வெள்ளி, 7 ஜனவரி, 2011

தலைப்பு வாரியாக வரிக்கு வரி பதில்!


சகோ. ஏர்வாடி சிராஜின் வறட்டு வாதங்களுக்கு தலைப்பு வாரியாக வரிக்கு வரி பதில் !!அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோ. சிராஜ் அவர்கள் முந்தைய மெயிலில் வைத்த ஒவ்வொரு வாதத்திற்கும் வரிக்கு வரி பதில் இங்கு விளக்கமாக தரப்பட்டுள்ளது . எந்த ஒரு வாதமும் பதில் சொல்லப்படாமல் விடுபடவில்லை!.
நீண்ட கட்டுரையாக இருப்பதால், சகோதரர்கள் அனைவரும் பொறுமையாகவும், தனி தனி தலைப்பாக பிரித்தும் படிக்கவும்..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------எப்போதும் நாஷித் வரம்பு மீறுவார் என்பதற்கு ஆதாரம் என்ன?

நாஷித் அவர்களிடம் ஏதாவது ஒன்றை யாராவது கேட்டுவிட்டால், அவர் முதலிலேயே வரம்பு மீறி பேசுவிடுவார். ஏன்என்றால், அடுத்தடுத்து நீங்கள் இந்த இழையில் எந்த கருத்தையும் அவருக்கெதிராக பதிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

என்னிடம் யார் வரம்பு மீறி பேசுகிறாரோ, அவர்களிடம் மட்டுமே நாம் இதுவரை வரம்பு மீறி பதில் அளித்துள்ளோம். இது எனக்கு அல்லாஹ் தந்த அனுமதி.
அதை கூட, ஏதோ, அவர்களிடம் இருந்து மறுபடியும் பதில் ஏதும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் நான் செய்கிறேன் என்று கூறி, இறைவனின் அனுமதியின் படி நான் செய்வதைக்கூட கேலி செய்கிறீர்கள் என்றால் எனக்கு அதை பற்றி எந்த பொருட்டும் இல்லை. அல்லாஹ்விடம் பதில் சொல்லிக்கொள்ளவும்.

யார் எதை கேட்டாலும், முதலில் நான் வரம்பு மீறி விட்டு, அதன் பிறகு தான் பேசுவேன் என்று கூறியிருக்கிறீர்கள்.
இதற்குரிய ஆதாரத்தை எனது மெயில்களில் இருந்து தரவும். இதை தராதவரை, நீங்கள் ஒரு பொய்யர் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டதாக ஆகும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேண்டுமென்றே ஸலாம் சொல்வதை நாஷித் வெறுக்கிறார் என்பதற்குரிய ஆதாரம் என்ன?

மேலும் நாம் ஸலாம் அவருக்கு கூறிக்கொண்டே தான் இருக்கின்றோம் அவரோ எத்தனை இழைகளில் ஸலாமை கொண்டு ஆரம்பிப்பதை வெறுத்துவருகிறார் என்பதை பாருங்கள். ஏற்கனவே ஒரு சகோதரர் அவருக்கு அறிவுரை கூறிய பின்பும் அவருடைய நிலையை அவர் மாற்றவில்லை.


நான் ஸலாம் சொல்வதை வேண்டுமென்றே தவிர்ப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். . இது என் மீது நீங்கள் உரைக்கும் பொய் என்று நான் சொல்கிறேன்.
நான் வேண்டுமென்றே அவ்வாறு செய்வதற்குரிய ஆதாரம் என்ன?
ஆதாரம் தர இயலாது என்றால் நான் வேண்டுமென்றே வெறுத்து வருவதாக ஏன் பொய் சொல்கிறீர்கள்?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனுமதியா தடையா?


மேலும் அவர் இதுவரை 10:5 வசனத்தில் கூறப்பட்டுள்ள ஆண்டுகளின் கணக்கை அறிய முடியும் என்பதை செயல்படுத்துவதை தடுத்த நிறுத்த எந்த ஆதாரங்களையும் அவர் இது வரை பதியவில்லை என்பதையும் மக்கள் அறிந்தே வைத்துள்ளீhகள்


ஆண்டுகளின் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வதற்கும், ஆண்டுகளின் கணக்கை கட்டாயம் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வேறுபாடு தெரியாதவர் தான் சிராஜ்.

ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிய சூரியனும் உதவுகிறது, சந்திரனும் உதவுகிறது.
முன்கூட்டியே கணக்கிட்டாலும், இந்த வசனத்தை நீங்கள் மீறியவர்கள் ஆக மாட்டீர்கள். நான் ஒவ்வொரு மாதமும் பிறையை பார்த்தாலும் இந்த வசனத்தை மீறியவர்கள் ஆக மாட்டேன்.
ஆக , இது இருவருக்கும் பொதுவான வசனம்.
இருவருக்கும் பொதுவான வசனத்தை ஒருவருக்கு சாதகமாக பேசமுடியாது.
அதை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு, ரசூல் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை பற்றி பேசுவோம்.

யார் சொல்வது சரி என்பதை முடிவு செய்வதற்கு அடுத்து நாம் செய்ய வேண்டியது என்னெவெனில்,
ஒவ்வொரு மாதமும் பிறையை பார்த்து தான் ரசூல் (ஸல்) அவர்கள் செயல்பட்டார்கள் என்பதற்கு நான் ஹதீஸ் ஆதாரத்தை தர வேண்டும்.
அதே போல் 300 வருடக்காலண்டரை ரசூல் (ஸல்) அவர்கள் அடித்தார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு ஹதீஸை காட்ட வேண்டும்.

இது தானே அளவுகோல்?

சரி, நான் எனது ஆதாரங்களை (மீண்டும்) தருகிறேன்..

முதல்:
  • மாதத்திற்கு 29 நாட்கள், பிறையை பார்த்து நோன்பு விடுங்கள், பிறை தெரியவில்லை என்றால், 30 ஆக பூர்த்தி செய்யுங்கள்.
இந்த ஹதீஸ், ஒவ்வொரு மாதமும் 29 முடிந்ததும் என்னை பிறை பார்க்க சொல்கிறது. இது நான் வைக்கும் முதல் ஆதாரம்.

இரண்டாவது:
  • அடுத்து, வாகனக்கூட்டம் வந்து, நேற்று பிறை பார்த்ததாக சொல்கிறார்கள். அதன் படி, அவர்கள் நோன்பை விடுமாறு ரசூல் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அவர்கள் நேற்று பிறை பார்த்தார்கள் என்பதிலேயே தெரிகிறது, பிறையை ஒவ்வொரு மாதமும் பார்த்து, அதன் படி தான் நோன்பை வைக்கவோ விடவோ செய்ய வேண்டும் என்று. 300 வருடங்களை முன்க்கூட்டியே கணிக்கலாம் என்றால் நேற்று அவர்கள் பிறை பார்க்க தேவையில்லை.

மூன்றாவது:
  • அடுத்து, குறைப் அவர்கள் வெள்ளிக்கிழமை பிறை பார்த்ததாக சொல்கிறார்கள். இப்னு அப்பாஸ் அவர்கள் சனிக்கிழமை பார்த்தார்கள். 300 வருடங்களை முன்க்கூட்டியே கணக்கிட்டு முடிவு செய்யலாம் என்றால், ஒருவர் வெள்ளிக்கிழமையும் இன்னொருவர் சனிக்கிழமையும் பிறை பார்க்க தேவையில்லை. சிரியாவில் இருந்த குறைப் அவர்கள் வெள்ளியன்று பார்க்கப்பட்ட பிறையை வைத்து நோன்பை துவக்கியிருக்கிறார். இப்னு அப்பாஸ் அவர்கள் சனி அன்று பார்க்கப்பட்ட பிறையை வைத்து நோன்பை துவக்கியிருக்கிறார். நாங்கள் வெள்ளியன்று பார்த்த பிறை உங்களுக்கு போதாதா? என்று கேட்கப்படும் போது, இப்னு அப்பாஸ் அவர்கள், போதாது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று விளக்கம் தருகிறார்கள். ஆக, ஒரு ஊரில், வெள்ளி அன்று பிறை பார்க்கப்பட்ட போதிலும், அதை நாம் கணக்கில் கொள்ளாமல் நம் ஊரில் என்றைக்கு பிறை தெரிகிறது என்று பார்த்து முடிவு செய்வது தான் நபி வழி என்பதை இந்த ஹதீஸ் மிக தெளிவாக கூறுகிறது.
    கணக்கிட்டு முடிவு செய்யலாம் என்றால், குறைப் மற்றும் இப்னு அப்பாஸ் அவர்கள் ஆகிய இருவருக்கும் ஒரே தினம் தான் நோன்பு துவங்கியிருக்க வேண்டும், ஒரே தினம் தான் பெருநாள் வந்திருக்க வேண்டும்! இது நான் வைத்த மூன்றாவது ஆதாரம்.
நான்காவது:
  • ஒவ்வொரு மாதமும் பிறையை பார்க்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் பிறையை சிறிது நேரம் வானில் தென்பட செய்கிறான் என்று ஹதீஸ் சொல்கிறது. ஒவ்வொரு மாதமும் பிறையை பார்த்து தான் மாதத்தை தீர்மானிக்க வேண்டும்.

ஐந்தாவது:

  • நீங்கள் பிறை பார்க்கும் வரை, முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று இன்னொரு ஹதீஸ் சொல்கிறது. அதாவது, நாம் என்றைக்கு பிறையை பார்க்கிறோமோ, அது தான் நமக்கு முதல் பிறை. அது உண்மையில் பெரிதாக, இரண்டாவதா மூன்றாவதா என்று குழப்பம் ஏற்ப்படும் அளவிற்கு பெரிதாக இருந்தாலும், நம் கண்களுக்கு அன்றைக்கு தான் தெரிகிறது என்றால் அது தான் நம்மை பொறுத்த வரை முதல் பிறை, நம் கண்களுக்கு தெரியும் வரை அல்லாஹ்வின் கணக்குப்படி, முந்தைய மாதம் முடியவில்லை, என்று இப்னு அப்பாஸ் அவர்கள் விளக்கமளிக்கிறார்கள். கணக்கிட்டு கொள்ளலாம் என்றால், இந்த ஹதீஸ் என்பது அர்த்தமே இல்லாமல் போய் விடும்.

ஆறாவது:

  • ஆறாவதாக, ஒவ்வொரு மாதமும் சந்தேகத்திற்குரிய நாளாக 30 ஆம் நாளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் 29 முடிந்த பிறகு பிறை பார்த்து, சில இடங்களில் தெரிந்தும், சில இடங்களில் தெரியாமலும் இருக்கும் நிலையில் தான் அது சந்தேகத்திற்குரிய நாளாக இருக்கும். 300 வருடங்களிலும் மாதங்களில் எத்தனை நாட்கள் என்பதை இன்றே முடிவு செய்பவர்களுக்கு எந்த நாளுமே சந்தேகத்திற்குரிய நாள் இல்லை. அனைத்துமே உறுதியான நாட்கள் தான். ஆக, அவர்கள் இந்த ஹதீஸை புறக்கணிக்கிறார்கள்.

பிறையை ஒவ்வொரு மாதமும் கண்ணால் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரமாக ஆறு ஹதீஸ் ஆதாரங்களை நான் மேலே வைத்திருக்கிறேன். (இன்னும் சில ஆதாரங்கள் உள்ளன, அவை பின்னர் தரப்படும், இன்ஷா அல்லாஹ்)

இதே போன்று, 300 வருடங்களை இன்றே கணக்கிட்டு கொள்ளலாம் என்பதற்கு அவர் ஆதாரம் தர வேண்டுமா இல்லையா?
நான் எனது நிலைக்கு ஆதாரம் தந்ததை போல், இவர் இவரது நிலைக்கு ஆதாரம் தர வேண்டுமா கூடாதா?
இதை தான் நாம் பல முறை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

இதை கேட்டால், இவர் சொல்லும் பதில், நான் தந்த குர் ஆன் வசனம் 10 : 5 , கணக்கிட்டு செய்வதை மறுக்கிறதா?, என்று கேட்கிறார்.

அந்த வசனம் மறுக்கவில்லை. ஆனால், நான் மேலே சுட்டிக்காட்டிய ஆறு ஹதீஸ்களும் மறுக்கிறது.
அந்த ஆறும் மறுக்கவில்லை என்று நிரூபித்த பிறகு தான் உங்கள் கொள்கையான கணக்கிடுதல் பற்றி நீங்கள் பேச முடியுமே தவிர, அந்த குர் ஆன் வசனம் மறுக்கிறதா என்று கேட்பதெல்லாம் முட்டாள் தனமான வாதம்.

"அல்ஹம்துளில்லாஹிரப்பில் ஆலமீன்", என்ற குர் ஆன் வசனம் பிறையை கணக்கிட்டு முடிவு செய்வதை மறுக்கிறதா? என்று கேட்பது எவ்வாறு முட்டாள்தனமோ, அது போன்று நீங்கள் கேட்பதும் இருக்கிறது. .
உங்கள் கொள்கைக்கு முரணாக நான் ஆறு ஹதீஸ்களை தந்தேன். அதை மறுத்து தான் உங்கள் கொள்கையை நிலைநாட்ட வேண்டும்.
அது மட்டும் போதாது. முன்கூட்டியே கணக்கிட்டு கொள்ளலாம் என்பதற்கு என்ன ஆதாரம் என்பதையும் இங்கு தர வேண்டும்.

அனுமதியா? தடையா? எதை பார்க்க வேண்டும்?

இந்த இடத்தில் இன்னொரு பொதுவான அளவுகோலை நாம் பார்க்க வேண்டும்.
சகோ. சிராஜ், மார்க்கத்தின் அடிப்படையை கூட விளங்காததால் தான், இது போன்று, கணக்கிடுவதற்கு தடை இருக்கிறதா என்று கேட்கிறார்.
நாம் வாழ்வில் சந்திக்கக்கூடிய விஷயங்களை இரண்டாக பிரிக்க வேண்டும்.
ஒன்று, மார்க்கம் சம்மந்தப்பட்ட, இறைவனோடு தொடர்புடைய விஷயங்கள்.
மற்றொன்று, உலக விஷயங்கள்.


இதில் எந்த விஷயத்திற்கு குர் ஆன், ஹதீஸ் இல் தடை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், எந்த விஷயத்திற்கு அனுமதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது, இஸ்லாத்தின் அடிப்படை விஷயமாகும்.
சகோ. சிராஜ் போல, இன்னும் பல சகோதரர்கள் இதை கூட அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்பதால், இதை கூறுகிறேன்.

அதாவது, மார்க்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு அனுமதி இருக்கிறதா என்று மட்டும் தான் பார்க்க வேண்டும். தடை இருக்கிறதா என்று பார்க்க கூடாது.
உலகம் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு அனுமதி இருக்கிறதா என்று பார்க்காமல், தடை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.


உதாரணமாக, ஒருவர், இஷா நான்கு ரக்காத்கள் தொழுகிறார் என்றால், அதை அனுமதிக்கக்கூடிய ஆதாரம் எது என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார். இஷாவிற்கு ஐந்து தொழுவதை எந்த ஹதீசாவது தடுக்கிறதா? என்று கேள்வி கேட்கக்கூடாது. அவ்வாறு தடுக்ககூடிய எந்த ஹதீசும் இருக்காது.

ஷாபான் மாதம் 12 ஆம் நாள் நோன்பு வைப்பது சுன்னத் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், நாம் அவரிடம், என்ன ஆதாரம், இதை சுன்னத் என்று அனுமதிககூடிய ஆதாரம் எது என்று தான் கேட்ப்போம்.
அவர், நம்மிடம், "ஏன்?ஷாபான் 12 இல் நோன்பு வைப்பதை தடுக்ககூடிய ஒரு ஆதாரத்தையாவது காட்டுங்கள் பார்க்கலாம்", என்று சவால் விடுகிறார் என்றால், அவரது அறிவை குறித்து நாம் எவ்வாறு எடை போடுவோம்.??
"அட முட்டாளே, மார்க்கம் என்றால் ரசூல் (ஸல்) அவர்கள் செய்திருக்க வேண்டும், சொல்லியிருக்க வேண்டும். சொல்லவில்லை, செய்யவில்லை என்றால் அதை செய்ய கூடாது, என்று நாம் பதில் சொல்வோம்.
இதே போன்று தான் சகோ சிராஜ் கேட்க்கும் கேள்வியும் இருக்கிறது.
300 வருடங்களை முன்கூட்டியே கணக்கிட கூடாது, ஒவ்வொரு மாதமும் பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும், என்று பல ஆதாரங்கள் உள்ள நிலையில், அவற்றுக்கு எந்த பதிலையும் சொல்லாமல், "ஏன், கணக்கிடுவதை எந்த குர் ஆன் வசனமாவது, ஹதீசாவது தடுக்கிறதா? என்று முட்டாள் தனமான கேள்வியை கேட்க்கிறார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கணக்கிடக்கூடாது என்பதற்கு ஆதாரம் இல்லையா?


அவர் பதிந்துள்ள அனைத்து ஹதீஸ்களில் இருந்தும் ரமளான் மாத நோன்பை முடிவு செய்வது பற்றியே கூறப்படுகிறது. அதில் ஆண்டுகளின் கணக்கை முன் கூட்டியே கணக்கிடக் கூடாது என்பது பற்றி எந்த ஹதீஸிலும் பேசப்படவில்லை என்பதையும் நாம் பல முறை சுட்டிகாட்டிய பின்பும் அதை கண்டு கொள்ளாதது போலவே எழுதி வருகிறார்


இதுவரை ஆறு ஹதீஸ்கள் கணக்கிட்டு முடிவு செய்வதை மறுப்பதை தெள்ள தெளிவாக விளக்கியிருக்கிறேன். அவைகளுக்கு இதுவரை பதில் சொல்லாமல், சொன்னதையே சொல்லிக்கொண்டிருகாதீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ரமலானை முடிவு செய்ய ஷாபான் மாதத்தை கணக்கிட்டு வர வேண்டும் !


மேலும் ரமளான் மாத்தை முடிவு செய்ய ஷஃபான் மாத்ததை கணக்கிட்டு வந்தார்கள் என்ற ஆதாரத்தை கொடுத்தேன். அதை சரியில்லாத ஹதீஸ் என்றார் ஆனால் அது எப்படி சரியல்ல என்பதை அவர் இது வரை நிரூபிக்கவில்லை.


29 முடிந்ததும் பிறை பார்க்க வேண்டும் என்ற ஹதீஸ், அந்தந்த மாதத்தில் பிறை பார்த்து முடிவு செய்வதை பற்றி தான் பேசுகிறது என்று இதற்கு ஏற்கனவே மறுப்பு தந்தாகி விட்டது. இதுவரை இதற்கு இவர் பதில் சொல்லவில்லை.

ரமலான் மாதத்தை முடிவு செய்ய ஷாபான் மாதத்தை கணக்கிட்டு வர வேண்டும் என்று வரக்கூடிய ஹதீஸை நானும் ஏற்கிறேன் என்று சொல்லி விட்டேன்.
ஷாபான் மாதத்தை கணக்கிட்டால் தான் ஷாபான் மாதம் 20 ஆனதா, 25 ஆனதா, 29 ஆனதா, என்பதை அறிய முடியும். அதை அறிந்தால் தான் 29 முடிந்ததும் ரமலான் முதல் பிறை தென்படுகிறதா என்பதை பார்க்க முடியும்.
ஆக, இது போன்ற வாதங்கள் தான கொள்கையை நிலை நிறுத்தாது.

இது நானும் அன்றாடம், எல்லா மாதங்களும் செயல்படுத்தி வரும் முறை தான். எனது கொள்கைக்கு எந்த வகையிலும் முரணில்லாத ஒரு ஹதீஸை வைத்து வாதம் செய்வதில் எந்த பயனும் இல்லை.
ரமலான் மாதத்தை அறிந்து கொள்ள ஷாபான் மாதத்தை கணக்கிட்டு வர வேண்டும் என்பதை நான் ஒவ்வொரு மாதமும் செயல்படுத்தி தான் வருகிறேன்.
இதற்கும் 300 வருடக்காலண்டரை இன்றே அடிபதற்க்கும் என்ன சம்மந்தம்? மொட்டை தலைக்கு ஆதாரம் கேட்டால் முழங்காலை காட்டாதீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------29 ல் பிறை பார்க்க வேண்டுமா 30 ல் பார்க்க வேண்டுமா?


அடுத்ததாக மாத்தின் 29 வது நாள் பிறை பார்க்க வேண்டுமா? 30 நாள் பிறை பார்க்க வேண்டுமா? என்பதை ஹதிஸிலிருந்து காட்டவும் என்று கேட்டேன் அதையும் இதுவரை அவருடய எந்த ஆதாரத்தில் இருந்தும் காட்டவில்லை.

29 முடிந்ததும் பிறை பார்க்க வேண்டும். ஏற்கனவே ஆதாரம் வைத்தாகி விட்டது. நீங்கள் அறியாதது நமது குறையல்ல!


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வார்த்தை விளையாட்டுக்கள்!


அவர் செய்த இடைசெருகல் வார்த்தைகள் ஹதீஸில் எங்குள்ளது என்பதை நாம் கேட்டோம் இதுவரை பதிலில்லை.
மேலும் மேகமூட்டம் என்ற வார்த்தை ஹதீஸில் எங்குள்ளது என்று கேட்டோம் இது வரை பதில் இல்லை.


ஒரு ஹதீஸில் ஒரு வார்த்தையை அதிகமாக சொல்லி விட்டால், அதை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதன் மூலம், எதையும் சாதிக்க முடியாது என்ற விபாம் கூட இவருக்கு இல்லை.
குறைப் ஹதீஸில் "மறு", என்ற வார்த்தை, மற்றும் "மதினா", என்ற வார்த்தை அதிகமாக நான் குறிப்பிட்டேன். புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்ற காரணத்திற்க்காக சில வார்த்தைகளை அதிகமாகவோ, குறைவாகவோ சொல்வதனால் கருத்து மாறிவிடாது என்றால், அவ்வாறு சொல்வதில் எந்த தவறும் இல்லையே!
வார்த்தை இல்லை என்பதால் நான் சொல்ல வந்த கருத்து எந்த வகையில் மாறி இருக்கிறது என்பதையல்லவா இவர் சொல்ல வேண்டும்?

அதே போல், மேகமூட்டம் என்ற வார்த்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதனால் பிறை பார்க்க வேண்டும் என்ற சட்டத்திற்கு எந்த பாதகாமும் இல்லை.

29 கு பிறகு, மேகமூட்டம் மறைத்தாலும், வேறு எது மறைத்தாலும், பிறை தெரிவில்லை என்றால் 30 ஆக்கி கொள்ள வேண்டும். மேகமூட்டம் என்ற வார்த்தை முக்கியமில்லை! பிறை தெரியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பது தான் முக்கியம்!!
சம்மந்ததோடு பேசுங்கள்.
சரி, இது போன்ற வாதங்களை நீங்கள் வைப்பதற்கும் அதனால் 300 வருடக்காலண்டரை அடிக்கலாம் என்பதற்கும் என்ன சம்மந்தம்? எது தேவையோ, அதற்க்கு பதில் காணோம்.. சம்மந்தமில்லாததற்கு விளக்கம் அளிப்பதில் மட்டும் எந்த குறையும் இல்லை!!

ஆக, 300 வருடக்காலண்டரை இன்றே அடிக்கலாம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அந்த வார்த்தை இருக்கிறதா இந்த வார்த்தை இருக்கிறதா என்று கேட்பது அறிவற்ற வாதம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------கணக்கிட்டு முடிவு செய்பவர்கள் பிறையை பார்க்கிறார்களா?


பிறையை பார்க்கவே கூடாது என்று நாம் கூறியதாக நம்மீது இட்டுகட்டி பொய் கூறினார். அப்படி எங்கு கூறியுள்ளோம் என்று கேட்டோம் அதற்கு பதில் இல்லை.

300 வருடக்காலண்டரை இன்றே அடித்து விட்டீர்கள் என்றால், 2012 துல்ஹஜ் மாதப்பிறையை இன்று பார்த்தீர்களா?

பிறையை பார்க்காமல் 2012 இல் துல்ஹஜ்ஜ் இந்த தேதியில், இந்த கிழமையில் தான் துவங்கும் என்று பிறையை பார்த்து அறிவித்தீர்களா பார்க்காமல் அறிவித்தீர்களா?

பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள், என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த ஹதீஸை நேரடியாக மறுக்கும் செயலை செய்து விட்டு, பார்க்க கூடாது என்று நாங்கள் எங்கே கூறினோம்? என்று கேட்பது நபிகள் நாயகத்தை நையாண்டி செய்வது போல் இருக்கிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------நபியை கேலி செய்வதை பாருங்கள்


நபி எல்லா குர்ஆன் வசனங்களுக்கும் விளக்கம் கொடுத்துவிட்டு சென்றார்களா, ? என்ற கேள்வியை வைத்தோம் அதை இதுவரை கண்டு கொள்ளவில்லை.


நபியை நையாண்டி தான் செய்கிறார் என்பதற்கு இவர் கேட்க்கும் இந்த கேள்வி நல்ல உதாரணம்..

குர் ஆன் பிறையை காலம் காட்டி என்று சொல்கிறது. ஆனால், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் பார்த்து, அதன்படி தங்கள் மாதங்களை தீர்மானித்தார்கள் என்பதற்கு அடுக்கடுக்காக பல ஆதாரங்கள் உள்ளன. அதை வைத்து நாம் சொன்னோம், அல்லாஹ் சொன்ன வசனங்களை நபிகள் நாயகம் எவ்வாறு செயல்படுத்தினார்கள் என்று பாருங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்படுத்தியது எப்படியோ, அதே போன்று நாமும் செயல்படுத்தினால் போதும் என்றோம்.
இதற்கு மேற்ப்படி கேள்வியை கேட்க்கிறார்.
நபிகள் நாயகம் ஒரு குர் ஆன் வசனத்தையும் முரணாக்காமல் , அனைத்திற்கும் செயல் வடிவம் கொடுத்தார்களா இல்லையா? இல்லை என்பீர்களா?

நீங்கள் பிறைக்காக காட்டும் குர் ஆன் வசனங்களையும் நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தினார்கள் என்பதே எனது வாதம்.

எவ்வாறு? உங்களை போல், 300 வருடக்காலண்டரை அடித்தார்களா? இது தான் எனது கேள்வி. அவர்கள் 300 வருடக்காலண்டரை அடிக்கவில்லை என்பதால் அந்த வசனத்தை அவர்கள் செயல்படுத்தவில்லை என்று அறிவிக்கப் போகிறீர்களா? உருப்படியாக வாதம் செய்யுங்கள். சம்மந்தா சம்மந்தமிலாமல் ஏதோ, அதி பயங்கர கேள்வியை கேட்பதை போல் சம்மதமில்லாத வாதங்களை வைப்பது உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதை போன்றதாகும் .

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அர்த்தமற்ற சவால்!


மேலும் இவர் கொள்கையில் இருந்தவர்களுக்கு 28 நாளில் மாதம் முடிந்ததை நிரூபிக்க சவால் விட்டோம் அதையும் அவர் கண்டு கொள்ளவில்லை.


இந்த கொள்கையை தான் ரசூல் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக ஆறு ஆதாரங்களை தந்தேன். அவைகளை மறுக்காமல் இவ்வாறு சவால் விடுவது என்னை நோக்கி நீங்கள் விடும் சவால் அல்ல, ரசூல் (ஸல்) அவர்களை நோக்கி விடும் சவால்.
இந்த பிரச்சனை ரசூல் (ஸல்) அவர்கள் காலத்திலும் உள்ள பிரச்சனை தான்.
ஒருவருக்கு 28 வருகிறது என்றால் அது தெரிந்தோ தெரியாமலோ அவர் செய்யும் தவறு.
இத்தனை காலங்களாக, எனது வாழ்நாளில் நான் ஒருமுறை கூட 28 இல் மாதத்தை முடித்ததில்லை.
ஒருவர் ஒரு கொள்கையை சரியாக கடைபிடிக்காமல், தவறு செய்வாரேயானால், "பார்த்தீர்களா, அவர் தவறு செய்கிறார், ஆகவே இந்த கொள்கை தவறு", என்று கூச்சல் போடுவது வடி கட்டிய முட்டாள் தனம்.

தொழுகையில் கூட பலரும் பல தவறை செய்கிறார்கள். பலரும் தவறு செய்கிறார்கள் என்பதால் தொழுகை என்பதே கூடாது என்று ஒருவர் அறிவிப்பது எவ்வாறு கிறுக்குதனமோ அவ்வாறு இருக்கிறது, சகோ, சிராஜின் வாதம்!

எனது கொள்கையை ரசூல் (ஸல் ) அவர்களை வைத்து நிரூபித்திருக்கிறேன். உங்கள் கடமை, அந்த ஆதாரங்கள், நான் சொல்லும் கொள்கையை ஆதரிக்கவில்லை என்பதை நிலைநாட்டுவது தானே தவிர, தனி நபர் ஒருவர் இதை சரியாக பின்பற்றவில்லையே, இவருக்கு 33 நாள் வருகிறதே என்றெல்லாம் வியாக்கானம் பேசுவது முறை அல்ல!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஒரு பிறையா பல பிறைகளா?


மேலும் நபியின் காலத்தில் எல்லா பிறைகளையும் பார்த்து தான் காலத்தை அறிந்தார்கள் என திருக்குர்ஆன் 2:189 வசனம் கூறுகிறது. நீங்கள் ஹதீஸை மொழிபெயர்க்கும் போது ஒரு பிறையை பார்த்தால் போதும் என மொழிபெயர்க்கிறீர்கள் என்றோம். இது குர்ஆனுக்கு முரணில்லையா


பிறைகள் காலம் காட்டுகின்றன என்று தான் அந்த வசனத்தில் உள்ளதே தவிர, எல்லா பிறைகளையும் பார்த்து தான் நபி காலத்தில் மாதங்களை அறிந்தார்கள் என்று சொல்லப்படவில்லை.
குர்ஆனில் இல்லாததை இட்டுக்கட்டி பேசுகிறார்.

பிறைகள் என்பது, பிறையின் வளர் நிலை, தேய் நிலையை குறிக்கும்.
இதையும் நாம் மறுக்கவில்லை. முதல் நாள் மட்டும் தான் காலம் காட்டும் என்று யாரும் இங்கு சொல்லவில்லை. மாதத்தின் அனைத்து நாட்களும் பிறை காலம் காட்டி தான்.

முதல் 13 அல்லது 14 நாட்கள் வளர் நிலையாக் இருக்கும் பிறை, ஒரு கட்டத்தில், தேய துவங்கும். மாதத்தின் ஒரு பகுதியை கடந்து விட்டோம் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

ஆக, மாதங்களையும் அதை வைத்து நாட்களையும் கணக்கிட்டு கொள்வதற்கு பிறைகளின் பல நிலைகளை நாம் தினம் தினம் அறிந்து கொள்ள தான் செய்கிறோம். நானும் அதை மறுக்கவில்லையே.
இதற்கும் 300 வருடக்காலண்டரை இன்றே அடிப்பதற்கும் என்ன சம்மந்தம்? அது தானே கேள்வி!

மாதத்தின் அனைத்து நாட்களும் பிறை காலம் காட்டுகிறது. . 29 முடிந்ததும் பிறை பார்த்து அடுத்த மாதம் துவங்கி விட்டதா என்று பார்க்க வேண்டும் என்றும் ஹதீஸ் சொல்கிறது. அடுத்த மாதம் துவங்கி விட்டது என்பத, 29 முடிந்ததும் நாம் பிறை பார்த்து முடிவு செய்வோம். மீண்டும் அடுத்த மாதம் முழுவதும் பிறை காலம் காட்ட தான் செய்யும்.
எனக்கு முரணில்லாத, நானும் தினம் தினம் செய்து வருகின்ற ஒரு வழிமுறையை , ஏதோ, தனக்கு மட்டும் சாதகமான ஒன்றை போல் பேசுவது எந்த வகையிலும் பொருத்தமில்லாத வாதம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------நான் குறுக்கு வழியை மேற்கொண்டேன் என்பதற்குரிய ஆதாரம் என்ன?


நம்முடைய ஒட்டு மொத்த கலந்துரையாடலை வெளியிடாமல் அவரின் வாதம் மட்டும் மக்கள் மன்றத்தில் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் பல குறுக்கு வழிகளை மேற்கொண்டு வருகின்றார்.


என்ன குறுக்க வழியை செய்தேன் என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள், நிரூபியுங்கள்.
உங்களால் நிரூபிக்க இயலாது என்றால் உங்களை பொய்யர் என்று நீங்களே அறிவியுங்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இறுதியாக..


அவருடைய ஒவ்வொரு வாதத்திற்கும் இங்கு மிக உறுதியான, வலுவான பதில்கள் தரப்பட்டுள்ளன.
எந்த ஒரு வாதமும் விடுபடவில்லை என்பதை அனைவருக்கும் சொல்லிக்கொள்கிறேன்.

தொடர்ந்து, அவர் மெயில் அனுப்பும் போது எடுத்து வைக்கும் வாதங்கள், நாம் மேலே சொல்லியவைகளில் இருந்து தான் மீண்டும் பேசுகிறாரா? அல்லது புது வாதங்கள் எதையும் வைக்கிறாரா? என்பதை நீங்களே எளிதில் அறிந்து கொள்ளலாம்.
நாம் மேலே சொல்லியவைகளையே மீண்டும் பேசுவாரானால், நாம் அதில் கேட்ட கேள்விகளுக்கு ஒன்றுக்காவது பதில் சொல்லி விட்டு தான் அந்த வாதத்தை எடுத்து வைக்கிறாரா? என்பதையும் நம்மால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
அவருடைய கொள்கையை தவிடு பொடியாக்கக்கூடிய வகையில் நாம் இதுவரை இறைவன் உதவியால் கருத்துக்கள் பதிந்திருக்கிறோம்.

அல்லாஹ் போதுமானவன்..


அன்புடன்,
நாஷித் அஹமத்

தொடர்புக்கு : + 91 99527 82646
السلام عليكم ورحمة الله وبركاته

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக