திங்கள், 12 ஆகஸ்ட், 2013

ஜமாலி ஹசரத் VS சலபி ஹசரத்


ஜமாலி ஹசரத் : மக்களே.. நூறு ரூபா காணிக்கை, அப்புறம் கொப்பற தேங்கா எல்லாம் கொண்டுகிட்டு, எனது வயிற்று வலியை போக்குங்க அவ்லியானு அதோ அந்த தர்கால அடங்கியிருப்பவரு கிட்ட நாம கேட்டா நம்ம வயிற்று வலியை அவர் போக்குவார்.

பாமரர் : ஹசரத், ஹசரத்,அது எப்படி ஹசரத்? நேரடியா மருந்து மாத்திரை மூலம் போக்குவார் அப்படின்னு சொன்னா நம்ப முடியுது.., எந்த புற சாதனமும் இல்லாம எப்படி ஹசரத் அவர் குணமாக்குவார்? இது அல்லாஹ்வின் ஆற்றலல்லவா ஹசரத்? இப்படி நம்புவது ஷிர்க் இல்லையா ஹசரத்?

ஜமாலி ஹசரத் : தப்பு தப்பு.. அப்படியெல்லாம் பேசக்கூடாது தம்பி.. நாம என்ன அவருக்கே இந்த சக்தி இருக்குது அப்படினா சொல்றோம்?? அல்லாஹ் அந்த சக்தியை அவருக்கு வழங்கியிருக்கிறான். அல்லாஹ்வின் ஆற்றலால் அதை அவர் செய்கிறார். அப்படிதான் சொல்றோம்.
எத சொல்றதா இருந்தாலும், "அல்லாஹ் இந்த சக்திய அவருக்கு குடுத்திருக்கான்" அப்படிங்கற இந்த பிட்ட சேர்த்து விடு, எதுவுமே தப்பாகாது.. சரியா !

பாமரர் : சரிங்க ஹசரத்.. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். உங்க அறிவே அறிவு !

சலபி ஹசரத் : பக்தர்களா, இங்கிருந்துகிட்டே யார் வேணாலும் எங்கேயிக்கிருக்ககூடிய ஒருவனையும் என்ன வேணா செய்யலாம். கை காலை முடக்கலாம், பைத்தியமாக்கிடலாம்.. நமக்கு தேவை, அந்த ஆளோட முடி அல்லது நகம் மட்டும் தான் சரியா.. ?

பக்தன் : ஹசரத் ஹசரத், அதெப்படி முடியும் ஹசரத் ? இருந்த எடத்துலே இருந்துகிட்டே இன்னொருத்தனோட கையை முடக்குறது அல்லாஹ்வோட சக்தி இல்லையா ஹசரத் ?

சலபி ஹசரத் : பக்தா, அப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாதுப்பா.. நாம என்ன அவருக்கே இந்த சக்தி இருக்குதுன்னா சொல்றோம்? அல்லாஹ் அந்த சக்திய கொடுப்பான் பக்தா..
அல்லாஹ் கொடுக்கும் போது அதை அவர் செய்வார்.
இப்படி போய் சொல்லு சரியா..
எப்பவுமே, இத அவருக்கு செய்ய முடியும் னு மொட்டையா சொல்லாத, அல்லாஹ் அந்த சக்திய அவருக்கு கொடுப்பான்னு ஒரு பிட்ட எப்போதும் சேர்த்துக்கோ சரியா??

பக்தன் : அட சூப்பர் ஹசரத்.. பிரமாதம் ! உங்கள் அறிவோ அறிவு.. இந்த ஒரு பாயிண்ட் போதும், ஒரு கை பாத்துடறோம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக