வெள்ளி, 19 அக்டோபர், 2012

கமாலுதீன் மதனியிடம் நடித்தது சரியா?



களியக்காவிளை விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பேசுவதற்கு குறிப்பு தாருங்கள் என்று ஜாக்கின் கமாலுதீன் மதனியிடம் சுன்னத்(?) ஜமாத்தினரை போல் பொய்யாக பேசி நடித்தது மார்க்க அடிப்படையில் சரியா? என்று ஒரு சகோதரர் கேட்டுள்ளார்.


அல்லாஹ்வின் தூதர் தம்முடன் உபை பின் கப் (ரலி அவர்கள் வர, இப்னு சய்யாதை நோக்கி நடந்தார்கள் இப்னு சய்யாத், பேரீச்சம் மாற தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவனை கண்ட பிறகு, (தான் வருவது அவனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக) பேரீச்சம் மரத்தின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக்கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். அவன் ஏதோ போர்வையை போர்த்திக்கொண்டு வாயில் எதையோ முணுமுணு த்தவாறு  படுத்திருந்தான்.
சிறிது நேரத்தில் அவனுடன் இருந்த அவனது தாய் நபி (ஸல்) அவர்களை கண்டு கொண்டார். உடனே இப்னு சய்யாதை நோக்கி "இதோ முஹமமத்" என்றாள் . உடனே படுத்திருந்த இப்னு சய்யாத் குதித்தெழுந்து விட்டான்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நான் வருவதை தெரிவிக்காமல் அவனை அப்படியே அவள் விட்டிருந்தால் உண்மைகளை வெளிப்படையாக அவன் பேசியிருப்பான் என்று கூறினார்கள் 
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புஹாரி 3033


மேற்கண்ட ஹதீஸ், ஒரு நபரை பற்றியோ ஒற்று குழுவை பற்றியோ உண்மையான செய்தியை அறிந்து கொள்ள உளவாக மறைந்திருந்து செயல்படலாம் என்பதற்கு ஆதாரமாக அமைகிறது.

மற்றொரு சந்தர்ப்பத்தில் காபிர்களிடம் உண்மையை அறிவதற்காக தாமும் இஸ்லாத்தின் எதிரி போல காட்டிக்கொள்ளலாமா? என்று ஒரு சஹாபி அனுமதி கேட்ட பொது நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள் என்று புஹாரி 4037 ஹதீஸில் ஆதாரம் உள்ளது 

இந்த அடிப்படையில் எதிரிகளை வீழ்த்துவதற்காக மற்றும் அவர்களிடம் இருந்து உண்மையை பெறுவதற்காக மறைந்து செயல்பட நபி (ஸல்) அவர்களிடத்தில் முன் மாதிரி உள்ளது.


ஜாக் இயக்கம் செய்தது ஏகத்துவத்திற்கு எதிரான ஒரு காரியம். தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீதுக்கு எதிரான காரியங்களை  செய்துள்ள இவர்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வர, தாங்கள் சுன்னத் (?) ஜமாத்தினர் தான் என்று சொல்லி நடித்ததில் எந்த தவறுமில்லை ! அது தான் நபி வழி !!!!!






ஜும்மா உரைக்கு மிம்பர் கட்டாயமா?



ஜும்மா  உரையின் போது மிம்பர் கட்டாயமில்லை. 

நபி (ஸல்) அவர்கள் ஜும்மா உரையின் போது ஒரு பேரீச்சம் மரத்தின் மீது சாய்ந்து நின்றபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அன்சாரி பெண்மணி "அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் உங்களுக்கு ஒரு உரை மேடை (மிம்பர்) அமைந்து தரலாமா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் செய்து தாருங்கள்." என்று பதிலளித்தார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கு அந்த பெண்மணி மிம்பர் ஒன்றை அமைத்துக்கொடுத்தார்.
புஹாரி 3584


மேற்கண்ட ஹதீஸின் மூலம், ஜும்மாவின் போது மிம்பர் என்பது கட்டாயமாக்கப்பட்ட ஒரு காரியமல்ல , அது ஒரு கூடுதல் வசதிக்காக செய்து கொண்டது தான் என்பதை அறியலாம்.

மேலும், இன்று நாம் எதை மிம்பர் என்று விளங்கி வைத்துள்ளோமோ, எதை பயன்படுத்துகிறோமோ, அது போன்ற மிம்பரை நபி அவர்கள் பயன்படுத்தவில்லை. நபி அவர்கள் தொழுகை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு செயல் முறை பயிற்சி கொடுத்தது மிம்பரில் நின்று தொழுது காட்டி தான். இதற்கு வேறு ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

இன்று நாம் பயன்படுத்தும் மிம்பரில் ஒரு மனிதரால் நிற்க மட்டும் தான் இடமிருக்குமே தவிர நின்று தொழுவதற்கு இடமிருக்காது.
ஆக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிம்பர் என்பது ஒரு பெரிய மேடையாக இருந்தது. அதில் நின்று தொழுகை நடத்தும் அளவிற்கு அது பெரியதாக இருந்தது என்பதை அறியலாம். 
உயரமான இடத்தில நின்றால் மக்களுக்கு எளிதாக இருக்கும் என்கிற கூடுதல் வசதிக்காக தான் மிம்பரை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்த துவங்கினார்கள், அதற்கு முன் மிம்பர் இல்லாமல் தான் உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் தான் ஜும்மா உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதால் இயன்ற வரை நாமும் அதையே கடைப்பிடிப்போம் ஆனால் மிம்பர் வசதி இல்லை என்றல் அது தவறு என்று கருதி விட தேவையில்லை. மிம்பர் இல்லாத இடங்களில் வெறும் தரையில் நின்று கூட ஜும்மா  உரை நிகழ்த்தலாம் !!




வியாழன், 18 அக்டோபர், 2012

மார்க்கத்தில் ஹலால் - ஹராம்





மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றோ ஹராம் என்று சொல்வதானால் அதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  • மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள்
  • உலகம் சம்மந்தப்பட்ட விஷயங்கள்.

மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நாம் செய்ய நினைத்தால் மார்க்கத்தில் ஆதாரம் இருக்கிறதா, அதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்று மட்டும் தான் பார்க்க வேண்டும், மார்க்கத்தில் தடை இருக்கிறதா என்று பார்க்க கூடாது. இது இஸ்லாமிய பாடத்தில் அடிப்படையாக கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி.

உதாரணமாக, ரமளானில் நோன்பு வைக்க வேண்டும் என்று ஒருவர் சொன்னால் அவரிடம், இதற்கு குர் ஆன் ஹதீஸில் எங்கே அனுமதி உள்ளது என்று கேட்க வேண்டும். அனுமதி இருந்தால் செய்ய வேண்டும், அனுமதி இல்லை என்றால் செய்ய கூடாது. அதே போன்று ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதன் ஏழாம் பிறை அன்று நான்கு ரக்கத்துகள் கூடுதலாக தொழ வேண்டும் என்று ஒருவன் சொன்னால் அவரிடம், இதை அனுமதிக்கும் சட்டம் ஏதேனும் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்க வேண்டும். இதற்கு தடை எதுவும் இருந்தால் காட்டுங்கள் என்று கேட்க கூடாது. காரணம், ரஜப் மாதம் ஏழாம் நாள் தொழ கூடாது என்று எந்த ஹதீசும் இருக்காது ! தொழ வேண்டும் என்றால் தொழுங்கள் என்று இருக்கும். தொழ கூடாது என்றால் எதுவுமே சொல்லப்பட்டிருக்காது. எதுவுமே சொல்லப்படவில்லை என்றால் அதை மார்க்கம் என்கிற பெயரில் செய்ய கூடாது என்பது பொருள்.
மார்க்க விஷயங்களை மேலே உள்ளது போல புரியாமல் நேர் முரணாக புரிவதால்  இன்று நம் சமூகத்தில் பல பித்அத்கள் புகுந்துள்ளன. மார்க்கம் என்கிற பெயரில் எதையாவது செய்ய வேண்டியது, கேட்டால்  இப்படி செய்யக்கூடாது என்று இஸ்லாம் தடுத்துள்ளதா என்று கேட்க வேண்டியது. இது தான் குழப்பங்களுக்கு முதல் காரணம் !


அதே போல, உலக விஷயங்களை பொறுத்தவரை அப்படியே மாற்றி சிந்திக்க வேண்டும்.
அதாவது, ஒன்று கூடுமா கூடாதா என்பதை தீர்மானிக்க குர் ஆன் ஹதீஸில் அனுமதி இருக்கிறதா என்று தேடாமல், இதற்கு தடை இருக்கிறதா என்று மட்டும் பார்க்க வேண்டும். 

உதாரணமாக விமானத்தில் பயணம் செய்யலாமா, மார்க்க அடிப்படையில் விளக்கவும், என்று ஒருவர் கேள்வி கேட்டால், விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று அனுமதியளிக்கிற வகையில் குர் ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ இருக்கும் என்று தேடிக்கொண்டிருக்க கூடாது, 
மாறாக, விமானத்தில் பயணம் செய்வது ஹராம் என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று மட்டும் தேட வேண்டும். எங்குமே ஹராம் என்று சொல்லப்படவில்லை என்றால் விமானத்தில் பறக்கலாம், தவறில்லை என்று பதில் சொல்ல வேண்டும்.

இது தான் மார்க்கத்தின் ஹராம் ஹலால்களை அளக்கும் முறை !

இது படிப்பதற்கு எளிமையான ஒன்றாக இருந்தாலும் இதை கூட சரியாக புரியாத பல சகோதரர்கள் இருக்கின்றனர். பித் அத்கள் களையப்பட வேண்டுமானால் இந்த அடிப்படையை மனதில் உறுதியாக்கி கொள்ள வேண்டும் !!
அல்லாஹ் அருள் செய்யட்டும் !!!








வெள்ளி, 12 அக்டோபர், 2012

சஹாபியின் அறிவுரையையாவது கேளுங்கள்




அஸ்ஸலாமு அலைக்கும்..

மார்க்கம் சம்மந்தமாக, ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை ஒரு பக்கம் இருக்க, உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்கள் போன்றோர், ரசூல் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பின்னர் சில சட்டங்களை மாற்றுகின்றனர்.

சில சட்டங்கள், அவர்களது கவனக்குறைவாலும், ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீதை சரி வர அறிந்து கொள்ளாததாலும் அவர்களால் மாற்றமாக அறிவிக்கப்படுகிறது.

இன்னும் சில சட்டங்களை, சில காரணங்களை கூறி, வேண்டுமென்றே கூட மாற்றுகிறார்கள். (உதாரணம், முத்தலாக், ஜும்மாவிற்கான பாங்கு..)

இவ்வாறு, ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் மாற்றம் செய்யப்படும் போது, மாற்றம் செய்தது நம்மை விடவும் மேலான சஹாபாக்கள் தான் என்றாலும், ரசூல் (ஸல்) அவர்களின் சட்டம் தான் நமக்கு பெரிது என்று சஹாபாக்கள் அறிவிக்கும் சட்டங்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது என்று கூறி வருகிறோம்.

ஆனால், இன்றும், ஜும்மாவுக்கு பாங்கு சொல்லும் விஷயத்தில், சஹாபாக்களின் முறையே பல ஜமாத்களில் பின்பற்றப்படுகிறது.
அதற்கு ஆதாரம் கேட்டால், உஸ்மான் (ரலி) அவர்கள் இவ்வாறு தானே செய்திருக்கிறார்கள், என்று கூறுகிறார்கள். ரசூல் (ஸல்) இதற்கு மாற்றமாக அல்லவா செய்திருக்கிறார்கள்? என்று இவர்களிடம் திருப்பி கேட்கும் போது மௌனமாகி விடுகிறார்கள்.
இவர்களது இந்த மௌனம், ரசூல் (ஸல்) அவர்களை விட உஸ்மான் (ரலி) அவர்களை சிறந்தவாரகவும் மேலானவராகவும் இவர்கள் கருதுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டி விடுகிறது. 

இவர்களது இத்தகைய நம்பிக்கைக்கு நாம் பதில் கூறுவதை விட, சஹாபி ஒருவரே (உமர் (ரலி) அவர்களின் மகன்! ) பதில் கூறியிருக்கிறார். 

இவர்களது இந்த கொள்கைக்கு வேட்டு வைக்கும் ஹதீஸ் இங்கு தரப்பட்டுள்ளது!

தமத்து ஹஜ்ஜ் பற்றி அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடம் ஒரு சஹாபி விளக்கம்கேட்டார். "அது அனுமதிக்கப்பட்டது தான்", என்று அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள்பதில் தருகிறார்கள். 
அதற்கு அந்த சஹாபி, "உங்கள் தந்தை (உமர் அவர்கள்) , அதை கூடாது என்று சொல்லியிருக்கிறார்களே?", என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லா பின் உமர் அவர்கள், ""என் தந்தை ஒன்றைதடுத்திருக்கிறார்கள், ரசூல்(ஸல்) அவர்கள் அதை செய்திருக்கிறார்கள் என்றால்எனது தந்தையின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா அல்லது ரசூல் (ஸல்)அவர்களின் கட்டளையை பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல்"",என்றார்கள் .
அதற்கு அவர், ரசூலை தான் பின்பற்ற வேண்டும் என்றார்கள். உடனே இப்னு உமர்அவர்கள், தமத்து ஹஜ்ஜ் அனுமதிக்கப்பட்டது தான் என்று கூறினார்கள். (திர்மிதி 753 )




சனி, 6 அக்டோபர், 2012

மூளை வரண்டது யாருக்கு??






அஸ்ஸலாமு அலைக்கும்..

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதை மறுக்க இயலாத கூட்டத்தினர், நாளின் துவக்கம் பஜர் என்று பிஜே சொன்னதாக எடுத்துக்காட்டி தங்கள் கொள்கையை நிரூபிக்கக் பாடுபடுகிறது.. இது பற்றி சகோ. பிஜே எழுதிய ஆக்கம் ஒன்றுக்கு (பார்க்க http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/nalin_aramabm_fajru_enru_pj_sonnara/) பிஜேவிற்கு மூளை வரண்டது என்கிற தலைப்பில் 
மறுப்பு ஆக்கம் ஒன்றை தயார் செய்து பரப்பியது இந்த குழப்பவாதி கூட்டத்தினர். 

கண்ணாடியின் முன்னின்று தனது கோர முகத்தைப் பார்த்துவிட்டு ஹிஜ்ரி கமிட்டியினரும் தன்னைப் போன்றுதான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்மை இழிவுபடுத்தியிருப்பது  கண்டு பரிதாபப்படுகிறோம். அவருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  

என்று துவங்கியுள்ளனர். . ஹிஜ்ரா கமிற்றியினர் தன்னை போன்று தான் இருப்பார்கள் என்று சகோ. பிஜே மட்டுமல்ல, மானமுள்ள எந்த மனிதனும் நினைக்க மாட்டான். ஆறறிவு படைத்த, வெட்கமும் மானமும் சிறிதேனும் பெற்றுள்ள எவருமே ஹிஜ்ரா கமிட்டியை போல தான் தானும் இருக்கிறோம் என்றோ தன்னை போலதான் ஹிஜ்ரா கமிற்றியினர் இருக்கிறார்கள் என்றோ கனவிலும் எண்ண மாட்டான். அது தமக்கு அசிங்கம் என்பதை அனைவருமே அறிந்து தான் வைத்துள்ளனர்.

இந்த ஹிஜ்ரா கமிற்றி விவாத பூச்சாண்டி காட்டி, எதிர் பாரா விதமாக தங்கள் விவாத அழைப்பை பிஜே ஏற்றுக்கொண்ட உடன் செய்வதறியாது திகைத்தும்,அதற்கு முன், நேரடி விவாதம், நேரடி விவாதம், இதோ வந்து விட்டோம், பிஜே பதில் சொல்வது ஒன்று தான்   பாக்கி என்கிற அளவிற்கு பீலா விட்டவர்கள், பிஜே விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்த பிறகு, எழுத்து விவாதத்திற்கு தான் அழைத்தோம், நீங்கள் ஒரு ஆறு மாத காலம் எழுதிக்கொண்டே இருங்கள், நாங்கள் ஒரு ஆறு மதம் நான்கைந்து நூற்களை வெளியிடுகிறோம், அதற்கு மறுப்பு நூல், இதற்கு மறுப்பு நூல் என்று எழுதி தள்ளுவோம், இறுதியில் யார் சொல்வது சரி என்பதை மக்கள் புரிவார்கள் என்கிற உலக மகா அறிவார்ந்த சித்தாந்தத்தை முன் வைத்தார்கள். இவர்களது அறிவு திறனையும் கூர்மையான சிந்தனையையும் கண்டு அப்போதே இங்குள்ள பல சகோதரர்கள் வியந்து பாராட்டினர். நோபல் பரிசுக்கு ஏன் இன்னும் இவர்களை பரிந்துரைக்கவில்லை என்று பலரும் கேட்கிற அளவிற்கு இந்த அந்தர் பல்டியின் மூலம் இவர்களது புகழ் தெரு முனைகளிலும் எதிரொலித்தது.

கடந்த காலங்கள் பலருக்கும் மறந்திருக்கும் என்பதால், இவர்களை பற்றியும், இவர்கள் அடித்துள்ள அந்தர் பல்டிகளை பற்றியும், நோபல் பரிசுக்கு இவர்களை பரிந்துரைக்கும் அளவிற்கு இவர்கள் செய்த அறிவார்ந்த சாதனைகளை பற்றியும் கீழே உள்ள சுட்டிகளில் நினைவூட்டுகிறோம். ஒவ்வொரு ஆக்கமாக படித்து, இவர்களிடம் விவாதம் என்றில்லை, சாதாரணமாக பேசுவதற்காவது இவர்கள் தகுதி படைத்தவர்கள் தானா? என்பதை சிந்தியுங்கள்.

ஹிஜ்ரா கமிட்டியின் அந்தர் பல்டி 

பிஜேயுடன் நேரடி விவாதம் செய்ய போகிறோம் என்று கூறி நம்முடனான எழுத்து விவாதத்தை தொடராமல் தப்பி ஓடி விட்டு இறுதியில் பிஜெயுடனும் நேரடி விவாதம் செய்யாமல் அங்கேயும் நழுவி ஓடிய ஹிஜ்ர கமிட்டியினரின் மெய் சிலிர்க்கும் சாகசங்களை நாள், தேதி, ஆதாரத்துடன் காண.. 






விவாதத்தை கண்டு அரண்டு போய் இருந்தாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை பார்த்தீர்களா என்கிற ரேஞ்சுக்கு இவர்கள் விட்ட பீலாவை பற்றி அறிய கீழே விழுந்தாலும் மீசையில்...

எழுத்து விவாத சவடாலும் நாறி போய் விட்ட நிலையில், சில உப்பு சப்பில்லாத கேள்விகளை நோட்டீஸ் என்கிற பெயரில் இவர்கள் ஊர் ஊராக பரப்பதுவங்கினர்.
நம் தரப்பில் அதற்கும் தெளிவான மறுப்புகள் தரப்பட்டன .. அதை காண 


முன்னர் நம்முடன் இவர்கள் பிறை விஷயத்தில் செய்த விவாதத்தின் போது நாம் எடுத்து வைத்த கேள்விகள் இவற்றுக்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லாமல் நழுவியுள்ளார்கள் என்கிற பட்டியலை ஏற்கனவே தொகுத்து வைத்திருந்தோம்.
அதை காண 




நாம் முன்வைத்த பிறை குறித்த ஆதாரங்களை காண பிறை : ஒன்பது ஆதாரங்கள்

பிறை குறித்த இவர்களது வாதங்கள் எந்த அளவிற்கு கூறு கெட்டத்தனமாகவும் சிந்தனை மழுங்கலாகவும் உள்ளன என்பதையும் பற்றி விரிவாக அறிய 



ஹிஜ்ரா கமிட்டி என்கிற அதிமேதாவி கூட்டம் தங்களுக்கு தாங்களே முரண்பட்டுக்கொண்டதை  பற்றி அறிய 





எழுத்து விவாதத்தின் போது இவர்கள் முழுக்க முழுக்க பொய்களை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை அடுக்கடுக்கான காண  பொய்யை மூலதனமாக கொண்ட ஏர்வாடி JAQH

எவ்வளவு தான் முரண்பட்டு பேசினாலும், எத்தனை கேள்விகளுக்கு தான் பதில் சொல்லாமல் நழுவினாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்ய அழைக்கிற போது குட்டு வெளிப்பட தான் செய்யும். அதற்கு சான்றுகளை காண..


இவரை அறிந்து கொள்ளுங்கள்

சரி, அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, விவாதம் என்றாலே அது முகத்தோடு முகம் காணும் நேரடி விவாதம் என்று தான் எல்லாரும் நினைப்பார்கள் என்றிருக்கும் போது, இந்த ஹிஜ்ரா கமிட்டே மட்டும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்களே என்று அதற்க்கான காரணத்தை சிந்திக்கையில் சில உண்மை காரணங்கள் கிடைக்க துவங்கின..

இதை படிக்கவும்.. ஏர்வாடி சிராஜும் எழுத்து விவாதமும்

ஆக, உண்மைக்கும் இவர்களுக்கும் வெகு தொலைவு என்பதை கடுகளவு சந்தேகமும் எவர் மனதிலும் எழாத வண்ணம் மேலே உள்ள ஆக்கங்கள் உறுதி செய்கிறது.

இப்படி பட்ட அதிமேதாவிகள் தான் சகோ. பிஜேவை மீண்டும் எழுத்து விவாதத்திற்கு அழைக்கிறார்களாம். வெட்கம் என்பது சிறிதளவாவது இருந்தால் இவர்களும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கொஞ்ச நஞ்சமும் சிந்திக்க வேண்டும்.

சங்கைக்குரிய மலக்குகள் முதல் கண்ணியத்திற்குரிய நபிமார்கள் உட்பட  இறைபொருத்தம் பெற்ற ஸஹாபாக்கள்வரை தனது வன்மப் பேச்சுக்களால் அவர்களை சிறுமைப்படுத்தி இழிவுபடுத்தியவர்தான் இந்த பீஜே என்பதும், தனது கோரசிந்தனையின்  உச்சகட்டமாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனாம் அல்லாஹ்வின் சிஃபத்துகள் மீதே கைவைத்து வல்ல அல்லாஹ்வையே கேவலப்படுத்தியவர்தான் இந்த பீஜே என்பதையும் தமிழ்பேசும்  முஸ்லிம்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். 
என்று சொல்கின்றனர். அடுக்கு மொழியில் எதையாவது சொன்னால் கை தட்டி விசில் அடிப்பதற்கு பொது மக்கள் இவர்களை போல கூத்தாடிகள் அல்ல.
எதை சொன்னாலும் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும் என்கிற அடிப்படை இவர்களிடம் எதிர் பார்க்க கூடாதது தான்!


அல்லாஹ் தஹஜ்ஜத் வேளையில் அடிவானத்திற்கு இறங்குகிறான் என்ற விஷயத்தை பற்றி பேசும்போது அல்லாஹ் அப்படி  இறங்கினால் அர்ஷ் காலியாகிவிடும் என்று கூறியவர்தானே இந்த பீஜே. 

இன்னும் மலக்குகள் அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்கள்,  நபி தாவூது (அலை) அடுத்தவரின் நிலத்தை அபகரித்து இருக்கக் கூடும்,  குர்ஆனின் வசனங்களில் நிச்சயமாக என்ற பொருளைத்தரும் வாசகங்கள் வெறும் அரபுபேச்சு வழக்குகள்தான் அதை மொழி பெயர்க்கத் தேவையில்லை, சுவர்க்கம் நரகம் படைக்கப்படவில்லை, அவ்வாறு படைக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு உதாரணத்திற்கு படைக்கபட்டது தான், அந்த சுவர்க்கமும் அழிந்துவிடும். காரணம்(குல்லு மன் அலைஹா ஃபான்) 55:26-27 வசனங்களில் அல்லாஹ்வின் முகத்தைத் தவிர அனைத்தும் அழிந்து போகக்கூடியதே என அல்லாஹ் கூறுகின்றான், என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தனக்கு மூளை வரண்டுவிட்டது என்பதை தெளிவாக நிரூபித்தவரே இந்த பீஜே. 
தஹஜ்ஜத் வேளையில் அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள் இறங்குகிறது என்பதை தவிர வேறு பொருள் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவான ஒன்று. அது போல, "நிச்சயமாக" என்கிற வாசகம் அரபு பேச்சு வழக்கு தான். சகோ. பிஜே மொழியாக்கம் செய்ததில் நிச்சயமாக என்பதை விட்டு விட்டதை போல எல்லா மொழிப்பெயர்ப்பாளர்களும் பல வசனங்களில் நிச்சயமாக என்பதற்கு மொழியாக்கம் செய்யவில்லை. பிஜேவை பற்றி மட்டும் பேசுகிறவர் திராணி உள்ளவராக இருந்தால் அனைத்துமே தவறு என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? 
சொர்க்கம் அழிந்து விடும் என்பதையோ, தாவூது நபி பற்றியோ எதை சொல்வதாக இருந்தாலும் அப்படி இல்லை என்பதை ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். ஆதாரத்திற்கும் இவர்களுக்கும் இடையில் தான் ஏணி வைக்க வேண்டுமே.. அப்போதும் எட்டுமா என்பது சந்தேகமே !!

விவாதம் நடத்தி அந்த சிடிக்களை விற்று மார்க்க பிழைப்பு நடத்தும் பீஜே2000 ஏர்வாடி பிறை விவாத சீடியை வெளியிடாமல் மறைக்கும் அளவிற்கு அவரை அல்லாஹ் கேவலப்படுத்தினான் 

சாதாரண பாமரர்களுடன் எழுத்து விவாதம் செய்வதற்குள் விழி பிதுங்கி ஓட்டம் எடுத்த வெட்கமில்லா கூட்டம், தவ்ஹீத் ஆலிம்களுடன் விவாதித்து வெற்றி பெற்றார்கள் என்று வெட்கமே இல்லாமல் அறிவிப்பு செய்கின்றனர். தமக்கு கேவலத்தை தந்த விவாதத்தையும் ஒருவர் மறைக்கலாம், என்பது போல, எந்த உப்பு சப்பும் அற்ற , உளறல்களையே வாதங்களாக வைத்திருந்த ஒருவரருடன் செய்த விவாதத்தை அதன் காரணமாகவும் மறைக்கலாம். இரண்டில் எது என்பது விபரமுள்ளவர்களுக்கு தெரியும்.

மேலும், 2000  ஆம் ஆண்டில் நடந்த விவாதத்தின் போது இவர்கள் பிஜேவிடம் ஜெயித்தார்களாம். வேடிக்கை என்ன தெரியுமா? அன்றைக்கு இவர்கள் இருந்த கொள்கை பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்கிற கொள்கையில்.
இப்போதோ அது தவறு , கணிக்க தான் வேண்டும் என்று தாவிக்கொண்டவர்கள் !!.
அதாவது, இன்றைய நிலையில் இவர்களது பார்வையில் பிறையை கண்ணால் காண்பது தவறு !
ஆனால் அந்த தவறான வாதத்தை விவாதத்தின் போது எடுத்து வைத்து பிஜேவிடம் ஜெயித்து விட்டார்களாம். எப்படி வேடிக்கை !! ஆக, இவர்களது கொள்கை என்பது பிறையை கண்ணால் பார்க்க வேண்டுமா இல்லையா என்பதல்ல, பிஜேவை வெற்றி கொண்டோமா இல்லையா என்பது தான்.

பிஜே எங்களிடம் தோற்றார் என்று சொல்ல வேண்டுமா? தர்க்க போவது தான் சரி என்று நாங்கள் பேசினோம், கூடாது என்று பிஜே பேசி எங்களுடன் தோற்று விட்டார் என்று கூட பேசுவார்கள் போலும். அட வெட்கமில்லாதவர்களே !!!! இப்படியுமா ஒரு அற்ப சந்தோஷம்?
அந்த விவாதம் ஆரம்ப கால தவ்ஹீத் அகோதரர்கள் அனைவருக்கும் இன்னமும் நினைவிலுள்ள ஒன்று. விஞ்ஞான கணிப்பின் பக்கமும் உலகப்பிறை என்கிற தவறான சித்தாந்தத்தின் பக்கமும் செல்லவிருந்த பெருவாரியான மக்களை தடுத்தி நிறுத்திய விவாதம் அது ! சிந்திப்பவர்கள் இதை புரிந்தே தான் உள்ளார்கள் !!


அல்லாஹ்வை எத்தகைய பலஹீனமும் அற்றவன் என்று நம்புவது முதல் அவனது மலக்குமார்களை, வேதங்களை,ரஸூல்மார்களை நம்பவேண்டிய அடிப்படையில் நம்புவது உட்பட ஜக்காத் போன்ற இஸ்லாமிய அடிப்படை விஷயங்கள் வரை ஆட்டம் கண்டுவிட்ட இந்த பீஜேயிடம் விவாதித்துதான் நமது பிறை நிலைபாட்டை நிலை நாட்டிடவேண்டும் என்ற நிர்பந்தம் முஸ்லிம்களாகிய நமக்கு இல்லை

அல்லாஹ்வுக்கு பலகீனம் உண்டு என்று பிஜே சொன்னதாக மறைமுகமாக சொல்கின்றனர். பிஜே உண்மையில் என்ன சொன்னார்? எப்படி சொன்னார்? அவர் பேசிய வாசகம் என்ன? என்பதை ஆதாரத்துடன் தருமாறு கேட்டால் தருவதற்கு முதுகெலும்பு இருக்குமா இவர்களுக்கு? சிறு பிள்ளையும் சொல்லும், இருக்காது என்று !
மேலும், ஜகாத் குறித்த விவாதத்தில்  இவர்களது இயக்க தலைவர்கள் பம்மிக்கொண்டு மேடையில் ஒளிந்துக்கொண்டிருக்க, யாரென்றே அறியப்படாத ஒரு அப்பாவியை விவாதிக்குமாறு மேடையேற்றி இவர்கள் நடத்திய கண்ணாமூச்சி ஆட்டத்தை அனைவரும் அறிந்துள்ளனர்.

இப்போது இங்குள்ள விஷயம், நாளின் துவக்கம் பஜர் தான் என்று பிஜே சொல்லி விட்டாராம். அட என்ன ஆச்சர்யம், பிஜே ஒப்புக்கொண்டு விட்டாரா? இவர்கள் எடுத்து வைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தையும் பிஜே ஏற்றுக்கொண்டு விட்டாரா? பரவாயில்லையே..
என்று நாமும் எட்டிப்பார்த்தால், 
லுகர், அசர், மக்ரிப், இஷா என்று சொல்லி விட்டு மறுநாள் பஜர் என்று பிஜே சொல்லி விட்டாராம்.

இது தான் பிஜே இவர்களது உலக மகா கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டதற்கு இவர்கள் காட்டும் மேதாவித்தனமான ஆதாரம்.

அட ஞான சூனியங்களே..
கூறு கெட்டவர்கள் இப்படி சிந்தித்து விடக்கூடாது என்பதற்காக, ""மறுநாள்"" என்பதை பிஜேவே மாற்றியும் விட்டார். ஒரு இரவை கடந்து பகல் வரும் போது அதை மறுநாள் என்று சொல்லும் வழமை நம்மிடம் உள்ளது. அந்த வழமைக்கு ஏற்ற வகையில் பிஜே சொன்னது தான் மறுநாள் பஜர் என்பதே தவிர, ஹதீஸில் மறுநாள் பஜர் என்று இல்லை.

ஆனால், நாளின் துவக்கம் பஜர் இல்லை, அது மக்ரிப் தான் என்பதற்கு பிஜே அடுக்கடுக்காக பல சான்றுகளை தந்திருந்தாரே, பதில் என்று சொல்வதாக இருந்தால் அவற்றுக்கல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

இதை பார்க்கவும்.  http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/361/
இதையும் பார்க்கவும் http://onlinepj.com/kelvi_pathil/nonbu_kelvi/nalin_armbam_ethu/
இதையும் பார்க்கவும் http://nashidahmed.blogspot.com/2012/08/blog-post_9.html

இவைகளுக்கெல்லாம் ஏதாவது பதில் இருக்கிறதா இந்த மேதாவிக்கூட்டத்திடம்? இல்லை !!

ஆக, ஆதாரங்கள் எங்கெல்லாம் காட்டப்படுகிறதோ, அதன் பக்கம் தலை வைத்து கூட படுக்க துணியாதவர்கள், பேசும் போதும் எழுதும் போதும் ஏதாவது தவறுதலாக சொல்லப்படுமே அதை மட்டும் பற்றிப்பிடித்து , ஹே ! பார்த்தியா நீயும் ஒதுக்கிட்டே.. என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடுகிறது !

மறுநாள் பஜர் என்று பிஜே சொன்னது நடைமுறையில் இரவுக்கு பின் வரக்கூடிய விடியலை மறுநாள் என்று சொல்வது தான் வழக்கம் என்பதால் தான். இதை வைத்து ஒரு குழப்பம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பதால் அந்த வாசகமும் கூட தற்போது நீக்கப்பட்டு விட்டது.
மறுநாள் என்பது ஹதீஸில் இல்லாத வாசகம் தான் என்பதால் அதை நீக்குவது தான் சரியும் கூட.

ஆக, இவை அனைத்துமே இவர்களது சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுக்கு உதவும் என்பதை தவிர, இது போன்றவைகள் இவர்களது கொள்கையை தூக்கி நிறுத்துவதற்கோ இவர்களை அறிவாளிகளாக காட்டுவதற்கோ என்றைக்கும் உதவாது !

சமுதாயம் இது போன்ற கூறு கெட்ட கூட்டத்தாரை அறிந்து வைத்து, இவர்களது வாடை கூட அடிக்கா வண்ணம் நம்மையும் நம் சுற்றத்தையும் காக்க வேண்டும்.

அல்லாஹ் அருள் புரிவானாக..

வஸ்ஸலாம்.


வெள்ளி, 5 அக்டோபர், 2012

தர்கா கட்ட ஆதாரம்




 

அப்துல் வஹாப் ஷராணி என்பவர் சுன்னத் (?) ஜமாத்தினரால் பெரிதும் பதிக்கபப்டும் ஒரு அவ்லியா (?).
மார்க்க பத்வாக்கள் கொடுக்கும் போது இவரது கருத்துக்களை மேற்கோள் காட்ட மறக்க மாட்டார்கள் என்கிற அளவிற்கு, இவரது கருத்துக்கள், இவரது புகழ் (?), சுனஜன மத்தியில் மிக பிரபலம். 
ஷராணி என்பவர் எழுதியுள்ள நூல்கள் இன்றளவும் இந்த சுனஜன மதரசாக்களில் வைக்கப்பட்டுள்ளன.
வேடிக்கையான செய்தி என்னவெனில், இவர் எழுதிய நூல்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தால் ஒரு முழு நீள ஆபாசப்புதகத்தை படித்தது  போல இருக்கும் என்பதால் அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்யாமல் அரபியிலேயே வைத்துள்ளனர்.
இன்றைய அவ்லியா புராணமும், மகான்கள் பெரியார்கள் என்று மார்க்கத்தை கேலி செய்கிற போக்குகளும் மலிந்து கிடப்பதற்கு இது போன்ற அவ்லியாக்களின் (?) பங்கு மகத்தானது !

இவனது நூலை ஒருவன் படித்தான் என்றால் அதன் பிறகு அவனால் சுய நினைவுடன் இருக்க முடியுமா என்பது சந்தேகமே !!
ஒரு சில துளிகள் இங்கே.... 

இறை நேசர்களில் ஒருவரான ஷைகு இப்ராஹீம் அவர்கள் மிம்பரில் ஏறி நிர்வாணமாக நின்று உரை நிகழ்த்துவார்கள்.
நூல் :தபகாத் பக்கம் 157

இந்த பெரியார், வேறு பெரியவர்கள் இருக்கும் சபையில் சத்தமாக காற்று விடுவார். யாராவது கேட்டால் இவர் தான் விட்டார் என்று இன்னொருவரை காட்டி விடுவார். சம்மந்தப்பட்டவரோ வெட்கப்படுவார் (அதே நூல், அதே பக்கம்)

எனது மனைவி கன்னியாக இருந்ததால் நான் அவளுடன் கூடாமல் இருந்தேன். அப்போது (கபுருக்குள் இருந்து எழுந்த வந்த) சய்து அஹமத் பதவி (என்ற மகான்), என்னையும் எனது மனைவியையும் இழுத்து சென்று தமது கபுரின் மேல் ஒரு போர்வையை விரிக்க சொன்னார். நானும் விரித்தேன். எங்களுக்காக இனிப்பு வகைகளை தந்தார். பின்னர் உயிருடன் இருப்பவர்களையும் இறந்து போனவர்களையும் அந்த இடத்திற்கு அழைத்தார்.
பின்னர், இவளது கன்னி தன்மையை நீக்கு என்று எனக்கு கட்டளையிட்டார். அதன் பிறகு எங்களின் முதலிரவு நடந்தது.
தபகாத் பக்கம் 62  


இந்த பெரியாரின் பார்வை ஒரு நாயின் மீது பட்டது, உடனே அந்த நாய்க்கு மற்ற நாய்கள் எல்லாம் அடி பணிந்தன.
அந்த நாயின் மறைவுக்கு பிறகு எல்லா நாய்களும் கூடி நின்று அழுதன. மனிதர்களும் கூடினார்கள். நாய்களின் உள்ளத்தில் அந்த நாயை அடக்கம் செய்யுமாறு இறைவன் உதிப்பை தந்தான். அவைகளும் அந்த நாயை அடக்கம் செய்து சியாரத்தும் செய்தன. இவரது பார்வை ஒரு நாயின் மீது பட்டு நாய்க்கே இந்த மகிமை என்றால் ஒரு மனிதன் மீது இவரது பார்வை பட்டால் ?
அதே நூல் பக்கம் 61

இந்த பெரியார் வெளியே வந்து யாரை முதலில் பார்க்கிறாரோ அவர்களது முகம் சொக்க தங்கமாக மாறி விடும்.
பக்கம் 60

நான் நபிகளாரை கனவிலும் நினைவிலும் காண்கிறேன். என்று கூறி ஜும்மா தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு அவர் வெளியே வந்ததில்லை
பக்கம் 15


இப்பெரியார் ஜூமா நாட்களிலும் மற்ற நாட்களிலும் குர் ஆனில் இல்லாத அத்தியாயங்களை குர் ஆன் என்று சொல்லி ஓதுவார். அதை கேட்பதற்கு இவர் குர் ஆனை தான் ஒதுகிராரோ என்கிற சந்தேகம் வரும்.
பக்கம் 187  

இந்த பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு கொடுத்தால் அவை தங்கமாகவும் வெள்ளியாகவும் மாறும்.
பக்கம் 75


இந்த பெரியார் முன் பகுதி, பின்பகுதியை மட்டும் மறைக்கும் கோவணத்தையே கட்டியிருப்பார்.
பக்கம் 187


குரங்கு தர்கா, நாய் தர்கா, யானை தர்க்கா , என்று தர்கா கட்டலாம் என்பதற்கு மேலே உள்ளவை ஆதாரங்கள். !! வஹாபிகளே இந்த ஆதாரம் போதுமா இல்லை இன்னும் வேண்டுமா?

செவ்வாய், 2 அக்டோபர், 2012

சூனியம் மந்திரமா தந்திரமா?





மூஸா நபிக்கும் எதிரிகளுக்கும் இடையே நடந்த மோதலை குறித்து அல்லாஹ் சொல்கிற போது, அந்த எதிரிப்படை சூழ்ச்சி செய்தனர் என்று சொல்கிறான் (பார்க்க 20 :69 )
சூழ்ச்சி என்பது தந்திரத்தை பற்றி சொல்லப்படும் வார்த்தை. இதை சொல்ல அல்லாஹ் பயன்படுத்திய வார்த்தை "சிஹிர்" - சூனியம் ஆகும்.

மேலும், மூஸா நபியை தோற்க்கடிப்பதற்காக   அவர்கள் கயிறுகளை பாம்புகளாக மாற்றும் வித்தையை காட்டிய சம்பவத்தையும் அல்லாஹ் அதற்கு முன் சொல்லிக்காட்டுகிறான். 
அதிலும் அவ்வாறு செய்யக்கூடியவர்களை சூனியக்காரர்கள் என்று தான் அல்லாஹ் சொல்கிறான்.
சூனியம் என்பது நிஜத்தில் செய்யப்படும் மந்திர செயல் என்றால், கயிறுகளை பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும். 
ஆனால் அப்படி சொல்லாமல், கயிறுகளை அவர்கள் போட்ட போது சீறுகிற பாம்பாக அது தோற்றமளித்தது என்று சொல்கிறான். (பார்க்க 20 :66 )
சூனியம் என்பது வெறும் ஒரு தந்திர செயல் (magic ) தான் என்பதும், இப்படி பட்ட சூனியம் தான் உலகில் உள்ளதே தவிர, கற்பனைக்கு எட்டாத வகையில் கையை முடக்குவது, காலை முடக்குவது போன்ற மந்திர செயல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய சக்தி என்றும் நம்புவது ஒரு முஸ்லிமின் தலையாய கடமை !

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று நபர்கள் சொர்க்கம் புகமாட்டார்கள். 1. மது அருந்துபவன் 2. உறவுகளைத் துண்டிப்பவன் 3. சூனியத்தை உண்மை என்று கருதுபவன்.
நூல் : அஹ்மத் (18748)

அழித்துவிடும் ஏழு பாவங்களில் நபி(ஸல்) அவர்கள் சூனியத்தையும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் : புகாரீ (2767)

 இதையும் பார்க்கவும் http://nashidahmed.blogspot.com/2012/07/blog-post_2597.html