றுக்கொள்கிறோம்.
ஒருவர் தொகுத்து தருகிற ஒன்றை ஒப்புக்கொள்வதால் நான் அவரையே பின்பற்றுகிறேன் என்று ஆகி விடாது.
இந்திய வரலாறு குறித்து நீங்கள் ஒரு நூல் எழுதுகிறீர்கள், அதை நான் வாங்கிப்படித்து அதை ஏற்றுக்கொள்கிறேன் என்றால் அதனுடைய பொருள், இந்திய சரித்திரத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பது தான்!!
அதே நேரம், மறுமை வெற்றிக்கு என்ன வழி என்று நீங்கள் ஒரு மார்க்க நூலை எழுதி , அதை நான் ஏற்றுக்கொண்டால், நான் உங்களை பின்பற்றுகிறேன் என்பது தான் பொருள்.
இரண்டுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

ஹதீஸ்களை தொகுத்து நூல் வடிவில் ஒருவர் தரும் போது, அந்த ஹதீஸ்களை நான் மார்க்கமாக ஏற்றுக்கொள்வதால், அந்த நூலை தொகுத்தவரை நான் பின்பற்றுகிறேன் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமே தவிர வேறில்லை.

வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பது குறித்து என்னிடம் ஆதாரம் கேட்டதை போன்று,
  • வஹீ அல்லாதவைகளும் மார்க்கம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் இங்கு தர வேண்டும்.
  • அதே போன்று, மார்க்க விஷயங்களில் சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் தர வேண்டும்.
  • இன்னும், சஹாபாக்களுக்கும் வஹீ கிடைக்கும் என்பதற்கும் ஆதாரம் தர வேண்டும்.

நீங்கள் தரக்கூடிய ஆதாரங்கள் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வஹாபிகள் (?) ஏற்கனவே அறிந்து தான் வைத்திருப்பார்கள் என்பதை நீங்கள் முன்க்கூட்டியே புரிந்து, அதற்க்கேற்ப உங்கள் ஆதாரத்தை வலுவாக தரவும் (தர முயற்சிக்கவும்..)

அடுத்து..

மவ்லித் பாட குடியவர்கள் தாங்களாக தினம் ஒரு கவிதையை இயற்றி அதன் பொருளை உணர்ந்து நபிகள்நாயகம் (ஸல்) அவர்களை புகழட்டும் இதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று கூறி உள்ளார் இதை நீங்கள் பின்பற்ற தயாரா ?

என்று கேட்கிறீர்கள்.
ஒன்றை செய்ய அனுமதி உள்ளது என்றால் செய்யாமலும் இருக்கலாம். கட்டாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை, அவ்வாறு மார்க்க சட்டமும் கிடையாது எனும் போது, இவ்வாறு பின்பற்ற தயாரா என்கிற கேள்வியே அர்த்தமற்றது!
தோன்றுகிற நேரத்தில், தோன்றுகிற சூழ்நிலைகளில் ரசூல் (ஸல்) அவர்களை அனைவரும் புகழத்தான் செய்கிறோம்.!!

முஹம்மது நபி(ஸல்) தான் காவல் என்று அழைக்கும் வரி இது. பதில் - இதை பற்றி நீங்கள் இந்த கறுத்தும் சொல்ல வில்லை சொன்னால் இதற்கும் பதில் தர தயார்

சுபஹன மவ்லிதிலுள்ள அனைத்து வரிகளும் குர்ஹன் ஹதீஸ் இக்கு உட்பட்டதுதான்.

நடைமுறையில் இன்று உள்ள சுபுஹான மவ்லூத், ஒரு முஸ்லிமை காபிராக்கும் கருத்துக்களை கொண்டுள்ளது, ஆகவே இதை ஓதுவது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்பது எனது கருத்து.

என்று கூரிய நீங்கள் அதற்குரிய குர்ஹன் ஹதீஸ் ஆதாரத்தை தர வேண்டும்



என்று கேட்டு, சுபுஹான மவ்லூதில் மார்க்கத்திற்கு முரணான எந்த கருத்துக்களும் இல்லை எனவும், அதை நிரூபிக்க தயாரா? எனவும் நம்மை நோக்கி கேட்கிறீர்கள்.

நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய ஒரு அபத்தத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

என்கிற வாசகம், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

என்கிற இறை வசனத்துடன் நேரடியாக மோதுகிறது!
பாதுகாவல் அல்லாஹ் தானே தவிர, வேறு நபர்கள் இல்லை!


عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக.


என்று மவ்லூதில் உள்ள வரியானது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கல் மக்களின் கவலையை போக்ககூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இது, ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)
என்கிற இறைவனின் வார்த்தையுடன் போர் செய்கிறது!

أَقْسَمْتُ فِيْ نَصْرِيْ بِكُمْ عَلَيْكُمْ
நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

என்று மவ்லூதில் சொல்லப்படும் பாடலானது, நபியின் மீது சத்தியம் செய்ய சொல்கிறது.

ஆனால், அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் (நூல் : அபூதாவூத் 2829)
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு இது நேர் முரணாக இருக்கிறது. அவர்கள் சொன்னதை போன்று மவ்லூதை பாடினால், நாம் இணைவைப்பவர்களாக ஆகி விடோம்!!


اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

என்பது மவ்லூதின் வரி.

இது,
நான் நோயுறும் போது அல்லாஹ்வே எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)
என்கிற இறை வசனத்தை கேலிக்கூத்தாக்குகிறது.

மேலே உள்ளவை, சாம்பிளுக்கு சில ஆதாரங்கள்.. அவசியப்பட்டால் இன்னும் அடுக்கடுக்காக தருவோம்.
இவைகளுக்கும், இனிமேல் நாம் தர இருப்பவைகளுக்கும் பதில் சொல்வதாக இருந்தால், நான் எடுத்து வைக்கும் எந்த ஆதாரத்தையும் விடாமல், அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

அடுத்து,

பித் அத் தின் அளவு கோல் எண்ணிக்கையில் உள்ளது என்பதற்கும் ஆதாரம் காட்ட வேண்டும் ?ஒரு நன்மையான காரிய்யதை ஒருவர் தனித்து செய்தாலும் பல பேர் சேர்ந்து செயதாலும் அது பித் ஆத் அல்ல என்பது தான் சுன்னத் ஜமாத்தின் கொள்கை உலக முஸ்லிம் மார்க்க அறிநர்களின் கொள்கையும் இது தான்


என்கிறீர்கள். பித் அத் என்றால் என்ன என்பதனை கடுகளவு கூட உம்போன்றவர்கள் புரியவில்லை என்பதற்கு இந்த வாதம் ஒரு உதாரணம்.

தனியாக ஒன்றை செய்யலாம் என்பதனால் அதை கூட்டாகவும் செய்யலாம் என்று சொல்லி விட முடியாது!!

மார்க்கம் ஒன்றை இப்படி செய் என்று சொன்னால் இப்படி தான் செய்ய வேண்டும்.
அப்படி செய் என்றால் அப்படி மட்டும் தான் செய்ய வேண்டும்.,
இப்படியும் செய்யலாம், அப்படியும் செய்யலாம் என்று மார்க்கம் அனுமதிக்கிற விஷயங்களில் மட்டும் தான் நாம் இரண்டு மாதிரியும் செய்ய வேண்டும்.
இது அடிப்படை!

உதாரணமாக, ஹஜ்ஜை தனியாகவும் செய்யலாம், கூட்டாகவும் நிறைவேற்றலாம் என்று மார்க்கம் அனுமதிதிருப்பதால், நாம் இரண்டு வகையாகவும் செய்கிறோம்.
ஸுபுஹ் தொழுகையை தனியாகவும் தொழலாம்,ஜமாதுடனும் தொழலாம்.
அதே சமயம், ஒரு நபிலான தொழுகையை தனியாக தொழுவதற்கு அனுமதி வழங்கியுள்ள மார்க்கம், ஜமாத்தாக தொழுவதற்கு அனுமதிக்கவில்லை.அனுமதிக்கவில்லை என்பதால் , நபிலான (நாமாக விரும்பி தொழும் தொழுகை) தொழுகைகளை கூட்டாக நாம் செய்யக்கூடாது!
வாருங்கள், நாம் அனைவரும் இன்று மாலை ஐந்து மணிக்கு ஆறு ரக்காதுகளை கூட்டாக தொழலாம் என்று அழைத்தால் அது பித் அத் !!
ஆக, தனியாக ஒன்றை செய்யலாம் என்பதனால் அதை கூட்டாகவும் செய்யலாம் என்கிற வாதம் அபத்தமானது, மார்க்க அடிப்படையில்லாதது !

இது போன்ற பித்அத்கள் உங்களை போன்றோருக்கு புரியாது என்பதை மேலும் உறுதி செய்கிற வகையில் உங்களது அடுத்த வாதம் அமைந்துள்ளது.

நன்மை கிடைக்கும் என்று எண்ணி இமாம் புஹாரி எழுதிய கிதாபை பல பேர் சேர்ந்து படித்தால் அது குர் ஹானுக்கு கொடுக்கும் மதிப்பை போன்று என்று குருவிர்களா


என்று கேட்கிறீர்கள்.
நிச்சயமாக !!
சட்டங்களை படித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அதை வாசித்தால் அதற்குரிய நன்மை கிடைக்கும்.
ஆனால், வெறுமனே அதை வாசித்தாலேயே நன்மை என்று எண்ணினால், அதை தனியாக அமர்ந்து வாசித்தாலும் பித் அத், கூட்டாக இருந்து வாசித்தாலும் பித் அத்!! எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!!!
நன்மை கிடைக்கும் என்று எண்ணி ஒரு நூலை ஓத வேண்டுமென்றால் அது குர் ஆன் மட்டும் தான். வரிக்கு வரி நன்மை என்பது குர் ஆனுக்கு மட்டும் தான்!
குர் ஆன் அல்லாத வேறொரு நூலுக்கும் அத்தகைய நன்மை கிடைக்கும் என்றால் அதற்குரிய ஆதாரத்தை தர வேண்டும்.

அடுத்து,
யார் வேண்டுமானாலும் குர்ஹனை தொடலாம் ஓதலாம் மாதவிடாய் பெண்கள் உள்பட என்று கூறும் உங்களுக்கு இதுவல்லாம் ஒரு பிரச்சன்னை கிடையாது .


பிணத்தை வணங்குபவர்களின் கூறுகெட்ட வாதங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் வாதம் இது!

இதற்கு பல மறுப்புக்களை கொடுத்து கேள்விகள் கேட்கலாம் என்றாலும், ஒரே ஒரு கேள்வியுடன் நிறுத்துகிறேன்.அவசியப்பட்டால் தனி தலைப்பில் இதை குறித்து பேசலாம்.

ஒரு காபிர் வந்து, உங்கள் குர் ஆனை வாசிக்க வேண்டும் என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

photocopy எடுத்து கொடுப்பேன் என்கிற உளறலான பதிலை தவிர வேறு அர்த்தமுள்ள பதில் ஏதாவது இருந்தால் சொல்லவும்..

அடுத்து,

மஸ்ஜித் நபவியில் ஒரு மின்பரை அமைத்து கொடுத்தார்கள் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் அதில் சதா சமயமும் புகழ்ந்தார்கள் சஹாப பெருமக்கள்


என்று சொல்லியுள்ளீர்கள்.

இதற்குரிய குர் ஆன், ஹதீஸ் ஆதாரத்தை தரவும். நபியை புகழ்வதற்காக ஒரு மிம்பரை அமைத்தார்கள் என்பதற்கும், சதா அங்கு புகழ் பாடல்களை படித்துக்கொண்டே இருந்தார்கள் என்பதற்கும் ஆதாரத்தை இங்கு பதியவும்..

அடுத்து,
26:224 வசனத்தின் முன்னால் சொல்லப்பட்டதையும் பின்னல் சொல்லப்பட்டதையும் சற்று ஓதி பார்த்து புரிந்து
கொள்ல்லுங்கள் அதில் குறிபிடுவது யாரை என்று.


என்று கூறி, நான் என்ன வாதத்திற்காக அந்த வசனத்தை சுட்டிக்காட்டினேனோ , அதை இன்னும் உறுதிப்படுதியுள்ளீர்கள், அல்ஹம்துலில்லாஹ்..
செத்து போன பிணங்களை கும்பிட்டு அப்பட்டமான இறை நிராகரிப்பில் ஈடுபடக்கூடியவர்களை அல்லாஹ் இவ்வாறு தான் முரண்பட செய்வான்!

பொய் பேசி திரிபவர்களையும், நபியின் மீது இட்டுக்கட்டக்கூடியவர்களை பற்றியும் பேசி வருகிற இறைவன், அவர்கள் ஒட்டுக்கேட்கக்கூடியவர்கள், அவர்கள் பொய்யர்கள் என்று சொல்லி விட்டு, அத்தகைய கவிபாடக்கூடியவர்களை பின்பற்றுபவர்கள் வழிகேடர்கள் என்று சொல்கிறான்.
சொல்லி விட்டு அடுத்த வரியில், இத்தகைய பொய்யர்கள் ஒவ்வொரு இடமாக சுற்றி திரிவதை நீர் பார்க்கவில்லையா? என்கிறான்.

மவ்லூத் குறித்து நான் எதை சொன்னேனோ, அதை அப்பட்டமாக மெய்ப்பிக்கும் வசனம் இது!! முன்னுள்ள மற்றும் பின்னுள்ள வசனங்கள் அதை இன்னும் உறுதி செய்கிறது!!


அடுத்து,
நீங்கள் கூறிய சிறுமியை கண்டித்த அந்த ஹதீஸின் அரபியையும் அந்த ஹதீஸின் முழு பாகத்தையும் வெளியுடுங்கள் உங்கள் முகத்திரை கிழித்து எறியப்படும் இன்ஷா அல்லாஹ்...


என்று கோஷம் போடுகிறீர்கள்.
..
புஹாரி 4001 இல் பதியப்பட்டுள்ள ஹதீஸ் இது..

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது.
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள் (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலஙகையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி/ எங்களிடையே ஓர் இறைத்தூதர் இரக்கிறார். அவர் நானை நடக்கவிருப்பதையும் அறிவார் என்று கூறினாள். உடனே நபி (1ல்) அவர்கள்/ இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல் என்று கூறினார்கள்.

முழு மொழியாக்கம் இது தான்.. இதிலுள்ள உண்மை நிலையை விளக்குங்கள்.

அரபி மூலம் தந்தால் தான் பதில் சொல்வேன் என்று அடம்பிடிக்க தேவையில்லை, மொழியாக்கத்தை நான் தந்து விட்டேன், ஹதீஸ் நூலையும், அதன் எண்ணையும் குறிப்பிட்டு விட்டேன், நான் மொழிப்பெயர்த்ததிலுள்ள தவறு எது என்பதை நீங்கள் சுட்டிக்காட்டினாலேயே போதும்!


இறுதியாக,

நாளை நடப்பதை நபிகள் நாயகம் அறிவார்கள் என்பதற்கு ஆயிரகணக்கான அதரங்களையும் நான் தர தயார் ..


ஆயிரக்கணக்கில் வேண்டாம், ஒன்றே ஒன்றாவது தாருங்கள் போதும்.
ஆனால், ஆதாரம் எப்படி இருக்க வேண்டும் என்றால், நபி (ஸல்) அவர்கள் எல்லா மறைவான விஷயங்களையும் அறிவார்கள் என்று சொல்லும் ஆதாரமாக இருக்க வேண்டும்.
அவர்களுக்கு தெரியாமல் எந்த மறைவான விஷயமும் கிடையாது, என்கிற வாசகத்தை காட்ட வேண்டும்..

இதை விட்டு, வெறுமனே, ஒரு சில மறைவானவற்றை அவர்கள் அறிந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் என்று சிலவற்றை நீங்கள் தருவீர்கள் என்றால், பல மறைவான விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளன என்பதற்கு நான் பல பல ஆதாரங்களை அடுக்குவேன். அவைகளுக்குரிய பதிலையும் நீங்கள் முறைப்படி சொல்லி, நாளை நடக்கிற எல்லா விஷயங்களையும் நபி (ஸல்) அவர்கள் அறிவார்கள் என்கிற உங்கள் வாதத்தை மெய்ப்பிக்க வேண்டியிருக்கும்!

மறைவான ஞானத்தை பற்றிய இறைவனின் வார்த்தை ஒன்றை இங்கு சுட்டிக்காட்டி காட்டி முடிக்கிறேன்..

(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால்நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.” (7 :188 )


என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல சொல்கிறான்.
மறைவானவற்றை நான் அறிபவனாக இருந்திருந்தால், என்னை தீங்குகளிலிருந்து தர்க்காதுக்கொண்டிருப்பேன், என்று அல்லாஹ் சொல்ல சொல்வதிலிருந்து, இறைவன் அறிவித்து கொடுத்த ஒரு சிலதை தவிர நபிக்கு வேறெந்த மறைவான ஞானமும் கிடையாது என்பது தெளிவாகிறது!

வஸ்ஸலாம்.

குறிப்பு : சுபுஹான மவ்லூதை படிக்கும் போது உங்களிடம் கேட்க நினைத்த ஒரு கேள்வி, இந்த முஹைதீன் மவ்லூத் என்று ஒன்று இருக்கிறதே, அதுவும் மார்க்கத்திற்கு எதிரானதல்ல, என்பது தான் உங்களது நிலையா?
என்பதை சொல்லி விடுங்கள். சுபுஹான மவ்லூதை போன்று அதிலும் பல குப்பைகள் உள்ளன.. அவற்றை கொஞ்சம் கிளறுவதற்கு வசதியாக இருக்கும்..









2011/9/11 FAIZAL.A <fasilmak@gmail.com>
- Hide quoted text -
கொள்கையில் உள்ளவர்கள். அப்படி எங்களுக்கு கொள்கை எல்லை என்று சொல்லுங்கள் கண்டிப்பாக ஆதாரம் தருகிரேன் .
ஒரு சஹாபி ஓதிய அதே மவ்லித்தில் உள்ள கருத்துகலை உள்ளடக்கி இன்னொரு சஹாபி ஓதியதற்கு ஹதீஸ் ஆதாரம் தர தயார் .

பதிமுன்று

நபியின் மரணத்திற்கு பிறகு, அவரை புகழ்வது என்பது, அவரது கட்டளையின் படி நமது வாழ்க்கையை அமைதுக்கொள்வதில் அடங்குமே தவிர, ஒரு புத்தகத்தை எழுதி வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட நாட்களில் கும்பலாக கூடி இருந்து அதை படிப்பதில் இல்லை.

பதில் - சஹோதர
ஆமாம் இதில் ஒரு வரி உண்மை உள்ளது என்னவென்றால் நபிகள் நாயகத்தை புகழ்வது என்பது அவரது கட்டளையின்படி
நமது வாழ்க்கையை அமைதுக்கொள்வதில் அடங்குமே என்று நீங்கள் குறுவது உண்மை தான் அதனால் தான் அவரின் வாழ்கையை நேரில் பார்த்த சஹாபாக்கள் நபியின் (ஸல்)கட்டளையின்படி அவருடைய ஹயத்திலும் அதற்கு பிறகும் நபிகள் நாயகம் (ஸல்)கட்டி தந்த படி நபியை புகழாந்தர்கள் அதை தான் இன்றும் சுன்னத் ஜமாத்தினர் செய்து வருகின்றனர் .அதுபோன்றே ஒரு நன்மையான காரியத்தை எழுதி வைத்து கொண்டு கும்பலாக குடி இருந்து அல்லது தனியாக இருந்து அதை படித்தால் அதன் மார்க்க தீர்ப்பு என்ன என்பதை நாசித் அவர்கள் கண்டிப்பாக விளக்கா வேண்டும் விளக்குவார அல்லது விலகுவார என்பதை பொருத்து இருந்து பார்போம் இன்ஷா அல்லாஹ்.

பதினான்கு
கவிதைகளையும் அதை பாடுபவர்களையும் அல்லாஹ் வெறுக்கிறான் 26:224 வசனத்தில்
கவிஞர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால் அதனுடைய பொருள், இவ்வாறு ஒரு கவிதை புத்தகத்தை வீடு வீடாக எடுத்து சென்று,அதை விடிய விடிய ஓதி, வயிற்ருப்பிழப்ப்பு நடத்துகிறார்களே அவர்கள் வழிகேடர்கள் என்பது தான்

பதில் - எ

பதில் என்ற பெயரில் நாசித் அவர்கள் மிகவும் அபத்தமான மிகவும் அறியாமையான சொற்களை உபயோகபடுத்தி உள்ளார்
26:224 வசனத்தில்
கவிஞர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால் அதனுடைய பொருள், இவ்வாறு ஒரு கவிதை புத்தகத்தை வீடு வீடாக எடுத்து சென்று,அதை விடிய விடிய ஓதி, வயிற்ருப்பிழப்ப்பு நடத்துகிறார்களே அவர்கள் வழிகேடர்கள் என்பது தான்
என்று சுயமாக இந்த வசனத்திற்கு உலகில் இது வரை எந்த மார்க்க அறினரும் ஏன் குர் ஹானுக்கு தப்பான பல அர்த்தங்களை தர்ஜிமவாக வெளியிட்ட திரு .P.J. அவர்களும் குட இது வரை தராத ஒரு விளக்கத்தை சுய சிந்தனையின் படி தந்து நாசித் அவர்கள் தனது இருப்பிடத்தை நபிகள் நாயகம் (ஸல்)எச்சரித்தபடி நரகத்தில் பதிவு செய்து கொண்டார் போலும் .
அல்லாஹ் பதுகப்பனாக ,ஆமீன்

நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள்
யாராவது குர்ஹான் இக்கு சுய சிந்தனைப்படி விளக்கம் கொடுத்தால் நரகத்தில் தன் இருப்பிடத்தை தேடி கொள்ளட்டும் (அல் ஹதீஸ்)

அன்பானவரே இது போன்ற தப்பான அர்த்தங்களை தயுவு செய்து இனி மேல் செய்யதிர்கல்
நீங்கள் மேற்சொன்ன வசனங்கள் எல்லாம் அணைத்து சஹாப பெருமக்கள் பார்த்த பின்பு தான் நபிகள் நாயகத்தை கவிதையாகவும் பாட்டு அகவும் புகழ்ந்தார்கள் நீங்கள் குறிப்பிடும் 26:224 வசனத்தின் முன்னால் சொல்லப்பட்டதையும் பின்னல் சொல்லப்பட்டதையும் சற்று ஓதி பார்த்து புரிந்து
கொள்ல்லுங்கள் அதில் குறிபிடுவது யாரை என்று. கவிதை ஸ்லத்தில் உள்ளதுதான் என்றும் இதை மார்க்கம் வகுத்துள்ள வரும்புக்குள் நின்று இவற்றை செய்லாம் என்று உங்களின் தலைவர் திரு P.J.அவர்கள் குறி உள்ளார்கள்தயவு செய்து அதேயேனும் பின்பற்றுங்கள்

பதினயந்து

நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு நேராக, அவர்களை சிறப்பித்து பாடும் போது, அது ஒரு மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அவர்களின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு!!

பதில் -

இதுவும் ஒரு உண்மைதான் அனால் அவர்களுக்கு நேராக மட்டும் அல்ல சஹாப பெருமக்கள் புகழ்ந்தது அவர்களின் மஸ்ஜித் நபவியில் ஒரு மின்பரை அமைத்து கொடுத்தார்கள் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் அதில் சதா சமயமும் புகழ்ந்தார்கள் சஹாப பெருமக்கள் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் அது நீங்கள் கூறியது போல அவர்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அவர்களின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு அனால் உங்களை போன்று அல்ல . அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு அவர்களின்
பிரிவின் பின்னாலும் தொடர்ந்தது இன்றும் உலகத்தில் உள்ள அணைத்து முஸ்லிம் நாடுகளிலும் மவ்லித் மிக பிரேமண்டமாக அந்த நாடுகளின் மார்க்க அறினர்களால் நடந்து கொண்டு தான் வருகிறது
இன்ஷா அல்லாஹ் தொடரும் ....

பதினாறு

அதை கூட, ஒவ்வொரு நபரும் தங்கள் தங்களுக்கு தோன்றிய வகையில் அவர்களாக தான் படுவார்கள். ஒருவர் பாடியதை குறித்து வைத்துக்கொண்டு, அதை ஒவ்வவொரு மாதமும் எல்லா சஹாபாக்களும் கூடி இருந்து படிக்கொண்டிருக்கவில்லை, மட்டுமல்லாமல், அவர்கள் பாடுவதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை நேரடியாக நபி(ஸல்) அவர்களே கண்டித்தும் விடுவார்கள்.
நாளை நடப்பதை அறிகிறவரே! என்று ஒரு சிறுமிக்கூட்டம் பாடிய போது, அதை கண்டித்துள்ளார்கள்.

பதில் -

நான் ஏற்கனவே கூறியது போல நீங்கள் சஹாபாக்கள் செய்தார்களா ,செய்ய சொன்னார்களா என்ற கேள்வியை இனி ஒரு போதும் கேட்க கூடாது காரணம் சஹாபகளை ஏன் அவர்களின் நிழலைகுடா தொட உங்களுக்கு அருகதை கிடையாது உங்களது துர் நாற்றம் பிடித்த சஹாபாகளை பின்பற்ற கூடாது என்ற கொள்கையை தூக்கி எறிந்த பின்பு எங்களை பார்த்து கேளுங்கள் நிச்சயம் ஆதாரம் தருவோம் சஹாபபெருமக்கள் மவ்லித் ஓதியதற்கு ..
அதுபோல சஹாபாக்கள் பாடியதில் தப்பு இருந்து அதை நபிகள் நாயகம் கண்டித்த ஒரு ஹதீஸை நீங்கள் காட்ட வேண்டும் கண்டிப்பாக காட்ட வேண்டும். நீங்கள் கூறிய சிறுமியை கண்டித்த அந்த ஹதீஸின் அரபியையும் அந்த ஹதீஸின் முழு பாகத்தையும் வெளியுடுங்கள் உங்கள் முகத்திரை கிழித்து எறியப்படும் இன்ஷா அல்லாஹ்...

குறிப்பு -

நாளை நடப்பதை அறிபவரே என்று கூறியதும் அந்த சிறுமியை கண்டித்ததாக கூறும் அந்த ஹதீஸை அரபியில் தந்தால் அதன் உண்மை விளக்கத்தையும் நாளை நடப்பதை நபிகள் நாயகம் அறிவார்கள் என்பதற்கு ஆயிரகணக்கான அதரங்களையும் நான் தர தயார் ..

பதினேழு -

மார்க்கத்திற்கு விரோதமான கருத்துக்களை கொண்டுள்ள ஒரு புத்தகத்தை தூக்கி செல்வது என்பது மார்க்கம் காட்டி தராத பித் அத்தாகும்!!
எல்லா பித் அத்களும் வழிகேடு!!

பதில் -

சஹோதர
இதுவும் ஒரு உண்மை தான் அனால் சிறு மாற்றம் நீங்கள் சொல்வது போன்று மார்கத்திற்கு விரோதமான கருத்துகளைதூக்கி செல்வது பித் அத்
அல்ல அதை பின்பற்றினால் பித் அத் என்பதில் எங்களுக்கு இந்த கறுத்து வேறுபாடும் இல்லை என்பது மட்டும் அல்ல மர்கதிற்ற்கு முரணான அணைத்து பித் அத்தும் வழிகேடு என்பதில் எங்களுக்கு துளி குட வேறுபாடு இல்லை .
சுபஹன மவ்லிதில் இந்த வரியும் குர்ஹான் ஹதீஸ் இக்கு முரணானது இல்லை அதனால் நீங்கள் சொல்வது எங்களுக்கு பொருந்தாது

குறிப்பு -

நான் முதலில் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை அதை மறந்து விட வேண்டாம்
கேள்வி - நடைமுறையில் இன்று உள்ள சுபுஹான மவ்லூத், ஒரு முஸ்லிமை காபிராக்கும் கருத்துக்களை கொண்டுள்ளது, ஆகவே இதை ஓதுவது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்பது எனது கருத்து.

என்று கூரிய நீங்கள் அதற்குரிய குர்ஹன் ஹதீஸ் ஆதாரத்தை தர வேண்டும்


கோவை பைசல்
09382222202




அன்பான சஹோதர
உங்களை இவ்வளவு முட்டாளாக நான் கருதவில்லை சரி உங்களின் ஒவ்வரு வரிக்கும் பதில் தருகிறேன் வாருங்கள்

முதலாவது,

ஆதாரம் என்பது குர் ஆனும், முஹம்மது நபியும் சம்மந்தப்பட்ட வஹீ தானே தவிர, வஹீக்கு சம்மந்தமில்லாத நபர்கள் அறிவிப்பவை ஆதாரமாகாது

பதில் - நபியின் வஹி மட்டும் தான் ஆதாரம் என்று நீங்கள் முடிவு எடுப்பதற்கு முதலில் குர்ஹன் ஹதீஸ் ஆதாரம் தர வேண்டும் ?

இரெண்டாவது
பதில் - அய்யோ பாவம் இந்த செய்தி இமாம் புஹாரிக்கும் இமாம் முஸ்லிம்(ரஹ்) போன்ற மேதைகள் விளங்காமல் சஹாபாக்கள் சொன்ன ஹதீஸ்களை அவர்களுடைய கிதாபுகளில் எழுதி விட்டார்கள் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சஹாபாகளை பின்பற்ற மாட்டார்கள்அனால் அவர்களுக்கு பின்னல் வந்த இமாம் புஹாரி,முஸ்லிம் ,
இப்னு மாஜா,பைஹகி,போன்றவர்கள் எழுதிய கிதாபுகளை பின்பற்றுவர்கள்.

ஹசான் (ரலி) அவர்கள் ஒன்றை அறிவிக்கிறார்கள் என்றால் அவருக்கு வஹீ கிடைக்காது. வஹீ என்கிற ஆதாரத்தை தாருங்கள், சஹாபிகள் சொல்லும் கருத்துக்களை அல்ல!

பதில் - இப்படி சொல்ல குர்ஹனிலும் ஹதீஸிலும் ஆதாரம் இருந்தால் தரவும் ?ஹதீஸ் கலை வல்லுனர்களிடம், சஹாபாக்கள் ஒரு செய்தியை அறிவித்தால் அதற்க்கு பெயர் என்ன ?அதை பின்பற்றலாமா ?

முன்றாவது

நபியை புகழ்வது நன்மையான விஷயம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை
அல்ஹம்துலில்லாஹ் நாசித் அவர்கள் கூறியதில் உள்ள ஒரு உண்மை இது மட்டும் தான்

நான்காவது

சுபுஹான மவ்லூதை ஓதுவதற்கு என்ன ஆதாரம்?

பதில் - நண்பரே
இது போன்ற கேள்வியை கேட்டல் நிச்சயம் அழகான பதில் கிடைக்கும் மவ்லித் என்ற சொல்லிற்கு அரபு மொழியில் பிறப்பு என்று பொருள் இஸ்லாமியர்கள் வழக்கில் நபிகளாரின் பிறப்பு மற்றும் சிறப்புகளை கவிநடையில் புகழ்வதற்கு மவ்லித் என்று கூறப்படும் .உலகில் உள்ள கோடானகோடி முஸ்லிம்கள் ஓதி வருகின்ற மவ்லிதிற்கு
குர்ஹனும் நபி மொழியும் சான்றாக உள்ளன . நபி (ஸல்)அவர்களின் பிறப்பை பற்றிய விவரங்கள் அவர்களின் மகத்துவங்கள் மற்றும் மாண்புகள் மவ்லிதில் கூறபட்டுஉள்ளன .இவற்றிற்கு சான்றாக குர்ஹன் அமைத்துள்ளது எநேன்றல் பல்வேறு நபிமார்களின் பிறப்பு பற்றி குர்ஹனில் தெரிவிக்கபட்டுள்ளது

உதரணமாக ;

மூஸா நபியின் பிறப்பு (அல்குர்ஹன் 28 : 7 )

யஹ்யா நபியின் பிறப்பு (அல்குர்ஹன் 19 : 7 ,15)

ஈஸா நபியின் பிறப்பு (அல்குர்ஹன் 19:19,33)

முஹம்மது நபியவர்களின் (ஸல்)அவர்களின் பிறப்பு (அல்குர்ஹன் 3:81 , 61:6) நாயகம் (ஸல்) அவர்களை குர்ஹனில் இறைவன் பல இடங்களில் புகழ்ந்து பேசுகிறான்
உதரணமாக ;
(நபியே )திண்ணமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருகிகிர்கள் (அல்குர்ஹன் 68:4)
நபியே உங்கள் மகிமையை நாம் உயர்த்தியுள்ளோம் (அல்குர்ஹன் 94: 4) நபியே அகிலாத்தற்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுபியுள்ளோம்
(அல்குர்ஹன் 21:107)
இது போன்ற எண்ணற்ற குர்ஹன் வசனங்களும் ஹதீஸ்களும் ஏராளம் அதன் அடிபடையில் உருவாக்கப்பட்டது தான் சுபஹன மவ்லித் .
சுபஹன மவ்லித் என்பது நபியை புகழ்வதற்காக உருவாக்கின ஒரு கிதாப் தான் .நான் ஏற்கனவே அனுப்பிய ஹதீஸில் உள்ளது நபியை புகழ்ந்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்று அதை நீங்கள் மறுத்தால் முதலில் நீங்கள் ஆதாரம் தர வேண்டும் நபிகளாரை புகழ கூடாது என்பதற்கு
ஐந்து
சினிமா பார்ப்பது தவறு என்பது எல்லாரும் ஒப்புகொள்வது.
அதே சமயம், சினிமா பார்ப்பது தவறில்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று ஒருவன் கேட்கும் போது, பாருங்கள், சினிமாவில் அம்மாவை புகழ்வது போல பாடல் இருக்கிறது, அம்மாவை புகழ்வது நல்லது தானே, ஆகவே சினிமா பார்க்கலாம், என்று ஒருவன் சொன்னால் அவனை என்னவென்று சொல்வீர்கள்?

அம்மாவை புகழ்வது நல்லது தான், அதற்காக வேறு வேறு அனாச்சாரங்களையும் தவறுகளையும் சேர்த்தே பெற்றுள்ள ஒரு வழி மூலம் தான் அம்மாவை புகழ வேண்டுமா? அம்மாவை புகழ வேறு வழியே இல்லையா? என்று கேட்ப்போம்.

பதில் - அன்பான நாசித் அவர்களே !

நீங்கள் மட்டும் அல்ல உங்களை போன்ற அணைத்து போலி தௌஹீது வாதிகளும் எப்படித்தான் யோசிபார்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் அதனால் தான் விவாதம் துவங்கும் முன்னால் ஒரு நிபந்தனை போட்டேன் அதை நிங்களும் ஒப்புக்கொண்டுதான் விவாதம் ஆரம்பித்தோம் தயவு செய்து விவாத ஒப்பந்தத்தை ஒரு முறை படியுங்கள் மீறி இது போன்ற உவமைகளை சொன்னால் P.J ஜெயலலிதாவையும் கருணாநிதியையும், இப்னுஅப்துல்வாஹாப் நஜ்தியய்யும் , S.M.பாக்கர் ,சைப்புல்லாஹ் காஜா,
T.M.M.K. போன்றவர்களை புகழ்ந்து மவ்லித் ஓதியதை நானும் மக்களுக்கு காண்பிக்க வேண்டியது வரும் வேண்டாம் நிறுத்தி அழகான முறையில் விவாதம் நடக்க ஒத்துழைப்பு தாருங்கள்.

ஒப்பந்தம்

4 , ஒரு காரணத்தை கொண்டும் நாட்டு நடப்பை காரணம் கட்டி ஒரு செயலை விமர்சிக்ககூடாது
5 , குரான் ஹதீஸ் மட்டும் ஆதாரம் வைத்து பேச வேண்டும்

ஆறு

நபியை புகழுவது நீங்கள் தனிப்பட்ட முறையில், உங்களுக்கு தோன்றுகிற முறையில் செய்கிற ஒன்று.
அதை தவிர்த்து , இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒருவனது நூலை வாசிப்பது தான் நபியை புகழ்வது என்று கருதுவது எந்த வகையில் இறைவனது பார்வையில் நியாயமாகும்?
அதிலும், பொருள் தெரியாமல் வாசிக்கும் பொழுது அதில் எத்தனை எத்தனை குபுறும் இறை மறுப்பும், நிறைந்துள்ளது என்பதை கூட அறியாமல் அதை படிப்பது எந்த வகையில் நியாயம்?

பதில் - என்று கேட்ட உங்களிடம்
எங்களது கேள்வி நீங்கள் ஏன் தனியாகவோ அல்லது குட்டகவோ நிங்களே குர்ஹன் ஹதீஸின் படி ஒரு புகழ்மலையை தயாரித்து அதை ஏன் ஓதுவதில்லை உங்களுக்கு அதுவெல்லாம் காரணம் கிடையாது நபிகளாரை புகழ்ந்தால் எப்படி முனாபிக்களுக்கு பிடிக்கதோ அது போன்றே உங்களுக்கும்.
நாங்கள் என்னவோ சுபஹான மவ்லிதின் அர்த்தம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் ஓதியது போலவும் இவர்கள் வந்த பின்பு தான் எங்களுக்கு அர்த்தம் தெரிந்தது போலவும் ஒரு மாயையை ஏற்படடுத்தி என்னமோ சுபஹன மவ்லித் மட்டும் தான் ஓத வேண்டும் வேற எப்படியும் நபியை புகழ வேண்டாம் என்று சொன்னது போல ஒரு மாயை ஏற்படுத்தி மக்களை வழிகேடுக்க பார்க்கிறார் ஒரு சவால் அகவே உங்களுக்கு கூறி கொள்ளவது என்னவென்றால் P.J. அவர்கள் சொல்ல்யபடி மவ்லித் பாட குடியவர்கள் தாங்களாக தினம் ஒரு கவிதையை இயற்றி அதன் பொருளை உணர்ந்து நபிகள்நாயகம் (ஸல்) அவர்களை புகழட்டும் இதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று கூறி உள்ளார் இதை நீங்கள் பின்பற்ற தயாரா ?அடுத்து இறைவனது பார்வை யில் ஏது சரி ஏது தவறு என்று முடிவு எடுப்பதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் ?

எழு

نْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

என்று ஒரு வரி உள்ளது , எல்லா படைப்புகளுக்கும் முஹம்மது நபி (ஸல்)தான் காவல் என்று அழைக்கும் வரி இது. பதில் - இதை பற்றி நீங்கள் இந்த கறுத்தும் சொல்ல வில்லை சொன்னால் இதற்கும் பதில் தர தயார்
குறிப்பு - (ஸல்) என்ற சொல் நான் சேர்த்து சொன்னது

எட்டு

நபியை புகழ்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கும் போது, இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட நபரால் எழுதப்பட்ட ஒரு நூலை அனைவரும் கூடி இருந்து வாசித்தால் அது தான் நன்மை என்று சொல்லும் போது, மேற்கூறிய இந்த வரியையும் சேர்த்தே படித்தால் தான் நன்மை என்பது தான் அதன் பொருளாகிறது.

பதில் -நபியை புகழ்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கும் பொது அதில் இந்த வழியையும் நீங்கள் பின்பற்றாதது ஏன் ?நபியை புகழ்வதற்கு அணைத்து வழிகளையும் பின்பற்றுபவர்கள் சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்த நங்கள்தான் .நீங்கள் குறுவது போன்று சுபஹன மவ்லிதில் உள்ள வரிகள் எதோ 200 ஆண்டுகளில் மட்டும் எழதிய வரிகள் அல்ல நபிகள் நாயகம் (ஸல்) காலம் தொட்டு என்று வரை சொல்லும் வரிகள் கியாமத் நாள் வரைக்கும் முஸ்லிம்கள் சொல்லுவார்கள் . சுபஹன மவ்லிதிலுள்ள அனைத்து வரிகளும் குர்ஹன் ஹதீஸ் இக்கு உட்பட்டதுதான்.

ஒன்பது
ஒரு வாதத்திற்கு, அந்த நூலில் எந்த தவறான கருத்துக்களும் இல்லை என்று கூட வைப்போமே, அப்போதும், ஒரு குறிப்பிட்ட நூலின் வரீகளை அனைவரும் குழுமி இருந்து வாசித்தால் நன்மை கிடைக்கும் என்று கூறுவது பித் அதா இல்லையா?
பதில் -சுபஹன மவ்லித் உதியவன் காபிர் என்று சொன்ன உங்களுக்கு ஒரு வாதத்திற்கு, அந்த நூலில் எந்த தவறான கருத்துக்களும் இல்லை என்று கூட வைப்போமே, என்று சொல்லும் அளவுக்கு உங்கள் கொள்கையில் இருந்து வெளியே உங்களை அறியாமல் சென்று விட்டிர்கள் அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் இது போன்று என்னும் தொடரும் .
ஒரு குறிப்பிட நூலின் வரிகளை பலபேர் சேர்ந்து வாசித்தால் நன்மை கிடைக்கும் என்று குறுவது பித் அத் என்றல் தனியாக வாசித்தல் பித் அத் இல்லையா என்ன? பித் அத் தின் அளவு கோல் எண்ணிக்கையில் உள்ளது என்பதற்கும் ஆதாரம் காட்ட வேண்டும் ?ஒரு நன்மையான காரிய்யதை ஒருவர் தனித்து செய்தாலும் பல பேர் சேர்ந்து செயதாலும் அது பித் ஆத் அல்ல என்பது தான் சுன்னத் ஜமாத்தின் கொள்கை உலக முஸ்லிம் மார்க்க அறிநர்களின் கொள்கையும் இது தான்

பத்து

அப்படியானால், குர் ஆனுக்கு இருக்கும் மதிப்பை நீங்கள் அந்த நபரின் நூலுக்கு கொடுக்கிறீர்கள் என்பது பொருள்!
இன்னும் சொல்வதானால், ஒரு நபரை புகழ்வது என்றால் என்ன? என்கிற அடிப்படையை புரியாததால் தான் இந்த குழப்பம்

பதில் - நன்மை கிடைக்கும் என்று எண்ணி இமாம் புஹாரி எழுதிய கிதாபை பல பேர் சேர்ந்து படித்தால் அது குர் ஹானுக்கு கொடுக்கும் மதிப்பை போன்று என்று குருவிர்களா அல்லது P.Jஎழுதிய நூலை படித்தாலும் குர்ஹானுக்கு கொடுக்கும் மதிப்பை போன்று தான் என்று குருவிர்களா இதை கூறினாலும் அதிசயம் இல்லை காரணம் யார் வேண்டுமானாலும் குர்ஹனை தொடலாம் ஓதலாம் மாதவிடாய் பெண்கள் உள்பட என்று கூறும் உங்களுக்கு இதுவல்லாம் ஒரு பிரச்சன்னை கிடையாது .
ஐயோ பாவம் ஒருவரை எப்படி புகழ்வது என்று சுன்னத் ஜமாஅத் க்கு பாடம் எடுக்க ஒரு நாசித் புறபடுகிறார் சஹோதர உங்களை போன்ற எததனை வஹ்ஹபிகள் வந்தாலும் எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை நங்கள் எங்கள் உயிரினும் மேலாக
புக
த்தான் செய்வோம் அதை கியாமத் நாள் வரை யாராலும் தடுக்க முடியாது.

பதினொன்று

நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில், அவர்களை புகழ்ந்து சில சஹாபிகள் கவிதை படித்து உள்ளார்கள்

பதில் -

அல்ஹம்துலில்லாஹ் இதுவும் ஒரு உண்மை
பனிரெண்டு

அது அவர்களுக்கு தோன்றிய சில வரிகள். ஒரு சஹாபிக்கு மனதினுள் ஒரு வரி தோன்றியது என்பதனால், அதே வரியை மனப்பாடம் செய்து வைத்து எல்லா சஹாபாக்களும் ஓதிக்கொண்டிருக்கவில்லை

  1. பதில்-
  1. polaநீங்கள் என்னவோ சஹாபாக்கள் செய்தது எல்லாம் செய்வதை பிதற்றுகிரிர்கள்
காரணம்
  1. உங்களின் வாதபடி
நீங்கள் சஹாபாக்கள் எதை செய்தாலும் அது நமக்கு மார்க்கம் அல்ல என்ற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக