வெள்ளி, 11 ஜனவரி, 2013

கணிப்பு கொள்கைவாதிகளின் அறிவுப்பூர்வமான (?) கேள்விகள்



தலைப்பிறை விஷயத்தில் கணிப்பு கொள்கையை சரி காண்பவர்கள் சில கேள்விகளை முன் வைத்துள்ளனர். அதற்கான பதில்களை ஒவ்வொன்றாக பார்ப்பதன் மூலம் கேள்வியின் தரத்தை படிப்பவர்களே புரிந்து கொள்ளலாம். 



முதல் கேள்வி : பிறை தகவலை யார் அறிவிக்க வேண்டும்? 

பதில்: பிறையை யார் பார்க்கின்றார்களோ அவர்கள் அறிவிக்க வேண்டும். பார்க்காதவர்களால் அறிவிக்க முடியாது.



இரண்டாம் கேள்வி :சுன்னத்(?) ஜமாத்தை சார்ந்தவர் அறிவித்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: பொய் சொல்லாதவராக இருந்தால் ஏற்றுக்கொள்வோம்.


மூன்றாம் கேள்வி : அறிவியல் சாதனமான கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்ப்பவர் அறிவித்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: கண்ணாடி போடுவது , கண்ணாடி போடாமல் படிப்பவர் என்ன அளவிற்கு பார்க்கிறாரோ அப்படி பார்ப்பதற்காக தான். 
கண்ணாடி என்பது ஏதோ நாசா விண்வெளி கழகத்தில் இருக்கும் சாதனம் என்பது போன்று இருக்கிறது உங்கள் கேள்வி.


நான்காம் கேள்வி : தூரம், எல்லையை எப்படி தீர்மானிப்பது?

பதில்: நபி (ஸல்) அவர்கள் பிறை தகவலை ஏற்றுள்ளார்கள் ஏற்றுக்கொள்ளாமலும் இருந்துள்ளார்கள். இருப்பினும் தூரத்தையும் எல்லையையும் அவர்கள் நிர்ணயம் செய்யவில்லை. நிர்வாக வசதிக்கு உட்பட்டு, அருகிலுள்ள கிராமங்களில் பிறை தென்பட்டால் அதை ஏற்றுள்ளார்கள், தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து பெறப்பட்ட செய்தியை தவிர்த்துள்ளார்கள். 
எல்லையை தீர்மானிக்கும் குழப்பம் எர்ப்ப்படுமானால், குழப்பமின்றி, அனைவரும் ஒத்த கருத்தை எட்டும் வகையில் பெருநாளை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்லியுள்ளார்கள்.
ஆகவே கேள்வி கேட்பவரும் இதற்கு பதில் சொல்பவரும் இணைந்து முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது.


ஐந்தாம் கேள்வி : மாவட்டம் நகரம் என்றெல்லாம் பிரிப்பதற்கு என்ன ஆதாரம்?

பதில் : நான்காம் கேள்விக்கான பதிலை பார்க்கவும்.


ஆறாவது கேள்வி: தமிழ்நாட்டில் பிறை பார்த்தால் கேரளாவில் பொருந்துமா?

பதில் : ஐந்தாம் கேள்விக்கான பதிலை பார்க்கவும்.


ஏழாம் கேள்வி : கோவைவைவசிகளுக்கு சென்னையை விட கேரளம் அதிக நெருக்கம், அப்படி இருக்கும்  போது சென்னை தகவலை அவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்?

பதில் : ஆறாம் கேள்விக்கான பதிலை பார்க்கவும்.


எட்டாம் கேள்வி : 2:189 வசனத்தில் மாதத்தை பிறை தான் தீர்மானிக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான். நீங்களோ உங்கள் மாநில தலைமை தீர்மானிக்கும் என்று சொல்கிறீர்களே?

பதில் : பிறை பார்க்கப்பட்டதை ஒவ்வொரு வீட்டில் இருப்பவரும் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தால் ரமலான் முடிந்து விடும். ஆகையால், மக்கள் வசதிக்காக பார்க்கப்பட்ட பிறை தகவலை மாநில தலைமை அனைவருக்கும் அறிவிப்பு செய்கிறது.
மாதத்தை மாநில தலைமையே தீர்மானிக்கிறது என்று சொல்வதற்கும் பிறையை பார்த்து எப்போது மாதம் பிறந்தது என்கிற செய்தியை மாநில தலைமை அறிவிக்கிறது என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாடு சிறு குழந்தைக்கும் புரியும். 


ஒன்பதாம் கேள்வி : பெருநாளை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றால் எதற்க்காக பிறை பார்க்க வேண்டும்?

பதில்: நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் பெருநாள் என்று ஹதீஸ்களில் உள்ளன. உங்கள் கேள்வியை ரசூல் (ஸல்) அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.



பத்தாம் கேள்வி : இரு பெருநாட்களுக்கு மட்டும் தான் பிறை பார்க்க வேண்டுமா??

பதில் : அப்படியா??


பதினோராம் கேள்வி : வெளிநாடுகளில் தமிழகம் போல பிறை பார்த்து தான் முடிவு செய்கிறார்களா? எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

பதில் : ஆம், பிறை பார்த்து தான் முடிவு செய்கிறார்கள்.


பனிரெண்டாம் கேள்வி : நாளின் ஆரம்பம் இரவு தான் என்பதற்கு ஒரு ஆதாரத்தையாவது தர முடியுமா?

பதில் : புஹாரி 2027. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.  



ஒரு ஆதாரம் மட்டும் கேட்டுள்ளதால் ஒன்றை தந்திருக்கிறேன்.



பதிமூன்றாம் கேள்வி : கணக்கு செய்ய கூடாது என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில் : மூன்றாம் ஆதாரங்கள் உள்ளன.

ஒரு ஆதாரம் -  - நபி (ஸல்) அவர்கள் கணக்கு செய்யவில்லை.
இன்னொரு ஆதாரம்  - நபி (ஸல்) அவர்கள் கணக்கு செய்து பிறையை தீர்மானித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் உங்களிடம் இல்லை.
மூன்றாவது ஆதாரம் : ஆதாரம் தர வேண்டிய விஷயங்களில் ஆதாரம் கேட்பது முட்டாள்தனம் என்பதை புரியாமல் இருப்பது.


பதினான்காம் கேள்வி : சூரியனை கணிக்கலாம், சந்திரனை கணிக்க கூடாது என்று சொல்வதற்கு 55:5 வசனம் உறன்படுகிறதே ?

பதில் : கணக்கின் படி இயங்குகின்றன என்று சொல்வதால் கணிக்க வேண்டும் என்று வாதம் வைப்பது அறிவுக்கு எட்டாத வாதம். ஒரு பெண் தனியாக ஒட்டகத்தில் பயணம் செய்து ஹஜ்ஜு செய்வாள் என்று அல்லாஹ் சொல்கிறான். பயணம் செய்வாள் என்று சொல்லி விட்டதால் இனி ஹஜ்ஜுக்கு செல்ல விரும்பும் எல்லா பெண்களும் கட்டாயம் ஒட்டகத்தில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுடையவர்கள் கூறுவார்களா?

நபி (ஸல்) அவர்கள் சூரியனை கணித்து முடிவு செய்துள்ளார்கள் சந்திரனை கணிக்காமல் முடிவு செய்தார்கள் 55:5 வசனம் நபிக்கு தெரியாமல் இல்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக