சனி, 8 ஜனவரி, 2011

அதாரம் - 8


பிறையை ஒவ்வொரு மாதமும் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் !
ரமலான் மாத தலைப்பிறையை பார்த்து தான் ரமலான் மாதத்தை தீர்மானிக்க வேண்டும், ஷவ்வால் மாதப்பிறையை பார்த்து தான் ஷவ்வால் மாதத்தை தீர்மானிக்க வேண்டும்.

அதாரம் - 8



அபு உமைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.:

மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தெரியவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலை பொழுதை அடைந்தோம்.
பகலின் கடைசிப்பகுதியில், ஒரு வாகனக்கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
நூற்கள் : நசயீ , திர்மிதி, அஹமத்.



ஏற்கனவே நான் கூறிய இந்த ஹதீஸில் இருந்து நாம் வைக்கும் மற்றொரு ஆதாரம், ரமலான் நோன்பை நோற்றவர்களாக ரமளானின் இறுதியை அடைந்த சஹாபிகள், ரமலானை முடித்து ஷவ்வால் மாதத்தை துவக்குவதற்கு (அதாவது பெருநாள் கொண்டாடுவதற்கு) ஷவ்வால் மாதப்பிறையை தான் பார்க்க முயற்சி செய்திருக்கிறார்கள்.!
மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை அவர்கள் தெரியாத காரணத்தால், ஷவ்வால் பிறக்கவில்லை என்றும் ரமலானே நீடிக்கிறது என்றும் முடிவு செய்த அவர்கள் நோன்பை விடவில்லை!!!

ஆக, ஒரு மாதத்தை முடிவு செய்ய வேண்டும் என்றால், அந்த மாதத்தின் தலைப்பிறையை பார்க்க வேண்டும்.. என்பதை இந்த ஹதீஸ் மிக தெளிவாக கூறுகிறது.

பிறையை ஒவ்வொரு மாதமும் கண்ணால் பார்த்து தான் மாதங்களை தீர்மானிக்க வேண்டும் என்பதையும் மிக மிக உறுதியாக இந்த ஹதீஸ் விளக்குகிறது.

300 வருடங்களையும் முன்க்கூட்டியே கணக்கிட்டு முடிவு செய்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்க கூடிய பல ஹதீஸ்களில் எட்டாவதாக நாம் வைக்கும் ஹதீஸ் ஆதாரம் இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக