வெள்ளி, 21 ஜனவரி, 2011

இறந்தவரின் பொருட்டால்...




அஸ்ஸலாமு அலைக்கும்


கப்ரு வணங்கிகள் இறந்தவரின் பொருட்டால் கேட்பதை கப்ரு ஜியாரத் என்று கூறுகின்றனர். உண்மையில் கப்ரு ஜியாரத்தின் நோக்கத்தை பார்ப்பதற்கு முன்னால் இறந்தவரின் பொருட்டால் கேட்பது சரியா என்று பார்ப்போம்.

கப்ரு வணங்கிகளில் மூன்று வகையினர் உள்ளனர்.

முதலாவது வகையினர் :

அவ்­லியாவே என்னுடைய நோயைப் போக்குங்கள், எனக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தாருங்கள். என்று நேரடியாக கப்ரில் அடங்கியிருப்பவர்களிடமே கோரிக்கை வைப்பார்.

இரண்டாவது வகையினர்;

அவ்லி­யாவே அல்லாஹ்விடம் வாங்கித்தாருங்கள் என்று கேட்பார்கள். இவர்கள் நாம் நேரடியாகக் கேட்டால் அல்லாஹ் தரமாட்டான். இந்தச் சமாதியில் இருப்பால் கேட்டால் அல்லாஹ் உடனடியாகத் தருவான் என நம்பிக்கை வைத்துள்ளனர்.

மூன்றாவது வகையினர் :

அல்லாஹ்வே இந்த அவ்­லியாவின் பொருட்டால் என்னுடைய நோயைப் போக்குவாயாக. என்னுடைய நாட்டத்தை நிறைவேற்றுவாயாக என்று கேட்கின்றனர். அதாவது அவ்­யா இவர் பேசுவதை கேட்கவும் மாட்டார். பார்க்கவும் மாட்டார். மாறாக இறந்து போனவரின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் கட்டாயம் தருவான் என நம்புகின்றனர்.

இதில் முதல் வகையினரை கப்ரு வணங்கிகளில் ஒரு பிரிவினரே காஃபிர்கள் என்று கூறுகின்றனர். இதனால் நாம் முதல் வகைக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை.

மாறாக அவ்­லியாக்களின் பொருட்டால் கேட்டால் அல்லாஹ் தருவான் என்று நம்பலாமா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.


அல்லாஹ்வை நாம் இறைநம்பிக்கை கொள்ளும் போதே அவன் நாடியதைச் செய்பவன் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். அல்லாஹ் யாருக்காகவும் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் அல்லாஹ்வுக்கு கிடையாது.

யாராவது ஒருவன் இறைவன் இன்னாருக்காக கடமைப்பட்டுள்ளான். இன்னாரின் பொருட்டால் கேட்டால் இறைவன் தந்தாக வேண்டும் என்று கூறினால் அவன் இறைவன் நாடியதைச் செய்பவன் என்ற பண்பை மறுத்த காஃபிராவான்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் பிரார்த்திக்கும்போது ''இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! நீ நினைத்தால் எனக்குக் கருணை புரிவாயாக!'' என்று கேட்க வேண்டாம். (மாறாக) பிரார்த்திக்கும்போது (இறைவனிடம்) வரியுறுத்திக் கேளுங்கள். ஏனெனில், இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
இதை அபூஹுரைரா (ர­ரி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (52020



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ''இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக'' என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 6339)



ஏனெனில், இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
என்ற நபிகள் நாயகத்தின் சொல் நாம் இறைவன் மீது எவ்வாறு நம்பிக்கை வைத்து அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

ஒருவன் இறைவா இந்த அவ்­லியாவின் பொருட்டால் எனக்குத் தருவாயாக என்று கேட்டாலும், நாம் கேட்டால் அல்லாஹ் தரமாட்டான் அவ்லி­யா கேட்டால்தான் அல்லாஹ் தருவான் என்று நம்பினாலும் அவன் அந்த அவ்­லியா அல்லாஹ்வை நிர்பந்திக்க முடியும் என்று நம்புகிறான். அல்லாஹ் அந்த அவ்லியாவிற்காக கடமைப்பட்டுள்ளான்

நாம் அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்டால் நமக்குத் தராத அல்லாஹ் அந்த அவ்­லியா நமக்காக அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் அவருக்காக நமக்குத்தரவேண்டிய தர்மசங்கடத்திற்குள்ளாகிறான் என்றே கருதுகிறார்.
இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்கள் நிச்சயமாக இறைவனை மறுத்த இணைûவ்பாளர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


மேலும் அல்லாஹ்வின் பண்புகளில் மிக முக்கியமான ஒன்று தன்னுடைய அருளை தான் நாடியோருக்கு வழங்குவதாகும். அவ்­யாவின் பொருட்டால் கேட்டால் தருவான் என்று நம்புவது அல்லாஹ்வின் மேற்கண்ட பண்பிற்கு எதிரானதாகும்.


அல்லாஹ் நாடியோ ருக்கு மட்டும் தனது அருளை வழங்கு வான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். ( 2 : 105)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (11 : 107)


''அருள், அல்லாஹ் வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்'' என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.. தான் நாடியோருக்கு தன் அருளை அவன் சொந்தமாக்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (3 : 73/ 74)


இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப் பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (5 : 54)


நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். நன்மை செய்தோரின் கூ­யை வீணாக்க மாட்டோம். (12 : 56)


ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான் (14 : 11)

இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (57 : 21)


வேதமுடையோர் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் தாம் சக்தி பெற மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக (உங்களுக்கு அருள் புரிந்தான்.) அருள் அல்லாஹ்வின் கையில் உள்ளது. தான் நாடியோருக்கு அவன் அதைக் கொடுப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (58 : 29)


இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (62 : 4 )


மேற்கண்ட வசனங்களி­ருந்து இறைவனை யாருக்கும் கடமைப் பட்டவன் அல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
கப்ரு வணங்கிகள் இறந்தவரின் பொருட்டால் கேட்டால் இறைவன் தருவான் என்று நம்புவதால் அவர்கள் இறைவன் தன் அல்லாத ஒருவருக்கு கடமைப்பட்டவன் என்று தங்கள் செயல்களால் நிரூபிக்கின்றனர். எனவே இறந்தவரின் பொருட்டால் கேட்கும் கப்ரு வணங்கிகள் இணைவைப்பாளர்களே.



கப்ரு ஜியாரத் என்பது மறுமை சிந்தனைக்காகத்தான்!!. இறந்தவரின் பொருட்டால் கேட்பதற்கு அல்ல.!!!

அபூஹுரைரா (ரரி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர் களும் அழுதனர். அப்போது அவர்கள், ''நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள். (முஸ்­ம் 1777)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள் . அது மறுமையை ஞாபகமூட்டும்.
அறிவிப்பவர் : அபூ குரைரா (ர­) இப்னுமாஜா (1558)


உண்மையான இறைநம்பிக்கையாளர்களுக்கு குர்ஆன் ஹதீஸ போதுமானதாகும்.

நாங்கள் மத்ஹபு இமாம்கள் கூறினால்தான் நம்புவோம் எனக்கூறும் கப்ரு வணங்கிகளுக்கு இதோ மத்ஹபு இமாம்களின் கூற்றுக்ள்.



அல்லாஹ்வின் பொருட்டால் தவிர பிரார்த்தனை செய்வது வெறுப்பிற்குரியதாகும். இறைவா உன்னிடம் இன்னாரின் பொருட்டால் கேட்கிறேன். அல்லது உன்னுடைய மலக்குமார்களின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்களின் பொருட்டால் கேட்கிறேன் என்று கூறுவது கூடாது. ஏனெனில் படைப்பினங்களுக்காக அல்லாஹ்வின் மீது எந்தக் கடமையும் இல்லை.
நூல் : ஹனஃபி மத்ஹபின் இஹ்தியார் என்ற நூல் பாகம் : 4 பக்கம் : 175)


இறைவா இன்னாரின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறுவது கூடாது. அவ்வாறே உன்னுடைய நபிமார்களின் பொருட்டால், உன்னுடைய அவ்­யாக்களின் பொருட்டால் உன்னுடைய தூதர்களின் பொருட்டால் கஅபாவின் பொருட்டால் மஷ்அருல் ஹராமின் பொருட்டால் என்று கேட்பது கூடாது. ஏனெனில் படைப்பினங்களுக்காக அல்லாஹ்வின் மீது எந்தக் கடமையும் இல்லை. மேலும் அல்லாஹ் அவன் மீது எத்தகைய நிர்பந்தமும் இல்லாமல் தன்னுடைய அருளை தான் நாடியோருக்கு வழங்குகிறான்
றீல் : ஹனஃபி மத்ஹபின் அல்பஹ்ருர் ராயிக் பாகம் : 8 பக்கம் : 235)



இவரை அறிந்து கொள்ளுங்கள்




அஸ்ஸலாமு அலைக்கும்..

((சிராஜ் அவர்கள் பிஜே உடன் விவாதம் செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளதால், உண்மையில் அவர் விவாதம் செய்ய முனையும் பட்சத்தில்,அதற்கு முன் இங்கு சில செய்திகளை பதிக்க வேண்டியுள்ளது.))

அந்த வகையில், என்னிடம் சத்தியம் செய்ய சொன்னது தொடர்பாக அவருக்கும், அவருக்கு ஒத்து ஊதுபவர்களுக்கும் இதை பதிவு செய்கிறேன்,..


அவர் கேட்டபடி நாம் ஏற்கனவே சத்தியம் செய்து விட்டதையும், நான் கேட்டபடி அவர் இதுவரை சத்தியம் செய்யாமலிருப்பதையும் சத்தியத்தில் மோசடி செய்வது யார்? என்ற தலைப்பில் தெளிவாக விளக்கி விட்டேன்.

அதில் வேண்டுமென்றே, எனது அறிவுக்குட்பட்டு எதையும் நாம் செய்யவில்லை என்பதற்கு நான் சத்தியம் செய்ததையும், அதே நேரம், வேண்டுமென்றே பொய் சொல்லவில்லை, ஹதீஸ்களை மறுக்கவில்லை என்று கூட சிராஜ் அவர்களால் சத்தியம் செய்ய இயலவில்லை என்பதையும் தெளிவாக விளக்கினேன்.

இப்போது, என்னை சத்தியம் செய்ய இவர் சொல்லியதன் நோக்கம் என்ன? என்பதையும் இங்கு நீங்கள் அறிய வேண்டும்.

அதாவது விவாதத்தின் துவக்கிலிருந்தே பிறையை கண்ணால் பார்க்க தான் வேண்டும் என்பதற்கும், கணக்கிட கூடாது என்பதற்கும் அடுக்கடுக்காக பல ஹதீஸ்களை நான் வைத்த வண்ணம் இருந்தேன்.

அனைத்து ஹதீஸ்களும் நேரடியான ஆதாரங்களை கொண்டவை என்பதால் அவைகளுக்கு எந்த மறுப்பையும் அவரால் தர இயலாது என்ற நிலையில், எந்த ஒன்றுக்கும் பதில் சொல்லாமல், நான் வைத்த ஹதீஸ்களில் அந்த வார்த்தை இல்லை, இந்த வார்த்தை இல்லை, தமிழாக்கம் முழுமையாக இல்லை, தலைப்புகள் ஒரே இடத்தில் இல்லை, வேறு வேறு இடங்களில் பிரிக்கிறீர்கள் என்று, நமது கேள்விக்கும், தலைப்புக்கும் சம்மந்தமில்லாமல் எதிர்க்கருத்து மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார் சிராஜ்.

தலைப்புகளை பிரிக்கிறேன் என்பது உங்கள் குற்றச்சாட்டு என்றால், இதோ, அனைத்து ஹதீஸ்களையும் ஒரே தலைப்பில் பதித்து விட்டேன், இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டோம். பதில் இல்லை!!.

நான் சொல்வதில் எந்த வார்த்தை இல்லை? அந்த வார்த்தைக்கு பதிலாக வேறென்ன வார்த்தை இருக்கிறது? அதனால் நான் ஹதீசுக்கு சொல்லும் விளக்கம் எந்த விதத்தில் தவறாகி போகிறது என்பதை நீங்களாவது விளக்குங்களேன், என்று நாம் கேட்டோம்..
நீங்கள் இன்று வரை நடந்த விவாத மெயில்கள் அனைத்தையும் தேடி பார்த்தாலும், இதை இவர் சொல்லியிருக்கவே மாட்டார்.

மாறாக, நாஷித் சொன்னதில் அந்த வார்த்தை இல்லை, இந்த வார்த்தை இல்லை!.. இதுவே இவரது கூப்பாடாக இருந்தது.

(இவர் என்ன வார்த்தை எல்லாம் இல்லை என்று சொன்னாரோ, அதன் மூலம் என்ன கருத்தையெல்லாம் மறுத்து வந்தாரோ, அவை அனைத்தும் "பிறை பார்த்தல் - ஒரு ஆய்வு", என்ற அவர்களது ஆதரு பெற்ற நூலில் ஒரு சேர இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி கேட்டோம், என்பது கூடுதல் தகவல்)


ஹதீஸ் குறித்த தனது விளக்கத்தை யாரும் கேட்கக்கூடாது என்பதற்காகவும் , தவறு அனைத்தும் என் பக்கம் தான் என்பதை போல் பிறர் அறிய வேண்டும் என்பதற்காகவும், "ஹதீஸ்களை நீங்கள் திரிக்கவோ, வார்த்தைகளை வெட்டவோ சேர்கவோ இல்லை என்றும், சுய விளக்கத்தை கொடுக்கவில்லை என்றும் சத்தியம் செய்ய தயாரா? என்று என்னை நோக்கி சவால் விட்டார்.

அதை ஏற்று, நாம் சத்தியம் செய்து விட்டோம்.

இப்போது இவரது கடமை என்னவாக இருக்க வேண்டும்?

இதோ பாருங்கள்.. நாஷித், எந்த ஹதீஸ்களையும் வெட்டாமல், சுய விளக்கம் கொடுக்காமல் பதித்திருக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

இதோ நான் ஒவ்வொரு ஹதீசையும் விளக்குகிறேன் பாருங்கள்.. என்று கூறி,

  • நான் வைத்த ஒன்பது ஹதீஸ்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றுக்கும், தான் அறிந்துள்ள தமிழாக்கம் என்ன என்பதை இங்கு விளக்க வேண்டுமா இலையா?

  • எனது தமிழக்கதிற்கும் அவர் கூறும் தமிழாக்கதிற்கும் உள்ள வேறுபாட்டை அனைவருக்கும் அறிய தர வேண்டுமா இல்லையா?

  • அதன் மூலம், நான் அந்த ஹதீஸ்களுக்கு கொடுத்துள்ள விளக்கம் என்ன என்பதையும், அவர் அந்த ஹதீஸ்களுக்கு கொடுக்க கூடிய விளக்கம் என்ன என்பதையும் இங்கு பிரித்துக்காட்ட வேண்டுமா இல்லையா?

  • அதன் மூலம், நாஷிதின் விளக்கம் தவறு, இதோ எனது விளக்கம் தான் சரி, என்று நிலைநாட்ட வேண்டுமா இல்லையா?

  • பிறையை ஒவ்வொரு மாதமும் பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக நான் வைத்த அந்த ஒன்பது ஆதாரங்களையும் இதன் மூலம் மறுத்து, நாஷித் கொடுத்த விளக்கங்கள் இந்த கொள்கையை நிலைநாட்ட உதவாது என்பதை நிரூபிக்க வேண்டுமா இல்லையா?

மேலே உள்ள எதையாவது இவர் செய்தாரா?

ஒரு கொள்கையை நிலைநாட்டக்கூடியவர், அல்லது இன்னொரு கொள்கையை மறுக்கக்கூடியவர் செய்ய வேண்டியது இதுதானே?

அதை செய்யாமல், வார்த்தை ஜாலம் செய்து கொண்டிருந்தவரை,
  • பிறை விஷயத்தில், எந்த ஹதீஸுக்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸில் இல்லாத விளக்கத்தை கொடுக்கவில்லை.
  • எந்த ஹதீசையும், அது தரும் சட்டத்தையும் நான் வேண்டுமென்றே மறுக்கவில்லை.
  • நாஷிதின் எந்த கருத்துக்கு பதில் சொல்லும் போதும் , எந்த விஷயத்திலும் வேண்டுமென்றே நான் பொய் சொல்லவில்லை

என்பதை இங்கு இறைவன் மீதாணையாக சிராஜ் சொல்ல வேண்டும்.


என்று சத்தியம் செய்ய சொல்லி கேட்டோமே, அதையாவது அவர் செய்தாரா?

அதையும் செய்யவில்லை..

தன் வாதத்தை நிரூபிக்கவும் செய்யாமல், அவரது கொள்கைக்கு எதிரான ஹதீஸ்களுக்குரிய பதிலையும் சொல்ல இயலாமல், நாம் கேட்டபடி சத்தியமும் செய்யாமல், உலா வந்து கொண்டிருக்கும் நபர் தான் இந்த ஏர்வாடி சிராஜ்..

இதையும் சகோதரர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த செய்தி!!



வியாழன், 20 ஜனவரி, 2011

பெட்ரோல் விலை : கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள் !!!

பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!


மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.

இதில் நாமும் விதிவிலக்கல்ல..

ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.

பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!

விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்

1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்

அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.

இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!! இது மகாப் பொய்யாகும்!!

நாம் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.

நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)

IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்

HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்

BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்

மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.

நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.

லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.

பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?

எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது

அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.

ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.

2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.

இது மிகப்பெரும் அநியாயமாகும்.

2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே பெட்ரோலை லிட்டர் 54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்

உண்மையில் தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.

ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.

இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011

வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்

22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..

மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.

இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!

இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!

மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.

நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.

இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!

100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.

ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.

இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.

எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கூடுதலாக வரி விதிக்க காரணம்

1. தனியார் நிறுவனங்கள்

சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.

கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.

ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.

இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.

Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.

இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.

தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.

இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.

முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.

2. வட்டி

65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.

இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.

அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.

பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது.

அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.

18% எங்கே 65% எங்கே ?

பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்

மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.

இந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு இதை குறைக்க முடியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.

இப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை தான் ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு ‘சொந்த இடம், சொந்த வீடு, படத்திற்கு வரி விலக்கு’ பொன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த கருணாநீதி.

இதுவல்லாமல் பொதுமக்களுக்கு ‘அந்த திட்டம் இந்த திட்டம்’ என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.

மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.

பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாததை போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.

மாநிலம் வாரியான பெட்ரோல் வரி பட்டியல்

State oil Petrol Diesel Kerosene gas
Andhra Pradesh 4 33 22.2 4 4
Maharastra 4 25 23 4 -
Gujarat - 23 21 - -
Madhya Pradesh - 28.7 23 4 4
Chattisgarh - 22 22 4 -
Goa - 22 21 4 4
Uttar Pradesh 4 26.5 17.2 4 -
Uttarakhand - 25 21 12.5 -
Delhi - 20 12.5 4 4
Himachal Pradesh - 25 14 - 4
Jammu, Kashmir - 20 12 4 4
Punjab - 27.5 8.8 4 4
Rajasthan - 28 18 4 -
Haryana 4 20 8.8 4 -
Chandigarh - 20 12.5 4 2
Tamilnadu - 30 21.4 4 4
Pondicherry - 12.5 12.5 - 1
Kerala - 29 24.6 - -
Karnataka 1 25 18 4 1
Orissa - 18 18 4 4
Assam - 25.7 15.5 2 4
Bihar 2 16 16 8 8
Jharakhand - 20 14.5 4 4
West Bengal - 25 17 4 4
Manipur - 20 12.5 4 4
Meghalaya - 20 12.5 4 4
Tripura - 15 10 - 1.5
Mizoram - 18 10 - 2
Arunachal Pradesh - 20 12.5 4 4
nagaland - 20 12 5 4

State

oil

Petrol

Diesel

Kerosene

gas

Andhra Pradesh

4

33

22.2

4

4

Maharastra

4

25

23

4

-

Gujarat

-

23

21

-

-

Madhya Pradesh

-

28.7

23

4

4

Chattisgarh

-

22

22

4

-

Goa

-

22

21

4

4

Uttar Pradesh

4

26.5

17.2

4

-

Uttarakhand

-

25

21

12.5

-

Delhi

-

20

12.5

4

4

Himachal Pradesh

-

25

14

-

4

Jammu, Kashmir

-

20

12

4

4

Punjab

-

27.5

8.8

4

4

Rajasthan

-

28

18

4

-

Haryana

4

20

8.8

4

-

Chandigarh

-

20

12.5

4

2

Tamilnadu

-

30

21.4

4

4

Pondicherry

-

12.5

12.5

-

1

Kerala

-

29

24.6

-

-

Karnataka

1

25

18

4

1

Orissa

-

18

18

4

4

Assam

-

25.7

15.5

2

4

Bihar

2

16

16

8

8

Jharakhand

-

20

14.5

4

4

West Bengal

-

25

17

4

4

Manipur

-

20

12.5

4

4

Meghalaya

-

20

12.5

4

4

Tripura

-

15

10

-

1.5

Mizoram

-

18

10

-

2

Arunachal Pradesh

-

20

12.5

4

4

nagaland

-

20

12

5

4

போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.

விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது.

இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.

மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால் பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.

மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.

பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!

அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்

20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!

ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள்.

சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!

இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.

இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..

அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.

எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.

எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.

Tntj.net இணையதள நேயர்களுக்காக..

பெட்ரோல் விலை பற்றிய சிறப்பு ஆய்வு
அபு நபீலா
(விலை உயர்வால் பாதிக்கப்பட்டவன்)

புள்ளி விபரத்தில் சற்று கூடுதல் குறைவு இருப்பதாக யாருக்கும் தெரியவந்தால் தெரியப்படுத்தவும்.

Ref: MoneyControl , Indian gov Tax website, Press News, indian budget

புதன், 19 ஜனவரி, 2011

சத்தியத்தில் மோசடி செய்வது யார்?




அஸ்ஸலாமு அலைக்கும்..

என் அறிவுக்குட்பட்டு , வேண்டுமென்றே பிறை சம்மந்தப்பட்ட என்னுடைய ஆதார ஹதீஸ்களை ஒரு வார்த்தை கூட நான் இட்டுகட்டாமல்,கூட்டாமல்,குறைக்காமல்,திரிக்காமல், வெட்டாமல், எண் சுய கருத்துகளை திணிக்காமல் முழுமையாக பதிந்தேன் - அல்லாஹ்வின் மீது சத்தியம்!! - (நாஷித்)



இதில் என் அறிவுக்குட்பட்டு , வேண்டுமென்றே என்பது மட்டும் சிராஜ் கேட்டதிலிருந்து நான் கூடுதலாக சொல்லும் வார்த்தைகள்.

இதை வைத்து தொங்கிக்கொண்டிருப்பவர்களும் இருப்பார்கள் என்பதால் இதை விளக்குகிறேன்.

எந்த ஹதீஸை நானோ சிராஜோ வேறு எவரோ சொன்னாலும், அதை அவர் அறிவுக்குட்ப்பட்டு நம்புவதை மட்டும் தான் அவரால் சொல்ல முடியும்.

நான் ஒன்பது ஹதீஸ் ஆதாரங்களை இங்கு தந்திருக்கிறேன். அவை அனைத்தையுமே நான் நம்பிய அளவில் சரி என்று கருதி தான் எழுதியுள்ளேன்.
அதன் தமிழாக்கம் என்று நான் எதை நம்புகிறேனோ, அதை தான் சொல்லியுள்ளேன்.

என்னையும் அறியாமல் அதில் தவறுகள் இருந்தால் அது எனக்கு தெரியாது.
நான் அறிந்தவரையில் அதில் தவறில்லை என்பதற்கு தான் நான் சத்தியம் செய்ய முடியும். அதை செய்திருக்கிறேன்!

என் அறிவையும் மீறி கூட எந்த தவறும் இருக்காது என்று நான் சத்தியம் செய்ய முடியாது. அவ்வாறு செய்யவும் கூடாது.

எனது அறிவையும் மீறி, என்னையும் அறியாமல் அந்த ஹதீஸ்களில் எந்த தவறியாவது நான் செய்திருந்தால் அதை சுட்டிக்காட்டுங்கள் என்றும் சொல்லி விட்டேன்.

இதை விட வேறு எவ்வாறு சத்தியம் செய்வது?

என் அறிவையும் மீறி கூட அதில் தவறு இருக்காது என்று சொல்ல வேண்டுமா?
அவ்வாறு சொல்வது அல்லாஹ் மட்டுமே! அல்லாஹ் மட்டுமே தவறுக்கு அப்பார்ப்பட்டவன்.

இந்த அடிப்படையை கூட புரியாத சிராஜ், நான் கேட்டதை மட்டும் சொல்லுங்கள், கூடுதலான வார்த்தைகள் வேண்டாம் என்று சொல்கிறார். இவரது அறிவின் ஆழம் இது தான்.

சரி, சிராஜின் அறிவு தான் நமக்கு தெரியுமே, அது தான் இவ்வாறு என்றால், பிற சகோதரர்கள் சிலரும் இதையே பேசுவது என்ன விபரமோ தெரியவில்லை.

எனது நினைவுகுட்பட்டு நான் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஏதாவது தவறு இருக்குமாயின், எனது அறிவுக்குட்படாத தவறுகள் தான். அதுவே நான் விளக்கியது.
அவ்வாறு தவறுகள் ஏதாவது இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

இது எனது சத்தியம் குறித்த விளக்கம்.


சரி, நான் சிராஜிடம் சத்தியம் செய்ய சொல்லி கேட்டேனே, அது மேலே சிராஜ் உளறியதை போன்றா கேட்டேன்?

  • பிறை விஷயத்தில், எந்த ஹதீஸுக்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸில் இல்லாத விளக்கத்தை கொடுக்கவில்லை.
  • எந்த ஹதீசையும், அது தரும் சட்டத்தையும் நான் வேண்டுமென்றே மறுக்கவில்லை.
  • நாஷிதின் எந்த கருத்துக்கு பதில் சொல்லும் போதும் , எந்த விஷயத்திலும் வேண்டுமென்றே நான் பொய் சொல்லவில்லை

அவரிடம் நான் கேட்ட வார்த்தைகளை பாருங்கள்.

எதையும் நான் வேண்டுமென்றே செய்யவில்லை, என்று சொல்ல தான் நான் கேட்டேன்.

இது அவரது அறிவுக்குட்பட்ட விஷயம். அவர் அறிவுக்குட்பட்ட வரையில், வேண்டுமென்றே எந்த தவறையும் செய்யவில்லை என்று சத்தியம் செய்யுங்கள் என்று தான் நான் கேட்டேன்.

என்னிடம், என் அறிவுக்குட்படாத விஷயத்தையும் சத்தியம் செய்யுங்கள் என்கிறார்.

சகோதரர்களுக்கு வேறுபாடு விளங்குகிறதா?

நான் என் அறிவுக்குட்ப்பட்டு, வேண்டுமென்றே எதையும் தவறாக செய்யவில்லை என்று சத்தியம் செய்து விட்டேன்.

அவர் அவரது அறிவுக்குட்ப்பட்டு, வேண்டுமென்றே எதையும் தவறாக செய்யவில்லை என்று சத்தியம் செய்ய வேண்டும்.

இதையே நாம் கேட்கிறோம்..


  • பிறை விஷயத்தில், எந்த ஹதீஸுக்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸில் இல்லாத விளக்கத்தை கொடுக்கவில்லை.
  • எந்த ஹதீசையும், அது தரும் சட்டத்தையும் நான் வேண்டுமென்றே மறுக்கவில்லை.
  • நாஷிதின் எந்த கருத்துக்கு பதில் சொல்லும் போதும் , எந்த விஷயத்திலும் வேண்டுமென்றே நான் பொய் சொல்லவில்லை

என்பதை இங்கு இறைவன் மீதாணையாக சிராஜ் சொல்ல வேண்டும்.



வஸ்ஸலாம்..




----------------------------------------------------------------------------------------------



நாம் சத்தியம் கேட்டதற்கு கீழ்கண்டவாறு சிராஜ் பதில் அளிக்கிறார்.


என்னுடைய தவறுகளை கேட்டு சத்தியம் செய்ய சொன்னால் அது நியாயம்
நான் கேட்ட ஒரு சில கேள்விகளுக்கு என்னை சத்தியம் செய்ய சொல்கின்றார். என்னுடைய ஆதாரங்களில் தவறு இருந்தால் என்னிடம் சத்தியம் கேட்க்கட்டும். நான் சத்தியம் செய்யாவிட்டால் தவறு என கூறுங்கள்.
- ஏர்வாடி சிராஜ்.



ஒரு சில கேள்வி மட்டும் தான் கேட்டாராம்.. அதனால் அதிலிருந்து சத்தியம் செய்ய சொல்லக்கூடாதாம்..!!!!!!
அறிவை கடன் கொடுத்து விட்டு வாதம் செய்யாதீர்கள்.
சரி, ஒரு பேச்சுக்கு ஒரு சில கேள்விகளை தான் கேட்டீர்கள் என்றே வைத்துக்கொள்வோமே, அதனால் சத்தியம் செய்யக்கூடாதா?

நான் கூட ஒரு சில ஹதீஸ் ஆதாரங்களை தான் சொன்னேன். என்னிடம் ஏன் சத்தியம் செய்ய சொன்னீர்கள்?

சத்தியம் செய்ய வக்கில்லை என்றால் இயலாது என்று அறிவியுங்கள்.. இதற்கு இது போன்ற சால்ஜாப்பு சொல்லாதீர்கள்.

கேள்வி மட்டும் தான் கேட்டேன் என்று அவரே ஒப்புக்கொள்கிறார். அதாவது நான் ஆதாரமாக வைத்து பல பல கேள்விகளை கேட்டேனே, அந்த கேள்விகள் எதற்கும் பதில் சொல்லவில்லை, அதற்கு எதிர் கேள்வி மட்டுமே சிராஜ் கேட்டுக்கொண்டிருந்தார் என்று பல முறை விமர்சித்தோமே, அதை அவரது வாய்மொழியாகவே இங்கு அறிந்து கொள்ளுங்கள்.


சரி, கேள்வி மட்டும் கேட்டால் சத்தியம் செய்ய சொல்லக்கூடாது என்ற வரம்பு ஏதும் உள்ளதா?

உதாரணதிற்கு,

நான் அல்லாஹ் உண்டு என்று ஆதாரத்துடன் சொல்கிறேன் என்று வையுங்கள்..

இன்னொருவர், அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் வைக்கும் ஆதாரம் அனைத்துமே பொய்.. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குரிய ஆதாரமாக அது இல்லை. ஆதாரத்தை முழுமையாக வைக்க முடியுமா? என்கிறார். முழுமையாக தான் ஆதாரங்களை வைத்தேன் என்று சத்தியமிட்டு சொல்ல முடியுமா? என்று நம்மிடம் கேட்டகிறார்.

நாம் அதற்கு சத்தியம் செய்து விட்டோம்..

பின், அவரிடம்,
அல்லாஹ் உண்டு என்பதற்கு நான் சொன்ன ஆதாரங்களை நீங்கள் மன முரண்டாக வேண்டுமென்றே தான் மறுக்கிறீர்கள், இல்லை என்று சத்தியமிட்டு சொல்ல தயாரா?
என்று கேட்கிறேன்..

அதற்கு, நான் ஏன் சத்தியம் செய்ய வேண்டும்? நான் கேள்வி மட்டும் தானே கேட்டேன், என்கிறார்.

இவரது நிலையை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்வோம்?

இதே நிலை தான் சிராஜின் நிலை..

அதாவது, தனது கொள்கையை அறிவிக்கவும் கூடாது.. (அறிவித்தால் தானே அதிலுள்ள கிறுக்கத்தனம் தெரியும்).. அதே சமயம், பிறரது கொள்கை குறித்து மறுப்பு கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்..
இறுதியில், எனது கொள்கையை மறுக்க நீங்கள் சொல்லும் வாதங்களை சத்தியமிட்டு சொல்வீர்களா? என்று கேட்டால் , நான் ஏன் சத்தியமிட வேண்டும்? நான் கேள்வி மட்டும் தானே கேட்டேன்? என்று சொல்லி விட
வேண்டும்..


இதை விடவும் ஒரு போக்கிரித்தனம், நயவஞ்சகத்தனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

இதை சொன்னால், நாஷித் வரம்பு மீறி தானே பேசுவார், அதை நாம் பெரிதாக எடுக்க தேவையில்லை என்பார்..

போக்கிரித்தனத்தை வேறு என்ன வார்த்தை சொல்லி சொல்ல முடியும்? போக்கிரித்தனம் என்று தான் சொல்ல முடியும்!!!


நான் ஹதீஸ்களை முழுமையாக சொல்லவில்லை, சிலதை மறைத்து விட்டேன் என்பது உங்களது குற்றச்சாட்டு. அதற்கு என்னிடம் சத்தியம் கேட்டீர்கள்.
அதை நான் செய்தேன்.

நீங்கள், நான் சொன்ன ஹதீஸ்களை மன முரண்டாக மறுக்கிறீர்கள், அது சொல்லும் கருத்தை திரிக்கிறீர்கள், ஹதீஸ்களை ஹதீஸே இல்லை என்று வேண்டுமென்றே மறுக்கிறீர்கள். என்பது எனது குற்றச்சாட்டு.
அதற்கு உங்களிடம் சத்தியம் கேட்க்கிறேன்..

இரண்டும் இரண்டு நிலை, இரண்டு கொள்கை.. நான் சத்தியம் செய்வது சரி என்றால் சிராஜ் சத்யம் செய்வதையும் அனுமதிக்க தான் வேண்டும்.. நான் கேள்வி மட்டும் தானே கேட்டேன் என்று உளறக்கூடாது.

தன்னிடம் உண்மை உள்ளவர் , இத்தனை நாட்களாக நீங்கள் நாஷித் உடன் உண்மையாகவே வாதம் செய்தீர்கள் என்றால், இந்த சத்தியத்தை செய்ய தயங்க தேவையில்லை..



  • பிறை விஷயத்தில், எந்த ஹதீஸுக்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸில் இல்லாத விளக்கத்தை கொடுக்கவில்லை.
  • எந்த ஹதீசையும், அது தரும் சட்டத்தையும் நான் வேண்டுமென்றே மறுக்கவில்லை.
  • நாஷிதின் எந்த கருத்துக்கு பதில் சொல்லும் போதும் , எந்த விஷயத்திலும் வேண்டுமென்றே நான் பொய் சொல்லவில்லை

என்பதை இங்கு இறைவன் மீதாணையாக சிராஜ் சொல்ல வேண்டும்.




இதை செய்ய திராணி இல்லாமல் , பிஜே உடன் விவாதம் செய்யப்போகிறேன் என்கிறார்.

சொல்லிக்கொண்டிருக்காமல் முடிந்தால் அதை உடனே செய்யுங்கள்.. உங்கள் வண்டவாளங்கள் அனைத்தும் வெளிப்படும் நாளை தான் நாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.. இன்ஷா அல்லாஹ்..




செவ்வாய், 18 ஜனவரி, 2011

பெண் வீட்டு விருந்து கூடுமா?




ஒரு தந்தை தனது மகளின் திருமணத்தை ஒட்டி மன விருப்பத்துடன் விருந்தளித்தால் அது தவறா?

நூருத்தீன்

PJ தில்

இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. திருமணத்தில் ஒரே ஒரு விருந்து முறையை மட்டுமே இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அது திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை கொடுக்கும் வலீமா விருந்தாகும். இதைத் தவிர வேறு விருந்தை திருமணத்தில் இஸ்லாம் காட்டித் தரவில்லை.

ஆனால் இன்றைக்கு மாப்பிள்ளை கொடுக்க வேண்டிய வலீமாவைப் போன்று பெண் வீட்டு விருந்து என்பது திருமணத்தில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. இது இல்லாமல் திருமணம் இல்லை என்கின்ற அளவிற்கு சில ஊர்களில் எழுதப்படாத சட்டமாகவே இது சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எந்த அளவிற்கென்றால் பெண் வீட்டாருக்கும் சேர்த்து நாங்கள் விருந்தளிக்கின்றோம் என மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொண்டால் கூட பெண் வீட்டார் இந்த விருந்தைக் கைவிடுவதில்லை. நடத்தியே தீர வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஏனென்றால் பெண் வீட்டார் விருந்து போடா விட்டால் அது தனக்கும் தனது குடும்பத்துக்கும் கேவலம் என்று பெண் வீட்டார் கருதுகின்றனர். பெண் வீட்டார் தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து திருமண விருந்து கொடுக்காவிட்டால் அவர்களைக் கஞ்சர்களாகவும் கேவலமாகவும் சமுதாயம் பார்ப்பதே இதற்குக் காரணம். எனவே தான் சக்தி உள்ளவர்களும் சக்தி இல்லாதவர்களும் இந்த விருந்தை எப்பாடுபட்டாவது நடத்தி வருகின்றனர்.

இத்தகைய பெண்வீட்டு விருந்து என்பது வரதட்சணையை விட கொடுமையானதும் கொடூரமானதாகும். மணப்பெண்ணின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் கணவன் பெண் வீட்டாரிடம் எதையும் கேட்டு வாங்குவதே கூடாது என்கிற போது மணப் பெண்ணுக்கு எந்த வகையிலும் பலன் தராத ஊர் மக்கள் பெண் வீட்டாரிடமிருந்து உணவை எதிர்பார்ப்பது நிச்சயம் வரதட்சணையை விட கொடுமையானது தான். எனவே பெண் வீட்டு விருந்து என்பது ஒருவரின் பொருளை அநியாயமான முறையில் உண்பதற்குச் சமமான குற்றமாகும்.

பல திருமணங்களில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பெண் வீட்டாரே விருந்தளிக்கும் நிலையும் இருக்கின்றது. இதுவும் வரதட்சணையே. "பெண்வீட்டார் மீது எந்த ரீதியில் பொருளாதாரச் சுமையை சுமத்தினாலும் அவை அனைத்தும் வரதட்சணையாகும்.

மாப்பிள்ளை வீட்டார் நிர்பந்தப்படுத்தாத நிலையில் பெண் வீட்டார் தானாக முன்வந்து விருந்துக்கு பொறுப்பேற்பது தவறல்ல என்று சிலர் வாதிடுகின்றனர். இத்தகைய பெண் வீட்டார்கள் தான் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். ஏனென்றால் திருமணத்தில் வலீமா அல்லாத வேறு ஒரு விருந்தை இஸ்லாம் காட்டித் தரவில்லை என்கிற போது இஸ்லாம் காட்டித் தராத விருந்தாகவும் சமுதாயத்தைச் சீரழிக்கக்கூடிய விருந்தாகவும் உள்ள இந்த பெண் வீட்டு விருந்தை ஒழிக்க பாடுபடுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.

தனக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைக் கைவிடுவதால் சமுதாயத்துக்கு நன்மை ஏற்படும் என்றால் சமுதாய நலம் விரும்புவர்கள் நிச்சயமாக அந்தக் காரியத்தை விட்டு விடுவார்கள். பெண் வீட்டார் இவ்விஷயத்தில் சமுதாய நன்மையைக் கவனத்தில் கொள்ளாமல் நான் விரும்பிக் கொடுப்பது தவறா? என்று கேட்பது அவர்களின் சுயநலத்தை வெளிப்படுத்துகின்றது. மேலும் பெண்வீட்டு விருந்தை நடத்தும் அனைவரும் இந்த வாதத்தின் மூலம் தங்களது வழிகேட்டை நியாயப்படுத்துவதற்கும் இவர்கள் காரணமாக அமைகின்றனர்.

ஒரு அரசு ஊழியர் ஒரு காரியத்தை முடித்துத் தருவதற்காக ஒரு நீதிபதி தனக்கு சாதகமாக தீர்ப்பளித்ததற்காக ஒருவர் சந்தோசப்பட்டு விரும்பி கொடுத்தால் அது லஞ்சம் இல்லை என்று கூற முடியுமா?

அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஜகாத்) வசூலிப்பவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? இல்லையா? என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஜகாத் பொருளிலிருந்து முறைகேடாக எதனைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தனது பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ, ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்'' என்று கூறினார்கள். பிறகு அவர்களுடைய அக்குள் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, "இறைவா! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?'' என்று மூன்று முறை கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதி (ரலி)

நூல்: புகாரி 2597, 6636

வசூல் செய்த இந்தத் தோழர், "மக்கள் தாமாகத் தந்தார்கள்'' என்ற வாதத்தை முன் வைக்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விடச் சிறந்த வாதத்தை முன்வைக்கின்றார்கள். இவர் வீட்டில் இருந்தால் இது கிடைக்குமா? என்று கேட்கின்றார்கள்.

பெண் வீட்டு விருந்து விஷயத்தில் இது போன்றே நாமும் கேட்கின்றோம். "தன் மகளை மணந்து கொண்டார் என்பதற்காகத் தான் தான் இந்த விருந்தைப் பெண் வீட்டார் வைக்கின்றார்களா? அல்லது வேறு காரணத்திற்காகவா? தன் மகளைக் கட்டிக் கொடுத்திருப்பதால் மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார் தன் மகளை ஒழுங்காக வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் பெண் வீட்டுக்காரர்கள் இந்த விருந்து, சீதனம், நகை, தொகை எல்லாவற்றையும் கொடுக்கின்றார்கள். உண்மையில் பெண் வீட்டுக்காரர்கள் விருந்து கொடுப்பது ஒரு மறைமுக நிர்ப்பந்தமே!

இன்று பெற்றோர் இறந்த பிறகு அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துக்கள் பெண் மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஆண் மக்கள் அந்தச் சொத்தை அப்படியே அபகரித்து அனுபவித்துக் கொள்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பெண் மக்களுக்கான கல்யாணச் செலவு தான். கழுத்தில் போட்ட நகை, கையில் கொடுத்த தொகை, வைத்த விருந்து ஆகியவற்றிற்கு நிறைய செலவாகி விட்டது; எனவே அதைப் பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தில் கழித்துக் கொள்கிறோம்; அதற்கு இது சரியாகி விட்டது என்று காரணம் கூறுகின்றனர். இப்படி வாரிசுக்குச் சேர வேண்டிய சொத்தை மறுப்பது வரம்பு மீறுதலாகும். இதற்குத் தண்டனை நிரந்தர நரகம் என்று அல்குர்ஆன்4:13,14 வசனங்கள் கூறுகின்றன. நிரந்தர நரகத்திற்குத் தூண்டும் இந்தப் பாவத்தை எந்த முஸ்லிமும் செய்யக்கூடாது.

17.01.2011. 13:13 (onlinepj.com)