செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

We deserve success !


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
போராட்டத்தில் பங்கு கொள்ளாமல் எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் எம் போன்ற ஆயிரக்கணக்கான வெளிநாடு வாழ் சகோதரர்கள் சார்பாக..
-----------------------------------------------------------------------------------------------

அரசியலில் ஈடுபடும் மற்ற இயக்கங்களின் போராட்டங்களில் பொது நலனை விட சுய நலன் மிகைத்திருக்கும்,
அரசியலில் பங்கு கொள்வதில்லை என்கிற கொள்கையைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டங்களில் சமூக நலன் மட்டுமே நிறைந்திருக்கும்.

இந்த வேறுபாடினை பலரும் பொதுவாய் அறிந்து தான் வைத்திருக்கிறோம் என்றாலும், இதிலிருந்து பிரதிபலிக்கும் ஓர் அழகிய புரிதலொன்று உள்ளது.

பொது நலனும் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்டு களத்தில் இறங்கும் ஒருவருக்கு தான் மறுமையைப் பற்றிய அச்சமிருக்கும். சுய நலனே பிரதானமாய் கொள்வோருக்கு உலக ஆதாயங்கள் அவர்களது உள்ளங்களை மறைத்து விடும் போது, சமூக அக்கறையுடன் செயல்படும் நமக்கோ நமது பொதுத் தொண்டானது நமக்கு இரட்டிப்பு பலனை ஈட்டுத்தரும்.

15 வருடங்களுக்கு முன்னர், நாளை இன்ஷா அல்லாஹ் கூட இருக்கும் மக்கள் வெள்ளத்தில் சிறு பகுதியை கண்ட போதே தேர்தல் ஓட்டுக்கும் அரியணைக்கும் சபலப்பட்டுப் போன இஸ்லாமியத் தலைவர்கள் எங்கே,
அந்த சிறு பகுதியானது, பல லட்சமாக பெருகி, மாற்றுக் கொள்கையுடைவர்கள் கூட ஆதரவளிக்கும் அளவிற்கு ஆறாய் பெருக்கெடுத்த பிறகும், உயிரே போனாலும் அரசியலுக்காக சமுதாயத்தை அடகு வைக்க மாட்டோம் என்கிற கொள்கையை உயிர் மூச்சாய் கொண்டு உழைக்கும் தன்னலமற்ற செயல்வீரர்கள் எங்கே?

இந்த ஜமாஅத் நினைத்தால் நேரடி அரசியலில் நுழைந்து தமிழகத்தில் என்ன, ஒட்டு மொத்த இந்தியாவிலேயே ஆட்சியை தீர்மானிக்கும் அசைக்க முடியாத சக்தியாய் தன்னை உருவாக்கிக் கொள்ள இயலாதா? நிச்சயம் இயலும். அதை செய்தால், ஓட்டுக்கள் பெறலாம், பண ஒதுக்கீடுகள் பெறலாம், கூழை கும்பிடுகள் இடப்பட‌லாம், பொன்னாடை சால்வைகள் போர்த்திக் கொள்ளலாம்,ஆனால், சமூகம் காவு கொடுக்கப்படும், சமுதாய மானம், மரியாதை காற்றில் பறக்க விடப்படும், இஸ்லாமியர்கள் என்றால் கிள்ளுக்கூரைகள் என்று ஆளும் வர்க்கத்தினரால் நாம் வஞ்சிக்கப்படும் நிலையோ இன்னும் அதள‌ பாதாளம் நோக்கி செல்லும்.
அனைத்தை விட முக்கியமாய், மறுமை என்கிற ஒன்று நமக்கு கேள்விக் குறியாக்கப்படும் !

இன்றைய சமுதாயம் மார்க்க சட்ட திட்டங்களானாலும் சரி, சமுதாய விழிப்புணர்வுகளானாலும் சரி, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னேற்றமடைந்திருக்கிறோம் என்றால், அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த ஜமாஅத் தான் காரணம் என்பதை புரிய மறவாதீர் !

தன்னலமற்ற இந்த ஜமாஅத்தின் நாளைய போராட்டத்திற்கு, மக்களே, உங்களாலான அனைத்து பங்களிப்பையும் செய்யுங்கள்.
நோக்கம் நிறைவேற துஆ செய்யுங்கள்.

ஒட்டு மொத்த தமிழக காவல் துறையினரின் பாதுகாப்பும் இந்த போராட்டத்திற்காக தயார்படுத்தப்பட்டிருந்தாலும், கட்டுக்கோப்பான இந்த இயக்கத்திற்கு அந்த இயக்கத்தவரே பாதுகாப்பாளர்கள் !

வல்ல ரஹ்மான் பாதுகாப்பாளர்களிலெல்லாம் தன்னிகரற்றவன் ! அவன் போதும் நமக்கு !!

யா அல்லாஹ், உன் பொருத்தத்தை பெறும் பொருட்டு போராட்டக் களம் நோக்கி படையெடுக்கும் எம் சமுதாயத்தவர்களை துவக்கம் முதல் இறுதி வரை நீ காத்தறுள் செய்.

ஈமானிய உறுதியுடன் களமிறங்குங்கள், இறையருளால், வெற்றி பெறுவதற்கான எல்லா தகுதியும் இந்த இயக்கத்திற்கு உள்ளது !

We deserve success ! May Allah be with us !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக