சனி, 17 ஆகஸ்ட், 2013

பேரழிவுகளிலிருந்து அல்லாஹ் ஏன் மக்களை காக்கவில்லை ?


பேரழிவுகள் வரும் போதெல்லாம் அல்லாஹ் காப்பாற்றுவான், எந்த சிரமமும் மனிதனுக்கு ஏற்படாமல் அவன் காப்பான், மனிதனுக்கு எந்த நட்டமும் இன்றி, லாபமும் மகிழ்ச்சியையும் மட்டுமே அவன் தருவான் என்று இருக்குமானால் இந்த உலகம் இயங்காது.. அப்படி ஒரு உலகத்தை இறைவன் படைக்கவும் தேவையில்லை..

உலகில் உள்ள அனைவரது சட்டை பையிலும் தலா ஆயிரம் ருபாய் பணம் என்றால், யாரும் எந்த தொழிலும் செய்ய மாட்டார்கள், எந்த புது கண்டுபிடிப்புகளும் வெளியாகாது, ஏனெனில், ஒருவரை ஒருவர் சார்ந்தது தான் இவ்வுலக வாழ்க்கை எனும் போது, அனைவரையும் போல நானும் சமமானவன் என்கிற எண்ணம் எனக்கு வரும் போது எந்த வேலையை நான் செய்தாலும் பிறருக்காக நான் செய்வதாகவே இருக்கும், அதை நான் விரும்ப மாட்டேன்.

நோய்கள் பெருகும் போது, நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கிறது. ஒருவனை ஏழையாகவும் ஒருவனை செல்வந்தனாகவும், ஒருவனை கண் பார்வை இல்லாதவனாகவும் இன்னொருவனை கண் மருத்துவராகவும், ஒருவனை வியாபாரியாகவும் இன்னொருவனை, பொருட்களை வாங்குபவனாகவும், என இவ்வாறு வேறுபாடுகளுடன் மனித குலத்தை படைத்தால் தான் உலகம் நீடித்து செல்லும் !

- இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் உரையில், சகோ. பிஜேயின் விளக்கங்களை மையமாக வைத்து தொகுக்கப்பட்டது இது.
-------------------------------------------------------------------------------------------

பேரழிவுகளிலிருந்து அல்லாஹ் ஏன் மக்களை காக்கவில்லை என்கிற இது போன்ற அர்த்தமற்ற கேள்வியை கேட்கிறவர்கள், தன்னகத்தில் இறைவன் இருக்கிறான், மனிதனும் கடவுளும் ஒன்று தான் என்கிற கொள்கையில் இருக்கிறார்கள்.
கடவுளை தன்னகத்தே கொண்டவனுக்கு சுயமாக அந்த அழிவிலிருந்து தன்னை ஏன் காத்துக்கொள்ள முடியவில்லை என்கிற கேள்வி தங்களை நோக்கி வரும் என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக