சனி, 6 அக்டோபர், 2012

மூளை வரண்டது யாருக்கு??


அஸ்ஸலாமு அலைக்கும்..

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதை மறுக்க இயலாத கூட்டத்தினர், நாளின் துவக்கம் பஜர் என்று பிஜே சொன்னதாக எடுத்துக்காட்டி தங்கள் கொள்கையை நிரூபிக்கக் பாடுபடுகிறது.. இது பற்றி சகோ. பிஜே எழுதிய ஆக்கம் ஒன்றுக்கு (பார்க்க http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/nalin_aramabm_fajru_enru_pj_sonnara/) பிஜேவிற்கு மூளை வரண்டது என்கிற தலைப்பில் 
மறுப்பு ஆக்கம் ஒன்றை தயார் செய்து பரப்பியது இந்த குழப்பவாதி கூட்டத்தினர். 

கண்ணாடியின் முன்னின்று தனது கோர முகத்தைப் பார்த்துவிட்டு ஹிஜ்ரி கமிட்டியினரும் தன்னைப் போன்றுதான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு நம்மை இழிவுபடுத்தியிருப்பது  கண்டு பரிதாபப்படுகிறோம். அவருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  

என்று துவங்கியுள்ளனர். . ஹிஜ்ரா கமிற்றியினர் தன்னை போன்று தான் இருப்பார்கள் என்று சகோ. பிஜே மட்டுமல்ல, மானமுள்ள எந்த மனிதனும் நினைக்க மாட்டான். ஆறறிவு படைத்த, வெட்கமும் மானமும் சிறிதேனும் பெற்றுள்ள எவருமே ஹிஜ்ரா கமிட்டியை போல தான் தானும் இருக்கிறோம் என்றோ தன்னை போலதான் ஹிஜ்ரா கமிற்றியினர் இருக்கிறார்கள் என்றோ கனவிலும் எண்ண மாட்டான். அது தமக்கு அசிங்கம் என்பதை அனைவருமே அறிந்து தான் வைத்துள்ளனர்.

இந்த ஹிஜ்ரா கமிற்றி விவாத பூச்சாண்டி காட்டி, எதிர் பாரா விதமாக தங்கள் விவாத அழைப்பை பிஜே ஏற்றுக்கொண்ட உடன் செய்வதறியாது திகைத்தும்,அதற்கு முன், நேரடி விவாதம், நேரடி விவாதம், இதோ வந்து விட்டோம், பிஜே பதில் சொல்வது ஒன்று தான்   பாக்கி என்கிற அளவிற்கு பீலா விட்டவர்கள், பிஜே விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்த பிறகு, எழுத்து விவாதத்திற்கு தான் அழைத்தோம், நீங்கள் ஒரு ஆறு மாத காலம் எழுதிக்கொண்டே இருங்கள், நாங்கள் ஒரு ஆறு மதம் நான்கைந்து நூற்களை வெளியிடுகிறோம், அதற்கு மறுப்பு நூல், இதற்கு மறுப்பு நூல் என்று எழுதி தள்ளுவோம், இறுதியில் யார் சொல்வது சரி என்பதை மக்கள் புரிவார்கள் என்கிற உலக மகா அறிவார்ந்த சித்தாந்தத்தை முன் வைத்தார்கள். இவர்களது அறிவு திறனையும் கூர்மையான சிந்தனையையும் கண்டு அப்போதே இங்குள்ள பல சகோதரர்கள் வியந்து பாராட்டினர். நோபல் பரிசுக்கு ஏன் இன்னும் இவர்களை பரிந்துரைக்கவில்லை என்று பலரும் கேட்கிற அளவிற்கு இந்த அந்தர் பல்டியின் மூலம் இவர்களது புகழ் தெரு முனைகளிலும் எதிரொலித்தது.

கடந்த காலங்கள் பலருக்கும் மறந்திருக்கும் என்பதால், இவர்களை பற்றியும், இவர்கள் அடித்துள்ள அந்தர் பல்டிகளை பற்றியும், நோபல் பரிசுக்கு இவர்களை பரிந்துரைக்கும் அளவிற்கு இவர்கள் செய்த அறிவார்ந்த சாதனைகளை பற்றியும் கீழே உள்ள சுட்டிகளில் நினைவூட்டுகிறோம். ஒவ்வொரு ஆக்கமாக படித்து, இவர்களிடம் விவாதம் என்றில்லை, சாதாரணமாக பேசுவதற்காவது இவர்கள் தகுதி படைத்தவர்கள் தானா? என்பதை சிந்தியுங்கள்.

ஹிஜ்ரா கமிட்டியின் அந்தர் பல்டி 

பிஜேயுடன் நேரடி விவாதம் செய்ய போகிறோம் என்று கூறி நம்முடனான எழுத்து விவாதத்தை தொடராமல் தப்பி ஓடி விட்டு இறுதியில் பிஜெயுடனும் நேரடி விவாதம் செய்யாமல் அங்கேயும் நழுவி ஓடிய ஹிஜ்ர கமிட்டியினரின் மெய் சிலிர்க்கும் சாகசங்களை நாள், தேதி, ஆதாரத்துடன் காண.. 


விவாதத்தை கண்டு அரண்டு போய் இருந்தாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை பார்த்தீர்களா என்கிற ரேஞ்சுக்கு இவர்கள் விட்ட பீலாவை பற்றி அறிய கீழே விழுந்தாலும் மீசையில்...

எழுத்து விவாத சவடாலும் நாறி போய் விட்ட நிலையில், சில உப்பு சப்பில்லாத கேள்விகளை நோட்டீஸ் என்கிற பெயரில் இவர்கள் ஊர் ஊராக பரப்பதுவங்கினர்.
நம் தரப்பில் அதற்கும் தெளிவான மறுப்புகள் தரப்பட்டன .. அதை காண 


முன்னர் நம்முடன் இவர்கள் பிறை விஷயத்தில் செய்த விவாதத்தின் போது நாம் எடுத்து வைத்த கேள்விகள் இவற்றுக்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லாமல் நழுவியுள்ளார்கள் என்கிற பட்டியலை ஏற்கனவே தொகுத்து வைத்திருந்தோம்.
அதை காண 
நாம் முன்வைத்த பிறை குறித்த ஆதாரங்களை காண பிறை : ஒன்பது ஆதாரங்கள்

பிறை குறித்த இவர்களது வாதங்கள் எந்த அளவிற்கு கூறு கெட்டத்தனமாகவும் சிந்தனை மழுங்கலாகவும் உள்ளன என்பதையும் பற்றி விரிவாக அறிய ஹிஜ்ரா கமிட்டி என்கிற அதிமேதாவி கூட்டம் தங்களுக்கு தாங்களே முரண்பட்டுக்கொண்டதை  பற்றி அறிய 

எழுத்து விவாதத்தின் போது இவர்கள் முழுக்க முழுக்க பொய்களை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை அடுக்கடுக்கான காண  பொய்யை மூலதனமாக கொண்ட ஏர்வாடி JAQH

எவ்வளவு தான் முரண்பட்டு பேசினாலும், எத்தனை கேள்விகளுக்கு தான் பதில் சொல்லாமல் நழுவினாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்ய அழைக்கிற போது குட்டு வெளிப்பட தான் செய்யும். அதற்கு சான்றுகளை காண..


இவரை அறிந்து கொள்ளுங்கள்

சரி, அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, விவாதம் என்றாலே அது முகத்தோடு முகம் காணும் நேரடி விவாதம் என்று தான் எல்லாரும் நினைப்பார்கள் என்றிருக்கும் போது, இந்த ஹிஜ்ரா கமிட்டே மட்டும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்களே என்று அதற்க்கான காரணத்தை சிந்திக்கையில் சில உண்மை காரணங்கள் கிடைக்க துவங்கின..

இதை படிக்கவும்.. ஏர்வாடி சிராஜும் எழுத்து விவாதமும்

ஆக, உண்மைக்கும் இவர்களுக்கும் வெகு தொலைவு என்பதை கடுகளவு சந்தேகமும் எவர் மனதிலும் எழாத வண்ணம் மேலே உள்ள ஆக்கங்கள் உறுதி செய்கிறது.

இப்படி பட்ட அதிமேதாவிகள் தான் சகோ. பிஜேவை மீண்டும் எழுத்து விவாதத்திற்கு அழைக்கிறார்களாம். வெட்கம் என்பது சிறிதளவாவது இருந்தால் இவர்களும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கொஞ்ச நஞ்சமும் சிந்திக்க வேண்டும்.

சங்கைக்குரிய மலக்குகள் முதல் கண்ணியத்திற்குரிய நபிமார்கள் உட்பட  இறைபொருத்தம் பெற்ற ஸஹாபாக்கள்வரை தனது வன்மப் பேச்சுக்களால் அவர்களை சிறுமைப்படுத்தி இழிவுபடுத்தியவர்தான் இந்த பீஜே என்பதும்தனது கோரசிந்தனையின்  உச்சகட்டமாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனாம் அல்லாஹ்வின் சிஃபத்துகள் மீதே கைவைத்து வல்ல அல்லாஹ்வையே கேவலப்படுத்தியவர்தான் இந்த பீஜே என்பதையும் தமிழ்பேசும்  முஸ்லிம்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். 
என்று சொல்கின்றனர். அடுக்கு மொழியில் எதையாவது சொன்னால் கை தட்டி விசில் அடிப்பதற்கு பொது மக்கள் இவர்களை போல கூத்தாடிகள் அல்ல.
எதை சொன்னாலும் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும் என்கிற அடிப்படை இவர்களிடம் எதிர் பார்க்க கூடாதது தான்!


அல்லாஹ் தஹஜ்ஜத் வேளையில் அடிவானத்திற்கு இறங்குகிறான் என்ற விஷயத்தை பற்றி பேசும்போது அல்லாஹ் அப்படி  இறங்கினால் அர்ஷ் காலியாகிவிடும் என்று கூறியவர்தானே இந்த பீஜே. 

இன்னும் மலக்குகள் அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்கள்,  நபி தாவூது (அலை) அடுத்தவரின் நிலத்தை அபகரித்து இருக்கக் கூடும்,  குர்ஆனின் வசனங்களில் நிச்சயமாக என்ற பொருளைத்தரும் வாசகங்கள் வெறும் அரபுபேச்சு வழக்குகள்தான் அதை மொழி பெயர்க்கத் தேவையில்லைசுவர்க்கம் நரகம் படைக்கப்படவில்லைஅவ்வாறு படைக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு உதாரணத்திற்கு படைக்கபட்டது தான்அந்த சுவர்க்கமும் அழிந்துவிடும். காரணம்(குல்லு மன் அலைஹா ஃபான்) 55:26-27 வசனங்களில் அல்லாஹ்வின் முகத்தைத் தவிர அனைத்தும் அழிந்து போகக்கூடியதே என அல்லாஹ் கூறுகின்றான்என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தனக்கு மூளை வரண்டுவிட்டது என்பதை தெளிவாக நிரூபித்தவரே இந்த பீஜே. 
தஹஜ்ஜத் வேளையில் அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள் இறங்குகிறது என்பதை தவிர வேறு பொருள் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவான ஒன்று. அது போல, "நிச்சயமாக" என்கிற வாசகம் அரபு பேச்சு வழக்கு தான். சகோ. பிஜே மொழியாக்கம் செய்ததில் நிச்சயமாக என்பதை விட்டு விட்டதை போல எல்லா மொழிப்பெயர்ப்பாளர்களும் பல வசனங்களில் நிச்சயமாக என்பதற்கு மொழியாக்கம் செய்யவில்லை. பிஜேவை பற்றி மட்டும் பேசுகிறவர் திராணி உள்ளவராக இருந்தால் அனைத்துமே தவறு என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? 
சொர்க்கம் அழிந்து விடும் என்பதையோ, தாவூது நபி பற்றியோ எதை சொல்வதாக இருந்தாலும் அப்படி இல்லை என்பதை ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். ஆதாரத்திற்கும் இவர்களுக்கும் இடையில் தான் ஏணி வைக்க வேண்டுமே.. அப்போதும் எட்டுமா என்பது சந்தேகமே !!

விவாதம் நடத்தி அந்த சிடிக்களை விற்று மார்க்க பிழைப்பு நடத்தும் பீஜே2000 ஏர்வாடி பிறை விவாத சீடியை வெளியிடாமல் மறைக்கும் அளவிற்கு அவரை அல்லாஹ் கேவலப்படுத்தினான் 

சாதாரண பாமரர்களுடன் எழுத்து விவாதம் செய்வதற்குள் விழி பிதுங்கி ஓட்டம் எடுத்த வெட்கமில்லா கூட்டம், தவ்ஹீத் ஆலிம்களுடன் விவாதித்து வெற்றி பெற்றார்கள் என்று வெட்கமே இல்லாமல் அறிவிப்பு செய்கின்றனர். தமக்கு கேவலத்தை தந்த விவாதத்தையும் ஒருவர் மறைக்கலாம், என்பது போல, எந்த உப்பு சப்பும் அற்ற , உளறல்களையே வாதங்களாக வைத்திருந்த ஒருவரருடன் செய்த விவாதத்தை அதன் காரணமாகவும் மறைக்கலாம். இரண்டில் எது என்பது விபரமுள்ளவர்களுக்கு தெரியும்.

மேலும், 2000  ஆம் ஆண்டில் நடந்த விவாதத்தின் போது இவர்கள் பிஜேவிடம் ஜெயித்தார்களாம். வேடிக்கை என்ன தெரியுமா? அன்றைக்கு இவர்கள் இருந்த கொள்கை பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்கிற கொள்கையில்.
இப்போதோ அது தவறு , கணிக்க தான் வேண்டும் என்று தாவிக்கொண்டவர்கள் !!.
அதாவது, இன்றைய நிலையில் இவர்களது பார்வையில் பிறையை கண்ணால் காண்பது தவறு !
ஆனால் அந்த தவறான வாதத்தை விவாதத்தின் போது எடுத்து வைத்து பிஜேவிடம் ஜெயித்து விட்டார்களாம். எப்படி வேடிக்கை !! ஆக, இவர்களது கொள்கை என்பது பிறையை கண்ணால் பார்க்க வேண்டுமா இல்லையா என்பதல்ல, பிஜேவை வெற்றி கொண்டோமா இல்லையா என்பது தான்.

பிஜே எங்களிடம் தோற்றார் என்று சொல்ல வேண்டுமா? தர்க்க போவது தான் சரி என்று நாங்கள் பேசினோம், கூடாது என்று பிஜே பேசி எங்களுடன் தோற்று விட்டார் என்று கூட பேசுவார்கள் போலும். அட வெட்கமில்லாதவர்களே !!!! இப்படியுமா ஒரு அற்ப சந்தோஷம்?
அந்த விவாதம் ஆரம்ப கால தவ்ஹீத் அகோதரர்கள் அனைவருக்கும் இன்னமும் நினைவிலுள்ள ஒன்று. விஞ்ஞான கணிப்பின் பக்கமும் உலகப்பிறை என்கிற தவறான சித்தாந்தத்தின் பக்கமும் செல்லவிருந்த பெருவாரியான மக்களை தடுத்தி நிறுத்திய விவாதம் அது ! சிந்திப்பவர்கள் இதை புரிந்தே தான் உள்ளார்கள் !!


அல்லாஹ்வை எத்தகைய பலஹீனமும் அற்றவன் என்று நம்புவது முதல் அவனது மலக்குமார்களைவேதங்களை,ரஸூல்மார்களை நம்பவேண்டிய அடிப்படையில் நம்புவது உட்பட ஜக்காத் போன்ற இஸ்லாமிய அடிப்படை விஷயங்கள் வரை ஆட்டம் கண்டுவிட்ட இந்த பீஜேயிடம் விவாதித்துதான் நமது பிறை நிலைபாட்டை நிலை நாட்டிடவேண்டும் என்ற நிர்பந்தம் முஸ்லிம்களாகிய நமக்கு இல்லை

அல்லாஹ்வுக்கு பலகீனம் உண்டு என்று பிஜே சொன்னதாக மறைமுகமாக சொல்கின்றனர். பிஜே உண்மையில் என்ன சொன்னார்? எப்படி சொன்னார்? அவர் பேசிய வாசகம் என்ன? என்பதை ஆதாரத்துடன் தருமாறு கேட்டால் தருவதற்கு முதுகெலும்பு இருக்குமா இவர்களுக்கு? சிறு பிள்ளையும் சொல்லும், இருக்காது என்று !
மேலும், ஜகாத் குறித்த விவாதத்தில்  இவர்களது இயக்க தலைவர்கள் பம்மிக்கொண்டு மேடையில் ஒளிந்துக்கொண்டிருக்க, யாரென்றே அறியப்படாத ஒரு அப்பாவியை விவாதிக்குமாறு மேடையேற்றி இவர்கள் நடத்திய கண்ணாமூச்சி ஆட்டத்தை அனைவரும் அறிந்துள்ளனர்.

இப்போது இங்குள்ள விஷயம், நாளின் துவக்கம் பஜர் தான் என்று பிஜே சொல்லி விட்டாராம். அட என்ன ஆச்சர்யம், பிஜே ஒப்புக்கொண்டு விட்டாரா? இவர்கள் எடுத்து வைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தையும் பிஜே ஏற்றுக்கொண்டு விட்டாரா? பரவாயில்லையே..
என்று நாமும் எட்டிப்பார்த்தால், 
லுகர், அசர், மக்ரிப், இஷா என்று சொல்லி விட்டு மறுநாள் பஜர் என்று பிஜே சொல்லி விட்டாராம்.

இது தான் பிஜே இவர்களது உலக மகா கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டதற்கு இவர்கள் காட்டும் மேதாவித்தனமான ஆதாரம்.

அட ஞான சூனியங்களே..
கூறு கெட்டவர்கள் இப்படி சிந்தித்து விடக்கூடாது என்பதற்காக, ""மறுநாள்"" என்பதை பிஜேவே மாற்றியும் விட்டார். ஒரு இரவை கடந்து பகல் வரும் போது அதை மறுநாள் என்று சொல்லும் வழமை நம்மிடம் உள்ளது. அந்த வழமைக்கு ஏற்ற வகையில் பிஜே சொன்னது தான் மறுநாள் பஜர் என்பதே தவிர, ஹதீஸில் மறுநாள் பஜர் என்று இல்லை.

ஆனால், நாளின் துவக்கம் பஜர் இல்லை, அது மக்ரிப் தான் என்பதற்கு பிஜே அடுக்கடுக்காக பல சான்றுகளை தந்திருந்தாரே, பதில் என்று சொல்வதாக இருந்தால் அவற்றுக்கல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

இதை பார்க்கவும்.  http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/361/
இதையும் பார்க்கவும் http://onlinepj.com/kelvi_pathil/nonbu_kelvi/nalin_armbam_ethu/
இதையும் பார்க்கவும் http://nashidahmed.blogspot.com/2012/08/blog-post_9.html

இவைகளுக்கெல்லாம் ஏதாவது பதில் இருக்கிறதா இந்த மேதாவிக்கூட்டத்திடம்? இல்லை !!

ஆக, ஆதாரங்கள் எங்கெல்லாம் காட்டப்படுகிறதோ, அதன் பக்கம் தலை வைத்து கூட படுக்க துணியாதவர்கள், பேசும் போதும் எழுதும் போதும் ஏதாவது தவறுதலாக சொல்லப்படுமே அதை மட்டும் பற்றிப்பிடித்து , ஹே ! பார்த்தியா நீயும் ஒதுக்கிட்டே.. என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடுகிறது !

மறுநாள் பஜர் என்று பிஜே சொன்னது நடைமுறையில் இரவுக்கு பின் வரக்கூடிய விடியலை மறுநாள் என்று சொல்வது தான் வழக்கம் என்பதால் தான். இதை வைத்து ஒரு குழப்பம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பதால் அந்த வாசகமும் கூட தற்போது நீக்கப்பட்டு விட்டது.
மறுநாள் என்பது ஹதீஸில் இல்லாத வாசகம் தான் என்பதால் அதை நீக்குவது தான் சரியும் கூட.

ஆக, இவை அனைத்துமே இவர்களது சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுக்கு உதவும் என்பதை தவிர, இது போன்றவைகள் இவர்களது கொள்கையை தூக்கி நிறுத்துவதற்கோ இவர்களை அறிவாளிகளாக காட்டுவதற்கோ என்றைக்கும் உதவாது !

சமுதாயம் இது போன்ற கூறு கெட்ட கூட்டத்தாரை அறிந்து வைத்து, இவர்களது வாடை கூட அடிக்கா வண்ணம் நம்மையும் நம் சுற்றத்தையும் காக்க வேண்டும்.

அல்லாஹ் அருள் புரிவானாக..

வஸ்ஸலாம்.


1 கருத்து:

  1. ஸலாம்

    சரியான பதிலடி ...

    சில நாட்களாக குழுமத்தில் காணவில்லையே HCI ...!!!

    ஜசகல்லாஹ் க்ஹைர்

    பதிலளிநீக்கு