செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

கறந்து குடித்தால் பிள்ளை ஆகலாமா?

தாய் - பிள்ளை உறவு ஏற்பட
தாயின் மார்பில் வாய் வைத்து உறிஞ்சிக் குடிக்க வேண்டும்
அதுவும் வயிறார (பசி தீரும் அளவு) குடிக்க வேண்டும்
அது கூட இரண்டு வயது வரை தான் இருக்க வேண்டும்,

என்றெல்லாம் பல நிபந்தனைகளை அல்லாஹ் இட்டுள்ள போது

20 வயதை கடந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் பால் குடித்து மகனாக போகிறேன் என்று சொன்னால் அதை விடவும் ஒரு ஆபாசம், வக்கிரம் இருக்க முடியாது. இப்படியாக எந்த செய்தி இருந்தாலும் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் !

வாய் வைத்து குடிக்கவில்லை, கறந்து தான் குடிப்பார் என்று சொல்லும்படியான எந்த வார்த்தையும் அந்த செய்தியில் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கறந்து குடிப்பதினால் தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்று அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, கறந்து குடித்து பிள்ளை ஆகிக் கொள்வார் என்கிற கூற்று இங்கு பொருளற்றதாகிறது.

இரண்டு வயதிற்கு மேல், அதுவும் வாய் வைத்து உறிஞ்சி குடித்தாலே தவிர தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்பது நேரடியான ஹதீஸ் (பார்க்க திர்மிதி 1072)

அவ்வாறிருக்க, மீசையும் தாடியும் வளர்த்த இளைஞனான சாலிமுக்கு வாய் வைத்து பால் குடிக்க நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்,

கறந்து குடிப்பதினால் பிள்ளை ஆகவும் இயலாது.

பால் கொடுக்க சொல்கின்ற இடத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை "அர்ளியீஹி" என்பதற்கு கறந்து குடித்தல் என்கிற பொருள் இல்லை.

விபச்சாரம் செய்து விட்டதற்கு வலிய வந்து தண்டனை கேட்கும் பெண்ணிடம் முதலில் குழந்தை பெற்றுக் கொண்டு வரும்படியும், பின்னர், குழந்தை பால்குடியை மறக்கும் வரை பால் புகட்டி விட்டு வரும்படியும் நபியவர்கள் சொல்கின்ற ஹதீஸில் (முஸ்லிம் 3500) இதே அர்ளியீஹி என்கிற வார்த்தை தான் உள்ளது, இதற்கு வாய் வைத்து குறிஞ்சி குடித்தல் என்று எவரும் பொருள் செய்ய மாட்டார்கள்.

ஒன்று, குர் ஆனுக்கு முரணாக நபியவர்கள் சட்டம் சொன்னார்கள் என்று சொல்ல வேண்டும்
அல்லது, ஆபாசத்தை ஏவினார்கள் என்று சொல்ல வேண்டும்.
(நவூதுபில்லாஹ்)
இரண்டுமே மார்க்கத்திற்கு எதிரான நிலைபாடு என்பதால், வேறு வழியின்றி இறுதியாய் இவர்கள் வந்து நிற்கும் இடம், இது சாலிமுக்கு மட்டுமுரிய சட்டம் என்பது தான்.

ஆனால், இந்த நிலைபாட்டுக்கும் தெளிவான மறுப்பு இருக்கிறது.

முஸ்லிம் 2881 இல் வரக்கூடிய மற்றொரு ஹதீஸில், இன்னொரு சிறுவன் ஆயிஷா அவர்கள் வீட்டுக்கு வருவது பற்றி உம்மு சலமா அவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் போது, ஆயிஷா அவர்கள், சாலிம் விஷயத்தை ஆதாரமாக காட்டி அதை நியாயப்படுத்துவது போல் உள்ளது.

இது, அந்த சட்டம் சாலிமுக்கு மட்டுமுரியது என்பதற்குரிய மறுப்பாகும்.

ஆக, என்ன தான் குட்டிக்கரணம் அடித்தாலும் நியாயப்படுத்தவே இயலாத ஹதீஸ் சாலிம் பால் குடி ஹதீஸ்.

மார்க்கத்திற்கு முரணாக இவ்வாறிருக்கும் ஒன்றிரெண்டு ஹதீஸ்கள் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை என தூக்கி வீசுவதே ஈமானுக்கு பாதுகாப்பானது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக