சனி, 17 ஆகஸ்ட், 2013

ஆணும் பெண்ணும் சமமா?



ஆணும் பெண்ணும் எல்லா விதத்திலும் சமம் என்கிற எண்ணம் பல குழப்பங்களுக்கும் காரணமாய் அமைகிறது.

பல விஷயங்களில் ஆணும் பெண்ணும் சமமில்லை !!

அது தான் உலக நியதி. அது தான் இயற்கையான அமைப்பு. அது தான் இயற்கை மார்க்கம் இஸ்லாமும் சொல்வது.

மேலும், இதை புரிந்து கொண்டால் ஆணிடம் ஆணாதிக்கம் வெளிப்படாது என்பது மற்றுமொரு ஆச்சர்ய உண்மை. 
ஆணும் பெண்ணும் சமம் என்கிற வறட்டு சித்தாந்தம் போலிகளால் மொழியப்பட்டு வருவது ஆண்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படாதது.

இந்த போலி தத்துவத்தை நம்புகிற பெண்கள், தங்கள் இயல்பையும் மீறி ஆண்களிட்டம் வலிமை காட்ட முற்படும் போது ஆண்களால் சகித்துக்கொள்ள முடியாது.
எனக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீ எனக்கு சமமாக பேசுகிறாயா? என்று பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவது இதன் காரணமாகவே நடக்கிறது.

இதற்கு மாற்றமாக, ஆண்கள் பெண்களை நிர்வகிக்க கூடியவர்கள், பெண்கள் ஆண்களுக்கு கட்டுப்பட வேண்டியவர்கள் என்கிற உண்மையை உண்மையாக சமூகத்தில் போதிக்கும் போது அதை பெண்கள் உள்வாங்கி அதற்கேற்றார்போல கணவன்மார்களிடம் நடக்கிறார்கள்,
ஆண்களும், தாம் நிர்வகிக்கிறோம் என்பதால் அவளை அனாவசியமாக அதிகாரம் செலுத்த கூடாது என்று எண்ணுகிறான்.

மனித இயல்பை சரியாய் புரிந்து சட்டம் இயற்ற இறைவனால் தான் முடியும் என்கிற வகையில் இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இதுவே சான்று பகர்கிறது !

இஸ்லாத்தில் பெண்கள், மற்ற சமூகத்து பெண்களை விடவெல்லாம் மிக கண்ணியமாக வாழ்வதற்கு இந்த தத்துவமே காரணம்.

மற்ற சித்தாந்தங்களை விடவும் இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் குறைவு, இஸ்லாத்தில் வரதட்சணை கொடுமை குறைவு, இஸ்லாத்தில் விவாகரத்து குறைவு, இஸ்லாத்தில் சின்ன வீடு என்று ஏமாற்றுதல் குறைவு, இன்னும் ஏராளமான வகைகளில் இஸ்லாமிய பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று கண்ணியத்துடன் வாழ்கிறார்கள்.
மற்ற எந்த சித்தாந்தங்களிலும் பெண்களுக்கு இந்த கண்ணியம் இல்லை என்பதை இன்று உலகம் புரிய ஆரம்பிக்கிறது.. இதற்கு, ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமம் என்கிற இவர்களது வறட்டு தத்துவமும் ஒரு காரணம்.

இன்னும் சொல்லப்போனால் ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமம் என்கிற போலி தத்துவத்தை மக்களிடம் பிரசாரம் செய்வதால் தான் இயல்பாய் தோன்றும் ஆணாதிக்கம் கூட சமூகத்தால் குறையாய் பார்க்கப்படுகிறது !

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவான வற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக