வெள்ளி, 19 அக்டோபர், 2012

கமாலுதீன் மதனியிடம் நடித்தது சரியா?



களியக்காவிளை விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பேசுவதற்கு குறிப்பு தாருங்கள் என்று ஜாக்கின் கமாலுதீன் மதனியிடம் சுன்னத்(?) ஜமாத்தினரை போல் பொய்யாக பேசி நடித்தது மார்க்க அடிப்படையில் சரியா? என்று ஒரு சகோதரர் கேட்டுள்ளார்.


அல்லாஹ்வின் தூதர் தம்முடன் உபை பின் கப் (ரலி அவர்கள் வர, இப்னு சய்யாதை நோக்கி நடந்தார்கள் இப்னு சய்யாத், பேரீச்சம் மாற தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவனை கண்ட பிறகு, (தான் வருவது அவனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக) பேரீச்சம் மரத்தின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக்கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். அவன் ஏதோ போர்வையை போர்த்திக்கொண்டு வாயில் எதையோ முணுமுணு த்தவாறு  படுத்திருந்தான்.
சிறிது நேரத்தில் அவனுடன் இருந்த அவனது தாய் நபி (ஸல்) அவர்களை கண்டு கொண்டார். உடனே இப்னு சய்யாதை நோக்கி "இதோ முஹமமத்" என்றாள் . உடனே படுத்திருந்த இப்னு சய்யாத் குதித்தெழுந்து விட்டான்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நான் வருவதை தெரிவிக்காமல் அவனை அப்படியே அவள் விட்டிருந்தால் உண்மைகளை வெளிப்படையாக அவன் பேசியிருப்பான் என்று கூறினார்கள் 
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புஹாரி 3033


மேற்கண்ட ஹதீஸ், ஒரு நபரை பற்றியோ ஒற்று குழுவை பற்றியோ உண்மையான செய்தியை அறிந்து கொள்ள உளவாக மறைந்திருந்து செயல்படலாம் என்பதற்கு ஆதாரமாக அமைகிறது.

மற்றொரு சந்தர்ப்பத்தில் காபிர்களிடம் உண்மையை அறிவதற்காக தாமும் இஸ்லாத்தின் எதிரி போல காட்டிக்கொள்ளலாமா? என்று ஒரு சஹாபி அனுமதி கேட்ட பொது நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள் என்று புஹாரி 4037 ஹதீஸில் ஆதாரம் உள்ளது 

இந்த அடிப்படையில் எதிரிகளை வீழ்த்துவதற்காக மற்றும் அவர்களிடம் இருந்து உண்மையை பெறுவதற்காக மறைந்து செயல்பட நபி (ஸல்) அவர்களிடத்தில் முன் மாதிரி உள்ளது.


ஜாக் இயக்கம் செய்தது ஏகத்துவத்திற்கு எதிரான ஒரு காரியம். தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீதுக்கு எதிரான காரியங்களை  செய்துள்ள இவர்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வர, தாங்கள் சுன்னத் (?) ஜமாத்தினர் தான் என்று சொல்லி நடித்ததில் எந்த தவறுமில்லை ! அது தான் நபி வழி !!!!!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக