வியாழன், 6 ஜனவரி, 2011

அதிமேதாவிகளின் உளறலுக்கு பதில்

அஸ்ஸலாமு அலைக்கும்..

என்னுடைய கேள்விகள் பல இன்னும் கேள்விகளாகவே தொங்கிக்கொண்டுள்ள நிலையிலும், அவர் தரப்பு ஆதாரமாக ஒரு ஆதாரத்தை கூட இந்த நிமிடம் வரை தராத நிலையிலும், ஏதோ நான் எங்களது விவாதத்தை முழுவதுமாக வெளியிடவில்லை, சிலவற்றை மறைத்து விட்டேன் என்று மற்றுமொரு திசை திருப்பலை சிலர் செய்கிறார்கள்.

மின்னஞ்சல் மூலமாகவே விவாதம் நடந்து வரும் நிலையில், இது போன்ற விமர்சனமே முட்டாள் தனமானது என்றாலும், உண்மை நம் பக்கம் இருப்பதால், எந்த விமர்சனம் நம் மீது விடுக்கப்பட்டாலும், அதற்கு பதில் சொல்லாமல் விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

மேற்படி அரைவேக்காட்டுதனமான விமர்சனத்தை செய்யக்கூடிய யாரிடமும் நாம் சொல்வது, விவாதம் மின்னஞ்சலின் வாயிலாக நடந்தது. அனைத்துமே muslimmails மற்றும் anaithuthowheethsagotharargal ஆகிய இரு குழுமங்களிலும் எங்களது அனைத்து விவாதங்களும் ஒன்று விடாமல் பதிவாகி உள்ளன.
சிராஜ் அவர்களுக்கு நான் எழுதும் எந்த மெயிலையும், இந்த இரு குழுமங்களில் பதிக்காமல் நான் எழுதுவதில்லை எனும்போது, நான் சிலவற்றை மறைத்து விட்டேன், திரித்து விட்டேன் என்று பேசுவதே விவரங்கெட்டதனம் !!

200 கும் மேலாக மின்னஞ்சல்கள் இங்கும் அங்குமாக பதிவாகி விட்ட நிலையில், அவர் என்னென்ன கேள்வி வைத்தார், நான் என்னென்ன கேள்வி வைத்தேன், என்னென்ன கேள்விகளுக்கு அவர் இதுவரை பதில் தராமல் இருக்கிறார், என்னென்ன தவறான வாதங்களை கேள்வியாக அவர் வைத்திருக்கிறார் என்பதையெல்லாம் ஒரு தொகுப்பாக எடுத்து, அதை எனது ப்ளாக்கில் பதிவு செய்தேன்.
இது, எனது வசதிக்காகவும், ஆதாரங்களை ஒரே தொகுப்பில் பார்க்க எளிதாக இருக்கும் என்பதற்காகவும் நான் செய்து கொண்ட ஒரு வழி.
இதை விமர்சிக்க புகுந்த சில அதிமேதாவிக்கூட்டம் , ஒரு மெயில் மட்டும் பதிந்திருக்கிறார், அனைத்து மெயில்களையும் பதிக்காமல் மறைத்து விட்டார் என்று புலம்புகிறது.

விவரம் இல்லை என்றால் மெளனமாக இருக்க வேண்டுமே அல்லாமல், இவ்வாறு அறிவுக்கெட்டதனமாக உளறக்கூடாது என்பதை இவர்களுக்கு சொல்லிக்கொள்கிறோம் .


சகோதரர்கள் அனைவருக்கும் விஷயம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. விவாதம் அனைத்தும் மெயில்களிலும் குழுமங்களிலும் பதிவாகி உள்ளது. தேவைப்படுபவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.


அன்புடன்,
நாஷித் அஹமத்

தொடர்புக்கு : + 91 99527 82646
السلام عليكم ورحمة الله وبركاته

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக