செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

கறந்து குடித்தால் பிள்ளை ஆகலாமா?

தாய் - பிள்ளை உறவு ஏற்பட
தாயின் மார்பில் வாய் வைத்து உறிஞ்சிக் குடிக்க வேண்டும்
அதுவும் வயிறார (பசி தீரும் அளவு) குடிக்க வேண்டும்
அது கூட இரண்டு வயது வரை தான் இருக்க வேண்டும்,

என்றெல்லாம் பல நிபந்தனைகளை அல்லாஹ் இட்டுள்ள போது

20 வயதை கடந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் பால் குடித்து மகனாக போகிறேன் என்று சொன்னால் அதை விடவும் ஒரு ஆபாசம், வக்கிரம் இருக்க முடியாது. இப்படியாக எந்த செய்தி இருந்தாலும் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் !

வாய் வைத்து குடிக்கவில்லை, கறந்து தான் குடிப்பார் என்று சொல்லும்படியான எந்த வார்த்தையும் அந்த செய்தியில் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கறந்து குடிப்பதினால் தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்று அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, கறந்து குடித்து பிள்ளை ஆகிக் கொள்வார் என்கிற கூற்று இங்கு பொருளற்றதாகிறது.

இரண்டு வயதிற்கு மேல், அதுவும் வாய் வைத்து உறிஞ்சி குடித்தாலே தவிர தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்பது நேரடியான ஹதீஸ் (பார்க்க திர்மிதி 1072)

அவ்வாறிருக்க, மீசையும் தாடியும் வளர்த்த இளைஞனான சாலிமுக்கு வாய் வைத்து பால் குடிக்க நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்,

கறந்து குடிப்பதினால் பிள்ளை ஆகவும் இயலாது.

பால் கொடுக்க சொல்கின்ற இடத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை "அர்ளியீஹி" என்பதற்கு கறந்து குடித்தல் என்கிற பொருள் இல்லை.

விபச்சாரம் செய்து விட்டதற்கு வலிய வந்து தண்டனை கேட்கும் பெண்ணிடம் முதலில் குழந்தை பெற்றுக் கொண்டு வரும்படியும், பின்னர், குழந்தை பால்குடியை மறக்கும் வரை பால் புகட்டி விட்டு வரும்படியும் நபியவர்கள் சொல்கின்ற ஹதீஸில் (முஸ்லிம் 3500) இதே அர்ளியீஹி என்கிற வார்த்தை தான் உள்ளது, இதற்கு வாய் வைத்து குறிஞ்சி குடித்தல் என்று எவரும் பொருள் செய்ய மாட்டார்கள்.

ஒன்று, குர் ஆனுக்கு முரணாக நபியவர்கள் சட்டம் சொன்னார்கள் என்று சொல்ல வேண்டும்
அல்லது, ஆபாசத்தை ஏவினார்கள் என்று சொல்ல வேண்டும்.
(நவூதுபில்லாஹ்)
இரண்டுமே மார்க்கத்திற்கு எதிரான நிலைபாடு என்பதால், வேறு வழியின்றி இறுதியாய் இவர்கள் வந்து நிற்கும் இடம், இது சாலிமுக்கு மட்டுமுரிய சட்டம் என்பது தான்.

ஆனால், இந்த நிலைபாட்டுக்கும் தெளிவான மறுப்பு இருக்கிறது.

முஸ்லிம் 2881 இல் வரக்கூடிய மற்றொரு ஹதீஸில், இன்னொரு சிறுவன் ஆயிஷா அவர்கள் வீட்டுக்கு வருவது பற்றி உம்மு சலமா அவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் போது, ஆயிஷா அவர்கள், சாலிம் விஷயத்தை ஆதாரமாக காட்டி அதை நியாயப்படுத்துவது போல் உள்ளது.

இது, அந்த சட்டம் சாலிமுக்கு மட்டுமுரியது என்பதற்குரிய மறுப்பாகும்.

ஆக, என்ன தான் குட்டிக்கரணம் அடித்தாலும் நியாயப்படுத்தவே இயலாத ஹதீஸ் சாலிம் பால் குடி ஹதீஸ்.

மார்க்கத்திற்கு முரணாக இவ்வாறிருக்கும் ஒன்றிரெண்டு ஹதீஸ்கள் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை என தூக்கி வீசுவதே ஈமானுக்கு பாதுகாப்பானது !

நடு சென்டர்களின் சிறு பிள்ளைத்தனம்


பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சக நண்பர்களுடன் விளையாடுகிற போது, குழந்தைகளுக்கே உரித்தான கர்வங்கள் வெளிப்படும்.

கண்ணாம்மூச்சி ஆடுகையில், தம்மால் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்கிற நிலை ஏற்பட்டு விட்டாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் விரும்பாது.
"போடே நா உன்ன அப்பவே பாத்துட்டேன்", 
"இங்க தானேலே ஒளிச்சிருந்தே, ஃபஸ்ட் உன்ன தாம்லே பாத்தேன்.."

என்று தமது தோல்வியை மறைக்க, தங்களுக்கே உரித்தான பாஷையில் சண்டையிட்டுக் கொள்வர்.

அதாவது, இன்னொருவர் தம்மை வீழ்த்தி விட்டார் என்பதையோ, இன்னொருவரிடம் தான் தோற்று விட்டோம் என்பதையோ ஒரு மனிதனால் எளிதில் ஏற்றுக் கொள்ள இயலாது.

குழந்தைப் பருவத்தில் இவை பிறரால் ரசிக்கும் அளவிற்கு இருக்கும். அத்துடன் அத்தகைய குணத்தை அவன் திருத்திக் கொள்ள வேண்டும்.
அதுவே வளர்ந்து பெரியவனாகியும் இத்தகைய குணம் நீடிக்குமானால், அது தன்னளவிலும், தன்னை சார்ந்திருக்கும் மற்றவர்களையும் அழித்து நாசமாக்கும் புற்று நோயாக வளர்ந்து நிற்கும்.

இதை தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட வெற்றியை சகித்துக் கொள்ள இயலாதவர்களின் புற்று நோய் நமக்கு பறைசாற்றுகிறது.

போராட்டம் நடைபெறுவதற்கு முன்னரே இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் முடிவை அம்மா எடுத்து விட்டார்களாம். இது இந்த மன நோயாளிகளின் சமீபத்திய சால்ஜாப்பு.

அதாவது, போராட்டம் மகத்தான வெற்றி பெற்று விட்டது,
நாம் எதிர்ப்பார்த்ததை விடவும்,
நம் எதிரிகள் செய்து வைத்த கணக்கை தாண்டியும்,
உளவுத்துறையின் கணிப்பை விடவுமெல்லாம் எங்கேயோ சென்றிருக்கிறது ஜனவரி 28 போராட்ட வெற்றி !

இவர்களது இந்த சிறு பிள்ளைத்தனமான மடமைகள் நமக்கு இதை தான் தெளிவாக்குகின்றன.

இந்த மகத்தான வெற்றியை துல்லியமாய் அறிந்து கொண்ட ஊடகங்களும் உளவுத்துறையும் சேர்க்க வேண்டிய முறையில் முதல்வர் காதுக்கு சேர்த்துள்ளனர்,
ஆகவே இட ஒதுக்கீடு என்கிற ஒன்று இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுமேயானால் அதற்கு முழு முதற்காரணம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்கிற பேருண்மையை அனைவரும் புரிந்து கொண்டனர் என்பதும் இவர்களது இந்த சிறுபிள்ளைத்தனத்திலிருந்து புரிகிறது.

இதற்கு முன்பே இட ஒது
க்கீடு வழங்கும் முடிவை முதல்வர் எடுத்து விட்டார் என்கிற இவர்களது பொய்களுக்கு இவர்களிடம் எந்த சான்றும் இருக்காது என்பது ஒரு பக்கமிருக்க, ஒரு பேச்சுக்கு அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, அதுவும் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவை பெறும் பொருட்டு தான் என்கிற சாதாரண உண்மை இந்த அரை வேக்காடுகளுக்கு புரியவில்லை.

ஊருக்கு நான்கு பேரை வைத்துக் கொண்டு தற்போது கலைஞரே கதி என்று அறிவாலய வாசலில் தட்டுடன் நிற்கும் மமகவிற்கு ஒரு தொகுதி கூட தேறாது என்கிற நிலையில், அக்கட்சி தங்களை ஆதரிக்காது, ஆதரித்தும் புண்ணியமில்லை என்று முதல்வருக்கு தெரியும்,

நாங்கள் முஸ்லிம்களுக்கான இயக்கமல்ல, நாங்கள் பொது.. என வெட்கமின்றி உரைத்து வரும் எஸ்டிபிஐயினால் ஆயுத பூஜைகளையும், வினாயகர் சதுர்த்தியையும் தான் சிறப்பாய் கொண்டாட இயலுமே தவிர, அதை தாண்டி எதையும் இந்த நாட்டில் கிழிக்க முடியாது என்றும் முதல்வர் அறிந்து வைத்திருக்கிறார்,

முஸ்லிம் லீக், தேசிய லீகுகளை பொறுத்தவரை அவர்களுகென குறிப்பிட்ட கொள்கை எதுவும் கிடையாது, அரசியல் ரீதியிலான முடிவை தான் எடுப்பார்கள், அவர்களால் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது என்பதும் அவருக்கு தெரியும்.

இன்னிலையில், நாம் செய்யும் ஒரு காரியத்தினால் ஒட்டு மொத்த சமூகமும் நம்மை பாராட்ட வேண்டுமெனில், தான் தேர்வு செய்ய வேண்டிய அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்பதை அவர் அறியாமல் இல்லை.

ஜனவரி 28 க்கு முன்னரே இட ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு விட்டது என்பது வடிகட்டிய பொய் என்பது ஒரு பக்கமிருக்க, போராட்டத்திற்கு முன்போ பின்போ அத்தகைய எண்ணம், பாஜக ஆதரவு சிந்தனை கொண்ட இந்த முதல்வர் உள்ளத்தில் ஏற்படுவத‌ற்கு கூட இந்த பேரியக்கம் தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவான ஒன்று !

முகத்திரை கிழிக்கப்பட்ட காசிமி


முஸ்லிம் பெண்களை , கண்டவன் கூட செல்பவள், கணவன் வெளிநாட்டில் இருக்க, இங்கே அன்னியர்களுடன் ஊர் சுற்ற செல்கிறாள்,

என்று சொல்வது நாலாந்திர பேச்சில்லையா? இதில் உங்கள் குடும்ப பெண்ணும் உட்படுமே, அது பரவாயில்லை உங்களுக்கு, இவ்வாறு சொன்னவனை நாயே என்று அழைத்து விட்டால் மட்டும் கொதிப்பீர்களா?

ஏன் இப்படி பேசுகிறீர்கள்? இது நியாயமா ? என்று அவனிடம் போன் செய்து கேட்ட போது, நான் இப்படி தான் சொல்வேன், இன்னும்ஆயிரம் முறை சொல்வேன், கணவன் ஊரில் இல்லாதிருக்க, இங்குள்ள பெண்கள் கண்டவர்களுடன் சுற்றுகிறார்கள் என்கிற கருத்தை மீண்டும் சொன்னானே, அது பரவாயில்லையா? இவ்வாறு சொன்னவனை அயோக்கியன் என்று ஒருமையில் சொல்வது மட்டும் உங்களுக்கு கசக்கிறதா?

ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராய் இந்த அளவிற்கு மிருகத்தனமான பேச்சை பேசியிருக்கிற அந்த ஷம்சுதீனை உங்களில் எத்தனை பேர் கண்டித்தீர்கள் ?

சரி, இவனை திட்டியது முகனூலில் உள்ள ஆயிரக்கணக்கன சகோதரர்கள் தானே?
இவனை திட்டியது சகோ. செய்யது இப்ராஹிம் தானே?

நியாயமாக பார்த்தால் இவன் செய்யது இப்ராஹீமையும், அது போல் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏனைய உறுப்பினர்களையும் தானே ஏச வேண்டும்?
ஆனால், இவன் செய்தது என்ன?

தொலைபேசியில் பேசுகிற போது, சகோ. பிஜெவை நாய் என்றான்.
பிஜெவை அயோக்கியன் என்றான். பிஜேவை அவன், இவன் என ஏக வசனத்தில் திட்டினான்.
இவனுக்கு கேன்சர் வந்தது மட்டும் பத்தாது, நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு தெரு தெருவாக அலைய வேண்டும்

என்றெல்லாம் ஒரு மார்க்க அறிஞரை திட்டித் தீர்த்தானே,
இது போன்ற வார்த்தைகளுக்காக உங்களில் எத்தனை பேர் கொதித்தீர்கள்?

என்னாங்கடா உங்க நடுநிலை?

மேலும்,
எங்கள் சமுதாய பெண்களையா அவதூறு சொல்கிறாய் என்று கேட்ட போது, அதற்கு ஆதாரம் என்கிற பெயரில், பெண்கள் அனைவரையும் விபச்சாரியுடன் தொடர்புபடுத்தி, வீட்டை விட்டு வெளியில் செல்கிற அனைத்து பெண்களும், குறிப்பாக இது போன்ற போராட்டங்களுக்கு செல்லும் எல்லாருமே விபச்சாரிகள் தான் என்கிற கருத்தை மீண்டுமொரு முறை அழுத்தமாய் பதித்தானே?

இதை விட ஒரு இழி சொல் வேறு வேண்டுமா இந்த உம்மத்துக்கு?

இவனை நாய் என்றும் கிறுக்கன் என்றும் திட்டியது மிகக் கொடூரமான வார்த்தையோ?

பிஜே இவனை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்,
பிஜே அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டார்,

என்றெல்லாம் அவதூறுகளையும் புளுகுகளையும் சிறு சஞ்சலமுமின்றி சொல்லியிருக்கிறானே, இவனை கடுமையான வார்த்தையுடன் திட்டியது உங்களுக்கு பொறுக்கவில்லை என்றால்,

உங்கள் நடு நிலை சந்தி சிரிக்கிறது , உங்கள் ஈமானிய உறுதி ஆட்டம் கண்டுள்ளது.

எந்த குர்ஆன், பிறரிடம் கண்ணியத்தையும் அமைதியையும் பேண சொல்கிறதோ அதே குர்ஆன், அநியாயம் செய்பவர்களிட்ம் வரம்பு மீறவும் நம்மை அனுமதிக்கிறது.

எந்த இறைவன் நம்மை நளினமாகவும், மென்மையாகவும் மார்க்கத்தை போதிக்க சொல்கிறானோ அதே இறைவன், நமக்கு தீங்கு செய்பவர்களிடம் கண்ணியக்குறைவாய் பேசவும் அனுமதிக்கிறான்

எனும் போது அனைத்தையும் ஒரு சேர பின்பற்றுபவன் தான் முஸ்லிம்.

குர் ஆனின் ஒரு பகுதியை ஏற்று இன்னொரு பகுதியை விட்டு விடுபவன் முஸ்லிமேயல்ல !!

We deserve success !


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
போராட்டத்தில் பங்கு கொள்ளாமல் எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் எம் போன்ற ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ் சகோதரர்கள் சார்பாக..
-----------------------------------------------------------------------------------------------

அரசியலில் ஈடுபடும் மற்ற இயக்கங்களின் போராட்டங்களில் பொது நலனை விட சுய நலன் மிகைத்திருக்கும்,
அரசியலில் பங்கு கொள்வதில்லை என்கிற கொள்கையைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டங்களில் சமூக நலன் மட்டுமே நிறைந்திருக்கும்.

இந்த வேறுபாடினை பலரும் பொதுவாய் அறிந்து தான் வைத்திருக்கிறோம் என்றாலும், இதிலிருந்து பிரதிபலிக்கும் ஓர் அழகிய புரிதலொன்று உள்ளது.

பொது நலனும் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்டு களத்தில் இறங்கும் ஒருவருக்கு தான் மறுமையைப் பற்றிய அச்சமிருக்கும். சுய நலனே பிரதானமாய் கொள்வோருக்கு உலக ஆதாயங்கள் அவர்களது உள்ளங்களை மறைத்து விடும் போது, சமூக அக்கறையுடன் செயல்படும் நமக்கோ நமது பொதுத் தொண்டானது நமக்கு இரட்டிப்பு பலனை ஈட்டுத்தரும்.

15 வருடங்களுக்கு முன்னர், நாளை இன்ஷா அல்லாஹ் கூட இருக்கும் மக்கள் வெள்ளத்தில் சிறு பகுதியை கண்ட போதே தேர்தல் ஓட்டுக்கும் அரியணைக்கும் சபலப்பட்டுப் போன இஸ்லாமியத் தலைவர்கள் எங்கே,
அந்த சிறு பகுதியானது, பல லட்சமாக பெருகி, மாற்றுக் கொள்கையுடைவர்கள் கூட ஆதரவளிக்கும் அளவிற்கு ஆறாய் பெருக்கெடுத்த பிறகும், உயிரே போனாலும் அரசியலுக்காக சமுதாயத்தை அடகு வைக்க மாட்டோம் என்கிற கொள்கையை உயிர் மூச்சாய் கொண்டு உழைக்கும் தன்னலமற்ற செயல்வீரர்கள் எங்கே?

இந்த ஜமாஅத் நினைத்தால் நேரடி அரசியலில் நுழைந்து தமிழகத்தில் என்ன, ஒட்டு மொத்த இந்தியாவிலேயே ஆட்சியை தீர்மானிக்கும் அசைக்க முடியாத சக்தியாய் தன்னை உருவாக்கிக் கொள்ள இயலாதா? நிச்சயம் இயலும். அதை செய்தால், ஓட்டுக்கள் பெறலாம், பண ஒதுக்கீடுகள் பெறலாம், கூழை கும்பிடுகள் இடப்பட‌லாம், பொன்னாடை சால்வைகள் போர்த்திக் கொள்ளலாம்,ஆனால், சமூகம் காவு கொடுக்கப்படும், சமுதாய மானம், மரியாதை காற்றில் பறக்க விடப்படும், இஸ்லாமியர்கள் என்றால் கிள்ளுக்கூரைகள் என்று ஆளும் வர்க்கத்தினரால் நாம் வஞ்சிக்கப்படும் நிலையோ இன்னும் அதள‌ பாதாளம் நோக்கி செல்லும்.
அனைத்தை விட முக்கியமாய், மறுமை என்கிற ஒன்று நமக்கு கேள்விக் குறியாக்கப்படும் !

இன்றைய சமுதாயம் மார்க்க சட்ட திட்டங்களானாலும் சரி, சமுதாய விழிப்புணர்வுகளானாலும் சரி, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னேற்றமடைந்திருக்கிறோம் என்றால், அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த ஜமாஅத் தான் காரணம் என்பதை புரிய மறவாதீர் !

தன்னலமற்ற இந்த ஜமாஅத்தின் நாளைய போராட்டத்திற்கு, மக்களே, உங்களாலான அனைத்து பங்களிப்பையும் செய்யுங்கள்.
நோக்கம் நிறைவேற துஆ செய்யுங்கள்.

ஒட்டு மொத்த தமிழக காவல் துறையினரின் பாதுகாப்பும் இந்த போராட்டத்திற்காக தயார்படுத்தப்பட்டிருந்தாலும், கட்டுக்கோப்பான இந்த இயக்கத்திற்கு அந்த இயக்கத்தவரே பாதுகாப்பாளர்கள் !

வல்ல ரஹ்மான் பாதுகாப்பாளர்களிலெல்லாம் தன்னிகரற்றவன் ! அவன் போதும் நமக்கு !!

யா அல்லாஹ், உன் பொருத்தத்தை பெறும் பொருட்டு போராட்டக் களம் நோக்கி படையெடுக்கும் எம் சமுதாயத்தவர்களை துவக்கம் முதல் இறுதி வரை நீ காத்தறுள் செய்.

ஈமானிய உறுதியுடன் களமிறங்குங்கள், இறையருளால், வெற்றி பெறுவதற்கான எல்லா தகுதியும் இந்த இயக்கத்திற்கு உள்ளது !

We deserve success ! May Allah be with us !!

சிறை நிரப்பும் போராட்டம் குறித்த கேள்வி பதில்


பெரும்பான்மை மதத்தவர்களால் கூட இன்றைய தேதி வரை திரட்ட இயலாத அளவிற்கு மிகப்பெரிய மத ரீதியிலான போராட்டக் களம் !

பெரும் பெரும் அரசியல் கட்சிகள் கூட கண்டிராத மகத்தான மக்கள் எழுச்சி..

சுதந்திர போராட்டத்திற்கு பிறகு இந்திய வரலாறு இதுவரை காணாத கொந்தளிப்பு !

இறைவன் நாடினால்..

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஆளும் வர்க்கத்திற்கு இஸ்லாமிய சமுதாயம் கொடுத்து வரும் நெருக்கடி தான் வருகிற ஜனவரி 28 செவ்வாய்க்கிழமை ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களும் முழங்க இருக்கும் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை.. !

ஊடகங்களின் கவனமும் உளவுத்துறையின் பார்வையும் இன்று நம்மீது தான் என்பதை நாம் கருத்தில் கொண்டு நமது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் இந்த போராட்டக் களத்தில் கலந்து கொள்ள செய்வோம், இன்ஷா அல்லாஹ்.

தன்னலம் பாராமலும், எத்தகைய ஆதாயங்களையும் எதிர்பார்க்காமலும் இந்த போராட்டத்தின் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அளப்பெரிய ரஹ்மத் செய்ய வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்,

இட ஒதுக்கீடு தருவதாக வாக்குறுதியளித்தால் அதிமுகவிற்கு ஆதரவளிப்பீர்களா?

எல்லா முஸ்லிம் இயக்கங்களும் சேர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடலாமே?

இட ஒதுக்கீடு மூலம் வேலை என்றால் தகுதியற்றவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்று பொருளா?

இட ஒதுக்கீடு கேட்பது மார்க்க அடிப்படையில் சரியா?

பெண்கள், சிறுவர்கள் போராட்டங்களில் பங்கு கொள்ளலாமா?

போன்ற,

போராட்டம் குறித்து பலரும் பல சந்தர்ப்பங்களில் எழுப்பி வரும் கேள்விகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் சகோ. பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தரும் விளக்கம் இதோ..

https://www.facebook.com/photo.php?v=418106198321002

மமக திமுகவுடன் கூட்டணி சேரக் காரணம் என்ன?


முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, திருமணப்பதிவுச் சட்டம் ஆகிய இரண்டு காரணங்களைத்தான் அதன் தலைவர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காகவே கூட்டணி சேர்வார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தாலும், அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாட்டு மக்களுக்காகவும் சமுதாய நன்மைக்காகவும்தான் இந்த கூட்டணி என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கானது அல்ல.

அதிமுகவில் நாற்பதிலும் தனித்து போட்டி என்று தெளிவுபடக் கூறி விட்டதால் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தாலும் நமக்கு சீட்டு கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதையே அவர்கள் வெளிப்படையாக சொல்லி இருக்கலாம். அல்லது பொருந்தக் கூடிய வேறு எதையாவது சொல்லி இருக்கலாம். கடுகளவும் நம்ப முடியாத ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் திமுக ஆட்சியில் 3.5 இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மமக கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. திமுகவுடன் இருந்த கூட்டணியைப் பயன்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக பல அடக்குமுறைகளையும் ஏவி விட்டது. திமுக ஆட்சி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஏவிவிட்ட அக்கிரமங்கள் அனைத்தையும் மறந்து விட்டு மறுநாளே திமுக தலைவரை தமிழக முதல்வரைச் சந்தித்து நன்றி அறிவிப்புக் கடிதம் கொடுத்தோம். மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று எழுதிக் கொடுத்தோம். அதன்படி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுக கூட்டணியை ஆதரித்தோம்.

திமுக ஆட்சி இட ஒதுக்கீடு அளித்ததற்காக தமுமுகவும் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தியது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின்போது இவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை.
இட ஒதுக்கீட்டுக்காக ஒரு அணியை ஆதரிப்பதுதான் இவர்களின் கொள்கையாக இருந்தால் 3.5 இட ஒதுக்கீடு கிடைத்ததற்காக அந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து இருக்க வேண்டும். கிடைத்த இட ஒதுக்கீட்டுக்கு நன்றி செலுத்தாமல் என்ன செய்தார்கள்.? அதிமுகவில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இவர்கள் இதற்கு செய்த வாதப்படி அதிமுக இட ஒதுக்கீட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று வாதிட்டு பிரச்சாரம் செய்து வந்ததை மறந்து விட்டு அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
நோட்டு எவ்வளவு சீட்டு எவ்வளவு என்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் இட ஒதுக்கீடெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல என்று அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.

இவர்கள் ஒரு எம்பி சீட் கொடுக்கும் அளவுக்கு பலமானவர்கள் அல்ல என்று அதிமுகவுக்கு தெரிந்ததால் அதிமுகவும் சீட் கொடுக்க மறுத்து விட்டது.
இதன் பின்னர் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார்கள். பல முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகள் ஆதரவோடு போட்டியிட்டு அவர்கள் வாங்கிய ஓட்டுக்கள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டார்கள். அதுவும் நாற்பது தொகுதிகளில் முஸ்லிம்கள் பலமாக உள்ள நான்கு தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிட்டும் பல அமைப்புகள் ஆதரித்தும் சுயேட்சை வேட்பாளர் வாங்கும் ஓட்டைத்தான் வாங்கினார்கள்.
அப்போது அது பிரச்சனை இல்லை.

கருணாநிதி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு செய்த அடக்குமுறைகளையும், தமுமுக ஆளும் கூட்டணியில் இருப்பதையும் மறந்துவிட்டு திமுகவை நாம் ஆதரித்தோம் என்பதையும் இடஒதுக்கிடு கொடுத்து அந்த ஈரம் காய்வதற்குள் இட ஒதுக்கீடு கொடுத்த கட்சிக்கு எதிராக போட்டியிட்டதையும் நினைத்துப் பார்க்கும் மக்கள் மமக சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்வார்களா?

அடுத்து திருமணப் பதிவுச் சட்டத்தையும் காரணமாகக் கூறியுள்ளனர். திருமணப்பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களைப் பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் அதை அதிமுக அரசு சரி செய்யவில்லை என்ற காரணமும் பொய்யான காரணமே.

திமுக ஆட்சியில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் இது குறித்து பல முஸ்லிம் அமைப்புகள் முறையிட்டன. தமுமுகவும் அதில் அடங்கி இருந்தது. பல முறை சந்தித்து முறையிட்டும் திமுக ஆட்சி அதை சரி செய்யவில்லை. அதுபோல் அதிமுகவும் செய்யவில்லை. இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து பல ஆண்டுகள் இவர்கள் கோரிக்கை வைத்தும் சந்திப்புகள் நடத்தியும் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்தக் காரணத்துக்காக திமுகவுக்கு போய்விட்டோம் என்று சொல்வதை மக்கள் எப்படி நம்புவார்கள் என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

எந்தப் பக்கம் சீட்டு கிடைக்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்து கொள்ளும் உன்னதமான கொள்கைக்காகவே அணி மாற்றம் என்பதில் சந்தேகமில்லை.

Article Copied From: www.onlinepj.com 

ஜனவரி 28 வரை எல்லாரும் முஸ்லிமா?


அல்லாஹ்வால் மறுமையில் நாம் முஸ்லிமாக அங்கீகரிக்கப்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்த ஞானமற்றவர்கள் தான் மறுமையில் ஒருவர் அல்லாஹ்விடத்தில் முஸ்லிமாக கருதப்படுவதற்கும் உலகில் சக மனிதர்களால் முஸ்லிமாக கருதப்படுவதற்கும் இடையே உள்ள தெளிவான வேறுபாட்டினை கூட புரியாமல் இருப்பவர்கள்.

மற்ற இடங்களில் முஷ்ரிக், காஃபிர் என்பீர்கள், 
உங்களுக்கு தேவையென்றால் மட்டும் அவர்களை முஸ்லிம் என்று கூறுவீர்களா?

என்று இவர்கள் கேட்பதன் மூலம் ஏதோ உலக மகா அறிவுப்பூர்வமான கேள்வியொன்றை எழுப்பி விட்டதை போன்று பெருமையடைகின்றனர்.

ஆனால், இது போன்ற கேள்விகளை எழுப்புவதன் மூலம் தம்மை போல் அடிமட்ட முட்டாள் வேறு எவருமே இல்லை எனவும், இஸ்லாத்தின் ஆனா ஆவன்னா கூட தெரியாத ஜாஹிலியாக்கள் தான் நாங்கள் எனவும் வெட்கமின்றி அறிவிப்பு செய்கின்றனர் என்பது அனைவரும் எளிதில் கண்டு கொள்ளும் பேருண்மை !

'நம்பிக்கை கொண்டோம்' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்' (49:14)

வேறு பல சான்றுகள் இருந்தாலும் இந்த ஒரு வசனமே இவர்களுக்கு பதிலளிக்க போதுமானது.

உள்ளத்தில் ஈமானை கொண்டிராத கிராமவாசிகள் வெளிப்படையாக தங்களை முஸ்லிம்களாகத் தான் காட்டி கொண்டனர்.
அத்தகையோரை பார்த்து அல்லாஹ் சொல்லும் போது, தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறான்.

உள்ளத்தில் ஈமான் இருக்கிறதா என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த‌ ரகசியம்.
உள்ளத்தில் ஈமான் இருந்தாலும் இல்லையென்றாலும் உலகப்பார்வையில் அவர்கள் முஸ்லிம்கள் தான், தங்களை முஸ்லிம்கள் என்று அவர்கள் காட்டிக் கொள்ளலாம், பிறர் அவர்களை முஸ்லிம்கள் என்று அழைக்கவும் செய்யலாம்.

ஆக, எவரிடம் ஈமான் இல்லையோ அவர்கள் அல்லாஹ்வின் கணக்கில் ஈமானற்றவர்களாக தான் இருப்பர், மறுமையில் முஸ்லிம்கள் என்று அவர்கள் கருதப்பட மாட்டார்கள்.
ஆனால், உலகில் அவர்கள் முஸ்லிம்களே !

உலகில் அவர்களை அத்தகைய கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும்.

சரி, இவ்வாறு கேள்வியெழுப்புகிறவர்கள் தங்களுக்கென்று இது குறித்த தெளிவான ஒரு நிலைபாட்டினை கொண்டிருக்க வேண்டுமல்லவா?

இவர்கள் கருத்துப்படி தர்காவிற்கு செல்பவனும் மிர்சா குலாமை நபியாக்கியவனும் மறுமையில் சொர்க்கம் செல்லும் முஸ்லிம்கள் தானா?

ஆம் என்று இவர்கள் சொல்லத் தயாரா?

இல்லையெனில், அவர்கள் இவ்வுலகிலும் முஸ்லிம்கள் இல்லை என்று இவர்கள் சொல்வார்களா?

இணை வைப்பவர்கள் அல்லாஹ்விடத்திலும் முஸ்லிம் இல்லை, இவ்வுலகிலும் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று சொல்லி விட்டு இது போன்ற கேள்விகளை நம்மை நோக்கி வைத்திருந்தால், ஏதேனும் ஒரு அடிப்படையில் நின்று பேசும் விவரமுள்ளவர்கள் பட்டியலில் இவர்களை நாம் சேர்த்திருப்போம்.

ஆனால், எதற்கும் பதில் சொல்ல வக்கற்ற, தமக்கென எந்த நிலையையும் கொண்டிராத கையாலாகாதவர்கள் தான் நம்மை நோக்கி இது போன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள் என்பது தற்போது தெளிவாகி வருகிறது !!