செவ்வாய், 2 அக்டோபர், 2012

சூனியம் மந்திரமா தந்திரமா?





மூஸா நபிக்கும் எதிரிகளுக்கும் இடையே நடந்த மோதலை குறித்து அல்லாஹ் சொல்கிற போது, அந்த எதிரிப்படை சூழ்ச்சி செய்தனர் என்று சொல்கிறான் (பார்க்க 20 :69 )
சூழ்ச்சி என்பது தந்திரத்தை பற்றி சொல்லப்படும் வார்த்தை. இதை சொல்ல அல்லாஹ் பயன்படுத்திய வார்த்தை "சிஹிர்" - சூனியம் ஆகும்.

மேலும், மூஸா நபியை தோற்க்கடிப்பதற்காக   அவர்கள் கயிறுகளை பாம்புகளாக மாற்றும் வித்தையை காட்டிய சம்பவத்தையும் அல்லாஹ் அதற்கு முன் சொல்லிக்காட்டுகிறான். 
அதிலும் அவ்வாறு செய்யக்கூடியவர்களை சூனியக்காரர்கள் என்று தான் அல்லாஹ் சொல்கிறான்.
சூனியம் என்பது நிஜத்தில் செய்யப்படும் மந்திர செயல் என்றால், கயிறுகளை பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும். 
ஆனால் அப்படி சொல்லாமல், கயிறுகளை அவர்கள் போட்ட போது சீறுகிற பாம்பாக அது தோற்றமளித்தது என்று சொல்கிறான். (பார்க்க 20 :66 )
சூனியம் என்பது வெறும் ஒரு தந்திர செயல் (magic ) தான் என்பதும், இப்படி பட்ட சூனியம் தான் உலகில் உள்ளதே தவிர, கற்பனைக்கு எட்டாத வகையில் கையை முடக்குவது, காலை முடக்குவது போன்ற மந்திர செயல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய சக்தி என்றும் நம்புவது ஒரு முஸ்லிமின் தலையாய கடமை !

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று நபர்கள் சொர்க்கம் புகமாட்டார்கள். 1. மது அருந்துபவன் 2. உறவுகளைத் துண்டிப்பவன் 3. சூனியத்தை உண்மை என்று கருதுபவன்.
நூல் : அஹ்மத் (18748)

அழித்துவிடும் ஏழு பாவங்களில் நபி(ஸல்) அவர்கள் சூனியத்தையும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் : புகாரீ (2767)

 இதையும் பார்க்கவும் http://nashidahmed.blogspot.com/2012/07/blog-post_2597.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக