திங்கள், 3 ஜனவரி, 2011

அர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார் யார்?மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான். அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது.


அவர்கள்:

1. நீதமிகு தலைவர்

2. அல்லாஹ்தஆலாவின் வணக்கத்தில் வளர்ந்த ஒரு வாலிபர்.

3. மஸ்ஜித்களுடன் இதய பூர்வத் தொடர்பு கொண்ட மனிதர்.

4. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.

5. அழகும், கவர்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்றுரைக்கும் மனிதன்.

6. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு (இரகசியமாக) செலவு செய்யும் மனிதன்.

7. தனிமையில் இறையச்சத்தின் காரணமாக அழும் மனிதன்.’

அறிவிப்பவர்: அபூஹுரைறா (ரலி)

நூல்: புகாரி 6806
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக