வியாழன், 31 மார்ச், 2011

வால் பிடிப்பவர்களிடம் சில கேள்விகள்..


Makkal Urimai Sep 22-28, 2006 3.jpg








அஸ்ஸலாமு அலைக்கும்..

இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு வால் பிடிப்பவர்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அவர்கள் சொல்லியுள்ள பதிலை குறித்து சில விளக்கங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளனர்.


1 . ஜெயலலிதா இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறையில் இருக்கும் அப்துந்நாசர் மதானி உயிரோடு இருப்பாரா?
இருக்கமாட்டாரா?


  • இருப்பார் என்றால் அவ்வாறு நீங்கள் சொல்வதற்கு ஏதுவாக ஜெயலலிதா தந்துள்ள வாக்குறுதி என்ன?
  • இருக்க மாட்டார் என்றால், ஜெயலலிதாவின் வாலை இன்று நீங்கள் பிடித்தது சமுதாய துரோகம் இல்லையா? மதானி செத்தாலும் பரவாயில்லை, ஜெயலலிதாவின் வால் தான் முக்கியம் என்பதை தவிர வேறென்ன காரணம்?

2 . ஜெயலலிதா இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முனீர் ஹோதாவை போல இன்னும் பல முஸ்லிம்கள் தேச துரோக பட்டத்தை பெறுவார்களா பெற மாட்டார்களா?

  • பெற மாட்டார்கள் என்றால், அவ்வாறு ஜெயலலிதா எங்கே வாக்குறுதி தந்துள்ளார்? எதனடிப்படையில் இவ்வாறு உங்கள் கொள்கையை மாற்றினீர்கள் என்பதை சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
  • பெறுவார்கள் என்றால், அத்தகைய நிலையில் கூட அம்மாவுக்கு ஜால்ரா அடித்து சீட்டு பெறுவதில் மட்டும் நோக்கமாக நீங்கள் இருப்பது சமுதாய துரோகமில்லையா? முஸ்லிம் அதிகாரிகள் தேச துரோகிகளாக சித்தரிக்கப்பட்டாலும் பரவாயில்லை, எங்களுக்கு சீட்டும் நோட்டும் தான் முக்கியம் என்ற ஒற்றை காரணத்தை தவிர வேறென்ன காரணம்?

3 . ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் சமுதாயத்தில் குழப்பங்களும் பதற்றங்களும் பெருகியிருக்குமா? குறைந்திருக்குமா?

  • குறைந்திருக்கும் என்றால், அவ்வாறு ஜெயலலிதா எங்கே வாக்குறுதி தந்துள்ளார்?
  • பெருகும் என்றால், அத்தகைய நிலையில் கூட அம்மாவின் தாஜா தான் முக்கியம், சமுதாயம் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கு பரவாயில்லை என்று சொல்கிறீர்களா? குழப்பங்கள் பெருகும் என்ற போதிலும் கூட, அம்மாவின் ஆட்சியை மலர செய்வோம் என்று நீங்கள் கூறுவது ஏன்?

4 . நல்ல வேளையாக தமுமுக அன்றைக்கு ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பியதை போல இன்றைக்கு அவரை வீட்டுக்கு அனுப்புவது முஸ்லிம் சமுதாயத்தின் கடமையில்லையா?

  • இல்லை என்றால், அதற்குரிய காரணங்கள் என்ன?
  • ஆம் என்றால், அதை செய்யாமல் அம்மாவின் வாலை விட மாட்டோம் என்று இன்றைக்கு பற்றிப்பிடிப்பது ஏன்?அன்று, "நல்ல வேளையாக" வீட்டுக்கு போனவர், இன்று நிச்சயம் ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்ற அளவிற்கு நீங்கள் மாறுதல் அடைவதற்கு அல்லது அவரிடம் கண்ட மாறுதல்களாக நீங்கள் சொல்லும் காரணங்கள் என்னென்ன?


5 . ஜெயலலிதாவிடம் கமிஷன் பெற்று, அவரை ஆதரித்த அனைவரும் அன்றைக்கே அவர்கள் தவறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய நீங்களே இன்றைக்கு அதே தவறை செய்தால், உங்களுக்கு அறிவுரை சொல்வது யார்? கமிஷன், அன்றைக்கு கை மாறி இருக்கும் என்றால் இன்றைக்கு கை மாறாதா?

  • கை மாறாது என்றால், அவ்வாறு அன்றைக்கு இதே ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் மட்டும் கமிஷன் வாங்கினார்கள் என்று நீங்கள் கூறியது ஏன்?
  • கை மாறும் என்றால், அது சமுதாய துரோகம் இல்லையா? கமிஷன் வாங்கி நக்கிப் பிழைக்கும் தொழிலை நீங்கள் செய்து வருவது சமுதாயத்தை வஞ்சிப்பதாகாதா?


இவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் சமுதாயம் இவர்களுக்கு வாக்களிக்கும் என்று நம்பினால், இவர்களை விடவும் சமுதாயத்தை ஏமாற்றும் நயவஞ்சகர்கள் யார்?

பிர்அவ்ன் முஸ்லிம் (??)




அல்லாஹ் தனது திருமறையில் பிர்அவ்னின் மனைவி ஆஸியா அவர்கள் மூஸா அலை அவர்கள் கட­ல் மிதந்து வந்து அதை கண்டு எடுத்த போது கூறினார்கள்.


இக்குழந்தை எனக்கும் உமக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கும் என்று ஆஸியா அம்மையார் அவர்கள் சொன்னதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

இதை விளக்க வந்த மூடர்களின் தலைவன் ஷைகுல் ஆரிபீன் என்று போற்றப்படும் இப்லீஸ் இப்னு அரபி சொல்கிறான்.

பிர்அவ்ன் கட­ல் மூழ்கிய நேரத்தில் அல்லாஹ் வழங்கிய ஈமானுக்கு காரணமாக இருந்ததின் முலம் மூஸா அலை அவர்கள் கண் குளிர்ச்சியாக இருந்தார்.

அவனிடத்தில் எந்த அசுத்தமும் (குப்ரு) இல்லாத வகையில் இறைவன் இறைவன் அவனை சுத்தப்படுத்தினான். காரணம் பிர்அவ்ன் பாவம் செய்வதற்கு முன்பாக ஈமானோடு கைப்பற்றிவிட்டான். அல்லாஹ்வின் அருளில் யாரும் நம்பிக்கை இழநஙதிளராத வகையில் அவனை கைப்பற்றிதை அத்தாட்சியாக ஆக்கிவிட்டான். அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான். அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்” என்றார்.

பிர்அவ்ன் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்திருந்தால் ஈமானை ஏற்றுக் கொள்வதற்கு விரைந்திருக்கமாட்டான்.


இதை எழுதியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்தான் நான் நான்தான் அல்லாஹ் யார் யாருக்குத்தான் கட்டளையிட முடியம் என்று எழுதிய இப்னு அரபிதான். இவன் தன்னுடைய புத்தகமான புஸீலுல் ஹிகம் 200 ல் குறிப்பிடுகிறான்,

இந்த வழிகெட்ட கருத்து திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு முரண்படுகிறது.

(இவர்களின் நடவடிக்கை) ஃபிர்அவ்ன் மற்றும் அவனுக்கு முன் சென்றோரின் நடவடிக்கை போலவே உள்ளது. அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதினர். அவர்களது பாவங்களின் காரண மாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். 3 : 11

103. அவர்களுக்குப் பின் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிட மும் தெளிவான சான்றுகளுடன் அனுப்பி னோம். அவற்றை அவர்கள் ஏற்க மறுத்தனர். ‘குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?’ என்பதைக் கவனிப்பீராக! 7 : 103

எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.
46. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம்1 வரும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) 40 : 45 46

ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். எனவே அவனைக் கடுமையாகத் தண்டித்தோம். 73 : ௧௬



இது போன்ற வழிகேடர்களிடமிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்ற வேண்டும்!

ஈமானின் முழு சுவையையும் கொண்டுள்ள தன்மைகள் என்னென்ன?

மூன்று தன்மைகளை நாம் பெற்றுக்கொண்டோம் என்றால் ஈமானின் முழு சுவையும் நம்மிடம் உள்ளதாக அர்த்தமாகும்!.

அந்த மூன்று தன்மைகள் என்னென்ன?

1 . இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விடவும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம் நேசத்திற்க்குரியவர்களாக நாம் கருதுவது.
2 . எந்த நபரையும் அல்லாஹ்வுக்காக மட்டுமே நாம் நேசிப்பது
3 . நெருப்பில் வீசப்படுவதை நாம் எவ்வாறு
வெறுப்போமோ, எவ்வாறு அஞ்சி நடுங்குவோமோ, அதே போன்று இணை வைத்தலில்
ஈடுபடுவதை குறித்தும் அஞ்சுவது.

நூல் : திர்மிதி 2548

ஜனாஸா தொழுகையில் தக்பீர் எத்தனை தடவை?

நஜ்ஜாஷி மன்னருக்காக நபி (ஸல்) ஜனாஸா தொழுகை நடத்திய பொழுது நான்கு முறை தக்பீர் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபு ஹுரைரா(ரலி)
புஹாரி 1318 , 1319


எப்போதும் நான்பு தக்பீருடன் ஜனாஸா தொழுகை தொழும் சைத் (ரலி) அவர்கள், ஒருமுறை ஐந்து தக்பீர் சொல்லி தொழுவித்தார்கள். இது பற்றி அவரிடம் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் ஐந்து தக்பீர் சொல்லியும் தொழுதுள்ளார்கள், என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான்
முஸ்லிம் 1589



ஆக, நான்கு முறையும் தக்பீர் சொல்லலாம், ஐந்து முறையும் தக்பீர் சொல்லலாம்.

Note: தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்வது தான் நான்கு அல்லது ஐந்து முறையே தவிர கைகளை முதல் தக்பீருக்காக உயர்த்தி கட்டிய பின்னர் மீண்டும் பிரிக்க தேவையில்லை..

இது தவிர, ஏழு ரக்காத்கள், ஒன்பது ரக்காத்கள் என்று வரும் ஏனைய அறிவிப்புகள் பலகீனமானவை !

எந்த விசாரணையும் இன்றி நேரடியாக சொர்க்கம் செல்பவர்கள் யார் யார்?

அத்தகையோர் மொத்தம் 70 ,000 பேர்.!

  • சகுனம் பார்க்காதவர்கள்
  • ஒதிப்பார்க்காதவர்கள்
  • கஷ்டங்கள் / நோய்களுக்காக தங்களையே சூடிட்டுக்கொள்ளாதவர்கள்
  • எப்போதும், எந்த நிலையிலும் இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பவர்கள்.

முஸ்லிம் : 323

ஷஹீதினுடைய அந்தஸ்தை பெறுபவர்கள் யார் யார்?






  • தனது செல்வதை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்
  • வயிற்றுப்போக்கு போன்ற நோயினால் இறந்தவர்
  • பிளேக் நோயால் இறந்தவர்
  • கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்
  • தண்ணீரில் மூழ்கி இறந்தவர்
புஹாரி 654

இறுதி நாளை நம்புதல்



அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)

அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:281)


இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும். (அல்குர்ஆன் 55:27)
வானம், பூமி, சூரியன், விண் கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.


யுக முடிவு நாள், இறுதி நாள், ஸþர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் திருமறைக் குர்ஆனில் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.
பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர். நல்லவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கும்; கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது.


தீர்ப்பு நாள், மறுமை, மறு உலகம், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவ முடியாத நாள், திரும்பச் செல்லும் நாள், கூ­ வழங்கும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன் தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், அவ்வுலகம், கைசேதப்படும் நாள், இறைவன் முன் நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள் இன்னும் பல பெயர்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.


சந்தேகம் இல்லாத நாள், மகத் தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்தச் சந்தேகமும் இல்லாத நாள் போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவானதாகும்.


அழிக்கப்படும் நாள், மீண்டும் உயிர்ப்பிக்கும் நாள் ஆகிய இரு நாட்களும் எப்போது ஏற்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த மனிதரும் ஏன் வானவர்களும் கூட அறிய மாட்டார்கள். அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும்.
இவ்வுலகில் மனிதன் நல்லவனாக வாழ இத்தகைய ஒரு நாளை நம்புவது பெரிதும் உதவும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.


மண்ணறை வேதனை


மறுமைநாளில் குற்றம்புரிந்தவனுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு முன், இறந்த பின் அவனுக்கு சிறிய அளவு தண்டனையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். இதை பல நபிமொழிகள் தெளிவுபடுத்தியுள்ளன. இதைப்போன்று திருமறைக் குர்ஆனும் தெளிவுபடுத்துகிறது.

பிர்அவ்ன் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் ஏற்படும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன் 40:46)


ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்பது மறுமையில் வழங்கப்படும் தண்டனைக்கு முன் வேறொரு தண்டனை உள்ளது என்பதை நிரூபிக்கிறது. ஏனென்றால் இவ்வசனத்தில் கடுமையான யுக முடிவு நாளில் இவர்களைக் தண்டனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது.


இது தான் கப்ருடைய வேதனை என்று நபி மொழிகள் கூறுகின்றன.