திங்கள், 3 ஜனவரி, 2011

பதில் சொல்லாதது யார்?



அஸ்ஸலாமு அலைக்கும்..


சகோதரர்கள் அனைவரும் கவனமாக இதை படித்தால் உண்மை புரிந்து விடும்..

என்னை நோக்கி, தனிப்பட்ட முறையில் சிராஜ் எழுப்பிய விமர்சனங்களுக்கு அடுத்து வருகிறேன்.. அதற்கு முன் தலைப்பை ஒட்டிய செய்திகளை முதலில் விளக்கி முடிக்கிறேன்..

குறைப் ஹதீஸை ஆதாரமாக முதலில் வைத்து, அது கூறும் கருத்தையும் விளக்கினோம்.
ஒரு ஹதீஸை நான் எவ்வாறு விளங்கியிருக்கிறேனோ , அதை தான் நான் கூற முடியும். நான் விளங்கியவற்றில் தவறு இருக்கிறது என்று கூறும் நபர் தான், நான் விளங்கி சொல்பவற்றில் இது தவறு, இந்த அர்த்தம் வராது, இதன் மூலம் இந்த கருத்தை நிலைநாட்ட முடியாது என்று எனக்கு மறுப்பு தர வேண்டும். இதுவே அறிவார்ந்த எவரும் செய்யும் செயல்.
குறைப் ஹதீஸை இரு வகைகளில் நான் விளக்கியாகி விட்டது.
ஒன்று, அந்த ஹதீஸ் தரும் கருத்து என்ன? என்பது .
இரண்டாவது, அந்த கருத்தின் மூலம் நான் வைக்கும் வாதம் என்ன? என்பது.


முதல் கருத்து:

குறைப் அவர்கள் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தார். இப்னு அப்பாஸ் அவர்கள் சனிக்கிழமை தான் பிறை
பார்த்தார்கள்.
இது முதல் கருத்து.

இதில் அரபி மூலம் என்ன என்பதை நான் இங்கு பதியவில்லை.
இந்த கருத்தில் ஏதேனும் தவறு இருக்கிறது என்று கூறும் நபர், "இல்லை, நாஷித் பொய் சொல்கிறார் , பார்த்தீர்களா , குறைப் திங்கள்கிழமை பிறை பார்த்தார் என்று தான் வருகிறது, அல்லது குறைப் பிறை பார்த்தார் என்று அந்த அறிவிப்பில் வரவேயில்லை, என்று எதையாவது சொல்லி, நான் சொல்லும் கருத்தை மறுக்க வேண்டும். இதில் சிராஜ் எதையாவது செய்தாரா?

ஒன்றே ஒன்று செய்தார். இது ஹதீஸ் இல்லை, இதில் ரசூல் (ஸல்) அவர்களது அங்கீகாரம் இல்லை, ஆகவே இது வெறும் உரையாடல் தான் என்றார். இது சப்பை கட்டு என்பதை நான் ஏற்கனவே நிரூபித்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். இவர், தன் வறட்டு கொள்கையை நிலை நாட்டுவதற்க்காக வெறுமனே இந்த ஹதீசுக்காக மட்டும் சந்தர்ப்ப நிலையை தான் எடுக்கிறார், இதே போன்று வரும் அனைத்து ஹதீஸ்களையும், வெறும் அறிவிப்பு தான் என்று இவர் உதறி தள்ளுவாரா என்ற கேள்விக்கு இவர் காட்டிய அசாத்திய மௌனமே அதற்க்கு ஆதாரமாக அமைந்தது!!
இது போன்ற வாசக அமைப்பையும், இது போன்று ரசூல் (ஸல்) அவர்களது அங்கீகாரமும் இல்லாத ஐந்து அல்லது ஆறு ஹதீஸ்களை எடுத்துக்காட்டி, இவைகளுக்கும் இதே பார்வையை தான் கொண்டுள்ளீர்களா? என்று கேட்ட போது, வாயடைத்து போன இவர், அதற்கு பதில் சொன்னால், எங்கே, நம்மை அனைத்து ஹதீஸ்களையும் மறுக்க வைத்து விடுவார் என்று அஞ்சி, தனது சந்தர்ப்பவாத நிலையை அவரே வெளிச்சம் போட்டுக்காட்டினாரே, அதை விடவும் வேறு ஆதாரம் வேண்டுமா என்ன?


முதல் கருத்தில் இருந்து நான் வைத்த வாதம்:

சரி, முதல் கருத்தில் இருந்து நான் வைத்த வாதம் என்ன? குறைப் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தார்.
ஒரு குறிப்பிட்ட நாளில் பிறை பார்த்தார் என்று வருகிறது என்றால், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரு நாளில் பிறை பார்த்து தான் மாதத்தை தீர்மானிக்க வேண்டும், அவ்வாறு தான் சஹாபாக்கள் தீர்மானிதிருக்கிரார்கள் என்பது தெளிவு.
அது எந்த நாள்? மாதத்தின் முதல் நாள்!!
மாதத்தின் முதல் நாள் என்பதற்கு என்ன ஆதாரம்?
ரசூல் (ஸல்) அவர்களது இன்னொரு ஹதீஸ் தான் ஆதாரம். அது என்ன ஹதீஸ்?
""மாதத்திற்கு 29 நாள் தான்! உங்களுக்கு பிறை தென்படவில்லை என்றால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள்!""
இதில் , 29 நாட்கள் முடிந்த பிறகு தான் பிறை பார்க்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிறை தெரிந்தால், அடுத்த மாதம் துவங்கி விட்டது, தெரிவில்லை என்றால் முந்தைய மாதம் முடியவில்லை!!

ஆகவே , இந்த ஹதீசுக்கு வலு சேர்க்கும் விதமாக, குறைப் அவர்கள் வெள்ளி அன்று பிறை பார்த்திருக்கிறார்கள், இப்னு அப்பாஸ் சனிக்கிழமை பார்த்திருக்கிறார்கள்.

முதல் கருத்திலிருந்து நான் வைத்த அடுத்த வாதம் என்ன?
அவர்கள் வெள்ளி அன்றும் சனி அன்றும் பிறையை பார்த்தார்கள். வெறுமனே கணக்கிட்டு கொள்ளலாம் என்றால் ஒரு குறிப்பிட்ட நாளில் பிறை பார்க்க தேவையில்லை!



அடுத்த கருத்து:

வெள்ளிக்கிழமை தாமும் முஆவியா அவர்களும் சிரியாவில் வைத்து பிறை பார்த்ததை ஏற்று செயல்படுமாறு மதினாவில் உள்ள இப்னு அப்பாஸ் அவர்களிடம் சொல்கிறார்கள் குறைப் அவர்கள்.
இதை இப்னு அப்பாஸ் மறுக்கிறார்கள்!

இதிலும் அரபி மூலத்தை நான் இங்கு சொல்லவில்லை தான். நான் கூறும் கருத்தில் தவறு இருக்கிறது என்று கூறும் ஒருவரது கடமை, அது என்ன தவறு, அந்த தவறினால் நான் சொல்லும் கருத்துக்கு என்ன பங்கம், என்ன வகையில் அதன் பொருள் வேறுபடுகிறது என்பதை இங்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

தான் பார்த்த பிறையை இப்னு அப்பாஸ் அவர்களிடம் பின்பற்றுமாறு குறைப் அவர்கள் சொல்லவில்லையா? என்றால் அதை சொல்லுங்கள்.
அவ்வாறு கூறிய குறைப் அவர்களிடம் இப்னு அப்பாஸ் மறுக்கவில்லையா? என்றால் அதை சொல்லுங்கள். பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் ஒருவர், என்னை நோக்கி, ஹதீஸை முழுமையாக பதியுங்கள் என்று வினவுவது வேடிக்கை! நான் முழுமையாக தான் கூறியிருக்கிறேன். தவறு என்று சொல்பவர் தான் அதிலுள்ள தவறை சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த கருத்தில் இருந்து நான் வைத்த வாதம்:

இந்த கருத்தில் இருந்து நான் வைத்த வாதம் என்ன? ஒருவர் ஒரு இடத்தில் பிறை பார்த்தால் அதை இன்னொரு இடத்தில் கட்டுப்படுத்த முடியாது. பிறையும், அதன் மூலம் மாதத்தின் துவக்கமும் ஒரே நாட்களில் உலகம் முழுவதும் இருக்காது.

இதற்கு என்ன மூல ஆதாரம்?
பிறையை பார்த்து இது இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்று குழம்பிக்கொண்டிருந்த சஹாபாக்களை நோக்கி, நீங்கள் பிறை பார்க்கும் வரை அல்லாஹ் முந்தைய மாதத்தை நீட்டி தந்துள்ளான் என்று இப்னு அப்பாஸ் அவர்கள் கூறுவது தான் இதற்கு ஆதாரம்!
இந்த குறைப், இப்னு அப்பாஸ் ஹதீஸ் கூட ஆதாரம் தான்.
ஒரு இடத்தில் பிறை பிறந்திருந்தாலும், அதை நாம் பின்பற்ற தேவையில்லை. நம் பகுதிக்கு அது தென்படும்வரை நாம் மாதத்தை துவக்க தேவையில்லை. நம் பகுதியில் பிறை தென்படாமல் மேகமூட்டம் பிறையை மறைத்து விட்டால், முந்தைய மாதத்தை 30 ஆக முழுமைப்படுத்தி விட வேண்டும், என்ற ரசூல் (ஸல்) அவர்களின் நேரடி கட்டளையும் இதற்கு வலு சேர்க்கும் ஆதாரம் தான்!


அடுத்த கருத்து:


அந்த ஹதீஸில் உள்ள அடுத்த கருத்தாக நான் கூறியது என்ன? குறைப் அவர்கள் சிரியா பிறையை பின்பற்றுமாறு இப்னு அப்பாஸ் அவர்களிடம் சொன்னதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் மறுப்பு தெரிவித்தார்களே, அதற்குரிய காரணத்தையும் அந்த ஹதீஸில் விளக்குகிறார்கள்.

என்ன காரணம்? ரசூல் (ஸல்) அவர்கள், அவர்களிடம் அவர்கள் பகுதியில் பிறை பார்க்குமாறு கூறியிருக்கிறார்கள். பிறை தெரிந்தால் மாதத்தை முடித்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள். பிறை தெரியாவிட்டால் மாதத்தை 30 ஆக முழுமைப்படுத்த சொல்லியிருக்கிறார்கள் .


இந்த கருத்தில் இருந்து நான் வைத்த வாதம்:

சிரியாவில் பிறை பார்க்கப்பட்ட போதிலும் கூட, பிறை பார்க்கப்பட்ட தகவல் இப்னு அப்பாஸ் அவர்களுக்கு வந்தடைந்து விட்ட போதிலும் கூட, அதை ஏற்காத இப்னு அப்பாஸ் அவர்கள், தங்கள் பகுதியில் 29 முடிந்ததும் பிறை பார்ப்போம் என்றும், பிறை தெரியாவிட்டால், 30 ஆக்கி கொள்வோம் என்றும் கூறுகிறார்கள்.

இப்னு அப்பாஸ் அவர்கள் கணக்கிட்டு முடிவு செய்யக்கூடியவராக இருந்தால், 29 முடிந்ததும் பிறை பார்க்க தேவையில்லை. பிறை தெரியவில்லை என்றாலும் கணக்கிட்டு கொள்ளலாம், பிறை தெரியாவிட்டால் 30 ஆக ஆக்கி கொள்ளவும் தேவையில்லை!

இதிலிருந்து, 29 முடிந்ததும் தான் பிறை பார்க்க வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்? என்ற அதி மேதாவித்தன கேள்வி ஒன்றை இவர் கேட்ப்பார் என்றால், அதற்கும் நான் முதலில் கூறிய, "மாதத்திற்கு 29 நாட்கள்..." என்ற ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் தான் மூல ஆதாரம்!

மேற்கூறப்பட்டவைகளில் எந்த ஒன்றுக்காவது சகோ. சிராஜ் பதில் தந்தாரா என்பதை சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

எந்த ஒன்றுக்கும் பதில் தர இயலாது என்ற நிலையில், அவை ஹதீஸ் இல்லை, அதில் ரசூல் (ஸல்) அவர்களது ஏவல் விலக்கல் இருக்கிறதா? அவர்களது அங்கீகாரம் இஎருக்கிறதா? என்று கேட்டுப்பார்த்தார்.

அதுவும் எடுபடவில்லை என்ற உடன், அந்த ஹதீசையே இரண்டாக பிரித்து, குறைப் அவர்கள் பேசுவதும், இப்னு அப்பாஸ் அவர்களிடம் கேள்வி கேட்பதும் வெறும் உரையாடல் என்றும், இப்னு அப்பாஸ் அவர்கள் கூறும் பதில் மட்டும் தான் ஹதீஸ் என்றும், ஒரே அறிவிப்பையே இரண்டாக பிரித்து, ஒரு பகுதி ஹதீஸை, அது ஹதீஸே இல்லை என்று அல்லாஹ்வுக்கேதிராக போர் தொடுத்தாரே, இதற்கும் நான் மறுப்பு கேள்வி ஒன்றை கேட்டேனா இல்லையா?
இதே போன்று வரும் ஏனைய சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி, இவைகளையும் இரண்டாக பிரியுங்களேன் பார்க்கலாம், என்று கேட்டோமே, பதில் சொன்னாரா?
அதற்கு பதில் சொன்னால் அவர் இஸ்லாத்தின் அடிப்படையான குர் ஆன், ஹதீஸ் இரு விஷயங்களில் ஒன்றை முழுமையாக மறுப்பவர்களில் ஒருவராக ஆகி விடுவார் என்ற அச்சம் தவிர வேறு ஒன்றும் அவரை பதில் சொல்வதை விட்டும் தடுத்திருக்காது!


நான் சொல்லும் கருத்து, அந்த அர்த்தத்தை தரவில்லை என்று , தான் அந்த ஹதீஸை எவ்வாறு புரிந்து கொண்டுள்ளோம், என்பதை விளக்கி, இந்த ஹதீஸ் இந்த பொருளை தான் தருகிறது, நாஷித் சொல்லும் பொருளை தரவில்லை, என்று விளக்கி, என்னை மண்ணை கவ்வ செய்வது இவரது கடமையாக இருக்க வேண்டுமா? அல்லது விளக்கிய என்னிடமே மீண்டும் விளக்க சொல்வது அறிவுடமையா?

நான் கூறியதை தவறு என்பதை நிரூபிப்பதற்கு, அந்த ஹதீசுக்கு இவர் பக்க விளக்கம் எதையும் தராமல், நாஷித் மொழிப்பெயர்த்ததில் "மறு" என்ற வாசகம் இருக்கிறதா?, "மதினா" என்ற வாசகம் இருக்கிறதா? , பார்த்தீர்களா, நாஷித் பொய் சொல்கிறார், என்று கூப்பாடு போடுகிறார். இவை அரைவேக்காட்டுதனமான கூப்பாடுகள் என்பதையும் நான் முன்னரே விளக்கி விட்டேன்.

அந்த ஹதீஸில் "மறு", மதினா, போன்ற வார்த்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் சொல்லும் கருத்தையும், அதன் மூலம் நான் வைக்கும் வாதத்தையும் அது எந்த வகையிலும் பாதிக்காது. இவரது குறைந்த பட்ச கடமை, அது எந்த எந்த வகையில் பாதிக்கும் என்பதையாவது விளக்க வேண்டும்.
இதையும் இவர் செய்யவில்லை.

அடுத்து இவர் கேட்கும் கேள்வி என்ன? மாதத்தை தீர்மானிக்க அந்த மாதப்பிறையை பார்க்க வேண்டுமா முந்தைய மாதப்பிறையை பார்க்க வேண்டுமா? என்ற அதிபயங்கர கேள்வி!

மாதத்தை முடிவு செய்ய அந்தந்த மாத முதல் பிறையை தான் பார்க்க வேண்டும் என்பதற்கு நான் அடுக்கடுக்காக பல ஆதாரங்களை பல முறை தந்தாகி விட்டது. இந்த நிமிடம் வரை அதற்கு பதில் சொல்லாத இவர், கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
எந்த மாதப்பிறையை பார்த்தாலும், பிறையை பார்க்க தான் வேண்டுமே தவிர கணக்கிட்டு முடிவு செய்ய கூடாது என்று தான் வரும்! இதற்கு பதில் தந்தாரா? இதற்கும் தரவில்லை.

சரி, குறைப் ஹதீஸ் போக, இன்னும் நான்கு ஆதாரங்களை தந்தேனே, அனைத்திலும் பிறையை பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும், கணக்கிட்டு முடிவு செய்யக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் ஹதீஸ்களை அடுக்கடுக்காக நாம் வைத்ததற்கு இவர் பதில் தந்தாரா?

வாகனக்கூட்டம் நேற்று பிறை பார்த்ததாக சொன்னார்களே, கணக்கிட்டு முடிவு செய்யும் ஒரு கூட்டம் எதற்க்காக நேற்று பிறை பார்க்க வேண்டும் என்று கேட்டோமே, அவர்கள் நேற்று பிறை பார்த்ததை வைத்து தானே ரசூல் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறு சொல்லியிருக்கிறார்கள்? கணக்கிட்டு முடிவு செய்வதாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட நாளில் பார்க்கப்பட்ட பிறையை வைத்து நோன்பை ஏன் விடுமாறு ரசூல் (ஸல் ) அவர்கள் சொன்னார்கள்?
கேட்டோமே, பதில் வந்ததா?

"நீங்கள் பிறையை பார்க்க வேண்டும் என்பதற்காக தான் முதல் பிறையை சிறிது நேரம் அல்லாஹ் வானில் தென்பட வைக்கிறான்", என்று இன்னொரு ஹதீஸை ஆதாரமாக வைத்தோமே, இது மிக தெளிவாக, பிறையை அந்தந்த மாதத்தில் பார்த்து முடிவு செய்ய தானே சொல்கிறது?

எந்த ஒன்றுக்கும் பதில் தராத சிராஜ், என்னை நோக்கி, ஹதீஸை முழுமையாக வைக்க தயாரா என்று சவடால் விடுவது எந்த அடிப்படை அர்த்தமும் இல்லாதது! ஹதீஸை முழுமையாக நான் பலமுறை விளக்கியாகி விட்டது.

அடுத்து, தனிப்பட்ட முறையில் என்னை நோக்கி இவர் விமர்சிக்கிறார்.
நான் திட்டுகிறேனாம்.. கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறேனாம்..
பொத்தாம் பொதுவாக இவ்வாறு சொல்வதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. என்ன வார்த்தையை பயன்படுத்தினேன் என்று சொல்ல வேண்டும். எனது நினைவுக்குட்ப்பட்டு, "முட்டாள்தனமான வாதம்" என்று சில முறை பேசியிருப்பேன். இது தான் நீங்கள் கூறும் திட்டுதல் என்றால், அதை குறித்து எனக்கும், யாருக்கும் பிரச்சனை இல்லை. வாதம் முட்டாள்தனமாக இருந்தால் அதை முட்டாள்தனமான வாதம் என்று தான் சொல்ல முடியும். அதை யார் பேசினாலும் சரி தான்!


அவர் செய்த அனைத்து தவறுகளையும், அவர் செய்ய போகும் அனைத்து தவறுகளையும் பிறர் செய்வதாக கூறுவார். பின்னர் அந்த தவறை அவர்களே செய்வார்கள். இதுவும் அவருக்கு வாடிக்கை

நான் செய்த எந்த தவறை பிறை செய்ததாக கூறினேன்? ஆதாரத்துடன் விளக்குங்கள்.

வைக்கப்படும் ஆதாரங்கள் எனது நிலையை எவ்வாறு மறுக்கிறது என்பதையும், உங்கள் நிலையை எவ்வாறு அது ஆதரிக்கிறது என்பதையும் விளக்கி தான் வாதங்களை பதிய வேண்டுமே அல்லாமல், நாஷித் ஹதீஸை சொன்னாரே, அதை முழுமையாக சொன்னாரா? அந்த ஹதீஸில் அவர் அந்த வார்த்தையை சொன்னாரே, அது அந்த ஹதீஸில் இருக்கிறதா? இந்த வார்த்தை இருக்கிறதா என்று கேட்பதெல்லாம் காலத்தை கடத்தும் செயல் என்பதை விபரமுள்ளவர்கள் அறிகிறார்கள்.
உங்களுக்கு ஜால்ரா அடிப்பதற்கென்றே கொள்கையற்ற ஒரு சிலர் இருக்கிறார்களே, அவர்களுக்கு இவை புரியாததில் நமக்கு ஆச்சர்யமில்லை!



அன்புடன்,
நாஷித் அஹமத்

தொடர்புக்கு : + 91 99527 82646
السلام عليكم ورحمة الله وبركاته

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக