புதன், 24 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 6)இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 6

குர் ஆன், ஹதீஸுக்குப் பிறகு வேறு வஹியின் அவசியமில்லை :

நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்குப் பிறகு ஒரு நபி வர முடியாது என்கிற நம்பிக்கையிலும், அவர்களுக்கு பிறகு வேறு எவருக்கும் அல்லாஹ் வஹி செய்தி எதையும் அருள மாட்டான் என்கிற புரிதலிலும் நாம் உறுதியாக இருந்திருந்தால், நானும் நபி தான் என்று சொல்லக்கூடிய ஏராளமான பொய்யர்கள் இந்த சமூகத்தில் தோன்றியிருக்க மாட்டார்கள்.

நபிமார்களை அல்லாஹ் நியமித்ததைப் பொறுத்தவை, ஆதம் நபி முதல் ஆயிரக்கணக்கில் அல்லாஹ் நபிமார்களை இவ்வுலகத்திற்கு அனுப்பியிருக்கிறான்.
மொழிக்காக ஒரு நபி, ஒரு ஊருக்காக ஒரு நபி, ஒரு சமுதாயத்திற்காக, ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்காக, பனு இஸ்ராயில் போன்று ஒரு குறிப்பிட்ட கோத்திரத்திற்காக நபி என்றெல்லாம் நபிமார்களை அல்லாஹ் பல்வேறு காரணத்திற்காக அனுப்பினான்.
இன்னும், வட்டி வாங்கிய சமூகம், வியாபாரத்தில் கலப்படம் செய்த சமூகம், ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட சமூகம் என ஒரு குறிப்பிட்ட சமுகமொன்றூ ஒரு குறிப்பிட்ட தீய செயலில் மூழ்கிக் கிடக்கும் போது அந்த ஒரு காரியத்திற்காக கூட நபிமார்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள்.
இப்படியாக தொடர்ந்த நபிமார்களின் வருகையானது முஹம்மது நபி (சல்) அவர்களோடு முற்றுப் பெற்றது.

இதற்கான காரணம் என்ன என்பதை நாம் சரியாக புரிந்து கொண்டால், முஹம்மது நபிக்கு பிறகு ஒரு நபி வர வேண்டிய அவசியமே இல்லை என்பதை தெளிவாக நம்பி விடலாம்.

முஹம்மது நபி (சல்) அவர்களுக்கு முன்பு வரை வந்த நபிமார்கள் கொண்டு வந்த வேதமானது அந்தந்த காலகட்டத்தில் மட்டும் நீடித்ததே தவிர, அவை தொடர்ச்சியாக பாதுகாக்கப்படவில்லை.வேதத்தில் பல்வேறு பொய்களும் கட்டுக்கதைகளும் புனையப்பட்டு அவை கலப்படப்படுத்தப்பட்டன. ஆக, ஒரு நபி ஒரு சமூகத்திற்காக வந்து, வேதத்தை பிரச்சாரம் செய்து,  மரணித்து விட்டால் சிறிது சிறிதாக அவர் கொண்டு வந்த போதனைகளும் காலத்தால் அழிந்து விடும்.
அப்படியொரு சூழலில், இன்னொரு நபியை அனுப்பும் அவசியம் ஏற்படுகிறது.

ஆனால், நபிகள் நாயகம் (சல்) அவர்களைப் பொறுத்தவரை இந்த காரணம் பொருந்துமா? அவர்கள் கொண்டு வந்த மார்க்கமும், அவர்கள் மூலமாக அருளப்பட்ட வேதமான திருக்குர் ஆனும் காலத்தால் அழிந்து போகக்கூடியவையா? நிச்சயம் இல்லை.

1400 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட இந்த குர் ஆன், இன்று வரை ஒரு வார்த்தை மாற்றமில்லாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றது, இன்னும் கியாமத் நாள் வரையிலும் இதன் பாதுகாப்பிற்கு அல்லாஹ் உத்திரவாதமும் வழங்கியுள்ளான்.

அல்லாஹ் இது பற்றி தன் திருமறையில் சொல்லும் போது,

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ
நாமே இந்த அறிவுரையை அருளி னோம். நாமே இதைப் பாதுகாப்போம்.(15:9)

என்று உத்திரவாதம் வழங்குகிறான்.

நபி (சல்) அவர்களது காலத்தில் குர் ஆன் எப்படி அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வாய் அமைந்ததோ அது போன்று 21 ஆம் நூற்றாண்டில் எழக்கூடிய நவீனப் பிரச்சனைகளுக்கும் குர் ஆன் தீர்வாய் தான் இருக்கிறது.
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், அன்றைக்கு எழக்கூடிய ஒரு பிரச்சனைக்கும் அடிப்ப்டை தீர்வினை குர் ஆனிலிருந்தே எடுத்து விடலாம் என்கிற அளவிற்கு அல்லாஹ்வின் வேதமான இந்த குர் ஆன் ஒட்டு மொத்த உலகிற்கும், கியாமத் நாள் வரை அருளப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், முஹம்மது நபி(சல்) அவர்கள் இன்று நபியாக வந்திருந்தாலும் இதே குர் ஆனை தான் தந்திருப்பார்கள் எனும் போது, புதிதாக ஒரு நபி வந்து வஹீயை பெற்றுத் தர வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

அது போன்று, இந்த குர் ஆனை தன் வாழ்க்கையில் விளக்கிக் காட்டுவதற்காக வந்திருந்த நபி (சல்) அவர்களின் வாழ்க்கை முறையும், அவற்றிலிருந்து பெறப்பட்ட ஹதீஸ் எனும் சட்டத்திட்டங்களும் கூட எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடியவைகளாக தான் இருக்கின்றன எனும் போது, புதிதாக ஒரு வஹீ செய்திக்கான அவசியம் இல்லை.
புதிதாக வஹீ வர வேண்டிய அவசியமில்லை எனும் போது, புதிதாக ஒரு நபி வரவும் அவசியமில்லை.

இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்கள் எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடியவையே என்பதற்கு சான்றாக, இன்றைய காலகட்டத்தில் பல்வேறு மாற்று மத பிரமுகர்கள் இஸ்லாமிய சட்டத்தின் அவசியத்தைப் பற்றி பேசியிருப்பதை எடுத்துக் கொள்ளலாம்.

கற்பழிப்பு சம்பவங்களும், பாலியல் வன்முறைகளும் பெருகி வரும் கால சூழலில், இஸ்லாம் பெண்களுக்கு போதிக்கக்கூடிய ஃபர்தா எணும் ஆடையை எல்லா பெண்களும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார் மதுரை ஆதீனம்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் தான் குற்றங்கள் குறைவதற்கு காரணமாய் அமையும் என அத்வானி முதல் குன்றக்குடி அடிகளார் வரை பேட்டியளிப்பதைப் பார்க்கிறோம்.

சமீபத்தில் புதுடில்லியில் முதல்வராக பதவியேற்ற அரவிந்த் கேஜரிவாலோ, உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை அமைக்க விரும்புகிறேன் என்று, முன்பு காந்தி சொன்ன அதே கருத்தினை எடுத்துச் சொல்கிறார்.

அந்த அளவிற்கு, மாற்று மத பிரபலங்களையும் கூட இஸ்லாம் ஈர்த்திருக்கிறது, அதன் சட்டத்திட்டங்கள் தற்காலத்திற்கும் தேவையான ஒன்று என்று சொல்ல வைத்திருக்கிறது என்றால், இப்போது ஒரு புதி வஹீ எதற்கு?
இப்போது ஒரு புது நபி வர வேண்டிய அவசியமென்ன?

நிச்சயமாக தேவையில்லை.

இதனால் தான் நபி (சல்) அவர்கள் தமது இறுதி பேருரையின் போது, இந்த மார்க்கத்தை இன்றுடன் நான் முழுமைப்படுத்தி விட்டேன் என்று பிரகடனம் செய்தார்கள்.

ஆக, புதிதாக வஹீ வர வேண்டிய எந்த அவசியமும் இன்று கிடையாது.  இந்த வேதம் பழமையாகி விட்டதா?
இதில் சொல்லப்பட்டிருக்கும் சட்டத்திட்டங்கள் காலாவதியாகி விட்டனவாஇல்லையே..
கியாமத் நாள் வரை வரயிருக்கும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் வழிகாட்டியாக திகழும் இந்த திருக் குர் ஆனில் எந்த வித முரண்பாடோ தற்கால சூழலுக்கு பொருந்தாதசெய்திகளோ விஞ்ஞான உண்மைக்கு மாற்றமாக தகவல்களோ இல்லை.
இன்னும் சொல்லப்போனால்நபி (சல்அவர்கள் காலத்தில் இந்த மார்க்கமும் அல்லாஹ்வின் வேதமும் உலகை சென்றடைந்த வேகத்தை விட பல மடங்கு அதிகமாக இன்றையகாலகட்டத்தில் குர் ஆன் மக்களை வென்றெடுத்து வருவதை நாம் காண்கிறோம்.
இருந்த இடத்திலிருந்து நாம் ஆற்றக் கூடிய மார்க்க சொற்பொழிவுகள்வீடு தோறும் கிடைக்கப்பெறும் குர் ஆன் பிரதிகள்உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம்செய்யப்பட்ட அற்புதம் என இறை நிராகரிப்பாளர்களை பல வழிகளில் இந்த வேதம் சென்றடைந்து வருகிறது.

அப்படியிருக்கபுதிதாக ஒரு வேதமோ புதிதாக ஒரு நபியோ இனி வரவேண்டிய எந்த அவசியமும் இல்லை.
அப்படி எவரேனும் தமக்கு வஹி வராமலிருந்தும் வந்ததாக பொய் சொல்கிறானோ அவனை விட பெரும் அநியாயக்காரன் வேறு எவரும் இல்லை என்று அல்லாஹ் திருமறையில்கூறுகிறான்.

முஹம்மது நபி (சல்அவர்களுக்குப் பிறகு தானும் நபி தான் என்று அறிவிப்பு செய்த பல பொய்யர்கள் தோன்றினர்கடந்த நூற்றாண்டில் துவக்கத்தில் கூட ஒருவன் உருவானான்.
ஆனால்தான் நபி தான் என்பதற்கு எந்த சான்றையாவது கொண்டு வந்தானாஇல்லை.
தன்னை நபியாக மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காக பல தில்லுமுல்லு வேலைகளையும் பொய்கள் புரட்டுகள் செய்த மோசடிக்காரனாக தான் அவனை இச்சமூகம் கண்டது.
அந்த பொய்யனையும் நபியென்று நம்பி பின்பற்றும் ஒரு கூட்டமானது அவனுக்கு கிடைத்ததாக சொல்லக்கூடிய வேதத்தை சமூகத்தில் வெளியிடக் கூட வெட்கப்படுகின்றஅளவிற்கு அந்த வேதத்தில் பொய்களும் பித்தலாட்டங்களும் நிரம்பக் காணப்படுவதை நாம் அறியலாம்.

இது போன்ற பொய் நபிகள் தலை தூக்கிய காலகட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் இருந்திருந்தால் அன்றைக்கே அவனைப் போன்றோர் எல்லாம் இருந்த இடம்தெரியாமல் துடைத்தெறியப்பட்டிருப்பார்கள்.
ஆனால்ஏகத்துவத்தை வீரியமாகவும் தெளிவாகவும் சொல்லக்கூடிய ஒரு ஜமாஅத் நம் நாட்டில் அன்றைக்கு இல்லாமல் போனது.
மதுஹபுகளை நம்பி இயக்கம் நடத்தியோர் மட்டுமே மிகைத்திருந்தனர்.அபுஹனீஃபா இமாமுக்கும் அப்துல் காதர் ஜைலானிக்கும் வஹீ வருமா?


இன்னும் சொல்வதென்றால்இது போன்ற பொய்யர்கள்தமக்கும் அல்லாஹ்விடமிருந்து வஹீ வருகிறது என்று பொய் கூறி கூட்டம் சேர்த்ததற்கும்அதை நம்பி ஒரு அறிவைஅடகு வைத்த கூட்டமொன்று அவர்கள் பின்னால் சென்றதற்கும் கூட இந்த மதுஹபு கொள்கை தான் காரணம்.

காரணம்முஹம்ம்து நபி (சல்அவர்களுக்குப் பிறகும் வஹீ இறங்கும் என்கிற மாபாதக கொள்கையில் வாசலை முதன் முதலில் திறந்து விட்டவர்களே இந்த மதுஹபுவாதிகள்தான்.


உதாரணத்திற்குமதுஹபுகளில் அதிகமான கூட்டத்தாரை கொண்டது ஹனஃபி மதுஹப்.
இந்த மதுஹபினரின் அதிகாரப்பூர்வ நூலான துர்ருல் முக்தாரில் இவர்கள் எழுதி வைத்திருக்கும் வண்டவாளங்களை வாசித்தாலேயே அவற்றின் அபத்தங்கள் புரியும்.

அபு ஹனீஃபா அவர்கள் ஒரே ஒளுவில் இஷாவையும் தொடர்ந்து வரக்கூடிய ஃபஜ்ர் தொழுகையையும் தொழுவார்கள் என்று எழுதி வைத்துள்ளனர்.
அதுவும் எத்தனை நாட்களுக்காம்?

ஒன்றல்லஇரண்டல்ல.. நாற்பது ஆண்டுகளாக இப்படியே தான் அவர் செய்து வந்தாராம்.

இது சாத்தியமாஇப்படி ஒருவரால் செய்ய முடியும் என்று நம்புவதே முதலில் தவறுஏனெனில்இது மனிதத் தன்மைக்கே அப்பாற்பட்ட ஒரு காரியம்.
அப்படியானால் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?
அபு ஹனீஃபா இமாமுக்கு மனித ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட ஆற்றல் இருக்கிறது என்கிற பச்சை ஷிர்க்கை தான் கொள்கையாக கொண்டிருந்தார்கள்.

சரி ஒரு வாதத்திற்கு அப்படி செய்ய சக்தி படைத்தவர் என்று வைத்துக் கொண்டால் கூடஇப்படி செய்வது மார்க்கத்தில் கூடுமா?
இரவு முழுக்க தூங்காமல் ஒருவர் இருக்கலாமா?
குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் இருக்கலாமா?

ஆகஇது போன்ற கட்டுக்கதைகள் நிஜமாகவே நடந்தது என்று வைத்துக் கொண்டாலும்மார்க்கத்திற்கு எதிரானஇஸ்லாம் கடுமையாக எதிர்க்கின்ற துறவற வாழ்வைஅபுஹனீஃபா மேற்கொண்டார் என்று தான் பொருளாகும்அதன் மூலம் இஸ்லாத்திற்கே மாற்றமான செயல்பாட்டினை அவர் கொண்டிருந்தார் என்கிற முடிவுக்கு தான் நம்மால் வரமுடியும்.

அதே துர்ருல் முதாரில் இவர்கள் எழுதி வைத்திருக்கும் மற்றுமொரு கட்டுக்கதைஅபு ஹனீஃபா இமாம் நூறு முறை அல்லாஹ்வை கனவில் கண்டார்களாம்.
இதுவும் அல்லாஹ் கூறும் தன் சிஃபத்திற்கு எதிரானது.
இவ்வுலகில் வாழும் காலம் வரை எவருக்குமே அல்லாஹ் காட்சித் தர மாட்டான்.
மூஸா நபி அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்று கேட்ட போது கூடஅது உமக்கு சாத்தியமில்லை என்று கூறி தமது ஒளியை மலை மீது செலுத்தி அந்த மலை தூள் தூளாகசிதறுவதை எடுத்துக் காட்டி அல்லாஹ் சொல்லியிருப்பான்.
நேரில் தான் பார்க்க முடியாதுகனவில் பார்க்கலாம் என்று இருந்தால்தன்னை பார்க்க வேண்டும் என்று மூஸா நபி கேட்ட போதுஅவர்களது கனவில் அல்லாஹ் காட்சிதந்திருப்பான்.

ஆகமூஸா நபிக்கே இயலாத ஒன்று அபு ஹனீஃபாவுக்கு இயன்றது என்றால் இவர்கள் அபு ஹனீஃபாவுக்கு தரக்கூடிய அந்தஸ்த்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அபு ஹனீஃபா இமாமை நபிமார்களுக்கு இணையாக (அதை விடவும் மேலாகதான் இவர்கள் பின்பற்றுகின்றனர்.

அபு ஹனிஃபா தமது நூறாவது ஹஜ்ஜின் போது காஃபாவினுள் நுழைவதற்கு அதன் காவலர்களிடம் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாராம்.
நுழைந்தவுடன் அல்லாஹ்வை வணங்கினாராம்.
எப்படி தெரியுமா?
வலது காலை தூக்கி இடது காலின் மீது வைத்து நின்றவாறு சிறிது நேரமும்பின் இடது கலை வலது காலின் மீது வைத்தவாறு நின்று சிறிது நேரமும் வணங்கினார் என்று எழுதிவைத்துள்ளனர்.

இது ஒரு முஸ்லிம் செய்யக்கூடிய செயலாஇப்படி அல்லாஹ்வை வணங்குமாறு குர் ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்பட்டிருக்கிறதா?

இதை விட வேடிக்கை என்னவென்றால்இவ்வாறு வணங்கிய பிறகு அல்லாஹ்விடம் அபு ஹனிஃபா பேசினாராம்.
அல்லாஹ்வேஉன்னை அறிய வேண்டிய விதத்தில் தான் என்னால் அறிய முடியவில்லைஆனால் வணங்க வேண்டிய முறையில் வணங்கி விட்டேன்..

என்றாராம்.

அதாவதுஒற்றை காலில் நின்று சாமியர்களைப் போல் தவம் நின்றது தான் அல்லாஹ்வை வணங்க வேண்டிய முறைப்படி வணங்குதல் என்பதன் பொருளாம்.
எந்த அளவிற்கு அல்லாஹ்வையும்என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என்று கூறிய நபி (சல்அவர்களையும் கொச்சைப்படுத்துகின்றனர் என்பதைநாம் புரிய வேண்டும்.

சரிஇப்படியெல்லாம் செய்யலாம் என்பதற்கு குர் ஆனிலும் ஆதாரம் இல்லைஹதீஸிலும் ஆதாரம் இல்லை.
அப்படியிருக்கும் போது அபு ஹனீஃபாவின் இந்தசெயலுக்கு  அல்லாஹ்வின் வஹீயில் என்ன ஆதாரம் என்று எவராவது கேட்டால் என்ன பதில் சொல்வது?

இதற்கு இவர்கள் கண்டுபிடித்த சித்தாந்தம் தான் அபு ஹனீஃபாவுக்கே தனி வஹீ இறங்குகிறது என்கிற பச்சை ஷிர்க்கான சித்தாந்தம்.

அதாவதுஉன்னை வணங்க வேண்டிய முறையில் வணங்கி விட்டேன் என்று காபாவினுள் நின்று அபூ ஹனீஃபா சொன்ன போதுஅங்கிருந்து ஒரு குரல் கேட்டதாம். "அபுஹனீஃபாவேநீ என்னை சரியான முறையில் வணங்கி விட்டாய்"!!

அப்படியானால் அல்லாஹ் இவரிடம் நேரடியாக பேசியிருக்கிறான் என்று சொல்ல வருகிறார்கள்நபி (சல்அவர்களுக்குப் பிறகு அல்லாஹ் எந்த மனிதரிடமும் பேச மாட்டான்என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் ஹதீஸ்களில் இருக்கின்றன என்பது ஒரு பக்கம்அது போகஇவர்கள் மதிக்ககூடிய அபுஹனீஃபாவை விடவும் பல மடங்கு சிறந்தவர்களானசஹாபா பெருமக்கள் எவரிடமாவது அல்லாஹ் பேசியிருக்கிறானாஅதுவும் இல்லை.

அதை விடஇவ்வாறு அல்லாஹ் பேசியதோடு மட்டும் நிற்கவில்லையாம்.
அபு ஹனீஃபாவேஇன்று உனது பாவங்கள் அனைத்தையும் நான் மன்னித்து விட்டேன்தோடுஉன் மதுஹபை எவரெல்லாம் பின்பற்றுகிறார்களோ அவர்கள் அனைவரது பாவங்களையும் மன்னித்துவிட்டேன் என்பதாக அல்லாஹ் சொல்வதாக எழுதி வைத்திருக்கிறனர்.

ஹனஃபி மதுஹபிற்கு எப்படி ஆள் சேர்க்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா?

இங்கே வந்தால் பாவ மன்னிப்பு நிச்சயம்கியாமத் நாள் வரை நீ எந்த தப்பைச் செய்தாலும்மரணிப்பதற்கு முன் அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னித்து விடுவான் என்பதாகஅபு ஹனீஃபாவே அல்லாஹ்விடம் நேரடியாக ஒப்பந்தமிட்டு இருக்கிறார் என்கிற பொய்புளுகை தங்கள் நூலில் எழுதி வைத்துஅதை கொண்டு கூட்டம் சேர்த்து வயிறு வளர்க்கும்வழிகேடர்கள் தான் இந்த மதுஹபுகாரர்கள்.

சரிஅல்லாஹ் அபு ஹனீஃபாவிடம் இவ்வாறு வெறுமனே பேச மட்டும் தான் செய்தானா?என்று பார்த்தால் அத்தோடு அல்லாஹ் நிறுத்தவில்லையாம்.

99 முறை அல்லாஹ்வை கனவில் பார்த்து விட்டு நூறாவது முறை காணும் முன்பு அபூஹனீஃபா அல்லாஹ்விடம் ஒரு கோரிக்கை வைத்தாராம்.அதாவதுஅடுத்த முறை கனவில் நீவரும் போது நரத்திலிருந்து என்னை தற்காத்துக் கொள்வதற்கு நான் ஓத வேண்டிய திக்ர்ஒன்றை நீ கற்றுத் தர வேண்டும்என்று கேட்டாராம்.

அல்லாஹ்வும் அவர் கேட்டதைப் போன்று திக்ர் ஒன்றை கற்றுக் கொடுத்தானாம்.

இப்படியொன்று நடந்திருந்தால் இது வஹியா இல்லையா?

திக்ர் ஒன்றை புதிதாக அல்லாஹ் சொல்லிக் கொடுத்தான் என்றால் இந்த திக்ர் நபி (சல்)அவர்கள் சொல்லித் தந்ததாஇல்லை.
இந்த திக்ர் அவர்களுக்கு தெரியுமாசஹாபாக்களுக்கு தெரியுமா?

இவர்களுக்கெல்லாம் தெரியாத ஒரு சட்டத்தை அபு ஹனீஃபாவுக்கு அல்லாஹ் அருளுகிறான்என்றால் அவருக்கு தனி மார்க்கம் இறக்கப்படுகிறது என்கிற மாபாதக நம்பிக்கை இதில்விளைகிறதா இல்லையா?

இந்த மார்க்கத்தை இன்றுடன் அல்லாஹ் பூர்த்தியாக்கி விட்டான் என்று தமது இறுதி ஹஜ்ஜின்போது நபி (சல்அவர்கள் பிரகடனப்படுத்தினார்களேஅந்த அறிவிப்புக்கு இது முரணாஇல்லையா?

அப்படியானால்காதியானி கொள்கையையும் நான் தான் நபி என்று கூறித் திரிந்த மிர்சாகுலாமையும் கண்டிக்கின்ற தகுதி எள்ளளவாவது இந்த மதுஹபுகாரர்களுக்கு இருக்கிறதா?

முஹம்மது நபிக்கு பிறகும் நபி வருவார்அவர்களுக்குப் பிறகும் வஹீ இறங்கும் என்பதானஅப்பட்டமான வழிகேட்டு கொள்கையை இந்த சமூகத்தில் ஊடுருவ செய்த இவர்கள் தான்காதியானி கொள்கையை கண்டு கொந்தளிக்கிறார்களாம்.
கேவலமாக இல்லை?

சரிஅபு ஹனீஃபா குறித்து இவர்கள் எழுதி வைத்திருக்கும் கட்டுக்கதைகளின் நிலைஇதுவென்றால்இவர்கள் அவ்லியாவாக வணங்கும் அப்துல் காதர் ஜைலானி இருக்கிறாரே,அவரது வண்டவாளத்தையும் சற்று பார்த்து விடுவோமே..

யாகுத்பா எனும் மவ்லூது நூலில் இவர்கள் அப்துல் காதர் ஜைலானிவை நோக்கி அல்லாஹ் பேசுவதாக எழுதி வைத்திருக்கும் கட்டுக்கதையை பாருங்கள்.

அல்லாஹ் இந்த ஜைலானியை நோக்கி பேசினானாம்..

"மகத்தான இரட்சகரே, என்னோடு நெருக்கமாக வாரும், நீர் தான் எனது கலிஃபாவாக இருக்கிறீர்"

இது ஒன்று போதாதா இவர்களின் வழிகேட்டுக் கொள்கையை புரிய?

நபி (சல்) அவர்களுக்குப் பிறகு வேறு எவரோடும் அல்லாஹ் பேச மாட்டான் என்று இருக்கும் போது, சொர்க்கத்திற்குரியவர்கள் என்று அல்லாஹ்வால் நன்மாராயம் பெற்ற சஹாபாக்களிடையே கூட பேசாத அல்லாஹ், நபியின் காலத்திற்கும் 500 வருடங்கள் கழிந்து வந்த இந்த அப்துல் காதர் ஜைலானி என்பவருடன் பேசினான் என்று சொன்னால் அப்பட்டமான ஷிர்க் இல்லையா இது?
அதிலும் கூட, அல்லாஹ்வை இழிவுப்படுத்தும் போக்கினை கவனியுங்கள்,
அப்துல் காதர் ஜைலானியை அல்லாஹ் தனது கலிஃபாவாக தேர்வு செய்தானாம்.
கலிஃபா என்றால் யார்? மாற்றான நபர் என்று பொருள், பிரதி நிதி என்று பொருள்.
ஒருவரை நான் கலிஃபாவாக நியமிக்கிறேன் என்று சொன்னால் நான் இல்லாத நேரத்தில் அல்லது நான் விரும்புகின்ற நேரத்தில் நான் செய்யக் கூடிய பணிகளை அவர் செய்வார் என்று நான் நியமிப்பதாக பொருள்.
நபி (சல்) அவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அபுபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்றோர் எல்லாம் கலிஃபாக்கள் என்று இதன் காரணமாக தான் அழைக்கப்பட்டார்கள்.
ஜனாதிபதி என்கிற அந்த பொறுப்பில் நபியின் காலத்திற்குப் பிறகு இவர்கள் தான் பொறுப்பாளர்கள்.
அந்த வகையில், அல்லாஹ்வுக்கு இந்த அப்துல் காதர் ஜைலானி தான் பிரதினிதி என்றால், அல்லாஹ் செய்யக் கூடிய காரியங்களை இவரும் செய்வார் என்று அர்த்தமாகிறது.

இத்தகைய பச்சை ஷிர்க்கை தான் மார்க்கமாக, மவ்லூது என்று சொல்லி பாட்டு பாடி வயிறு வளர்க்கின்றனர்.

சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட சஹாபாக்களுக்கே இல்லாத இந்த அந்தஸ்து அப்துல் காதர் ஜைலானிக்கு இருக்கிறது என்று சொல்கிறார்களே, இந்த அப்துல் காதர் ஜைலானி என்ன சஹாபாக்களைப் போல் சொர்க்கத்தை கொண்டு நற்செய்தி கொடுக்கப்பட்ட்டவரா?
அல்லாஹ்வின் நேசர் என்று அல்லாஹ் சான்றிதழ் வழங்கியிருக்கிறானா?

குறைந்த பட்சம் நல்லவர் என்பதற்காவது எந்த உத்திரவாதமாவது உள்ளதா?
அவர் நல்லவராக இருந்து நாளை சொர்க்கத்திற்கும் செல்லலாம், கெடவராக இருந்து அல்லாஹ்வால் நாளை நரகப்படுகுழிக்கும் தள்ளப்படலாம்.
நாளை மறுமையில் தான் இது நமக்கு தெரிய வரும் போது, நபிமார்களுக்கும் சஹாபாக்களுக்கும், தாபியீன்களுக்கும், ஏன், இவர்கள் தலை மீது வைத்து கொண்டாடும் ஷாஃபி இமாம், அபு ஹனீஃபா இமாம்களுக்கும் மேலாக இவரை மதிக்கிறார்கள் என்றால் இதில் மறைந்திருக்கும் வெளிப்படையாக இணைவைப்புக் கொள்கையை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

இத்துடன் நிற்கவில்லை.

இந்த அப்துல் காதரை பற்றி அல்லாஹ் சொல்வதாக இந்த வழிகேடர்கள் எழுதி வைத்திருப்பதை பாருங்கள்.

"அல்லாஹ் சொல்கிறானாம், அப்துல் காதர் ஜைலானியினுடைய‌ கால்கள் உலகில் உள்ள ஒட்டு மொத்த அறிஞர் பெருமக்களின் தலை மீது இருக்கிறது, இதை அல்லாஹ்வும் அனுமதித்து விட்டான்"

எத்தனை ஆணவமிக்கப் பேச்சு என்று பாருங்கள். எவர் உள்ளத்தில் கடுகளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என்று நபி (சல்) அவர்கள் கூறியிருக்க, இந்த அப்துல் காதர் சொன்னதாக இவர்கள் எழுதி வைத்திருப்பதை கவனித்தீர்களா?

சரி, இது ஒரு பக்கமிருக்க, இவரது கால் உலகிலுள்ள எல்லா அவ்லியாக்களின் தலை மீது இருக்கிறது என்று சொன்னால் அந்த அவ்லியாக்கள் பட்டியலில் யாரெல்லாம் அடங்குவார்?
அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் அடங்குவார்கள், உமர் (ரலி) அவர்கள் அடங்குவார்கள், எல்லா சஹாபா பெருமக்களும் அடங்குவார்கள்..
ஆக, இவர்களெல்லாம் அந்த அப்துல் காதர் ஜைலானியின் காலுக்கு கீழ் தான் என்பது தான் இந்த மதுஹபுவாதிகளின் கொள்கை.

இதில் மற்றுமொரு உச்சகட்ட்ட வேடிக்கை, அவ்வாறு அப்துல் காதர் ஜைலானியில் கால் அவ்லியாக்களின் தலைக்கு மேல் இருந்தது என்று உளரிக் கொட்டியதோடு அவர்கள் நிற்கவில்லை,
தொடர்ந்து எழுதுகிறார்கள், ஒட்டு மொத்த அவ்லியாக்களும் அதனை ஏற்றுக் கொண்டார்களாம்.

சஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்று நாம் சொல்லும் போது, நம்மைப் பார்த்து, இவர்கள் சஹாபாக்களை திட்டுகிறார்கள் என்று சொன்ன இந்த வழிகேட்டுக் கூட்டம் தான் சஹாபாக்களை அற்பத்திலும் அற்பமான அப்துல் காதரின் காலுக்கு கீழ் கொண்டு வந்து அவர்களை இழிவுப்படுத்துவது, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்கள் நம்மை காஃபிர்கள் என்கிறார்கள்.
சஹாபாக்களை மதிப்போம் ஆனால் அவர்களை பின்பற்ற மாட்டோம் என்று சொன்ன நாம் காஃபிர்களா அல்லது சஹபாக்கள் என்றாலும் அவர்கள் அப்துல் காதரின் காலுக்கு கீழ் தான் என்று சொல்பவர்கள் காஃபிர்களா?
அல்லாஹ்வுக்கு இணையாக எவரையும் கருத மாட்டோம் என்று சொல்லும் நாம் காஃபிர்களா அல்லது அப்துல் காதர் ஜைலானியை அல்லாஹ் தனது பிரதினிதியாக்கினான் என்றும், வஹீ வராத அபு ஹனீஃபாவுக்கெல்லாம் வஹீ வந்தது என்கிற பச்சை ஷிர்க்கை பிரச்சாரம் செய்கிற இவர்கள் காஃபிர்களா?
என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதே அப்துல் காதர் ஜைலானி அல்லாஹ்விடம் முரீது செய்து மரணிப்பதற்கு முன் பாவமன்னிப்பு பெற்றவராக தான் மரணிப்பார் என்று முஹைதீன் மவ்லீதில் இவர்கள் எழுதி வைத்திருப்பது இவர்களது குஃப்ர் கொள்கைக்கான மற்றுமொரு சான்று.

இவர்களை விட காதியானிகள் எவ்வளவோ தேவலாமே.. இந்த அளவிற்கு அப்பட்டமான ஷிர்க்கை அவர்கள் கூட சொல்லவில்லையே.. !நபிகள் நாயகமே இறுதி நபி :தான் தான் இறுதி நபி என்பதாக நபி (சல்) அவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தூதுத்துவமும் நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டது. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை நபியும் இல்லை. (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உடனே நபியவர்கள் என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளது) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே (முபஸ்ஸராத்) நற்செய்திகள் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி (2198)

இதிலிருந்து, முஹம்மது நபியோடு நபிமார்களின் வருகை முடிந்து விட்டது என்பதையும், அவர்கள் மூலமாக அல்லாஹ் அருளிய வஹீ செய்தியும் அவர்களுடன் முற்றுப்பெற்று விட்டது என்பதையும் அறிய முடிகிறது.

இதுவல்லாமல், வேறெந்த மனிதரிடமும் அல்லாஹ் பேச மாட்டான், அப்படி ஏதேனும் பேசுவதாக இருந்தால் அவை வஹியாக இருக்காது, அபு ஹனீஃபா திக்ரை அல்லாஹ்விடமிருந்து வாங்கினார் என்று எழுதி வைத்திருக்கிறார்களே, அது போன்ற புது சட்டதிட்டங்களை தருவதாக இருக்காது, மாறாக, பிற்காலத்தில் நமது வாழ்வில் நாம் சந்திக்க இருக்கும் நல்ல தகவல்கள் குறித்த முன்னறிவிப்பு மட்டும் கனவின் மூலமாக அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பான்.

பதினொன்று நட்சத்திரங்களும் சூரியன், சந்திரனும் தமக்கு அடிபணிவதாக யூசுஃப் நபி சிறு வயதில் கண்ட கனவு பற்றி அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
அதைப் பற்றி அவர்கள் தமது தந்தை யகூப் நபியிடம் விளக்கம் கேட்ட போது, பிற்காலத்தில், உனது பெற்றோரும், உனது பதினொன்று சகோதரர்களும் உனக்கு கீழ் வருவார்கள், (யூச்ஃப் நபி ஆட்சியாளராக ஆவார்) என்பதற்காக முன்னறிவிப்பு தான் அது என்று கூறுகிறார்கள்.
இது போன்ற முன்னறிவிப்புகளை அல்லாஹ் தான் நாடியோருக்கு கனவின் மூலமாக இன்றைக்கும் தெரிவிப்பான்.
ஆனால் இவையெல்லாம் மார்க்க சட்டங்கள் அல்ல.
அபுஹனீஃபா திக்ரைப் பெற்றதாக இவர்கள் கூறுகிறார்களே, அது போன்ற மார்க்க சட்டம் அல்ல, மரணம் வரை பாவ மன்னிப்பு பெற்றார் என்று எழுதி வைத்திருக்கின்றார்களே, அது போன்ற மார்க்க சட்டம் எவருக்கும் வராது என்பதை இந்த ஹதீஸ் உறுதியாக விளக்குகின்றது.

மற்றுமொரு ஹதீஸில், அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்கள் அலி (ரலி) அவர்களைப் பார்த்து பேசும் போது, எப்படி மூஸாவுக்கு ஹாரூன் கிடைத்தாரோ அது போன்று எனக்கு நீ கிடைத்திருக்கிறாய் என்று சொல்கிறார்கள்.

சற்றே திக்கு வாய் எனும் குறை உள்ளவராய் இருந்த மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம், தெளிவாக எடுத்துச் சொல்லும் பொருட்டு தம்மோடு இன்னொருவரையும் தருமாறு கேட்கிறார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ், ஹாரூன் நபியை அவர்களோடு அனுப்புகிறான்.
அது போன்று, நபி (சல்) அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக அலி (ரலி) அவர்கள் நிற்கிறார்கள் என்கிற பொருள் பட நபி (சல்) அவர்கள் இந்த ஒப்பீட்டினை சொல்லி விட்டு, இதன் மூலம் ஹாரூன் நபியைப் போல் அலி (ரலி) அவர்களும் நபி தானோ? என்று எவருக்கும் சந்தேகம் எழுந்து விடக் கூடாது என்பதற்காக அதனையும் தொடர்ந்து தெளிவுப்படுத்துகிறார்கள்.

மூஸாவுக்கு ஹாரூன் கிடைத்தது போல் எனக்கு நீ கிடைத்திருக்கிறாய் என்றாலும், எனக்குப் பிறகு வேறு நபி வர முடியாது, நீ நபி இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறார்கள்.

இந்த செய்தி முஸ்லிம் 4418 இல் பதிவாகியுள்ளது.

இறுதி நபித்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர் ஆனில் சொல்லும் போது,

مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏ 
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (33:40)

இந்த வசனத்தில் "நபிமார்களுக்கு முத்திரை" என்று வரும் இடத்தில் அரபு மூலத்தில் "ஹாத்தமு நபி என்று உள்ளது.

நபிமார்களுக்கெல்லாம் முத்திரையாக, இறுதியாக வந்தவர்கள் தான் முஹம்மது நபி (சல்) அவர்கள் என்கிற கருத்தை இந்த வசனம் தெளிவாக சொல்கிறது.

இதை மறுக்க முயலும் இந்த காதியானிக்கூட்டம், ஹாத்தமு நபி என்றால் இறுதி நபி என்றும், இதற்கு "சிறப்புக்குரிய நபி" என்கிற அர்த்தமும் உள்ளது எனவும், முஹம்மது நபிக்கு பிறகு வேறு நபி வருவதை இது தடுக்காது எனவும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இது போன்ற வழிகேடர்கள் இந்த நூற்றாண்டில் தோன்றுவார்கள் என்பதை நபி (சல்) அவர்கள் முன்கூட்டியே அறிந்து வைத்ததனாலோ என்னவோ, இவர்களுக்காகவே அருளப்பட்டது போன்ற சில ஹதீஸ்களை நபி (சல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதி (2145)

இங்கும் அதே ஹாத்தமுன் நபி என்கிற வாசகத்தை பயன்படுத்திய நபி (சல்) அவர்கள், ஹாத்தமுன் நபி என்றால் சிறப்புக்குரிய நபி இல்லை என்பதை தெளிவுப்படுத்தும் பொருட்டு "எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது" என்று அறிவிக்கிறார்கள்.

மற்றுமொரு ஹதீஸைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, "இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டி ருக்கக் கூடாதா?'' என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்கüல் இறுதியானவன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3535)

நபிமார்கள் தான் ஒரு கட்டிடத்தின் செங்கல் என்றால், அப்படியான ஒரு கட்டிடத்தில் ஒரேயொரு செங்கல் தான் மிச்சமிருந்தது என்றும், அது கூட தன்னைக் கொண்டு (முஹம்மது நபியைக் கொண்டு) நிறைவு பெற்று விட்டது என்றும் சிறு குழந்தையும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான வாசகங்களைப் பயன்படுத்தி தனம்முப் பிறகு எந்த நபியும் கிடையாது என்பதை நபி (சல்) அவர்கள் சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் விளக்குகிறார்கள்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக